என் மலர்tooltip icon

    தொழில்நுட்பம்

    மோட்டோரோலா நிறுவனம் மோட்டோ ஜி50 மற்றும் ஜி100 ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து இருக்கிறது.

    மோட்டோரோலா நிறுவனம் மோட்டோ ஜி100 மற்றும் மோட்டோ ஜி50 5ஜி ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்தது. மோட்டோ ஜி50 5ஜி மாடலில் 6.5 இன்ச் ஹெச்டி பிளஸ் மேக்ஸ் விஷன் 90 ஹெர்ட்ஸ் ரிப்ரெஷ் ரேட் ஸ்கிரீன், ஸ்னாப்டிராகன் 480 பிராசஸர், 4 ஜிபி ரேம், அதிகபட்சம் 128 ஜிபி மெமரி கொண்டுள்ளது.

    புகைப்படங்களை எடுக்க 48 எம்பி பிரைமரி கேமரா, 2 எம்பி டெப்த் கேமரா, 5 எம்பி மேக்ரோ லென்ஸ் மற்றும் 13 எம்பி செல்பி கேமரா வழங்கப்பட்டு உள்ளது. ஆண்ட்ராய்டு 11 ஒஎஸ் கொண்டிருக்கும் மோட்டோ ஜி50 5ஜி மாடலில் ஹைப்ரிட் டூயல் சிம் ஸ்லாட், பின்புறம் கைரேகை சென்சார், ஸ்பிலாஷ் ரெசிஸ்டண்ட், டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5, யுஎஸ்பி டைப் சி உள்ளது. 

    இத்துடன் 5000 எம்ஏஹெச் பேட்டரி, 15 வாட் சார்ஜிங் வழங்கப்பட்டு இருக்கிறது. மோட்டோ ஜி50 5ஜி மாடல் ஸ்டீல் கிரே, அக்வா கிரீன் நிறங்களில் கிடைக்கிறது. சர்வதேச சந்தையில் இதன் விலை 294 டாலர்கள் இந்திய மதிப்பில் ரூ. 21,340 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. 

     மோட்டோ ஜி100

    மோட்டோ ஜி100 பிளாக்ஷிப் மாடலில் 6.7 இன்ச் FHD+90 ஹெர்ட்ஸ் டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 870 5ஜி பிராசஸர், அதிகபட்சம் 8 ஜிபி ரேம் வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் 16 எம்பி + 8 எம்பி என இரண்டு செல்பி கேமராக்கள் வழங்கப்பட்டு இருக்கின்றன. 

    புகைப்படங்களை எடுக்க 64 எம்பி பிரைமரி கேமரா, 16 எம்பி அல்ட்ரா வைடு கேமரா, 2 எம்பி டெப்த் மற்றும் ToF சென்சார் உள்ளது. இதன் பக்கவாட்டில் கைரேகை சென்சார் பவர் பட்டனிலேயே பொருத்தப்பட்டு இருக்கிறது. இத்துடன் 5000 எம்ஏஹெச் பேட்டரி மற்றும் 20 வாட் டர்போ சார்ஜிங் வசதி உள்ளது.

    மோட்டோ ஜி100 ஸ்மார்ட்போன் ஐடிசென்ட் ஓசன், ஐடிசென்ட் ஸ்கை என இரண்டு நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை 588 
    டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 42,770 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

    சாம்சங் நிறுவனம் கடந்த ஆண்டு அறிமுகம் செய்த கேலக்ஸி எஸ்20 எப்இ மாடலின் புது வேரியண்டை விரைவில் அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.


    சாம்சங் நிறுவனம் கேலக்ஸி எஸ்20 எப்இ ஸ்மார்ட்போனினை கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. இந்த ஸ்மார்ட்போன் எக்சைனோஸ் 990 பிராசஸருடன் 4ஜி கனெக்டிவிட்டி கொண்டிருந்தது. 

    இந்த நிலையில், தற்போது வெளியாகி இருக்கும் தகவல்களில் சாம்சங் நிறுவனம் கேலக்ஸி எஸ்20 எப்இ மாடலின் 5ஜி வேரியண்டை ஸ்னாப்டிராகன் 865 பிராசஸருடன் அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்தியாவில் கேலக்ஸி எஸ்20 எப்இ 4ஜி மாடல் ரூ. 49,999 விலையில் அறிமுகம் செய்யப்பட்டது. இதன் 5ஜி வெர்ஷனும் இதேபோன்ற விலையில் அறிமுகம் செய்யப்படலாம்.

