என் மலர்tooltip icon

    மொபைல்ஸ்

    • ரியல்மி நிறுவனத்தின் புது ஸ்மார்ட்போன் விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.
    • சமீபத்தில் தான் ரியல்மி 10 ப்ரோ சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது.

    ரியல்மி 10 ப்ரோ சீரிஸ் வெளியீட்டை தொடர்ந்து ரியல்மி 10 ஸ்மார்ட்போனின் இந்திய வெளியீட்டுக்கு அந்நிறுவனம் தயாராகி வருகிறது. புதிய ஸ்மார்ட்போனிற்கான டீசரில், "EpicPowerhouse" எனும் வாசகம் இடம்பெற்று இருக்கிறது. அந்த வகையில் இந்த ஸ்மார்ட்போன் அசத்தல் செயல்திறன் வழங்கும் என தெரிகிறது.

    இத்துடன் புது ஸ்மார்ட்போனின் இடது புறத்தில் பன்ச் ஹோல் வழங்கப்படுகிறது. அந்த வகையில் இந்த ஸ்மார்ட்போன் ரியல்மி 10 4ஜி மாடலாக இருக்கும் என எதிர்பார்க்கலாம். இந்தோனேசியா மற்றும் பிலிப்பைன்ஸ்-இல் அறிமுகம் செய்யப்பட்ட ரியல்மி 10 4ஜி ஸ்மார்ட்போனில் 6.4 இன்ச் FHD+ 90Hz AMOLED ஸ்கிரீன், 16MP செல்ஃபி கேமரா, மீடியாடெக் ஹீலியோ ஜி99 பிராசஸர் வழங்கப்பட்டு இருக்கிறது.

    இத்துடன் 8 ஜிபி ரேம், 50MP பிரைமரி கேமரா, 2 MP போர்டிரெயிட் கேமரா, பக்கவாட்டில் கைரேகை சென்சார், 5000 எம்ஏஹெச் பேட்டரி, 33 வாட் சூப்பர்வூக் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டுள்ளது. புதிய ரியல்மி 10 ஸ்மார்ட்போனின் சரியான வெளியீட்டு தேதி மற்றும் இதர விவரங்கள் வரும் நாட்களில் படிப்படியாக அறிவிக்கப்படலாம்.

    • ஸ்மார்ட்போன் சந்தையில் ஆப்பிள் நிறுவன வருவாய் அறிக்கை பற்றிய தகவல்கள் வெளியாகி உள்ளன.
    • உலகளவில் ஒட்டுமொத்த ஸ்மார்ட்போன் விற்பனையில் 5ஜி மாடல்கள் மட்டும் 46 சதவீதம் இடம்பிடித்துள்ளன.

    ஆப்பிள் நிறுவனம் சர்வதேச ஸ்மார்ட்போன் சந்தையில் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வருவது சமீபத்திய ஆய்வு அறிக்கையில் மீண்டும் அம்பலமாகி இருக்கிறது. இம்முறை போட்டி நிறுவனங்களை விட ஆப்பிள் நிறுவனம் அதிகளவு முன்னிலையில் உள்ளது. கவுண்ட்டர்பாயிண்ட் ரிசர்ச் வெளியிட்டு இருக்கும் தகவல்களின் படி சர்வதேச ஸ்மார்ட்போன் சந்தையில் ஆப்பிள் நிறுவனத்தின் வருவாய் பங்கு அதிகரித்து இருக்கிறது.

    வருடாந்திர அடிப்படையில் ஸ்மார்ட்போன் விற்பனை ஒட்டுமொத்தமாக மூன்று சதவீதம் சரிவடைந்த நிலையில், ஆப்பிள் வருவாயில் வளர்ச்சி அடைந்து இருக்கிறது. இந்த காலக்கட்டத்தில் வினியோகமும் 12 சதவீதம் வரை சரிவடைந்து இருக்கிறது. எனினும், ஸ்மார்ட்போனின் சராசரி விற்பனை விலை பத்து சதவீதம் வரை உயர்ந்து இருந்தது. ஒட்டுமொத்த விற்பனையில் 5ஜி ஸ்மார்ட்போன்களின் விற்பனை மட்டும் 46 சதவீதம் ஆகும்.

