என் மலர்
தொழில்நுட்பம்
போக்கோ பிராண்டு ஏற்கனவே அறிவித்தப்படி இந்திய சந்தையில் தனது போக்கோ எக்ஸ்3 ப்ரோ ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்தது.
போக்கோ பிராண்டின் போக்கோ எக்ஸ்3 ப்ரோ ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. புதிய ஸ்மார்ட்போனில் 6.67 இன்ச் புல் ஹெச்டி பிளஸ் எல்சிடி ஸ்கிரீன், ஸ்னாப்டிராகன் 860 பிராசஸர், அதிகபட்சம் 8 ஜிபி ரேம், ஆண்ட்ராய்டு 11 சார்ந்த எம்ஐயுஐ 12 கொண்டிருக்கிறது.
புகைப்படங்களை எடுக்க 48 எம்பி பிரைமரி கேமரா, 8 எம்பி அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ், 2 எம்பி மேக்ரோ மற்றும் 2 எம்பி போர்டிரெயிட் லென்ஸ், 20 எம்பி செல்பி கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது. பக்கவாட்டில் கைரேகை சென்சார் கொண்டிருக்கும் போக்கோ எக்ஸ்3 ப்ரோ 5160 எம்ஏஹெச் பேட்டரி, 33 வாட் பாஸ்ட் சார்ஜிங் கொண்டிருக்கிறது.

போக்கோ எக்ஸ்3 ப்ரோ அம்சங்கள்
- 6.67 இன்ச் 1080×2400 பிக்சல் FHD+ 20:9 LCD ஸ்கிரீன்
- கார்னிங் கொரில்லா கிளாஸ் 6
- ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 860 பிராசஸர்
- அட்ரினோ 640 GPU
- 6 ஜிபி / 8 ஜிபி LPDDR4X ரேம்
- 128 ஜிபி (UFS 3.1) மெமரி
- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
- ஆண்ட்ராய்டு 11 மற்றும் எம்ஐயுஐ 12
- ஹைப்ரிட் டூயல் சிம்
- 48 எம்பி பிரைமரி கேமரா, f/1.79, LED பிளாஷ்
- 8 எம்பி 119° அல்ட்ரா வைடு சென்சார், f/2.2
- 2 எம்பி டெப்த்
- 2 எம்பி மேக்ரோ சென்சார், 1.75μm, f/2.4
- 20 எம்பி செல்பி கேமரா, f/2.2
- பக்கவாட்டில் கைரேகை சென்சார்
- 3.5 எம்எம் ஆடியோ ஜாக், ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள்
- ஸ்பிலாஷ் ரெசிஸ்டண்ட் (IP53)
- டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5
- யுஎஸ்பி டைப் சி
- 5160 எம்ஏஹெச் பேட்டரி
- 33 வாட் பாஸ்ட் சார்ஜிங்
போக்கோ எக்ஸ்3 ப்ரோ ஸ்மார்ட்போன் கிராபைட் பிளாக், ஸ்டீல் புளூ மற்றும் கோல்டன் பிரான்ஸ் உள்ளிட்ட நிறங்களில் கிடைக்கிறது. இதன் 6 ஜிபி + 128 ஜிபி மாடல் விலை ரூ. 18,999 என்றும் 8 ஜிபி + 128 ஜிபி ரூ. 20,999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
ரியல்மி நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போன் அசத்தலான அம்சங்களுடன் உருவாகி வருகிறது. இதன் விவரங்களை பார்ப்போம்.
ரியல்மி ஜிடி நியோ ஸ்மார்ட்போன் விரைவில் வெளியாக இருக்கிறது. புது ரியல்மி ஸ்மார்ட்போன் மீடியாடெக் டிமென்சிட்டி 1200 சிப்செட் கொண்டிருக்கும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டு விட்டது. தற்போது புதிய ரியல்மி ஸ்மார்ட்போன் விவரங்கள் கீக்பென்ச் தளத்தில் வெளியாகி இருக்கிறது.
