iFLICKS தொடர்புக்கு: 8754422764
Breaking News

முதல்வர் ஜெயலலிதாவிற்கு மாரடைப்பு ஏற்பட்டதாக அப்பல்லோ அறிக்கையி்ல் தகவல் | டிஜிட்டல் பண பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் கலெக்டர்களுக்கு ஊக்கத்தொகை

ஈ.வி.கே.எஸ். இளங்கோவனுக்கு 4-வது நாளாக சிகிச்சை

உடல்நலக்குறைவு காரணமாக கோவை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இளங்கோவன் இயல்பு நிலைக்கு திரும்பி விட்டதாகவும், இன்று மாலை டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்றும் டாக்டர்கள் தெரிவித்தனர்.

டிசம்பர் 02, 2016 15:30 (0) ()

சென்னை ஐகோர்ட்டில் புதுவை வக்கீல்களுக்கு நீதிபதி பதவி: நாராயணசாமி உறுதி

புதுவை வக்கீல்களுக்கு சென்னை ஐகோர்ட்டில் நீதிபதி பதவிகள் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என நாராயணசாமி உறுதி அளித்துள்ளார்.

டிசம்பர் 02, 2016 16:05 (0) ()

மாயமான காதல் கணவரை 1½ வருடமாக தேடும் இளம்பெண்

பெற்றோர் எதிர்ப்பை மீறி திருமணம் செய்து மாயமான காதல் கணவரை கண்டுபிடித்து தரும்படி இளம்பெண் எஸ்.பி.யிடம் கண்ணீர் மல்க மனு அளித்தார்.

டிசம்பர் 02, 2016 15:16 (0) ()

புதுவை அருகே கள்ளக்காதலியின் மகளை கர்ப்பமாக்கிய வாலிபர்

புதுவை அருகே கள்ளக்காதலியின் மகளை கர்ப்பமாக்கிய வாலிபரை போலீசார் கைது கடலூர் சிறையில் அடைத்தனர்.

டிசம்பர் 02, 2016 14:42 (0) ()

15-ந்தேதிவரை ரெயில், மருந்துகடை, அரசு வரியை பழைய ரூ.500 நோட்டு மூலம் செலுத்தலாம்

பழைய ரூ.500 நோட்டுகளை வருகிற 15-ந்தேதி வரை ரெயில், பஸ் டிக்கெட் கவுண்டர்கள், மருந்து கடைகள், மற்றும் மாநகரகாட்சி வரிகள் மின் கட்டணம் போன்றவற்றை செலுத்தலாம்.

டிசம்பர் 02, 2016 13:52 (0) ()

திருச்சி வெடி ஆலை விபத்து: பலி எண்ணிக்கை 19 ஆக உயர்வு

திருச்சி மாவட்டம் உப்பிலியபுரம் அருகே முருங்கப்பட்டியில் வெடி மருந்து ஆலையில் தீ விபத்து ஏற்பட்டது. இதில் பலியானோர் எண்ணிக்கை 19 ஆக உயர்ந்துள்ளது.

டிசம்பர் 02, 2016 13:31 (0) ()

வேலூரில் இருந்து படப்பைக்கு தொழிலதிபரை கடத்தி சென்று கொன்று புதைத்தது எப்படி?

வேலூரில் இருந்து தொழிலதிபரை கடத்தி சென்று கொன்று புதைத்தது எப்படி என்று ரவுடிகள் ஜெயகுமார், ராஜேஸ்வரனையிடிம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

டிசம்பர் 02, 2016 13:30 (0) ()

ஓடும் பஸ்சில் பள்ளி மாணவர்களுக்கு கத்திக்குத்து: 4 மாணவர்கள் கைது

தூத்துக்குடியில் ஓடும் பஸ்சில் பள்ளி மாணவர்களுக்கிடையே ஏற்பட்ட மோதலில் 2 மாணவர்களுக்கு கத்திக்குத்தில் காயம் அடைந்தனர். இந்த சம்பவத்தில் 4 மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

டிசம்பர் 02, 2016 13:21 (0) ()

வெடிமருந்து ஆலை விபத்தில் 18 பேர் பலி: சூமோட்டோ வழக்காக ஏற்க ஐகோர்ட்டு மறுப்பு

திருச்சி வெடிமருந்து ஆலை விபத்தில் 18 பேர் பலியானது தொடர்பாக மதுரை ஐகோர்ட்டு தாமாக முன் வந்து சூமோட்டோ வழக்குப் பதிவு செய்ய மறுத்து விட்டது.

டிசம்பர் 02, 2016 12:55 (0) ()

புழல் ஜெயிலில் கைதிகளிடம் இருந்து செல்போன்கள் பறிமுதல்

புழல் ஜெயிலில் கைதிகள் மண்ணில் புதைத்து வைத்த செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

டிசம்பர் 02, 2016 12:38 (0) ()

‘நடா’ புயலால் பலன் இல்லை: புதுவையை ஏமாற்றிய மழை

நடா புயலால் புதுவையில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்தது. ஆனால் நடா புயல் புதுவையை ஏமாற்றியது. இதனால் விவசாயிகளும், புதுவை மக்களும் கடும் கவலைக்குள்ளாகி உள்ளனர்.

