என் மலர்
புதிய கேஜெட்டுகள்
ஒன்பிளஸ் நிறுவனத்தின் புதிய பிளாக்ஷிப் சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கின்றன.
ஒன்பிளஸ் 9, ஒன்பிளஸ் 9 ப்ரோ மற்றும் ஒன்பிளஸ் 9ஆர் ஸ்மார்ட்போன்கள் விர்ச்சுவல் நிகழ்வில் அறிமுகம் செய்யப்பட்டன. புதிய பிளாக்ஷிப் ஸ்மார்ட்போன்கள் ஹேசில்பிலாட் கேமரா சென்சார்கள், ஸ்னாப்டிராகன் 888 பிராசஸர் கொண்டிருக்கின்றன.
சிறப்பம்சங்களை பொருத்தவரை ஒன்பிளஸ் 9 மாடலில் 6.55 இன்ச் புல் ஹெச்டி பிளஸ் 1080x2400 பிக்சல் புளூயிட் AMOLED டிஸ்ப்ளே, குவால்காம் ஸ்னாப்டிராகன் 888 பிராசஸர், 8 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி, ஒன்பிளஸ் கூல் பிளே கூலிங் சிஸ்டம் போன்ற அம்சங்கள் வழங்கப்பட்டு இருக்கிறது.
இத்துடன் 48 எம்பி பிரைமரி கேமரா, 50 எம்பி அல்ட்ரா வைடு ஆங்கில் கேமரா, 2 எம்பி மோனோ குரோம் சென்சார், 16 எம்பி செல்பி கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது. கனெக்டிவிட்டிக்கு 5ஜி, 4ஜி எல்டிஇ, வைபை 6, ப்ளூடூத் 5.2, யுஎஸ்பி டைப் சி போர்ட் வழங்கப்பட்டு உள்ளது. மேலும் இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார், 4500 எம்ஏஹெச் பேட்டரி, 65 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளது.

ஒன்பிளஸ் 9 ப்ரோ மாடலில் ஆக்சிஜன் ஒஎஸ் 11 சார்ந்த ஆண்ட்ராய்டு 11 ஒஎஸ், 6.7 இன்ச் QHD+ புளூயிட் AMOLED டிஸ்ப்ளே, குவால்காம் ஸ்னாப்டிராகன் 888 பிராசஸர், 8 ஜிபி, 12 ஜிபி ரேம், 48 எம்பி பிரைமரி கேமரா, 50 எம்பி அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ், 8 எம்பி டெலிபோட்டோ கேமரா, 2 எம்பி மோனோ குரோம் சென்சார், 16 எம்பி செல்பி கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது.
இத்துடன் 5ஜி, 4ஜி எல்டிஇ, வைபை 6, ப்ளூடூத் 5.2, யுஎஸ்பி டைப் சி போர்ட், 4500 எம்ஏஹெச் பேட்டரி, வார்ப் சார்ஜ் 65டி பாஸ்ட் சார்ஜிங் உள்ளது.

ஒன்பிளஸ் 9 ஆர் மாடலிலும் ஆண்ட்ராய்டு 11 சார்ந்த ஆக்சிஜன் ஒஎஸ் 11 வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் 6.5 இன்ச் புல் ஹெச்டி பிளஸ் 1080x2400 பிக்சல் OLED டிஸ்ப்ளே, குவால்காம் ஸ்னாப்டிராகன் 870 பிராசஸர், 8 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி, 48 எம்பி குவாட் கேமரா சென்சார்கள், 4500 எம்ஏஹெச் பேட்டரி, வார்ப் சார்ஜ் 65 வாட் பாஸ்ட் சார்ஜிங் உள்ளது.
விலை விவரங்கள்
ஒன்பிளஸ் 9 (8 ஜிபி +128 ஜிபி) ரூ. 49,999
ஒன்பிளஸ் 9 (12 ஜிபி +256 ஜிபி) ரூ. 54,999
ஒன்பிளஸ் 9 ப்ரோ (8 ஜிபி +128 ஜிபி) ரூ. 64,999
ஒன்பிளஸ் 9 ப்ரோ (12 ஜிபி +256 ஜிபி) ரூ. 69,999
ஒன்பிளஸ் 9 ஆர் (8 ஜிபி +128 ஜிபி) ரூ. 39,999
ஒன்பிளஸ் 9 ஆர் (12 ஜிபி +256 ஜிபி) ரூ. 43,999
போக்கோ நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட எப்3 ஸ்மார்ட்போன் அசத்தல் அம்சங்களுடன் அறிமுகம் செய்யப்பட்டது.