கீக்பென்ச் விவரங்களின் படி ரியல்மி ஜிடி நியோ மாடல் அதிகபட்சம் 12 ஜிபி ரேம் கொண்டிருக்கும் என தெரிகிறது. இதுதவிர இந்த ஸ்மார்ட்போன் 6 ஜிபி, 8 ஜிபி ரேம் வேரியண்ட்களில் கிடைக்கும் என தெரிகிறது. கீக்பென்ச் சோதனையில் இந்த ஸ்மார்ட்போன் சிங்கில் கோரில் 975 புள்ளிகளையும், மல்டி-கோரில் 3320 புள்ளிகளையும் பெற்று இருக்கிறது.

ரியல்மி ஜிடி நியோ ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 11 ஒஎஸ் கொண்டிருக்கும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. புகைப்படங்களை எடுக்க 64 எம்பி பிரைமரி சென்சாருடன் மூன்று கேமரா சென்சார், டூயல் ஸ்டீரியோ ஸ்பீக்கர் மற்றும் டால்பி அட்மோஸ் வசதி, 4500 எம்ஏஹெச் பேட்டரி கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.
புதிய ரியல்மி ஜிடி நியோ மாடல் துவக்க விலை 2 ஆயிரம் யுவான் இந்திய மதிப்பில் ரூ. 22,200 என துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மற்ற அம்சங்களை பொருத்தவரை இந்த ஸ்மார்ட்போன் 120 ஹெர்ட்ஸ் டிஸ்ப்ளே, 65 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி கொண்டிருக்கும் என தெரிகிறது.
ஆப்பிள் நிறுவனத்தின் புதிய ஐபோன் 13 ப்ரோ மேட் பிளாக் ஆப்ஷன், மேம்பட்ட போர்டிரெயிட் மோட் அம்சங்களுடன் உருவாகி வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
ஆப்பிள் நிறுவனம் ஐபோன் 13 சீரிஸ் மாடல்களை இந்த ஆண்டு அறிமுகம் செய்ய இருக்கிறது. இம்முறை ஐபோன் 13 சீரிசில் ஐபோன் 13 ப்ரோ மாடல் புதிதாக மேட் பிளாக் நிறத்தில் கிடைக்கும் என கூறப்படுகிறது. இதுதவிர புதிய ஐபோனில் மேம்பட்ட போர்டிரெயிட் மோட் வசதி வழங்கப்படும் என தெரிகிறது.

புதிய நிறம் மட்டுமின்றி ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் கோட்டிங் வழங்கப்படும் என கூறப்படுகிறது. இது கோட்டிங் ஐபோனின் பின்புற பேனலில் கைரேகை அதிகம் பதியாமல் பார்த்துக் கொள்ளும் என தெரிகிறது. இந்த வடிவமைப்பு ஐபோன் 13 ப்ரோ மற்றும் ப்ரோ மேக்ஸ் மாடல்களில் மட்டும் வழங்கப்படலாம்.
ஐபோன் 13 சீரிஸ் மாடல்களில் டிஸ்ப்ளேவின் கீழ் கைரேகை சென்சார் வழங்கப்படும் என்றும் இத்துடன் பேஸ் ஐடி அம்சமும் வழங்கப்படும் என கூறப்படுகிறது. இத்துடன் குவால்காம் நிறுவனத்தின் ஸ்னாப்டிராகன் எக்ஸ்60 5ஜி மோடெம் வழங்கப்படும் என தெரிகிறது.
சாம்சங் நிறுவனத்தின் புதிய கேலக்ஸி டேப் ஏ7 லைட் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது.
சாம்சங் நிறுவனம் கேலக்ஸி டேப் ஏ7 லைட் மாடலை ஜூன் மாத வாக்கில் அறிமுகம் செய்யும் என தகவல் வெளியாகி உள்ளது. புதிய கேலக்ஸி டேப் ஏ7 லைட் பட்ஜெட் ரக மாடல் என்றும் இதில் எல்சிடி பேனல் வழங்கப்படும் என்றும் கூறப்படுகிறது.