     கேலக்ஸி எஸ்20 எப்இ

    சிறப்பம்சங்களை பொருத்தவரை 4ஜி வேரியண்டில் வழங்கப்பட்டதை போன்றே 6.5 இன்ச் FHD+ சூப்பர் AMOLED, இன்பினிட்டி ஒ பிளாட் டிஸ்ப்ளே, ஆப்டிக்கல் கைரேகை சென்சார், 12 எம்பி பிரைமரி கேமரா, 12 எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ், 8 எம்பி டெலிபோட்டோ லென்ஸ், 32 எம்பி செல்பி கேமரா வழங்கப்படும் என தெரிகிறது.

    இத்துடன் வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி, 4500 எம்ஏஹெச் பேட்டரி, 25 வாட் பாஸ்ட் சார்ஜிங், 15 வாட் சார்ஜர், வயர்லெஸ் சார்ஜிங், வயர்லெஸ் பவர் ஷேர் வசதி வழங்கப்படலாம்.
    சியோமி நிறுவனத்தின் எம்ஐ 11 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் இந்திய வெளியீட்டு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.


    சியோமி நிறுவனம் தனது எம்ஐ 11 சீரிஸ் மாடல்களுக்கான டீசரை வெளியிட்டு உள்ளது. டீசரில் புது ஸ்மார்ட்போன் சீரிஸ் வெளியீட்டு தேதி இடம்பெறவில்லை. முன்னதாக எம்ஐ 11 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் சர்வதேச சந்தையில் கடந்த மாதம் அறிமுகம் செய்யப்பட்டன.

    இதுதவிர சியோமி நிறுவனமும் மார்ச் 29 ஆம் தேதி மெகா லான்ச் நிகழ்வை நடத்த இருப்பதாக அறிவித்து இருந்தது. அந்த வகையில் எம்ஐ 11 ப்ரோ மற்றும் எம்ஐ 11 அல்ட்ரா ஸ்மார்ட்போன்கள் இந்த நிகழ்வில் அறிமுகம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது. எனினும், இதுபற்றி எந்த தகவலும் இதுவரை உறுதி செய்யப்படவில்லை.

    எம்ஐ 11 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் வாடிக்கையாளர்களுக்கு முற்றிலும் புது ஸ்மார்ட்போன் அனுபவத்தை கொடுக்கும் என சியோமி இந்தியா தெரிவித்து இருக்கிறது. 
    ஸ்டீவ் ஜாப்ஸ் கைப்பட எழுதிய விண்ணப்பம் அதிக தொகைக்கு ஏலம் போனது. இதுபற்றிய விவரங்களை பார்ப்போம்.


    ஸ்டீவ் ஜாப்ஸ் 1973 ஆம் ஆண்டு கைப்பட எழுதிய விண்ணப்ப படிவம் இந்திய மதிப்பில் ரூ. 1.2 கோடிக்கு ஏலம் போனது. இந்த ஏலத்தை ஐக்கிய ராஜ்ஜியத்தை சேர்ந்த சார்டர்பீல்ட்ஸ் நிறுவனம் மேற்கொண்டது. ஏலம் பிப்ரவரி 24 ஆம் தேதி துவங்கி மார்ச் 24 ஆம் தேதி நிறைவுற்றது. 

     ஸ்டீவ் ஜாப்ஸ்

    ஒற்றை பக்கம் கொண்ட விண்ணப்ப படிவத்தை போர்ட்லாந்தின் ரீட் கல்லூரியில் இருந்து நின்றதும் சமர்பித்தார். முன்னதாக இதேபோன்று ஸ்டீவ் ஜாப்ஸ் கைப்பட எழுதிய விண்ணப்ப படிவத்தை 2018 ஆம் ஆண்டு தொழில்நுட்ப தொழில்துறை உரிமையாளர் ஏலத்தில் வாங்கினார்.