போக்கோ நிறுவனத்தின் புதிய எப்3 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டது. இது ரெட்மி கே40 ஸ்மார்ட்போனின் சர்வதேச வெர்ஷன் ஆகும். புது போக்கோ எப்3 மாடலில் 6.67 இன்ச் E4 AMOLED டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 870 பிராசஸர், அதிகபட்சம் 8 ஜிபி ரேம் வழங்கப்பட்டு இருக்கிறது.
புகைப்படங்களை எடுக்க 48 எம்பி பிரைமரி கேமரா, 8 எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ், 5 எம்பி டெலிபோட்டோ மேக்ரோ லென்ஸ் வழங்கப்பட்டு உள்ளது. இத்துடன் 20 எம்பி செல்பி கேமரா, பக்கவாட்டில் கைரேகை சென்சார், 4520 எம்ஏஹெச் பேட்டரி, 33 வாட் பாஸ்ட் சார்ஜிங் வழங்கப்பட்டு இருக்கிறது.

போக்கோ எப்3 அம்சங்கள்
- 6.67 இன்ச் 2400x1080 பிக்சல் FHD+ AMOLED 20:9 HDR10 + டிஸ்ப்ளே
- கார்னிங் கொரில்லா கிளாஸ் 5
- ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 870 பிராசஸர்
- அட்ரினோ 650 GPU
- 6 ஜிபி LPPDDR5 ரேம், 128 ஜிபி UFS 3.1 மெமரி
- 8 ஜிபி LPPDDR5 ரேம், 256 ஜிபி UFS 3.1 மெமரி
- டூயல் சிம் ஸ்லாட்
- எம்ஐயுஐ 12 சார்ந்த ஆண்ட்ராய்டு 11
- 48 எம்பி பிரைமரி கேமரா, f/1.79, LED பிளாஷ்
- 8 எம்பி 119° அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ், f/2.4
- 5 எம்பி டெலிமேக்ரோ கேமரா, f/2.4
- 20 எம்பி செல்பி கேமரா, 0.8μm, f/2.4
- பக்கவாட்டில் கைரேகை சென்சார்
- யுஎஸ்பி டைப் சி, டூயல் ஸ்பீக்கர், டால்பி அட்மோஸ்
- 5ஜி SA/NSA, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5.1
- 4520 எம்ஏஹெச் பேட்டரி
- 33 வாட் பாஸ்ட் சார்ஜிங்
போக்கோ எப்3 ஸ்மார்ட்போன் ஆர்க்டிக் வைட், நைட் பிளாக் மற்றும் டீப் ஓசன் புளூ நிறங்களில் கிடைக்கிறது. இதன் 6 ஜிபி + 128 ஜிபி விலை 349 யூரோக்கள், இந்திய மதிப்பில் ரூ. 30,100 என்றும் 8 ஜிபி + 256 ஜிபி மாடல் விலை 399 யூரோக்கள், இந்திய மதிப்பில் ரூ. 34,410 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் 5ஜி ஸ்மார்ட்போன் மற்றும் ஜியோ பிராண்டு லேப்டாப் மாடல்கள் வெளியீட்டு விவரங்களை பார்ப்போம்.
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தனது முதல் 5ஜி ஸ்மார்ட்போன், ஜியோபுக் பெயரில் குறைந்த விலை லேப்டாப் உள்ளிட்ட சாதனங்களை ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் ஆண்டு பொதுக்குழு கூட்டத்தில் அறிமுகம் செய்யலாம் என தகவல் வெளியாகி உள்ளது.
புதிய 5ஜி ஸ்மார்ட்போன் கூகுள் நிறுவனத்துடனான கூட்டணியில் உருவாகி இருப்பதாக தெரிகிறது. இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு அல்லது ஆண்ட்ராய்டு கோ தளத்தை சார்ந்து இயங்கும் ஜியோஒஎஸ் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. ஆண்ட்ராய்டு கோ தளம் என்ட்ரி லெவல் ஹார்டுவேர் கொண்ட ஸ்மார்ட்போன்களில் சீராக இயங்கும் வகையில் உருவாக்கப்பட்டது ஆகும்.

