என் மலர்tooltip icon

    தொழில்நுட்பம்

    கூகுள் நிறுவனத்தின் புதிய ஆண்ட்ராய்டு 12 ஓ.எஸ். ஸ்டேபில் வெளியீட்டு விவரம் வெளியாகி உள்ளது.


    கூகுள் பிக்சல் ஸ்மார்ட்போன்களுக்கு அக்டோபர் 4 ஆம் தேதி ஆண்ட்ராய்டு 12 ஸ்டேபில் அப்டேட் வெளியிடப்படும் என தகவல் வெளியாகி உள்ளது. முன்னதாக ஆண்ட்ராய்டு 12 ஐந்தாவது மற்றும் இறுதி பீட்டா ஒரு வாரத்திற்கு முன் வெளியிடப்பட்டது. 

    இந்த நிலையில் தற்போது வெளியாகி இருக்கும் கூகுள் தரவுகளில் ஆண்ட்ராய்டு 12 சோர்ஸ் கோட் அக்டோபர் 4 இல் வெளியாகும் என குறிப்பிடப்பட்டு இருக்கிறது. இதே தினத்தில் ஆண்ட்ராய்டு 12 ஸ்டேபில் அப்டேட் வெளியாகும் என தெரிகிறது.

     பிக்சல் ஸ்மார்ட்போன்

    கடந்த ஆண்டு செப்டம்பர் 8 ஆம் தேதி ஆண்ட்ராய்டு 11 வெளியிடப்பட்டது. பிக்சல் ஸ்மார்ட்போன்களை தொடர்ந்து முன்னணி நிறுவனங்களின் ஸ்மார்ட்போன் மாடல்களுக்கான ஆண்ட்ராய்டு 12 வெளியீட்டு விவரம் வெளியாகும்.

    மைக்ரோமேக்ஸ் நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போன் இம்மாத இறுதியில் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.


    மைக்ரோமேக்ஸ் நிறுவனம் இந்த மாதம் புதிய ஸ்மார்ட்போனினை இந்திய சந்தையில் அறிமுகம் செய்ய இருக்கிறது. புது ஸ்மார்ட்போன் மைக்ரோமேக்ஸ் இன் நோட் 1 ப்ரோ என அழைக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.

    கடந்த ஆண்டு மைக்ரோமேக்ஸ் நிறுவனம் இன் சீரிஸ் மாடல்களுடன் இந்திய சந்தையில் ரீ-எண்ட்ரி கொடுத்தது. இந்த நிலையில், இன் நோட் 1 ப்ரோ இம்மாத இறுதியில் அறிமுகம் செய்யப்படலாம் என தகவல் வெளியாகி உள்ளது.

     மைக்ரோமேக்ஸ் இன் நோட் 1

    முன்னதாக இந்த ஸ்மார்ட்போன் விவரங்கள் கீக்பென்ச் வலைதளத்தில் லீக் ஆனது. அதன்படி இந்த ஸ்மார்ட்போன் இ7748 எனும் மாடல் நம்பர் கொண்டிருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனில் மீடியாடெக் ஹீலியோ ஜி90 பிராசஸர், 4 ஜிபி ரேம், ஆண்ட்ராய்டு 11 ஓ.எஸ். வழங்கப்படும் என தெரிகிறது.

    இத்துடன் புல் ஹெச்.டி. பிளஸ் டிஸ்ப்ளே, 90 ஹெர்ட்ஸ் ரிப்ரெஷ் ரேட் வழங்கப்படலாம். இந்தியாவில் புதிய மைக்ரோமேக்ஸ் இன் நோட் 1 ப்ரோ ஸ்மார்ட்போனின் விலை ரூ. 15 ஆயிரம் பட்ஜெட்டில் நிர்ணயம் செய்யப்படலாம் என தெரிகிறது. 
    ஒன்பிளஸ் நிறுவனம் உருவாக்கி வரும் புதிய ஸ்மார்ட்போன் விவரங்கள் இணையத்தில் லீக் ஆகி உள்ளது.
    ஒன்பிளஸ் நிறுவனம் கடந்த ஆண்டுகளில் தனது ஸ்மார்ட்போன் வியாபார யுக்தியில் பல்வேறு மாற்றங்களை மேற்கொண்டு வருகிறது. பிளாக்‌ஷிப் சாதனங்கள் மட்டுமின்றி நார்டு சீரிசில் பல்வேறு மிட் ரேன்ஜ் ஸ்மார்ட்போன்களை வெளியிட்டு இருக்கிறது.