    இந்த விண்ணப்பம் ஆப்பிள் இணை நிறுவனர் கைப்பட எழுதிய முதல் படிவம் ஆகும். இதனை அவர் ஆப்பிள் நிறுவனத்தை துவங்கும் முன் எழுதினார். முன்னதாக ஸ்டீப் ஜாப்ஸ் கையெழுத்திட்ட பிளாப்பி டிஸ்க் இந்திய மதிப்பில் ரூ. 60 லட்சத்துக்கு ஏலம் விடப்பட்டது.
    ரியல்மி நிறுவனத்தின் புதிய 8 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.

    ரியல்மி நிறுவனம் ஏற்கனவே அறிவித்தப்படி ரியல்மி 8 சீரிஸ் ஸ்மார்ட்போன்களை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. ரியல்மி 8 மாடலில் 6.4 இன்ச் புல் ஹெச்டி பிளஸ் AMOLED டிஸ்ப்ளே, மீடியாடெக் ஹீலியோ ஜி95 பிராசஸர், அதிகபட்சம் 8 ஜிபி ரேம் வழங்கப்பட்டு உள்ளது.

    இத்துடன் 64 எம்பி பிரைமரி கேமரா, 8 எம்பி அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ், 2 எம்பி போர்டிரெயிட், 2 எம்பி மேக்ரோ கேமரா, 16 எம்பி செல்பி கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது. மேலும் இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார், டூயல் சிம் ஸ்லாட், ஆண்ட்ராய்டு 11 மற்றும் ரியல்மி யுஐ 2.0, 5000 எம்ஏஹெச் பேட்டரி மற்றும் 30 வாட் டார்ட் பாஸ்ட் சார்ஜிங் உள்ளது.

    ரியல்மி 8 ப்ரோ மாடலில் 6.4 இன்ச் புல் ஹெச்டி பிளஸ் AMOLED டிஸ்ப்ளே, ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 720ஜி பிராசஸர், அதிகபட்சம் 8 ஜிபி ரேம் வழங்கப்பட்டு உள்ளது.

    ரியல்மி 8 ப்ரோ

    இத்துடன் 108 எம்பி பிரைமரி கேமரா, 8 எம்பி அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ், 2 எம்பி போர்டிரெயிட், 2 எம்பி மேக்ரோ கேமரா, 16 எம்பி செல்பி கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது. மேலும் இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார், டூயல் சிம் ஸ்லாட், ஆண்ட்ராய்டு 11 மற்றும் ரியல்மி யுஐ 2.0, 4500 எம்ஏஹெச் பேட்டரி மற்றும் 50 வாட் வூக் சூப்பர் டார்ட் பாஸ்ட் சார்ஜிங் உள்ளது.

    ரியல்மி 8 ஸ்மார்ட்போன் சைபர் சில்வர் மற்றும் சைபர் பிளாக் நிறங்களில் கிடைக்கிறது. இதன் 4 ஜிபி + 128 ஜிபி மெமரி மாடல் ரூ. 14,999, 6 ஜிபி + 128 ஜிபி மாடல் ரூ. 15,999 மற்றும் டாப் எண்ட் 8 ஜிபி + 128 ஜிபி மாடல் ரூ. 16,999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

    ரியல்மி 8 ப்ரோ ஸ்மார்ட்போன் இன்பனைட் புளூ, இன்பனைட் பிளாக் மற்றும் இலுமினேட்டிங் எல்லோ என மூன்று நிறங்களில் கிடைக்கிறது. இதன் 6 ஜிபி + 128 ஜிபி ரூ. 17,999, 8 ஜிபி + 128 ஜிபி ரூ. 19,999 என நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

    நின்டென்டோ நிறுவனம் போக்கிமான் கோ உருவாக்கிய நிறுவனத்துடன் இணைந்து ஸ்மார்ட்போன்களுக்கான ஏ.ஆர். கேம்களை உருவாக்குகிறது.


    ஜப்பான் நாட்டை சேர்ந்த முன்னணி கேம் தயாரிப்பு நிறுவனமான நின்டென்டோ அமெரிக்காவை பூர்விகமாக கொண்டு இயங்கி வரும் நியான்டிக் நிறுவனத்துடன் கூட்டணி அமைக்கிறது. நியான்டிக் நிறுவனம் ஸ்மார்ட்போன்களில் அதிக பிரபலமான போக்கிமான் கோ கேமை உருவாக்கி இருக்கிறது. 