ஏற்கனவே வெளியான தகவல்களில் ரிலையன்ஸ் ஜியோ மற்றும் கூகுள் நிறுவனங்கள் இணைந்து ஸ்மார்ட்போனை உருவாக்கி வருவதாக கூறப்பட்டது. அந்த வகையில் ஜியோவின் 5ஜி ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு கோ ஒஎஎஸ் கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஜியோ 5ஜி ஸ்மார்ட்போனுடன் ஜியோபுக் லேப்டாப் மாடலும் இந்த ஆண்டு அறிமுகமாகும் என கூறப்படுகிறது. இந்த லேப்டாப் ஹெச்டி டிஸ்ப்ளே, குவால்காம் ஸ்னாப்டிராகன் 665 பிராசஸர், 4ஜி மோடெம், அதிகபட்சம் 4 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி கொண்டிருக்கும் என கூறப்பரடுகிறது.
ஒன்பிளஸ் நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்படும் ஒன்பிளஸ் 9 மற்றும் ஒன்பிளஸ் 9 ப்ரோ மாடல்களுடன் பிரத்யேக ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகமாகிறது.
ஒன்பிளஸ் 9ஆர் எனும் புது ஸ்மார்ட்போன் இந்தியாவில் மட்டும் பிரத்யேகமாக அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இதனை ஒன்பிளஸ் தலைமை செயல் அதிகாரி பீட் லௌ உறுதிப்படுத்தி இருந்தார். மேலும் இதற்கான டீசரும் வெளியிடப்பட்டு உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் ஒன்பிளஸ் 9 சீரிஸ் மாடல்களுடன் அறிமுகமாகும் குறைந்த விலை 5ஜி மாடல் ஆகும்.
புதிய ஒன்பிளஸ் 9ஆர் ஸ்மார்ட்போன் மார்ச் 23 ஆம் தேதி ஒன்பிளஸ் 9, ஒன்பிளஸ் 9 ப்ரோ ஸ்மார்ட்போன்களுடன் இந்தியாவில் பிரத்யேகமாக அறிமுகம் செய்யப்படுகிறது. இந்தியாவில் ஒன்பிளஸ் நார்டு மாடலுக்கு நல்ல வரவேற்பு கிடைத்து இருப்பதையொட்டி ஒன்பிளஸ் 9ஆர் அறிமுகம் செய்யப்படுவதாக பீட் லௌ தெரிவித்தார்.

ஒன்பிளஸ் 9ஆர் மாடலில் பிளாக்ஷிப் ஸ்மார்ட்போனில் இடம்பெற வேண்டிய அம்சங்கள் நிச்சயம் வழங்கப்படும் என அவர் மேலும் தெரிவித்தார். இத்துடன் இந்த மாடல் சிறப்பான கேமிங் கண்ட்ரோல்கள், அலாதியான வியூவிங் அனுபவத்தை வழங்கும் என அவர் தெரிவித்தார்.
முந்தைய தகவல்களின்படி ஒன்பிளஸ் 9ஆர் ஸ்மார்ட்போன் ஸ்னாப்டிராகன் 690 5ஜி பிராசஸர் கொண்டிருக்கும் என கூறப்பட்டது. இதே பிராசஸர், கடந்த ஆண்டு வெளிநாட்டு சந்தையில் அறிமுகம் செய்யப்பட்ட நார்டு என்10 மாடலில் வழங்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.
மைக்ரோமேக்ஸ் நிறுவனம் இன் பிராண்டிங்கில் புது ஸ்மார்ட்போனினை பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்து இருக்கிறது.
மைக்ரோமேக்ஸ் நிறுவனம் புதிய இன் பிராண்டு ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்தது. புது ஸ்மார்ட்போனில் 6.67 இன்ச் புல் ஹெச்.டி. பிளஸ் எல்.சி.டி. ஸ்கிரீன், மீடியாடெக் ஹீலியி ஜி80 பிராசஸர், அதிகபட்சம் 6 ஜிபி ரேம் வழங்கப்பட்டு இறுக்கிறது.
புதிய இன் 1 ஸ்மார்ட்போன் ஸ்டாக் ஆண்ட்ராய்டு 10 ஒஎஸ் கொண்டுள்ளது. மேலும் இரண்டு ஆண்டுகளுக்கு ஒஎஸ் அப்டேட் வழங்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனிற்கு ஆண்ட்ராய்டு 11 அப்டேட் மே மாத வாக்கில் வழங்கப்படும் என மைக்ரோமேக்ஸ் தெரிவித்து உள்ளது.