    இந்த நிலையில், தற்போது வெளியாகி இருக்கும் தகவல்களில் ஒன்பிளஸ் நிறுவனம் ரூ. 20 ஆயிரம் பட்ஜெட்டில் புது ஸ்மார்ட்போன்களை அடுத்த ஆண்டு வெளியிட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. எனினும், புது ஸ்மார்ட்போன் விவரங்களை அந்நிறுவனம் வெளியிடவில்லை.

    ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன்

    குறைந்த விலை ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன்கள் அடுத்த காலாண்டு அல்லது 2022 இரண்டாவது காலாண்டில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது. தற்போது ரூ. 24,999 துவக்க விலையில் நார்டு சி.இ. 5ஜி ஸ்மார்ட்போன் ஒன்பிளஸ் நிறுவனத்தின் குறைந்த விலை மாடலாக இருக்கிறது.
    இந்தியாவில் விவோ நிறுவனத்தின் எக்ஸ்70 சீரிஸ் ஸ்மார்ட்போன் அம்சங்கள் சீன வேரியண்டை விட வித்தியாசமாக இருக்கும் என கூறப்படுகிறது.


    விவோ நிறுவனம் தனது எக்ஸ்70 சீரிஸ் ஸ்மார்ட்போன்களை சீன சந்தையில் ஏற்கனவே அறிமுகம் செய்துவிட்டது. தற்போது இந்த ஸ்மார்ட்போன்கள் இந்தியா, இந்தோனேசியா, ஐக்கிய அரபு அமீரகம், மலேசியா மற்றும் தாய்லாந்து போன்ற நாடுகளில் அறிமுகமாக இருக்கின்றன.

    மலேசியாவில் விவோ எக்ஸ்70 சீரிஸ் மாடல்கள் செப்டம்பர் 22 ஆம் தேதி அறிமுகமாகிறது. எக்ஸ்70 சீரிசில் எக்ஸ்70, எக்ஸ்70 ப்ரோ மற்றும் எக்ஸ்70 ப்ரோ பிளஸ் மாடல்கள் இடம்பெற்று இருக்கிறது. இவற்றின் அம்சங்கள் சீன வேரியண்டில் இருப்பதைவிட வேறுபடும் என கூறப்படுகிறது.

     விவோ எக்ஸ்70 ப்ரோ

    சீனாவில் அறிமுகமான எக்ஸ்70 ப்ரோ மாடலில் எக்சைனோஸ் 1080 சிப்செட் வழங்கப்பட்டு இருக்கிறது. மலேசியாவில் இதே ஸ்மார்ட்போன் மீடியாடெக் டிமென்சிட்டி 1200 பிராசஸர் கொண்டிருக்கும் என தெரிகிறது. இத்துடன் ஆண்ட்ராய்டு 11 ஓ.எஸ். சார்ந்த பன்டச் ஓ.எஸ். வழங்கப்படும் என கூறப்படுகிறது.

    ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் குறைந்த விலை ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் விற்பனை அந்த தேதியில் துவங்குகிறது.


    ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் விலை குறைந்த ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் ஜியோபோன் நெக்ஸ்ட் மாடல் ஜூன் மாத வாக்கில் அறிவிக்கப்பட்டது. இந்த ஸ்மார்ட்போன் கூகுள் நிறுவனத்துடன் இணைந்து உருவாக்கப்படுகிறது. முந்தைய தகவல்களில் ஜியோபோன் நெக்ஸ்ட் விற்பனை விநாயகர் சதுர்த்தி தினத்தில் துவங்கும் என அறிவிக்கப்பட்டது.

    இந்த நிலையில், ஜியோபோன் நெக்ஸ்ட் விற்பனை துவங்கவில்லை. தற்போது கூகுள் மற்றும் ரிலைன்ஸ் ஜியோ இணைந்து ஜியோபோன் நெக்ஸ்ட் மாடல்களை சோதனை செய்து வருகின்றன. ஜியோபோன் நெக்ஸ்ட் விற்பனை தீபாவளி சமயத்தில் துவங்கும் என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. 

     ஜியோபோன் நெக்ஸ்ட்

    சர்வதேச சந்தையில் செமிகண்டக்டர் குறைபாடு காரணமாக ஜியோபோன் நெக்ஸ்ட் விற்பனை தாமதமாகி இருக்கிறது. இதுவரை வெளியாகி இருக்கும் தகவல்களின்படி ஜியோபோன் நெக்ஸ்ட் மாடலில் ஹெச்.டி. பிளஸ் 1440x720 பிக்சல் டிஸ்ப்ளே, 1.3 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் குவால்காம் 215 பிராசஸர் வழங்கப்படுகிறது.

    இத்துடன் டூயல் சிம், டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 4.2, 13 எம்பி ஆம்னிவிஷன் ரியர் கேமரா, 8 எம்பி செல்பி கேமரா, 2 ஜிபி அல்லது 3 ஜிபி ரேம் வழங்கப்படும் என தெரிகிறது.
    ரியல்மி நிறுவனத்தின் புதிய 5ஜி ஸ்மார்ட்போன் மீடியாடெக் டிமென்சிட்டி 810 பிராசஸர் கொண்டுள்ளது.


    ரியல்மி நிறுவனம் இந்திய சந்தையில் புதிய மிட் ரேன்ஜ் 5ஜி ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்தது. புதிய ஸ்மார்ட்போன் ரியல்மி 8எஸ் என அழைக்கப்படுகிறது. இதில் 6.5 இன்ச் புல் ஹெச்.டி. பிளஸ் எல்.சி.டி. டிஸ்ப்ளே, 90 ஹெர்ட்ஸ் ரிப்ரெஷ் ரேட் உள்ளது.

    இத்துடன் 16 எம்.பி. செல்பி கேமரா, அதிகபட்சம் 8 ஜிபி ரேம், மீடியாடெக் டிமென்சிட்டி 810 பிராசஸர், ஆண்ட்ராய்டு 11 மற்றும் ரியல்மி யு.ஐ. 2.0 வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் 64 எம்பி பிரைமரி கேமரா, 2 எம்பி பிளாக் அண்ட் வைட் கேமரா, 2 எம்பி மேக்ரோ லென்ஸ் கொண்டுள்ளது.

     ரியல்மி 8எஸ்

    இதன் பக்கவாட்டில் கைரேகை சென்சார், டூயல் சிம் ஸ்லாட் வழங்கப்பட்டு இருக்கிறது. ரியல்மி 8எஸ் 5ஜி மாடல் 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது. இத்துடன் 33 வாட் டார்ட் சார்ஜ் பாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளது.

    ரியல்மி 8எஸ் 5ஜி ஸ்மார்ட்போன் யுனிவர்ஸ் புளூ மற்றும் யுனிவர்ஸ் பர்பில் நிறங்களில் கிடைக்கிறது. இதன் 6 ஜிபி + 128 ஜிபி விலை ரூ. 17,999 என்றும் 8 ஜிபி + 128 ஜிபி விலை ரூ. 19,999 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. ரியல்மி 8எஸ் 5ஜி விற்பனை செப்டம்பர் 13 ஆம் தேதி துவங்குகிறது.

    சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி எம் சீரிஸ் மற்றும் எப் சீரிஸ் ஸ்மார்ட்போன் விலை மாற்றப்பட்டு இருக்கிறது.

    சாம்சங் நிறுவனம் தனது கேலக்ஸி எம்12 மற்றும் எப்12 ஸ்மார்ட்போன்கள் விலையை இந்தியாவில் உயர்த்தி இருக்கிறது. இரு ஸ்மார்ட்போன்கள் விலை ரூ. 500 அதிகரிக்கப்பட்டு இருக்கிறது. கேலக்ஸி எம்12 மற்றும் கேலக்ஸி எப்12 ஸ்மார்ட்போன்களின் விலை ஆன்லைன் மற்றும் ஆப்லைன் வலைதளங்களில் மாற்றப்பட்டது.

    புதிய விலை விவரம்

    சாம்சங் கேலக்ஸி எம்12 4 ஜிபி + 64 ஜிபி ரூ. 11,499
    சாம்சங் கேலக்ஸி எப்12 4 ஜிபி + 64 ஜிபி ரூ. 11,499

     சாம்சங் ஸ்மார்ட்போன்

    முன்னதாக இரு ஸ்மார்ட்போன்களின் விலை ரூ. 10,999 என நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது. கேலக்ஸி எப்12 4 ஜிபி + 128 ஜிபி விலை ரூ. 12,499 ஆகும்.

    அம்சங்களை பொருத்தவரை கேலக்ஸி எம்12 மாடலில் 6.5 இன்ச் டிஸ்ப்ளே, எக்சைனோஸ் 850 பிராசஸர், 48 எம்பி குவாட் கேமரா சிஸ்டம், 8 எம்பி செல்பி கேமரா, 6000 எம்.ஏ.ஹெச். பேட்டரி வழங்கப்பட்டு இருக்கிறது.

    சாம்சங் மட்டுமின்றி ரியல்மி மற்றும் ரெட்மி நிறுவன ஸ்மார்ட்போன்களின் விலையும் சமீப காலங்களில் பலமுறை மாற்றப்பட்டன. அந்தவகையில் ரியல்மி ஸ்மார்ட்போன்கள் விலை ரூ. 1500 வரை உயர்த்தப்பட்டது.
    ரியல்மி நிறுவனம் புதிய 8ஐ ஸ்மார்ட்போனினை பட்ஜெட் பிரிவில் இந்தியாவில் அறிமுகம் செய்து இருக்கிறது.


    ரியல்மி நிறுவனம் தனது ரியல்மி 8ஐ ஸ்மார்ட்போனினை இந்தியாவில் அறிமுகம் செய்தது. இது அந்நிறுவனம் ஏற்கனவே அறிமுகம் செய்த ரியல்மி 7ஐ மாடலின் மேம்பட்ட வேரியண்ட் ஆகும். 

    புதிய ஸ்மார்ட்போனில் 6.6 இன்ச் புல் ஹெச்.டி. பிளஸ் எல்.சி.டி. ஸ்கிரீன், 120 ஹெர்ட்ஸ் ரிப்ரெஷ் ரேட், மீடியாடெக் ஹீலியோ ஜி96 பிராசஸர், அதிகபட்சம் 6 ஜிபி ரேம், 5 ஜிபி விர்ச்சுவல் ரேம் வழங்கப்பட்டு இருக்கிறது.

     ரியல்மி 8ஐ

    புகைப்படங்களை எடுக்க 50 எம்பி பிரைமரி கேமரா, 2 எம்பி பிளாக் அண்ட் வைட் சென்சார், 2 எம்பி மேக்ரோ சென்சார், 16 எம்பி செல்பி கேமரா வழங்கப்பட்டுள்ளது. இதன் பக்கவாட்டில் கைரேகை சென்சார், பிரத்யேக டூயல் சிம் ஸ்லாட், மைக்ரோ எஸ்.டி. ஸ்லாட் உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி கொண்டுள்ளது.