    மூன்றாவது காலாண்டில் ஆப்பிள் நிறுவனம் ஒட்டுமொத்த ஸ்மார்ட்போன் வருவாய் பங்கில் 42 சதவீதம் பிடித்து இருக்கிறது. இது கடந்த ஆண்டு இதே காலாக்கட்டத்தில் இருந்த 37.1 சதவீதத்தை விட அதிகம் ஆகும். இந்த ஆண்டு ஜூலை முதல் செப்டம்பர் மாதம் வரை ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 14, ஐபோன் 14 ப்ரோ மற்றும் ஐபோன் 14 ப்ரோ மேக்ஸ் போன்ற மாடல்கள் அதிகளவு விற்பனையாகின.

    2022 அக்டோபர் மாதத்தின் முதல் வாரம் வரை ஐபோன் 14 பிளஸ் மாடலின் விற்பனை துவங்காமலேயே இருந்தது. ஒட்டுமொத்த ஸ்மார்ட்போன் வருவாயில் ஆப்பிள் முதலிடம் பிடித்த நிலையில், சாம்சங் இரண்டாவது இடத்தை பிடித்தது. ஒட்டுமொத்த வருவாயில் சாம்சங் நிறுவனம் 18.3 சதவீத வருவாயை எட்டி இருக்கிறது. சியோமி நிறுவனம் 8.3 சதவீத பங்குகளுடன் மூன்றாவது இடம் பிடித்தது.

    முதல் மூன்று இடங்களை தொடர்ந்து ஒப்போ மற்றும் விவோ நிறுவனங்கள் முறையே ஆறு மற்றும் ஐந்து சதவீத பங்குகளை பிடித்து நான்கு மற்றும் ஐந்தாவது இடங்களில் உள்ளன. இந்த அறிக்கையின் படி சர்வதேச ஸ்மார்ட்போன் விற்பனையில் ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 14 சீரிஸ் மாடல்கள் தொடர்ந்து நல்ல வரவேற்பை பெற்று வருவது உறுதியாகி இருக்கிறது.

    • ஒன்பிளஸ் நிறுவனம் தனது புது ஃபிளாக்‌ஷிப் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்வதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறது.
    • சர்வதேச வெளியீட்டுக்கு முன்பாக புதிய ஒன்பிளஸ் 11 ஸ்மார்ட்போன் சீன சந்தையில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.

    ஒன்பிளஸ் 11 சர்வதேச வெளியீடு பிப்ரவரி 7 ஆம் தேதி நடைபெறும் என அந்நிறுவனம் ஏற்கனவே அறிவித்துவிட்டது. மேலும் சர்வதேச வெளியீட்டின் போதே இந்தியாவிலும் ஒன்பிளஸ் 11 அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இந்த நிலையில், புதிய ஒன்பிளஸ் 11 ஸ்மார்ட்போனின் சீன வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டு இருக்கிறது. அதன்படி ஒன்பிளஸ் 11 ஸ்மார்ட்போன் ஜனவரி 4 ஆம் தேதி சீன சந்தையில் அறிமுகம் செய்யப்படுகிறது.

    வெளியீட்டு தேதியுடன் ஒன்பிளஸ் 11 ஸ்மார்ட்போனின் புகைப்படத்தையும் அந்நிறுவனம் வெளியிட்டு இருக்கிறது. அதன்படி ஏற்கனவே வெளியான தகவல்களை உண்மையாக்கும் வகையில் ஒன்பிளஸ் 11 ஸ்மார்ட்போன் காட்சியளிக்கிறது. புதிய ஒன்பிளஸ் 11 ஸ்மார்ட்போன் கிரீன் மற்றும் பிளாக் என இரண்டு நிறங்களில் அறிமுகமாகும் என தெரியவந்துள்ளது. இது நிறங்களும் மேட் ஃபினிஷ் செய்யப்பட்டுள்ளன.