    இரு நிறுவனங்கள் இணைந்து ஸ்மார்ட்போன்களுக்கான ஆக்மெனடெட் ரியாலிட்டி கேம்களை உருவாக்க இருக்கின்றன. இரண்டு முன்னணி நிறுவனங்ள் கூட்டணியில் உருவாகும் முதல் கேம் பிக்மின் கதாபாத்திரங்களை கொண்டிருக்கும் என்றும் இந்த கேம் 2021 இறுதிக்குள் அறிமுகமாகும் என கூறப்படுகிறது. 

     போக்கிமான் கோ

    ஆக்மென்டெட் ரியாலிட்டி தொழில்நுட்பம் புகைப்படங்கள் மற்றும் அனிமேஷன் காட்சிகள் நிஜ உலகில் நேரில் பார்ப்பது போன்ற தோற்றத்தை ஸ்மார்ட்போனின் ரியர் கேமரா வழியே காண்பிக்கும். இதன் காரணமாகவே போக்கிமான் கோ உலகம் முழுக்க அதிகளவு வரவேற்பை பெற்றது. 

    பிக்மின், சூப்பர் மேரியோ மற்றும் டான்கி காங் போன்ற பிரபல நின்டென்டோ கதாபாத்திரங்களை உருவாக்கிய மியாமோடோ புதிய செயலி நடபத்தை மகிழ்வான காரியமாக மாற்றும் வகையில் இருக்கும் என தெரிவித்தார். 
    ஹெச்எம்டி குளோபல் நிறுவனம் குறைந்த நோக்கியா 3.2 ஸ்மார்ட்போனிற்கு புது ஆண்ட்ராய்டு அப்டேட் வழங்கி வருகிறது.


    நோக்கியா 3.2 ஸ்மார்ட்போனிற்கு இந்தியாவில் ஆண்ட்ராய்டு 11 அப்டேட் வழங்கப்பட்டு வருகிறது. இந்தியாவில் 2019 ஆண்டு நோக்கியா 3.2 ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 9 பை இயங்குதளத்துடன் அறிமுகம் செய்யப்பட்டது. பின் இந்த ஸ்மார்ட்போனிற்கு கடந்த ஆண்டு ஆண்ட்ராய்டு 10 அப்டேட் வழங்கப்பட்டது. 

    மார்ச் 28 ஆம் தேதிக்குள் அனைத்து நோக்கியா 3.2 ஸ்மார்ட்போன்களுக்கும் ஆண்ட்ராய்டு 11 அப்டேட் வழங்கப்பட்டு விடும். புது அப்டேட் பற்றிய விவரங்கள் நோக்கியா போன்ஸ் கம்யூனிட்டி போரமில் பதிவிடப்பட்டு இருககிறது. நோக்கியா 3.2 மாடலுக்கு ஆண்ட்ராய்டு 11 அப்டேட் பெறும் 34 நாடுகள் பட்டியலை ஹெச்எம்டி குளோபல் வெளியிட்டு உள்ளது. 

    நோக்கியா 3.2 ஸ்மார்ட்போன் 6.26 இன்ச் ஹெச்டி பிளஸ் டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 429 பிராசஸர், 3 ஜிபி ரேம், 32 ஜிபி மெமரி, 13 எம்பி பிரைமரி கேமரா, 5 எம்பி செல்பி கேமரா கொண்டுள்ளது.
    ஆப்பிள் நிறுவனத்தின் புதிய ஐபோன் 13 சீரிஸ் மாடல்கள் வெளியீடு பற்றி புது தகவல் இணையத்தில் வெளியாகி உள்ளது.


    கொரோனாவைரஸ் பாதிப்பு காரணமாக ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 12 சீரிஸ் மாடல்கள் கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் அறிமுகம் செய்யப்பட்டன. முந்தைய ஆண்டுகளில் செப்டம்பர் மாதத்திலேயே புது ஐபோன் மாடல்கள் அறிமுகம் செய்யப்பட்டு வந்தன. அந்த வரிசையில், இந்த ஆண்டு புதிய ஐபோன் 13 சீரிஸ் மாடல்கள் செப்டம்பர் மாதத்திலேயே அறிமுகமாகும் என தகவல் வெளியாகி உள்ளது.