    இந்தியாவில் புதிய ரியல்மி 8ஐ ஸ்மார்ட்போன் ஸ்பேஸ் பிளாக் மற்றும் ஸ்பேஸ் பர்பில் நிறங்களில் கிடைக்கிறது. இதன் 4 ஜிபி + 64 ஜிபி மாடல் விலை ரூ. 13,999 என்றும் 6 ஜிபி + 128 ஜிபி விலை ரூ. 15,999 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இதன் விற்பனை செப்டம்பர் 14 ஆம் தேதி துவங்குகிறது.
    சியோமி நிறுவனத்தின் புதிய 5ஜி ஸ்மார்ட்போன் விவரங்கள் இணையத்தில் லீக் ஆகி உள்ளது.


    சியோமி நிறுவனம் விரைவில் 11 லைட் 5ஜி என்.இ. ஸ்மார்ட்போனினை இந்திய சந்தையில் அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. என்.இ. என்பது நியூ எடிஷனை குறிக்கும் என்றும் கூறப்படுகிறது. புதிய சியோமி 11 லைட் 5ஜி என்.இ. மாடல் அம்சங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது.

    அதன்படி புதிய சியோமி 5ஜி ஸ்மார்ட்போன் 159 கிராம் எடை கொண்டிருக்கிறது. புகைப்படங்களை எடுக்க 20 எம்பி செல்பி கேமரா, 64 எம்பி பிரைமரி கேமராவுடன் 8 எம்பி + 5 எம்பி கேமரா சென்சார்கள் வழங்கப்பட இருக்கின்றன. இந்த ஸ்மார்ட்போன் ஸ்னாப்டிராகன் 778ஜி பிராசஸர், 128 ஜிபி மெமரி கொண்டிருக்கும் என தெரிகிறது.

     சியோமி  ஸ்மார்ட்போன்

    இத்துடன் ஆண்ட்ராய்டு 11 ஓ.எஸ்., 6.5 இன்ச் எப்.ஹெச்.டி. பிளஸ் பன்ச்-ஹோல் டிஸ்ப்ளே, அதிகபட்சம் 12 ஜிபி ரேம் மற்றும் 4150 எம்.ஏ.ஹெச். பேட்டரி வழங்கப்படலாம். இந்த ஸ்மார்ட்போன் பிளாக், வைட், புளூ, சியான், கிரீன், எல்லோ, ஆரஞ்சு, ரெட் மற்றும் பர்பில் போன்ற நிறங்களில் கிடைக்கும் என கூறப்படுகிறது.

    ரியல்மி நிறுவனத்தின் ஜிடி மாஸ்டர் எடிஷன் ஸ்மார்ட்போனின் 6 ஜிபி ரேம் மாடல் விற்பனை துவங்கியது.


    ரியல்மி நிறுவனம் இந்தியாவில் ரியல்மி ஜிடி மாஸ்டர் எடிஷன் ஸ்மார்ட்போனினை கடந்த மாதம் அறிமுகம் செய்தது. இந்த ஸ்மார்ட்போன் 6 ஜிபி + 128 ஜிபி, 8 ஜிபி + 128 ஜிபி மற்றும் 8 ஜிபி + 256 ஜிபி என மூன்று வேரியண்ட்களில் கிடைக்கிறது.

    எனினும், 8 ஜிபி + 128 ஜிபி மற்றும் 8 ஜிபி + 256 ஜிபி மாடல்கள் விற்பனை முதலில் துவங்கியது. இரு வேரியண்ட்களின் விலை முறையே ரூ. 27,999 மற்றும் ரூ. 29,999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இதன் 6 ஜிபி + 128 ஜிபி மாடல் விற்பனை இன்று துவங்கியது. இதன் விலை ரூ. 25,999 ஆகும்.