புகைப்படங்களை எடுக்க 48 எம்பி பிரைமரி கேமரா, 2 எம்பி மேக்ரோ சென்சார், 2 எம்பி டெப்த் சென்சார் மற்றும் 8 எம்பி செல்பி கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் டூயல் சிம் ஸ்லாட், பின்புறம் கைரேகை சென்சார், கூகுள் அசிஸ்டண்ட் பட்டன் உள்ளிட்டவையும் வழங்கப்பட்டு இருக்கிறது.
மைக்ரோமேக்ஸ் இன் 1 ஸ்மார்ட்போன் டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத், யு.எஸ்.பி. டைப் சி, 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி மற்றும் 18 வாட் பாஸ்ட் சார்ஜிங் வழங்கப்பட்டு உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் பர்பிள் மற்றும் புளூ நிறங்களில் கிடைக்கிறது.
இந்தியாவில் மைக்ரோமேக்ஸ் இன் 1 (4 ஜிபி +64 ஜிபி) மாடல் விலை ரூ. 10499 என்றும் 6 ஜிபி + 128 ஜிபி மாடல் விலை ரூ. 11,999 என்றும் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. எனினும், மார்ச் 26 ஆம் தேதி நடைபெறும் அறிமுக விற்பனையில் இரு வேரியண்ட்களும் முறையே ரூ. 9,999 மற்றும் ரூ. 11,499 விலையில் விற்பனை செய்யப்படுகிறது.
ரியல்மி நார்சோ 30 5ஜி ஸ்மார்ட்போனின் இந்திய வெளியீட்டு விவரத்தை அதன் சி.இ.ஒ. அறிவித்து இருக்கிறார்.
ரியல்மி நார்சோ 30 சீரிஸ் இந்தியாவில் விரைவில் வெளியிடப்படும் என ரியல்மி இந்தியா தலைமை செயல் அதிகாரி மாதவ் சேத் தெரிவித்தார். புதிய ரியல்மி நார்சோ 30 4ஜி மற்றும் 5ஜி வேரியண்ட்களில் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
முன்னதாக ரியல்மி நார்சோ 30 ப்ரோ 5ஜி மற்றும் ரியல்மி நார்சோ 30ஏ ஸ்மார்ட்போன்களை பிப்ரவரி மாத வாக்கில் வெளியிடப்பட்டது. சமீபத்திய யூடியூப் நேரலையில், ரியல்மி இந்தியா தலைமை செயல் அதிகாரி மாதவ் சேத் நார்சோ 30 4ஜி வெர்ஷன் மட்டும் வெளியிட திட்டமிட்டு, தற்போது 4ஜி மட்டுமின்றி 5ஜி வெர்ஷனும் வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

மேலும் ரியல்மி நார்சோ 30 4ஜி மற்றும் நார்சோ 30 5ஜி ஸ்மார்ட்போன்கள் ஒரே நிகழ்வில் மிக விரைவில் அறிமுகம் செய்யப்படும் என அவர் மேலும் தெரிவித்தார். ரியல்மி நார்சோ 30 பற்றிய இதர விவரங்கள் அறிவிக்கப்படவில்லை.
ரியல்மி நார்சோ 30 ப்ரோ 5ஜி மற்றும் நார்சோ 30ஏ மாடல்கள் தற்போது ஆண்ட்ராய்டு 10 சார்ந்த ரியல்மி யுஐ கொண்டுள்ளது. விரைவில் இரு மாடல்களுக்கும் 2021 மூன்றாவது காலாண்டு வாக்கில் ரியல்மி யுஐ 2.0 சார்ந்த ஆண்ட்ராய்டு 11 அப்டேட் வழங்கப்படும் என அவர் தெரிவித்தார்.
மோட்டோரோலா நிறுவனத்தின் புதிய மோட்டோ ஜி100 மாடல் இந்த தேதியில் அறிமுகமாகும் என தகவல் வெளியாகி உள்ளது.
மோட்டோ ஜி100 ஸ்மார்ட்போன் சர்வதேச சந்தையில் மார்ச் 25ஆம் தேதி அறிமுகமாகும் என தகவல் வெளியாகி உள்ளது. முன்னதாக இந்த ஸ்மார்ட்போன் ரென்டர்கள் இணையத்தில் வெளியாகி இருந்தது. தற்போது புது ஸ்மார்ட்போனின் டீசரை மோட்டோரோலா வெளியிட்டு இருக்கிறது.