    2021 ஐபோன் சீரிஸ், கடந்த ஆண்டு ஆப்பிள் அறிமுகம் செய்த ஐபோன் 12 சீரிசின் மேம்பட்ட மாடல்கள் ஆகும். இவை சிறிய டிஸ்ப்ளே நாட்ச், சிறப்பான அல்ட்ரா வைடு கேமராக்கள், அதிக ரிப்ரெஷ் ரேட் கொண்ட டிஸ்ப்ளே கொண்டிருக்கும் என இதுவரை வெளியாகி இருக்கும் பெரும்பாலான தகவல்களில் தெரிவிக்கப்பட்டு இருக்கின்றன. எனினும், இதுபற்றி ஆப்பிள் சார்பில் இதுவரை எந்த தகவலும் வழங்கப்படவில்லை. 

     ஐபோன் 12 மினி

    கடந்த ஆண்டு வினியோக பணிகளில் ஏற்பட்ட தாமதம் காரணமாக ஐபோன் 12 வெளியீட்டு நிகழ்வே அக்டோபர் மாதத்தில் தான் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து ஐபோன் 12 ப்ரோ மற்றும் ஐபோன் 12 மாடல்கள் அக்டோபர் மாத இறுதியிலும் ஐபோன் 12 ப்ரோ மேக்ஸ் மற்றும் ஐபோன் 12 மினி மாடல்கள் நவம்பர் மாத வாக்கில் விற்பனைக்கு வந்தன. 

    இந்த ஆண்டு துவக்கம் முதலே பல்வேறு முன்னணி நிறுவனங்களும் தங்களின் பிளாக்ஷிப் மாடல்களை வழக்கத்திற்கு மாறாக முன்கூட்டியே அறிமுகம் செய்து வருகின்றன. சாம்சங் கேலக்ஸி எஸ்21 சீரிஸ், ரோக் போன் 5, ஒன்பிளஸ் 9 சீரிஸ் உள்ளிட்டவை இடம்பெற்று இருக்கின்றன. அந்த வகையில், இந்த பட்டியலில் ஆப்பிள் நிறுவனமும் இணையலாம் என தெரிகிறது.
    ஒன்பிளஸ் நிறுவனத்தின் புதிய பிளாக்ஷிப் சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கின்றன.


    ஒன்பிளஸ் 9, ஒன்பிளஸ் 9 ப்ரோ  மற்றும் ஒன்பிளஸ் 9ஆர் ஸ்மார்ட்போன்கள் விர்ச்சுவல் நிகழ்வில் அறிமுகம் செய்யப்பட்டன. புதிய பிளாக்ஷிப் ஸ்மார்ட்போன்கள் ஹேசில்பிலாட் கேமரா சென்சார்கள், ஸ்னாப்டிராகன் 888 பிராசஸர் கொண்டிருக்கின்றன.

    சிறப்பம்சங்களை பொருத்தவரை ஒன்பிளஸ் 9 மாடலில் 6.55 இன்ச் புல் ஹெச்டி பிளஸ் 1080x2400 பிக்சல் புளூயிட் AMOLED டிஸ்ப்ளே, குவால்காம் ஸ்னாப்டிராகன் 888 பிராசஸர், 8 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி, ஒன்பிளஸ் கூல் பிளே கூலிங் சிஸ்டம் போன்ற அம்சங்கள் வழங்கப்பட்டு இருக்கிறது.

    இத்துடன் 48 எம்பி பிரைமரி கேமரா, 50 எம்பி அல்ட்ரா வைடு ஆங்கில் கேமரா, 2 எம்பி மோனோ குரோம் சென்சார், 16 எம்பி செல்பி கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது. கனெக்டிவிட்டிக்கு 5ஜி, 4ஜி எல்டிஇ, வைபை 6, ப்ளூடூத் 5.2, யுஎஸ்பி டைப் சி போர்ட் வழங்கப்பட்டு உள்ளது. மேலும் இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார், 4500 எம்ஏஹெச் பேட்டரி, 65 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளது.