     ரியல்மி ஜிடி மாஸ்டர் எடிஷன்

    புதிய ரியல்மி ஸ்மார்ட்போனினை ப்ளிப்கார்ட் தளத்தில் வாங்குவோருக்கு ரூ. 2 ஆயிரம் தள்ளுபடி வழங்கப்படுகிறது. இந்த சலுகை அனைத்து ஜிடி மாஸ்டர் எடிஷன் வேரியண்ட்களுக்கும் செப்டம்பர் 30 ஆம் தேதி வரை வழங்கப்படுகிறது.

    சியோமி நிறுவனம் உருவாக்கி வரும் புதிய பிளாக்‌ஷிப் ஸ்மார்ட்போன் விவரங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளன.


    சாம்சங் நிறுவனம் கடந்த வாரம் உலகின் முதல் 200 எம்பி கேமரா சென்சாரை அறிமுகம் செய்தது. இந்த சென்சாரை ஸ்மார்ட்போன் நிறுவனங்களுக்கு வழங்கும் பணிகள் ஏற்கனவே துவங்கி நடைபெற்று வருகின்றன. 

    இந்த நிலையில், தற்போது வெளியாகி இருக்கும் தகவல்களில் சாம்சங்கின் புதிய 200 எம்பி கேமரா சென்சார் கொண்ட முதல் ஸ்மார்ட்போனினை சியோமி வெளியிடலாம் என கூறப்படுகிறது. சியோமியின் எம் 11 சீரிஸ் ஸ்மார்ட்போனின் மேம்பட்ட மாடல் அடுத்த ஆண்டு அறிமுகமாகிறது.

     சியோமி ஸ்மார்ட்போன்

    இந்த ஸ்மார்ட்போன்கள் சியோமி 12 சீரிஸ் என அழைக்கப்பட இருக்கின்றன. சியோமி 12 சீரிசில் ஒரு மாடல் 200 எம்பி பிரைமரி கேமரா கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. இத்துடன் 50 எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் வழங்கப்பட இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
    ஆப்பிள் நிறுவனம் புதிய ஐபோன்களின் வெளியீட்டு விவரங்களை தனது அதிகாரப்பூர்வ வலைதளத்தில் தெரிவித்து இருக்கிறது.


    ஆப்பிள் நிறுவனம் செப்டம்பர் 14 ஆம் தேதி சிறப்பு நிகழ்வு நடைபெறும் என அறிவித்து இருக்கிறது. இந்த நிகழ்வில் ஐபோன் 13 சீரிஸ், புதிய ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 7 போன்ற சாதனங்கள் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    அம்சங்களை பொருத்தவரை ஐபோன் 13 மினி மாடலில் 5.4 இன்ச் ஸ்கிரீன், ஐபோன் 13 மற்றும் ஐபோன் 13 ப்ரோ மாடல்களில் 6.1 இன்ச் ஸ்கிரீன், ஐபோன் 13 ப்ரோ மேக்ஸ் மாடலில் 6.7 இன்ச் ஸ்கிரீன் வழங்கப்படுகிறது. ஐபோன் 13 ப்ரோ மற்றும் ஐபோன் 13 ப்ரோ மேக்ஸ் மாடல்களில் மேம்பட்ட 7பி அல்ட்ரா வைடு கேமரா வழங்கப்படலாம்.

     ஆப்பிள்

    புதிய ஐபோன்களில் அதிவேக 5ஜி சேவை வழங்கும் ஏ15 சிப்செட், 120 ஹெர்ட்ஸ் ப்ரோ-மோஷன் டிஸ்ப்ளே, சிறப்பான வயர்லெஸ் சார்ஜிங் வசதி கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 7 மாடல்கள் 41 எம்.எம். மற்றும் 45 எம்.எம். அளவுகளில் கிடைக்கும் என தெரிகிறது. இத்துடன் எஸ்7 சிப் வழங்கப்படலாம்.
    ×