சிறப்பம்சங்களை பொருத்தவரை புதிய கேலக்ஸி டேப் ஏ7 லைட் மாடலில் 8.4 இன்ச் டிஸ்ப்ளே, எல்சிடி பேனல், ஒற்றை பிரைமரி கேமரா, செல்பி கேமரா, பவர் பட்டன், பக்கவாட்டுகளில் வால்யூம் ராக்கர், கைரேகை சென்சார் உள்ளிட்டவை வழங்கப்படலாம்.

புதிய கேலக்ஸி டேப் ஏ7 லைட் மாடலில் ஹீலியோ பி22டி பிராசஸர், 3 ஜிபி ரேம் உள்ளிட்ட அம்சங்கள் வழங்கப்படும் என தெரிகிறது. இந்த டேப்லெட்டில் வழங்கப்பட இருக்கும் கேமரா சென்சார் விவரங்கள் இதுவரை அறியப்படவில்லை. மேலும் இதில் 5000 எம்ஏஹெச் பேட்டரி, பாஸ்ட் சார்ஜிங் வசதி, ப்ளூடூத் 5, வைபை, 4ஜி எல்டிஇ, ஆண்ட்ராய்டு 11 வழங்கப்படலாம்.
புதிய டேப் ஏ7 லைட் மாடலுடன் கேலக்ஸி டேப் எஸ்7 லைட் அறிமுகம் செய்யப்படும் என கூறப்படுகிறது. இதில் 5ஜி, 4ஜி எல்டிஇ, வைபை, 12.4 இன்ச் எல்சிடி டிஎப்டி டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 750ஜி பிராசஸர் வழங்கப்படலாம்.
சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி எம் சீரிஸ் மற்றும் ஏ சீரிஸ் 5ஜி ஸ்மார்ட்போன்கள் இந்திய வலைதளத்தில் லீக் ஆகி இருக்கின்றன.
சாம்சங் கேலக்ஸி எம்42 5ஜி மற்றும் ஏ42 5ஜி ஸ்மார்ட்போன்கள் பி.ஐ.எஸ். வலைதளத்தில் இடம்பெற்று இருக்கின்றன. அந்த வகையில் இரு மாடல்களும் விரைவில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்படலாம் என தெரிகிறது.
கேலக்ஸி எம்42 5ஜி மாடல் இதுவரை அறிமுகம் செய்யப்படவில்லை. ஆனால் கேலக்ஸி ஏ42 5ஜி மாடல் கடந்த ஆண்டு செப்டம்பர் மாத வாக்கில் அமெரிக்க சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்திய சந்தையில் கேலக்ஸி எம்42 5ஜி மற்றும் கேலக்ஸி ஏ42 5ஜி மாடல்களை வெளியிடுவது பற்றி சாம்சங் இதுவரை எந்த தகவலும் வழங்கவில்லை.
இரு ஸ்மார்ட்போன்களிலும் டூயல் சிம் ஸ்லாட் மற்றும் மாடல் நம்பர் தவிர வேறு எந்த தகவலும் தற்போது கிடைக்கப்பெறவில்லை. அந்த வகையில், கேலக்ஸி எம்42 5ஜி SM-M426B/DS, கேலக்ஸி ஏ42 5ஜி SM-A426B/DS என்ற மாடல் நம்பர்களை கொண்டுள்ளன.

முன்னதாக கேலக்ஸி எம்42 5ஜி மாடல் வைபை அலையன்ஸ் மற்றும் ப்ளூடூத் எஸ்ஐஜி சான்றளிக்கும் வலைதளங்களில் இடம்பெற்று இருந்தது. அதன்படி இது கேலக்ஸி ஏ42 5ஜி மாடலின் ரி-பிராண்டு செய்யப்பட்ட வெர்ஷனாக இருக்கலாம் என கூறப்பட்டது.