     ஒன்பிளஸ் 9 ப்ரோ


    ஒன்பிளஸ் 9 ப்ரோ மாடலில் ஆக்சிஜன் ஒஎஸ் 11 சார்ந்த ஆண்ட்ராய்டு 11 ஒஎஸ், 6.7 இன்ச் QHD+ புளூயிட் AMOLED டிஸ்ப்ளே, குவால்காம் ஸ்னாப்டிராகன் 888 பிராசஸர், 8 ஜிபி, 12 ஜிபி ரேம், 48 எம்பி பிரைமரி கேமரா, 50 எம்பி அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ், 8 எம்பி டெலிபோட்டோ கேமரா, 2 எம்பி மோனோ குரோம் சென்சார், 16 எம்பி செல்பி கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது.

    இத்துடன் 5ஜி, 4ஜி எல்டிஇ, வைபை 6, ப்ளூடூத் 5.2, யுஎஸ்பி டைப் சி போர்ட், 4500 எம்ஏஹெச் பேட்டரி, வார்ப் சார்ஜ் 65டி பாஸ்ட் சார்ஜிங் உள்ளது. 

    ஒன்பிளஸ் 9 ஆர்

    ஒன்பிளஸ் 9 ஆர் மாடலிலும் ஆண்ட்ராய்டு 11 சார்ந்த ஆக்சிஜன் ஒஎஸ் 11 வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் 6.5 இன்ச் புல் ஹெச்டி பிளஸ் 1080x2400 பிக்சல் OLED டிஸ்ப்ளே, குவால்காம் ஸ்னாப்டிராகன் 870 பிராசஸர், 8 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி, 48 எம்பி குவாட் கேமரா சென்சார்கள், 4500 எம்ஏஹெச் பேட்டரி, வார்ப் சார்ஜ் 65 வாட் பாஸ்ட் சார்ஜிங் உள்ளது.

    விலை விவரங்கள்

    ஒன்பிளஸ் 9 (8 ஜிபி +128 ஜிபி) ரூ. 49,999
    ஒன்பிளஸ் 9 (12 ஜிபி +256 ஜிபி) ரூ. 54,999
    ஒன்பிளஸ் 9 ப்ரோ (8 ஜிபி +128 ஜிபி) ரூ. 64,999
    ஒன்பிளஸ் 9 ப்ரோ (12 ஜிபி +256 ஜிபி) ரூ. 69,999
    ஒன்பிளஸ் 9 ஆர் (8 ஜிபி +128 ஜிபி) ரூ. 39,999
    ஒன்பிளஸ் 9 ஆர் (12 ஜிபி +256 ஜிபி) ரூ. 43,999

    விவோ நிறுவனத்தின் வி20 ஸ்மார்ட்போன் மாடல் விலை திடீரென குறைக்கப்பட்டு இருக்கிறது. இதன் விவரங்களை பார்ப்போம்.


    விவோ வி20 ஸ்மாரட்போனின் விலை ரூ. 2 ஆயிரம் குறைக்கப்பட்டு இருக்கிறது. விலை குறைப்பை தொடர்ந்து விவோ வி20 ஸ்மார்ட்போன் தற்போது ரூ. 22,990 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. புதிய விலை அமேசான் மற்றும் ப்ளிப்கார்ட் தளங்களில் மாற்றப்பட்டுவிட்டது.

    இந்தியாவில் விவோ வி20 ஸ்மார்ட்போன் கடந்த ஆண்டு அக்டோபர் மாத வாக்கில் அறிமுகம் செய்யப்பட்டது. பின் டிசம்பர் மாத வாக்கில் இந்த மாடல் குவால்காம் ஸ்னாப்டிராகன் 730ஜி பிராசஸருடன் அப்டேட் செய்யப்பட்டது. முன்னதாக இந்த ஸ்மார்ட்போனின் 8 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி மாடல் ரூ. 24,990 விலையிலும், 8 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி மாடல் ரூ. 27,990 விலையிலும் விற்பனை செய்யப்பட்டது.

    விவோ வி20 256 ஜிபி மாடல் தற்போது ரூ. 25,490 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. அந்த வகையில் தற்போதைய விலை குறைப்பு விவோ வி20 மாடலின் இரண்டு வேரியண்ட்களுக்கும் வழங்கப்படுகிறது. 

