பாபநாசத்தில் மட்டும் 723 மில்லிமீட்டர் மழை பெய்துள்ளது

ஜனவரி மாதம் 1-ந் தேதி முதல் இன்று 21-ந் தேதி வரை பாபநாசம் அணைப்பகுதியில் மட்டும் மொத்தம் 723 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது.
தேனி மாவட்ட ஆட்சியருக்கு கொரோனா தொற்று

தேனி மாவட்ட ஆட்சியர் பல்லவி பல்தேவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 2 ஆயிரத்து 500 கனஅடியாக அதிகரிப்பு

ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து இன்று காலை நிலவரப்படி வினாடிக்கு 2 ஆயிரத்து 500 கனஅடியாக அதிகரித்துள்ளது.
சென்னையில் கொரோனாவுக்கு 15 மண்டலங்களில் சிகிச்சை பெறுவோர் விவரம்

சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் எந்தெந்த மண்டலங்களில் எத்தனை பேர் சிகிச்சை பெறுகின்றனர் என்ற விவரத்தை மாநகராட்சி வெளியிட்டுள்ளது.
புதுவையில் 2-வது நாளாக அரசு பஸ்கள் ஓடவில்லை

புதுவையில் போக்குவரத்து ஊழியர்களின் 2-வது நாள் போராட்டத்தால் நகர பகுதியில் அரசு பஸ்கள் இயக்கப்படவில்லை. இதனால் கிராமப்புற பயணிகள் அவதிக்குள்ளாகினர்.
சாலை விபத்துகளில் இறப்பவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது- நாராயணசாமி தகவல்

சாலை விபத்துகளில் இறப்பவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளதாக முதல்-அமைச்சர் நாராயணசாமி கூறினார்.
மதுரையில் 2 மாடி கட்டிடம் சரிந்ததால் பரபரப்பு

மதுரையில் 2 மாடி கட்டிடம் திடீரென சரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
வீட்டில் இருந்த வாகனத்திற்கு சுங்கச்சாவடியில் பணம் வசூல்- உரிமையாளர் அதிர்ச்சி

மானாமதுரை அருகே வீட்டில் இருந்த வாகனத்திற்கு சுங்கச்சாவடியில் இருந்து பணம் எடுக்கப்பட்டு உள்ளதாக வந்த குறுஞ்செய்தி தகவலால் உரிமையாளர் அதிர்ச்சி அடைந்தார்.
தற்கொலையை தடுக்கவே ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதிக்கப்பட்டது- ஐகோர்ட்டில் தமிழக அரசு விளக்கம்

ஆன்லைன் சூதாட்டத்தால் ஏற்படும் தற்கொலைகளை தடுக்கும் நோக்கத்தில் ஆன்லைன் சூதாட்டத்துக்கு தடை விதித்துள்ளதாக ஐகோர்ட்டில் தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்துள்ளது.
பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கைதான அதிமுக பிரமுகர் உள்பட 3 பேருக்கு ஆண்மை பரிசோதனை

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கைதான அதிமுக பிரமுகர் உள்பட 3 பேருக்கு ஆண்மை பரிசோதனை செய்ய நீதிபதி உத்தரவிட்டார்.
புவனகிரி அருகே வாய்க்காலில் பாய்ந்த அரசு பஸ்

கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே இன்று அதிகாலை அரசு பஸ் சாலையோரம் உள்ள வாய்க்காலில் பாய்ந்து விபத்துக்குள்ளானது.
98 சதவீத பெற்றோர் ஆதரவால் பள்ளிகள் திறக்கப்பட்டது- அமைச்சர் செங்கோட்டையன்

தமிழகத்தில் 98 சதவீதம் பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள் ஒப்புதலுடன் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.
மனித நேய மக்கள் கட்சி தனிச்சின்னத்தில் போட்டி- ஜவாஹிருல்லா

தமிழகத்தில் வருகிற சட்டமன்ற தேர்தலில் தி.மு.க கூட்டணி 234 தொகுதியிலும் வெற்றி பெற பாடுபடுவோம் என ஜவாஹிருல்லா கூறியுள்ளார்.
புதுவையில் அரசு பஸ்கள் ஓடவில்லை- பயணிகள் அவதி

புதுவையில் நகர பகுதியில் அரசு பஸ்கள் இயங்கவில்லை. இதனால் பயணிகள் அவதிக்குள்ளாகினர்.
காதில் தீவைத்து சித்ரவதை செய்ததால் யானை பலி- வனத்துறை விசாரணையில் திடுக்கிடும் தகவல்

காதில் தீ வைக்கப்பட்டதால் யானை பலியான சம்பவம் வனநல ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையில் கொரோனாவுக்கு 15 மண்டலங்களில் சிகிச்சை பெறுவோர் விவரம்

சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் எந்தெந்த மண்டலங்களில் எத்தனை பேர் சிகிச்சை பெறுகின்றனர் என்ற விவரத்தை மாநகராட்சி வெளியிட்டுள்ளது.
மாஞ்சோலையில் ஒரே ஒரு மாணவருக்காக திறக்கப்பட்ட அரசு பள்ளி

10-ம் வகுப்பு மாணவர்களுக்கும் பள்ளிகள் திறக்க உத்தரவிடப்பட்டதால் மாஞ்சோலை அரசு பள்ளியில் படிக்கும் ஒரே ஒரு மாணவருக்காக அந்த பள்ளி திறக்கப்பட்டது.
பென்னாகரம் அருகே மோட்டார் சைக்கிள் மீது கார் மோதியதில் கல்லூரி மாணவர் பலி

பென்னாகரம் அருகே மோட்டார் சைக்கிள் மீது கார் மோதியதில் கல்லூரி மாணவர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
10 மாதங்களுக்கு பிறகு திறப்பு- தனியார் பள்ளிகளை விட அரசு பள்ளிக்கு அதிக மாணவர் வருகை

தமிழகம் முழுவதும் எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பிளஸ்-2 மாணவர்களுக்காக பள்ளிகள் நேற்று திறக்கப்பட்டன. தனியார் பள்ளிகளை விட அரசு பள்ளிக்கு அதிக மாணவர்கள் வந்திருந்தனர்.
மெட்ரோ ரெயில் நிலையங்களில் கொரோனா விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி

சென்னை மெட்ரோ ரெயில் நிலையங்களில் 2 நாட்களுக்கு கொரோனா வைரஸ் தடுப்பு குறித்த விழிப்புணர்வை உருவாக்குவதற்கான கலை நிகழ்ச்சி நடைபெறுகிறது.
திருச்சியில் ஜல்லிக்கட்டு போட்டி- சீறிப்பாய்ந்த காளைகளை அடக்க மல்லுக்கட்டிய மாடுபிடி வீரர்கள்

திருச்சி திருவெறும்பூர் அருகே சூரியூரில் இன்று ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்று வருகிறது. இதில் 550 காளைகள் பங்கேற்றன.