கேலக்ஸி எம்42 5ஜி மாடல் இந்தியாவில் அறிமுகமாகும் முதல் எம் சீரிஸ் 5ஜி ஸ்மார்ட்போனாக இருக்கும். முன்னதாக அமெரிக்க சந்தையில் அறிமுகம் செய்யப்பட்ட கேலக்ஸி ஏ42 5ஜி மாடலில் 6.6 இன்ச் ஹெச்டி பிளஸ் சூப்பர் AMOLED டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 750ஜி பிராசஸர், குவாட் கேமரா, 5000 எம்ஏஹெச் பேட்டரி போன்ற அம்சங்கள் உள்ளன.
சாம்சங் நிறுவனத்தின் புதிய என்ட்ரி லெவல் ஸ்மார்ட்போனின் விலை விவரங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது.
சாம்சங் நிறுவனத்தின் புதிய கேலக்ஸி எப்02எஸ் ஸ்மார்ட்போனின் விலை விவரங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது. கேலக்ஸி எப்02எஸ் ஸ்மார்ட்போன் கேலக்ஸி எம்02எஸ் மாடலின் ரி-பிராண்டு செய்யப்பட்ட வெர்ஷன் ஆகும். முன்னதாக இந்த ஸ்மார்ட்போனின் அம்சங்கள் வெளியாகி இருந்தது.
அதன்படி கேலக்ஸி எப்02எஸ் மாடலில் 6.5 இன்ச் ஹெச்டி பிளஸ் எல்சிடி டிஸ்ப்ளே, கார்டெக்ஸ் ஏ53 பிராசஸர், 3 ஜிபி ரேம், ஆண்ட்ராய்டு 10 ஒஎஸ் வழங்கப்படுகிறது. இத்துடன் 13 எம்பி பிரைமரி கேமரா, 2 எம்பி மேக்ரோ கேமரா, 2 எம்பி டெப்த் சென்சார், 5 எம்பி செல்பி கேமரா வழங்கப்பட்டு உள்ளது.

இத்துடன் 5000 எம்ஏஹெச் பேட்டரி, 15 வாட் பாஸ்ட் சார்ஜிங், டூயல் சிம் 4ஜி, சிங்கில் பேன்ட் வைபை, ப்ளூடூத், 3.5 எம்எம் ஆடியோ ஜாக் மற்றும் யுஎஸ்பி டைப் சி போர்ட் வழங்கப்படுகிறது.
விலை விவரங்கள்
கேலக்ஸி எப்02எஸ் 3 ஜிபி + 32 ஜிபி மாடல் விலை ரூ. 8,999
கேலக்ஸி எப்02எஸ் 4 ஜிபி + 64 ஜிபி மாடல் விலை ரூ. 9,999
2021 ஆண்டுக்கான சிறந்த ஸ்மார்ட்போன்கள் அடங்கிய பட்டியல் வெளியிடப்பட்டு இருக்கிறது. இதன் விவரங்களை பார்ப்போம்.
ஒருவருக்கு தேவைப்படும் சிறந்த ஸ்மார்ட்போனை தேடுவது சிக்கலான காரியம் தான். ஆனால், பரிந்துரைகளால் ஓரளவு சிறந்த மாடலை தேர்வு செய்ய முடியும். அந்த வகையில் பயனர்கள் வழங்கிய மதிப்பீடுகளின் அடிப்படையில் 2021 ஆண்டுக்கான சிறந்த ஸ்மார்ட்போன்கள் பட்டியல் உருவாக்கப்பட்டு இருக்கிறது.