     விவோ வி20

    விவோ வி20 சிறப்பம்சங்கள்

    - 6.44 இன்ச் புல் ஹெச்டி பிளஸ் 1080x2400 பிக்சல் AMOLED டிஸ்ப்ளே
    - குவால்காம் ஸ்னாப்டிராகன் 720ஜி பிராசஸர்
    - 8 ஜிபி ரேம்
    - 128 ஜிபி மெமரி
    - மெமரியை நீட்டிக்கும் வசதி
    - ஆண்ட்ராய்டு 11 மற்றும் பன்டச் ஒஎஸ் 11
    - 64 எம்பி பிரைமரி கேமரா
    - 8 எம்பி அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ்
    - 2 எம்பி மோனோகுரோம் லென்ஸ்
    - 44 எம்பி பிரைமரி கேமரா
    - 4000 எம்ஏஹெச் பேட்டரி
    - 33 வாட் பிளாஷ்சார்ஜ் பாஸ்ட் சார்ஜிங்
    - டூயல் பேண்ட் வைபை, ப்ளூடூத் 5.1
    - யுஎஸ்பி டைப் சி
    - இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார்
    ஒன்பிளஸ் 9 சீரிஸ் மாடல்கள் அறிமுகம் செய்யப்பட இருக்கும் நிலையில், ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன் விலை குறைக்கப்பட்டு இருக்கிறது.


    இந்திய சந்தையில் ஒன்பிளஸ் 8டி ஸ்மார்ட்போனின் விலை குறைக்கப்பட்டு உள்ளது. ஒன்பிளஸ் 8டி புதிய விலை அந்நிறுவன வலைதளத்தில் பதிவிடப்பட்டு இருக்கிறது. அதன்படி இந்த ஸ்மார்ட்போன் ரூ. 40,499 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. முன்னதாக இந்த மாடல் ரூ. 42,999 விலையில் விற்பனை செய்யப்பட்டு வந்தது. இந்த விலை 8 ஜிபி + 128 ஜிபி மாடலுக்கானது ஆகும்.

     ஒன்பிளஸ் 8டி

    விலை குறைப்பு மட்டுமின்றி தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்துவோருக்கு 10 சதவீதம் வரை கேஷ்பேக் வழங்கப்படுகிறது. ஒன்பிளஸ் 9 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் அறிமுகம் செய்யப்படுவதால், இந்த விலை குறைப்பு அறிவிக்கப்பட்டு இருக்கலாம் என கூறப்படுகிறது. 

    இந்தியாவில் ஒன்பிளஸ் 8டி ஸ்மார்ட்போன் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் அறிமுகம் செய்யப்பட்டது. மேலும் 65 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி கொண்ட ஒரே ஒன்பிளஸ் ஸ்மார்ட்போனாக இது இருக்கிறது.
    எல்ஜி நிறுவனம் அடுத்த தலைமுறைக்கான 6ஜி தொழில்நுட்பத்தை உருவாக்கும் பணிகளை துவங்கி இருக்கிறது.


    எல்ஜி எலெக்டிரான்க்ஸ் நிறுவனம் 6ஜி நெட்வொர்க் தொழில்நுட்பத்தை உருவாக்குவதற்கான கூட்டணியை அமைத்து வருவதாக தெரிவித்து உள்ளது. இதற்கென எல்ஜி நிறுவனம் கீசைட் டெக்னாலஜீஸ், கொரியாவின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையத்துடன் கூட்டணி அமைத்து இருக்கிறது.

     6ஜி

    ஒப்பந்தத்தின் படி மூன்று நிறுவனங்கள் இணைந்து டெராஹெர்ட்ஸ் சார்ந்த தொழில்நுட்பங்களை உருவாக்கும் பணிகளில் ஈடுபட இருக்கின்றன. டெராஹெர்ட்ஸ் 6ஜி தகவல் பரிமாற்ற முறையில் மிகமுக்கிய பிரீக்வன்சி பேண்ட் ஆகும். 

    முன்னதாக 2019 ஆண்டு எல்டி நிறுவனம் 6ஜி ஆய்வு நிறுவனத்தை கொரியாவின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையத்தில் கட்டமைத்தது. கீசைட் டெக்னாலஜீஸ் நிறுவனம் 6ஜி டெராஹெர்ட்ஸ் சோதனை உபகரணங்களை வினியோகம் செய்கிறது. 
    ×