    இத்துடன் மெட்டல் ஃபிரேம், வளைந்த ஸ்கிரீன், இடது புறத்தில் பன்ச் ஹோல், பின்புறம் மூன்று கேமரா சென்சார்கள், ஹேசில்பிலாட் பிராண்டிங் உள்ளிட்டவை இடம்பெற்று இருக்கிறது. சீன சந்தையில் ஒன்பிளஸ் 11 ஸ்மார்ட்போன் ஸ்னாப்டிராகன் 8 ஜெனஅ 2 பிராசஸர், 12 ஜிபி, 16 ஜிபி ரேம் வழங்கப்படும் என ஒன்பிளஸ் சீனா தலைவர் லி ஜி உறுதிப்படுத்தி இருந்தார்.

    ஒன்பிளஸ் 11 எதிர்பார்க்கப்படும் அம்சங்கள்:

    6.7 இன்ச் 3216x1440 பிக்சல் QHD+ 3D வளைந்த AMOLED, LTPO, 120Hz ரிப்ரெஷ் ரேட் டிஸ்ப்ளே

    ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 8 ஜெனஅ 2 பிராசஸர்

    அட்ரினோ 740 GPU

    12 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி

    16 ஜிபி ரேம், 512 ஜிபி மெமரி

    மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி

    ஆண்ட்ராய்டு 13 மற்றும் கலர்ஒஎஸ் 13 (சீனாவில் மட்டும்)

    டூயல் சிம் ஸ்லாட்

    50MP பிரைமரி கேமரா, OIS

    48MP சென்சார்

    32MP RGB கேமரா

    16MP செல்ஃபி கேமரா

    இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார்

    யுஎஸ்பி டைப் சி போர்ட், ஸ்டீரியோ ஸ்பீக்கர், டால்பி அட்மோஸ்

    5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5.3

    யுஎஸ்பி டைப் சி

    5000 எம்ஏஹெச் பேட்டரி

    100 வாட் சூப்பர்வூக் ஃபாஸ்ட் சார்ஜிங்

    வயர்லெஸ் சார்ஜிங், ரிவர்ஸ் வயர்லெஸ் சார்ஜிங்

    • சாம்சங் நிறுவனம் உருவாக்கி வரும் புது ஸ்மார்ட்போன் விவரங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது.
    • புது சாம்சங் ஸ்மார்ட்போன் அடுத்த மாதம் இந்திய சந்தையில் அறிமுகமாகும் என்றும் கூறப்படுகிறது.

    சாம்சங் நிறுவனம் விரைவில் புதிய கேலக்ஸி F சீரிஸ் ஸ்மார்ட்போன் மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இது குறித்து 91Mobiles வெளியிட்டு இருக்கும் தகவல்களில் புதிய சாம்சங் கேலக்ஸி F சீரிஸ் ஸ்மார்ட்போன் ஜனவரி மாதத்தின் முதல் வாரத்தில் அறிமுகம் செய்யப்படும் என குறிப்பிடப்பட்டு இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் ப்ளிப்கார்ட் தளத்தில் பிரத்யேகமாக விற்பனை செய்யப்படும் என்றும் கூறப்படுகிறது.

    புதிய கேலக்ஸி F சீரிஸ் ஸ்மார்ட்போன் அந்நிறுவனம் ஏற்கனவே விற்பனை செய்து வரும் கேலக்ஸி F13 ஸ்மார்ட்போனின் மேம்பட்ட வெர்ஷனாக இருக்கும் என கூறப்படுகிறது. புதிய கேலக்ஸி F14 ஸ்மார்ட்போனில் 5ஜி கனெக்டிவிட்டி வழங்கப்படுமா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. தற்போதைய பட்ஜெட் மற்றும் மிட் ரேன்ஜ் ஸ்மார்ட்போன்களில் அத்தியாவசிய அம்சங்களில் ஒன்றாக 5ஜி இருக்கிறது.