இந்த பட்டியலில் சிறந்த ஸ்மார்ட்போனாக ஒரு மாடல் தேர்வு செய்யப்படாமல் பேட்டரி பேக்கப், டிஸ்ப்ளே என பல்வேறு அம்சங்கள் அடிப்படையில் ஸ்மார்ட்போன்கள் வரிசைப்படுத்தப்பட்டு இருக்கிறது. அந்த வகையில் சிறந்த ஐபோன் மாடலாக ஐபோன் 12 ப்ரோ மேக்ஸ் தேர்வாகி இருக்கிறது. இது 5ஜி வசதி கொண்டிருப்பதால் இந்த பட்டத்தை பெற்று இருக்கிறது.
இதுமட்டுமின்றி மற்ற மாடல்களை விட நீண்ட நேர பேட்டரி பேக்கப், பெரிய டிஸ்ப்ளே, சிறப்பான கேமரா உள்ளிட்ட அம்சங்கள் அடிப்படையில் ஐபோன் 12 ப்ரோ மேக்ஸ் இந்த ஆண்டுக்கான சிறந்த ஐபோன் என்ற பெருமையை பெற்று இருக்கிறது.

2021 ஆண்டுக்கான சிறந்த ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனாக சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி நோட் 20 அல்ட்ரா 5ஜி தேர்வாகி இருக்கிறது. பெரிய டிஸ்ப்ளே மட்டுமின்றி, எஸ் பென் வசதி, குறைந்த விலை உள்ளிட்ட அம்சங்களால் இது சிறந்த ஆண்ட்ராய்டு போன் என்ற பெருமையை பெற்று இருக்கிறது.
சிறந்த பட்ஜெட் போன் என்ற பிரிவில் ஒன்பிளஸ் நிறுவனம் ஒன்பிளஸ் நார்டு என்10 5ஜி தேர்வாகி இருக்கிறது. பட்ஜெட் பிரிவில் சிறப்பான 5ஜி வசதி வழங்கியதால் இந்த மாடல் சிறந்த பட்ஜெட் போனாக தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளது.
ஹெச்பி நிறுவனம் குறைந்த விலை குரோம்புக் மாடல்களை இந்திய சந்தையில் அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஹெச்பி நிறுவனம் ரூ. 25 ஆயிரம் பட்ஜெட்டில் புதிய குரோம்புக் மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. தற்போதைய குரோம்புக் மாடல்களின் விலை ரூ. 25 ஆயிரத்தில் துவங்கி ரூ. 30 ஆயிரம் வரை நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.
புது குரோம்புக் மாடல்களின் சரியான வெளியீட்டு தேதி பற்றி இதுவரை எந்த தகவலும் இல்லை. எனினும், இவை 2021 ஏப்ரல் மாதத்தின் முதல் வாரத்தில் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் பெரும்பாலும் ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்படுவதால், குறைந்த விலை குரோம்புக் மாடல்கள் நல்ல வரவேற்பை பெறும் என தெரிகிறது.

அம்சங்களை பொருத்தவரை புது ஹெச்பி குரோம்புக் மாடலில் 14 இன்ச் ஹெச்டி 1366x768 பிக்சல், 2-செல் 45Wh பேட்டரி வழங்கப்படும் என கூறப்படுகிறது. இது 10 மணி நேரத்திற்கான பேக்கப் வழங்கும். கனெக்டிவிட்டிக்கு இரண்டு யுஎஸ்பி டைப் சி போர்ட்கள், ஒரு யுஎஸ்பி டைப் ஏ போர்ட் மற்றும் மைக்ரோ எஸ்டி கார்டு ரீடர், ப்ளூடூத் 5, வைபை வழங்கப்படலாம்.
இத்துடன் இன்டெல் செலரான் என்4020 பிராசஸர், இன்டகிரேட் செய்யப்பட்ட UHD iGPU கிராபிக்ஸ், அதிகபட்சம் 4 ஜிபி ரேம், 64 ஜிபி / 128 ஜிபி eMMC ஸ்டோரேஜ் வழங்கப்படும் என கூறப்படுகிறது.