புதிய மோட்டோ ஜி100 அந்நிறுவனம் இந்த ஆண்டு ஜனவரி மாதம் சீன சந்தையில் அறிமுகம் செய்த மோட்டோரோலா எட்ஜ் எஸ் ஸ்மார்ட்போனின் ரி-பேட்ஜ் செய்யப்பட்ட வெர்ஷனாக இருக்கும் என கூறப்படுகிறது. மோட்டோரோலா வெளியிட்டு இருக்கும் டீசர்களில் தேதியை குறித்து கொள்ளுங்கள் எனும் வாசகம் மற்றும் மார்ச் 25 மட்டுமே குறிப்பிடப்பட்டு உள்ளது. இந்த தேதியில் அறிமுகமாகும் ஸ்மார்ட்போன் பற்றிய விவரங்கள் அடுத்தடுத்த டீசர்களில் தெரியவரும்.
முந்தைய தகவல்களின் படி மோட்டோ ஜி100 ஸ்மார்ட்போனில் ஸ்னாப்டிராகன் 870 பிராசஸர், பக்கவாட்டில் கைரேகை சென்சார், 3.5 எம்எம் ஆடியோ ஜாக், கீழ்புறத்தில் ஸ்பீக்கர் கிரில் வழங்கப்படும் என கூறப்பட்டது. மேலும் இதில் குவாட் கேமரா சென்சார், டூயல் செல்பி கேமரா வழங்கப்படலாம்.
போக்கோ நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்படும் எக்ஸ்3 ப்ரோ ஸ்மார்ட்போன் இந்தியாவில் இந்த தேதியில் அறிமுகமாகிறது.
போக்கோ நிறுவனம் தனது எக்ஸ்3 ப்ரோ ஸ்மார்ட்போனினை மார்ச் 30 ஆம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்கிறது. இந்த ஸ்மார்ட்போன் போக்கோ எப்1 மாடலுக்கு மாற்றாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. முந்தைய போக்கோ எப்1 ஸ்மார்ட்போனினை போன்றே புதிய எக்ஸ்3 மாடலுக்கும் #PROformance ஹேஷ்டேக் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது.
இந்திய வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து போக்கோ நிறுவனம் மார்ச் 22 ஆம் தேதி சர்வதேச நிகழ்வு பற்றி அறிவித்து இருக்கிறது. இந்த நிகழ்வில் போக்கோ எப்3 அறிமுகம் செய்யப்படலாம். இது ரெட்மி கே40 மாடலின் சர்வதேச எடிஷனாக இருக்கும் என கூறப்படுகிறது.
அம்சங்களை பொருத்தவரை போக்கோ எக்ஸ்3 ப்ரோ மாடலில் 6.67 இன்ச் FHD+120Hz AMOLED டிஸ்ப்ளே, குவால்காம் ஸ்னாப்டிராகன் 860 பிராசஸர், 48 எம்பி குவாட் கேமரா சென்சார்கள், 5000 எம்ஏஹெச் பேட்டரி, 33 வாட் பாஸ்ட் சார்ஜிங் வழங்கப்படலாம்.
இந்த ஸ்மார்ட்போன் பிராஸ்ட் புளூ, பேண்டம் பிளாக் மற்றும் மெட்டல் பிரான்ஸ் நிறங்களில் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் விலை இந்திய மதிப்பில் ரூ. 23 ஆயிரத்தில் துவங்கி அதிகபட்சம் ரூ. 27 ஆயிரத்திற்குள் நிர்ணயம் செய்யப்படலாம்.
சாம்சங் நிறுவனம் கேலக்ஸி எம் சீரிசில் புது மாடல்களை விரைவில் வெளியிட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
சாம்சங் நிறுவனம் 2021 ஆண்டுக்கான பிளாக்ஷிப் எஸ் சீரிஸ் மாடல்களை தொடர்ந்து தற்போது கேலக்ஸி ஏஷ எப் மற்றும் எம் சீரிஸ் மாடல்களை மேம்படுத்தும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. கேலக்ஸி ஏ52 மற்றும் கேலக்ஸி ஏ72 மாடல்கள் விரைவில் அறிமுகம் செய்யப்பட இருக்கின்றன.