    அம்சங்களை பொருத்தவரை கேலக்ஸி F14 மாடலில் 6.6 இன்ச் FHD+ LCD டிஸ்ப்ளே, வாட்டர் டிராப் நாட்ச், எக்சைனோஸ் 850 சிப்செட், மாலி G52 பிராசஸர், 4 ஜிபி ரேம், அதிகபட்சம் 128 ஜிபி மெமரி, மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி, ரேம் எக்ஸ்பான்ஷன் வசதியும் வழங்கப்படுகிறது. இத்துடன் ஆண்ட்ராய்டு 12 சார்ந்த ஒன் யுஐ 4.0, 4ஜி, டூயல் பேண்ட் வைபை, ப்ளூடூத் 5, யுஎஸ்பி டைப் சி போர்ட் வழங்கப்படும் என தெரிகிறது.

    6000 எம்ஏஹெச் பேட்டரி மூலம் சக்தியூட்டப்படும் கேலக்ஸி F14 ஸ்மார்ட்போன் 15 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி, பக்கவாட்டில் கைரேகை சென்சார் கொண்டிருக்கிறது. புகைப்படங்களை எடுக்க 50Mஜ பிரைமரி கேமரா, 5MP அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ், 2MP மேக்ரோ லென்ஸ், 8MP செல்ஃபி கேமரா வழங்கப்படுகிறது. இந்திய சந்தையில் புது கேலக்ஸி F14 ஸ்மார்ட்போனின் விலை ரூ. 12 ஆயிரம் பட்ஜெட்டில் நிர்ணயம் செய்யப்படலாம்.

    • ஒன்பிளஸ் நிறுவனத்தின் புதிய ஃபிளாக்‌ஷிப் சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் அறிமுகமாகிறது.
    • முதற்கட்டமாக புதிய ஒன்பிளஸ் ஃபிளாக்‌ஷிப் ஸ்மார்ட்போன் சீன சந்தையில் அறிமுகம் செய்யப்படும் என கூறப்படுகிறது.

    ஒன்பிளஸ் 11 ஸ்மார்ட்போனின் சர்வதேச வெளியீடு அடுத்த ஆண்டு பிப்ரவரி 7 ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இது பற்றிய அறிவிப்பு ஏற்கனவே வெளியாகி விட்டது. இந்த நிலையில், ஒன்பிளஸ் 11 ஸ்மார்ட்போன் சீனாவின் TENAA வலைதளத்தில் இடம்பெற்று இருக்கிறது. புதிய ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன் விரைவில் சீன சந்தையில் அறிமுகம் செய்யப்படும் என தெரிகிறது.

    முன்னதாக இதே ஸ்மார்ட்போன் அன்டுடு வலைதளத்தில் இடம்பெற்று இருந்தது. அதில் PBH110 மாடல் கோட் கொண்டிருந்த ஸ்மார்ட்போன் 1.3 மில்லியனுக்கும் அதிக புள்ளிகளை பெற்று அசத்தியது. தற்போது ஒன்பிளஸ் 11 ஸ்மார்ட்போன் அம்சங்கள் TENAA வலைதளத்தில் வெளியாகி உள்ளது.

    அந்த வகையில் புதிய ஒன்பிளஸ் 11 மாடலில் 6.7 இன்ச் QHD+ AMOLED டிஸ்ப்ளே, 120Hz ரிப்ரெஷ் ரேட், எட்டு கோர்கள் கொண்ட சிபியு- அதாவது ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 பிராசஸர் வழங்கப்படுகிறது. இத்துடன் 12 ஜிபி, 16 ஜிபி ரேம், 256 ஜிபி, 512 ஜிபி மெமரி, 4870 எம்ஏஹெச் பேட்டரி வழங்கப்படும் என குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

    புகைப்படங்களை எடுக்க 50MP பிரைமரி கேமரா, 48MP அல்ட்ரா வைடு கேமரா, 32MP டெலிபோட்டோ கேமரா, 16MP செல்ஃபி கேமரா வழங்கப்படுகிறது. 8.53mm தடிமனாக இருக்கும் ஒன்பிளஸ் 11 ஒட்டுமொத்தத்தில் 205 கிராம் எடை கொண்டுள்ளது. இதில் 5ஜி சப்போர்ட் உள்ளது. இத்துடன் இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார், ஆண்ட்ராய்டு 13 ஒஎஸ் வழங்கப்படலாம்.