போக்கோ நிறுவனத்தின் போக்கோ எம்2 புது வேரியண்ட் ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
போக்கோ நிறுவனம் இந்திய சந்தையில் விரைவில் புது ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இது போக்கோ எம்2 ஸ்மார்ட்போனின் புது வேரியண்ட் என கூறப்படுகிறது. இந்திய சந்தையில் போக்கோ எம்2 ஸ்மார்ட்போன் கடந்த ஆண்டு செப்டம்பர் மாத வாக்கில் அறிமுகம் செய்யப்பட்டது.
தற்போது அறிமுகமாக இருக்கும் புது வேரியண்ட் போக்கோ எம்2 ரீலோடட் எனும் பெயர் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. புது போக்கோ ஸ்மார்ட்போனின் விவரங்கள் எம்ஐயுஐ குறியீடுகளின் ஸ்ட்ரிங் ஒன்றில் இடம்பெற்று இருந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

இதை கொண்டு இந்த மாடல் அறிமுகம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது. இந்த குறியீடு இந்தியாவையும் குறிப்பதால், இது இந்தியாவிலும் அறிமுகம் செய்யப்படலாம் என தெரிகிறது. போக்கோ எம்2 ரீலோடட் மாடலில் மேம்பட்ட பிராசஸர், கேமராக்கள் உள்ளிட்டவை வழங்கப்படும் என கூறப்படுகிறது.
சிறப்பம்சங்களை பொருத்தவரை போக்கோ எம்2 மாடலில் 6.53 இன்ச் ஃபுல் ஹெச்டி பிளஸ் எல்சிடி வாட்டர் டிராப் டிஸ்ப்ளே, மீடியாடெக் ஹீலியோ ஜி80 பிராசஸர் வழங்கப்பட்டு உள்ளது.
இத்துடன் 13 எம்பி பிரைமரி கேமரா, 8 எம்பி அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ், 5 எம்பி மேக்ரோ சென்சார், 2 எம்பி டெப்த் சென்சார் மற்றும் 8 எம்பி செல்ஃபி கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது. டூ-டோன் டிசைன் கொண்டிருக்கும் போக்கோ எம்2 மாடலில் பின்புறம் கைரேகை சென்சார், 5000 எம்ஏஹெச் பேட்டரி வழங்கப்பட்டு உள்ளது.
இந்தியாவில் ஒன்பிளஸ் 9 சீரிஸ் மாடல்களுக்கான முன்பதிவு அமோக வரவேற்பை பெற்று வருவதாக அந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி தெரிவித்தார்.
ஒன்பிளஸ் 9 சீரிஸ் மாடல்களுக்கான முதல் நாள் முன்பதிவு முந்தைய ஒன்பிளஸ் 8 சீரிஸ் மாடல்களை விட 324 சதவீதம் அதிகமாக நடைபெற்று இருக்கிறது. இதனை ஒன்பிளஸ் தலைமை செயல் அதிகாரி பீட் லௌ தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் அக்கவுண்டில் தெரிவிததார்.

எனினும், முதல் நாளில் எத்தனை யூனிட்கள் முன்பதிவு செய்யப்பட்டன என்ற விவரங்களை அவர் வழங்கவில்லை. முதற்கட்டமாக ஒன்பிளஸ் 9 ப்ரோ மற்றும் ஒன்பிளஸ் 9 மாடல்களுக்கான முன்பதிவு துவங்கி இருக்கிறது. இவற்றுடன் அறிமுகம் செய்யப்பட்ட ஒன்பிளஸ் 9ஆர் மாடலுக்கான முன்பதிவு ஏப்ரல் மாதத்தில் துவங்குகிறது.
இந்தியாவில் புதிய ஒன்பிளஸ் 9 துவக்க விலை ரூ. 49,999 என்றும், ஒன்பிளஸ் 9 ப்ரோ துவக்க விலை ரூ. 64,999 என்றும் ஒன்பிளஸ் 9ஆர் துவக்க விலை ரூ. 39,999 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. முன்பதிவு ஒன்பிளஸ் வலைதளத்தில் நடைபெறுகிறது.
