கோடிக்கணக்கில் பணம் கேட்டு ரன்வீர் சிங்குக்கு மிரட்டல்

பாலிவுட் நடிகரான ரன்வீர்சிங் சமீபத்தில் துரந்தர் படத்தில் நடித்திருந்தார்.இந்தத் திரைப்படம் ரசிகர்களிடம் அமோக வரவேற்பு பெற்றிருந்தது.
கோடிக்கணக்கில் பணம் கேட்டு ரன்வீர் சிங்குக்கு மிரட்டல்
Published on

மும்பை:

பாலிவுட் நடிகரான ரன்வீர்சிங், சமீபத்தில் துரந்தர் படத்தில் நடித்திருந்தார். இத்திரைப்படம் ரசிகர்களிடம் அமோக வரவேற்பு பெற்றிருந்தது. அத்துடன் வசூலையும் வாரிக் குவித்தது.

இந்நிலையில், ரன்வீர் சிங்கின் வாட்ஸ் அப் எண்ணுக்கு ஒருவர் மிரட்டல் விடுத்துள்ளார். அதில் கோடிக்கணக்கில் பணம் தரவேண்டும் என கோரியுள்ளார். இதுதொடர்பாக, மும்பை போலீசிடம் ரன்வீர் சிங் புகார் அளித்தார்.

இதையடுத்து, ரன்வீர்சிங் வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. தனியார் பாதுகாவலர்களும் அதிகப்படுத்தப்பட்டு உள்ளனர்.

மிரட்டல் விடுத்தவர் லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலைச் சேர்ந்தவர் என்ற கோணத்தில் போலீசாரும் விசாரணையைத் தொடங்கி உள்ளனர்.

பாலிவுட் நடிகரான ரன்வீர் சிங்கிடம் பணம் கேட்டு மிரட்டல் விடுக்கப்பட்டது மும்பையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com