    முந்தைய டீசர்களிலேயே ஒன்பிளஸ் 11 ஸ்மார்ட்போன் ஹேசில்பிலாட் கேமரா டியுனிங், அலெர்ட் ஸ்லைடர் இடம்பெற்று இருக்கும் என தெரியவந்தது. வரும் வாரங்களில் புது ஸ்மார்ட்போன் பற்றிய இதர விவரங்கள் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கலாம்.

    • ஆப்பிள் நிறுவனத்தின் குறைந்த விலை ஐபோன் மாடலாக SE சீரிஸ் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
    • புதிய ஐபோன் SE மாடல் அடுத்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட இருப்பதாக கடந்த சில மாதங்களில் பல்வேறு தகவல்கள் வெளியாகி வந்தன.

    ஆப்பிள் நிறுவனத்தின் புதிய ஐபோன் SE 4 பற்றிய விவரங்கள் கடந்த சில மாதங்களாகவே இணையத்தில் வெளியாகி வருகின்றன. 2024 வாக்கில் அறிமுகமாகும் என கூறப்பட்ட நிலையில், ஐபோன் SE 4 மாடலின் வெளியீட்டு திட்டத்தில் மாற்றம் செய்யப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

    பிரபல ஆப்பிள் வல்லுனரான மின்-சி-கியோ, புதிய ஐபோன் SE 4 உற்பத்தி ரத்து அல்லது தள்ளிவைக்கப்பட வாய்ப்புகள் இருப்பதாக தெரிவித்து இருக்கிறார். ஐபோன் SE 3, ஐபோன் 13 மினி போன்ற மிட் முதல் லோ எண்ட் ஐபோன்கள் குறைந்த எண்ணிக்கையில் தான் வினியோகம் செய்யப்பட்டு வருகின்றன. மேலும் புதிய ஐபோன் SE 4 மாடலில் 5.7 இன்ச் முதல் 6.1 இன்ச் வரையிலான ஸ்கிரீன் வழங்கப்படலாம்.

    மேலே குறிப்பிடப்பட்டு இருக்கும் இரண்டு காரணங்களால், ஐபோன் SE 4 உற்பத்தி நிறுத்தப்பட்டோ அல்லது ஒத்திவைக்கப்பட்டு இருக்கலாம் என அவர் குறிப்பிட்டுள்ளார். டிஸ்ப்ளே செயின் வல்லுனரான ராஸ் யங் புதிய ஐபோன் SE 4 மாடல் ஐபோன் XR போன்ற தோற்றம் கொண்டிருக்கும் என்றும் அதில் OLED ஸ்கிரீன் வழங்கப்படும் என்றும் தெரிவித்து இருக்கிறார். இதன் காரணமாக ஐபோனின் விலை தானாகவே உயர்ந்து விடும்.

    இவ்வாறு நடக்கும் பட்சத்தில் தற்போதைய ஐபோன் SE மாடலின் நிலையில் மாற்றம் செய்ய வேண்டிய சூழல் உருவாகும். 2023 ஆண்டு வாக்கில் சர்வதேச பொருளாதார மந்த நிலை ஏற்படும் வாய்ப்புகள் இருப்பதால் மற்ற தொழில்நுட்ப நிறுவனங்களை போன்றே ஆப்பிள் நிறுவனமும் உற்பத்தி மற்றும் அது தொடர்பான செலவீனங்களை குறைக்கும் முடிவை எடுக்கலாம் என கூறப்படுகிறது. 