இதுமட்டுமின்றி சாம்சங் நிறுவனம் மற்றொரு கேலக்ஸி எம் சீரிஸ் ஸ்மார்ட்போனை உருவாக்கி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த மாடல் கேலக்ஸி எம்42 பெயரில் வெளியாகும் என கூறப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனின் விவரங்கள் வைபை அலையன்ஸ் வலைதளத்தில் இடம்பெற்று இருந்தது. அதன்படி இதில் 5ஜி கனெக்டிவிட்டி மற்றும் பெரிய பேட்டரி வழங்கப்படும் என கூறப்படுகிறது.

கேலக்ஸி எம்42 ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 11 ஒஎஸ், டூயல் பேண்ட் வைபை சிஸ்டம் போன்ற அம்சங்களை கொண்டிருக்கும் என தெரிகிறது. இந்த மாடலில் 90 ஹெர்ட்ஸ் AMOLED டிஸ்ப்ளே, 64 எம்பி குவாட் கேமரா, 6000 எம்ஏஹெச் பேட்டரி வழங்கப்படலாம். இதில் வழங்கப்பட இருக்கும் பிராசஸர் பற்றி இதுவரை எந்த தகவலும் இல்லை.
5ஜி வழங்கப்படும் பட்சத்தில் கேலக்ஸி எம்42 ஸ்மார்ட்போன் மீடியாடெக் டிமென்சிட்டி 800யு அல்லது ஸ்னாப்டிராகன் 750ஜி பிராசஸர் கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய சந்தையில் புதிய சாம்சங் ஸ்மார்ட்போன் மோட்டோ ஜி 5ஜி, சியோமி எம்ஐ 10ஐ மற்றும் ரியல்மி எக்ஸ்7 போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமையும்.
கூகுள் நிறுவனத்தின் புதிய பிக்சல் 5ஏ ஸ்மார்ட்போன் இந்த தேதியில் அறிமுகமாகும் என தகவல் வெளியாகி உள்ளது.
கூகுள் நிறுவனத்தின் பட்ஜெட் ரக பிக்சல் 5ஏ ஸ்மார்ட்போன் ஜூன் 11 ஆம் தேதி அறிமுகம் செய்யப்படும் என தகவல் வெளியாகி உள்ளது. தோற்றத்தில் இது பார்க்க பிக்சல் 4ஏ போன்றே காட்சியளிக்கும் என்றும் கூறப்படுகிறது.
கூகுள் பிக்சல் 5ஏ மற்றும் பிக்சல் 6 மாடல்களில் சிறிய ஹோல்-பன்ச் வழங்கப்படும் என கூறப்படுகிறது. பிக்சல் 6 மாடலில் செல்பி கேமரா ஸ்மார்ட்போனின் நடுவில் வழங்கப்பட்டு இருக்கும் என தெரிகிறது. அதன்படி பன்ச்-போல் முந்தைய மாடலை விட 10 பிக்சல் அளவு சிறியதாக இருக்கும் என கூறப்படுகிறது.
பிக்சல் 5ஏ பன்ச் ஹோல் 55 பிக்சல் அளவு கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. மற்ற பிக்சல் போன்களில் இது 65 பிக்சலாக இருக்கிறது. முந்தைய தகவல்களில் பிக்சல் பட்ஸ் இயர்போன் ஏப்ரல் மாதத்திலும், புதிய பிக்சல் போன் ஜூன் 11 ஆம் தேதி அறிமுகமாகும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது.
தற்போது அந்த மாடல் பிக்சல் 5ஏ தான் என கூறப்படுகிறது. வெளியீடு தவிர புதிய பிக்சல் ஸ்மார்ட்போன் பற்றி எந்த தகவலும் தற்சமயம் வெளியாகவில்லை.
சாம்சங் நிறுவனம் ஏற்கனவே அறிவித்தப்படி பட்ஜெட் விலையில் அசத்தலான அம்சங்கள் நிறைந்த ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்தது.
சாம்சங் நிறுவனம் கேலக்ஸி எம்12 ஸ்மார்ட்போனினை இந்தியாவில் அறிமுகம் செய்தது. புதுய ஸ்மார்ட்போனில் 6.5 இன்ச் ஹெச்டி பிளஸ் இன்பினிட்டி வி டிஸ்ப்ளே, ஆக்டாகோர் எக்சைனோஸ் 850 பிராசஸர், அதிகபட்சம் 6 ஜிபி ரேம், ஆண்ட்ராய்டு 11 மற்றும் ஒன் யுஐ 3.1 வழங்கப்பட்டு இருக்கிறது.