டிசம்பர் 02, 2016 12:25 (0) ()

விழுப்புரம்-கடலூர் மாவட்ட மீனவர்கள் 3-வது நாளாக மீன் பிடிக்க செல்லவில்லை

விழுப்புரம் மாவட்டத்தில் மரக்காணம் முதல் கோட்டக்குப்பம் வரை கடல் சீற்றமாக காணப்பட்டது. கடலில் ராட்சத அலை எழுந்ததால் 19 கிராமங்களை சேர்ந்த மீனவர்கள் இன்று 3-வது நாளாக மீன் பிடிக்க செல்லவில்லை.

டிசம்பர் 02, 2016 12:16 (0) ()

ரே‌ஷன் கடைகளில் வாங்காத பொருட்களுக்கு ரசீது: எஸ்.எம்.எஸ் வருவதால் பொது மக்கள் அதிர்ச்சி

ரே‌ஷன் கடைகளில் வாங்காத பொருட்களுக்கு குடும்ப அட்டைதாரர்களின் செல்போனுக்கு எஸ்.எம்.எஸ் வருவதால் பொது மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

டிசம்பர் 02, 2016 12:09 (0) ()

மேட்டூர் அனல் மின் நிலையத்தில் மின் உற்பத்தி பாதிப்பு

மேட்டூர் அனல் மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் தொடங்கி உள்ளதால் மின் உற்பத்தியில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

டிசம்பர் 02, 2016 11:36 (0) ()

திருப்பூர், நீலகிரியில் சம்பளம் எடுக்க முடியாமல் அரசு ஊழியர்கள் திணறல்

திருப்பூர், ஊட்டிக்கு இன்னும் 500 ரூபாய் புதிய நோட்டுகள் வரவில்லை. மேலும் போதிய பணம் இல்லாததால் சம்பளம் எடுக்க முடியாமல் அரசு ஊழியர்கள் தவித்து வருகிறார்கள்.

டிசம்பர் 02, 2016 11:22 (0) ()

சேலம் அருகே பிரபல ரவுடி கொலை: போலீசார் விசாரணை

சேலம் அருகே பிரபல ரவுடி கொலை செய்யப்பட்ட சம்பவத்தால் அந்த பகுதியில் இன்று காலை முதலே பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த கொலை குறித்து போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர்.

டிசம்பர் 02, 2016 11:12 (0) ()

பெரியாறு அணை நீர்ப்பிடிப்பு பகுதியில் மழை

பெரியாறு அணை நீர்ப்பிடிப்பு பகுதியில் மழை பெய்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். பெரியாறு அணை நீர்ப்பிடிப்பு பகுதியில் விடிய விடிய பலத்த மழை பெய்ததால் அணையின் நீர்மட்டம் 110.80 அடியாக உள்ளது.

டிசம்பர் 02, 2016 10:33 (0) ()

திருமங்கலம் அருகே குடிக்க பணம் கொடுக்காததால் தந்தை அடித்துக்கொலை: விவசாயி கைது

குடிக்க பணம் கொடுக்காததால் தந்தை அடித்துக்கொலை செய்யப்பட்டார். விவசாயியை போலீசார் கைது செய்தனர். இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

டிசம்பர் 02, 2016 10:32 (0) ()

தமிழக மீனவர்களின் படகுகளை விடுவிக்க கோரி வேலை நிறுத்த போராட்டம்- ரெயில் மறியல்

தமிழக மீனவர்களின் படகுகளை விடுவிக்க கோரி வேலை நிறுத்தம் மற்றும் ரெயில் மறியல் போராட்டம் நடத்தப்படும் என்று தமிழக மீனவர் சங்க ஆலோசனை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

டிசம்பர் 02, 2016 10:26 (0) ()

கருப்பு பணத்தை மாற்றித்தருவதாக கூறி ரூ.34 லட்சம் மோசடி: சப்-இன்ஸ்பெக்டர் மகன் கைது?

அரியலூர் லாட்ஜில் கருப்பு பணத்தை மாற்றித்தருவதாக கூறி ரூ.34 லட்சம் மோசடியில் ஈடுபட்ட சப்-இன்ஸ்பெக்டர் மகனை கைது செய்த போலீசார் ரகசிய இடத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

டிசம்பர் 02, 2016 10:26 (0) ()

தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் 2 யூனிட்டுகள் பழுது: மின் உற்பத்தி பாதிப்பு

தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் 2 யூனிட்டுகள் பழுதானதால் 420 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. 2 மற்றும் 5-வது யூனிட்டுகளில் ஏற்பட்டுள்ள பாதிப்பை சரிசெய்யும் பணி விரைவாக நடைபெற்று வருகிறது.

டிசம்பர் 02, 2016 10:15 (0) ()

5

ஆசிரியரின் தேர்வுகள்...