ஹெச்எம்டி குளோபல் நிறுவனத்தின் நோக்கியா எக்ஸ்20 5ஜி ஸ்மார்ட்போன் வெளியீட்டு விவரங்கள் இணையத்தில் லீக் ஆகி இருக்கின்றன.
ஹெச்எம்டி குளோபல் நிறுவனம் நோக்கியா எக்ஸ்20 5ஜி ஸ்மார்ட்போனினை விரைவில் சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் எப்சிசி வலைதளம், இந்தியாவின் ஐஎம்இஐ வலைதளங்களில் இடம்பெற்று இருக்கிறது.
புதிய ஸ்மார்ட்போன் ஏப்ரல் 8 ஆம் தேதி அறிமுகம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது. இதே நிகழ்வில் நோக்கியா ஜி10 ஸ்மார்ட்போனும் அறிமுகமாகும் என தெரிகிறது. முந்தைய தகவல்களின் படி நோக்கியா எக்ஸ்20 5ஜி மாடலில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 480 பிராசஸர், கூகுளின் ஆண்ட்ராய்டு 11 ஒஎஸ் கொண்டிருக்கும் என கூறப்பட்டது.

இந்த ஸ்மார்ட்போனின் பின்புறம் வட்ட வடிவ கேமரா மாட்யூல், 48 எம்பி பிரைமரி கேமரா, 5 எம்பி அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ், 2 எம்பி டெப்த் மற்றும் 2 எம்பி மேக்ரோ லென்ஸ், 16 எம்பி செல்பி கேமரா, 6 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி மற்றும் 4500 எம்ஏஹெச் பேட்டரி, 10 வாட் சார்ஜிங் உள்ளிட்டவை வழங்கப்படலாம்.
எப்சிசி வலைதளத்தை தொடர்ந்து இந்திய ஐஎம்இஐ வலைதளத்திலும் இடம்பெற்று இருப்பதால், புதிய நோக்கியா 5ஜி ஸ்மார்ட்போன் இந்திய சந்தையிலும் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் TA-1341 எனும் மாடல் நம்பர் கொண்டு உருவாகி இருப்பதாக கூறப்படுகிறது.
ரியல்மி தலைமை செயல் அதிகாரி மாதவ் சேத் ரியல்மி 8 5ஜி மாடல் இந்திய வெளியீடு பற்றிய தகவலை தெரிவித்தார்.
ரியல்மி 8 சீரிஸ் 5ஜி வேரியண்ட் விரைவில் இந்திய சந்தையில் அறிமுகமாக இருக்கின்றன. இந்த தகவலை ரியல்மி இந்தியா தலைமை செயல் அதிகாரி மாதவ் சேத் உறுதிப்படுத்தி இருக்கிறார். முன்னதாக ரியல்மி 8 சீரிஸ் 5ஜி மாடல்கள் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டன.
புதிய ரியல்மி 8 சீரிஸ் 5ஜி வேரியண்ட் அம்சங்கள் மேம்பட்டு இருக்கும் என கூறப்படுகிறது. 5ஜி மாடல்கள் உருவாக்கும் பணிகள் கடந்த சில வாரங்களாக நடைபெற்று வந்ததாக தெரிகிறது. இதனை உறுதிப்படுத்தும் வகையில் ரியல்மி 8 5ஜி விவரங்கள் தாய்லாந்து நாட்டின் ஒளிபரப்பு மற்றும் தொலைதொடர்பு கமிஷன் வலைதளத்தில் வெளியானது.

ரியல்மி 8 சீரிஸ் 5ஜி வேரியண்ட் இறுதிக்கட்ட சோதனையில் இருப்பதாகவும், விரைவில் இவை வெளியாகும் என்றும் மாதவ் சேத் தெரிவித்தார். இவற்றின் வெளியீட்டு தேதி மற்றும் விலை பற்றி எந்த தகவலையும் அவர் வழங்கவில்லை.