புகைப்படங்களை எடுக்க 48 எம்பி குவாட் கேமராக்கள், 8 எம்பி செல்பி கேமரா வழங்கப்பட்டு உள்ளது. இத்துடன் பக்கவாட்டில் கைரேகை சென்சார், 6000 எம்ஏஹெச் பேட்டரி மற்றும் 15 வாட் அடாப்டிவ் பாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது.

சாம்சங் கேலக்ஸி எம்12 அம்சங்கள்:
- 6.5 இன்ச் 720×1600 பிக்சல் HD+ இன்பினிட்டி வி டிஸ்ப்ளே
- கார்னிங் கொரில்லா கிளாஸ்
- எக்சைனோஸ் 850 ஆக்டாகோர் பிராசஸர்
- மாலி-G52
- 4 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி
- 6 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி
- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
- டூயல் சிம் ஸ்லாட்
- ஆண்ட்ராய்டு 11 மற்றும் ஒன் யுஐ 3.1
- 48 எம்பி பிரைமரி கேமரா, f/2.0
- 8 எம்பி அல்ட்ரா வைடு கேமரா, f/2.2
- 5 எம்பி டெப்த் கேமரா
- 2 எம்பி மேக்ரோ கேமரா, f/2.4
- 8 எம்பி செல்பி கேமரா, f/2.2
- பக்கவாட்டில் கைரேகை சென்சார்
- 3.5 எம்எம் ஆடியோ ஜாக்
- 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5
- யுஎஸ்பி டைப் சி
- 6,000 எம்ஏஹெச் பேட்டரி
- 15 வாட் பாஸ்ட் சார்ஜிங்
சாம்சங் கேலக்ஸி எம்11 ஸ்மார்ட்போன் பிளாக், புளூ மற்றும் வைட் நிறங்களில் கிடைக்கிறது. இதன் 4 ஜிபி +64 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 10,999 என்றும் 6 ஜிபி + 128 ஜிபி மாடல் விலை ரூ. 13,499 ஆகும். இதன் விற்பனை மார்ச் 18 ஆம் தேதி துவங்குகிறது.
டிசிஎல் நிறுவனம் ஆண்ட்ராய்டு டிவி 11 ஒஎஸ் கொண்ட புது டிவி சீரிஸ் மாடல்களை குறைந்த விலையில் வெளியிட்டு உள்ளது.
டிசிஎல் நிறுவனம் இந்திய சந்தையில் பி725 4கே ஹெச்டிஆர் டிவி சீரிசை அறிமுகம் செய்தது. இது இந்தியாவில் ஆண்ட்ராய்டு டிவி 11 கொண்ட முதல் டிவி சீரிஸ் ஆகும். 43 இன்ச், 50 இன்ச், 55 இன்ச் மற்றும் 65 இன்ச் என நான்கு வித அளவுகளில் இந்த சீரிஸ் கிடைக்கிறது.
புதிய டிசிஎல் பி725 சீரிஸ் மாடல் ஸ்டாக் ஆண்ட்ராய்டு டிவி இன்டர்பேஸ் மற்றும் டிசிஎல் நிறுவனத்தின் கஸ்டம் லான்ச்சர் என இரு மென்பொருள்களில் இயங்குகிறது. இந்த டிவி கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து 7 ஆயிரத்துக்கும் அதிக கேம்களை இயக்கும் வசதி கொண்டுள்ளது.

மேலும் நெட்ப்ளிக்ஸ், டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் போன்ற ஸ்டிரீமிங் சேவைகள், பில்ட்-இன் குரோம்காஸ்ட் உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கிறது. மேலும் ஹெச்டிஆர், டால்பி விஷன், டால்பி அட்மோஸ் ஆடியோ, MEMC தொழில்நுட்பம், வீடியோ கால் கேமரா, கூகுள் அசிஸ்டண்ட் வசதி உள்ளது. இத்துடன் பல்வேறு ஸ்மார்ட் கனெக்டிவிட்டி அம்சங்கள் வழங்கப்படுகிறது.
டிசிஎல் பி725 சீரிஸ் 43 இன்ச் மாடல் விலை ரூ. 41,990, 50 இன்ச் மாடல் விலை ரூ. 56,990, 55 இன்ச் மாடல் விலை ரூ. 62,990 என்றும் 65 இன்ச் மாடல் விலை ரூ. 89,990 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.