    • இன்ஃபினிக்ஸ் நிறுவனத்தின் புதிய ஜீரோ 20 ஸ்மார்ட்போனிற்கு ஒரு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் 2 ஆண்டுகளுக்கு செக்யுரிட்டி அப்டேட் வழங்கப்பட இருக்கிறது.
    • இந்த ஸ்மார்ட்போனின் 4500 எம்ஏஹெச் பேட்டரியை சார்ஜ் செய்ய 45 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்படுகிறது.

    இன்ஃபினிக்ஸ் நிறுவனம் ஜீரோ 20 ஸ்மார்ட்போனினை இந்திய சந்தையில் அறிமுகம் செய்து இருக்கிறது. இதில் 6.7 இன்ச் FHD+ AMOLED ஸ்கிரீன், 90Hz ரிப்ரெஷ் ரேட், TUV ரெயின்லாந்து லோ புளூ லைட் சான்று, 60MP ஆட்டோஃபோக்கஸ் செல்ஃபி கேமரா, OIS வசதி வழங்கப்பட்டுள்ளது. 60MP செல்ஃபி கேமரா, OIS கொண்ட உலகின் முதல் ஸ்மார்ட்போன் இது ஆகும்.

    இத்துடன் 108MP பிரைமரி கேமரா, 8MP அல்ட்ரா வைடு கேமரா, 2MP சென்சார், மீடியாடெக் G99 பிராசஸர், ஆண்ட்ராய்டு 12 மற்றும் X ஒஎஸ் 12, இரண்டு ஆண்டுகளுக்கு செக்யுரிட்டி அப்டேட்கள், ஒரு ஆண்ட்ராய்டு அப்டேட் வழங்கப்படுகிறது. 4500 எம்ஏஹெச் பேட்டரி கொண்டிருக்கும் இன்ஃபினிக்ஸ் ஜீரோ 20 ஸ்மார்ட்போன் 45 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி கொண்டிருக்கிறது.

    இன்ஃபினிக்ஸ் ஜீரோ 20 அம்சங்கள்:

    6.7 இன்ச் 2400x1080 பிக்சல் FHD+ AMOLED ஸ்கிரீன், 90Hz ரிப்ரெஷ் ரேட்

    ஆக்டா கோர் மீடியாடெக் ஹீலியோ G99 பிராசஸர்

    ARM மாலி-G57 MC2 GPU

    8 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி

    மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி

    டூயல் சிம் ஸ்லாட்

    ஆண்ட்ராய்டு 12 மற்றும் X ஒஎஸ் 12

    108MP பிரைமரி கேமரா

    13MP அல்ட்ரா வைடு கேமரா

    2MP டெப்த் கேமரா

    60MP AF செல்ஃபி கேமரா, OIS

    பக்கவாட்டில் கைரேகை சென்சார்

    3.5mm ஆடியோ ஜாக், ஸ்டீரியோ ஸ்பீக்கர்

    டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5.3

    யுஎஸ்பி டைப் சி

    4500 எம்ஏஹெச் பேட்டரி

    45 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி

    விலை மற்றும் விற்பனை விவரங்கள்:

    இன்ஃபினிக்ஸ் ஜீரோ 20 ஸ்மார்ட்போன் ஸ்பேஸ் கிரே, க்லிட்டர் கோல்டு மற்றும் கிரீன் ஃபேண்டசி போன்ற நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை ரூ. 15 ஆயிரத்து 999 ஆகும். விற்பனை டிசம்பர் 28 ஆம் தேதி முதல் ப்ளிப்கார்ட் தளத்தில் துவங்குகிறது.

    • சாம்சங் நிறுவனத்தின் புதிய ஃபிளாக்‌ஷிப் கேலக்ஸி S23 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் அடுத்த ஆண்டு துவக்கத்தில் அறிமுகமாகிறது.
    • டிசைனை பொருத்தவரை புதிய கேலக்ஸி S23 சீரிஸ் அந்நிறுவனம் ஏற்கனவே அறிமுகம் செய்த S22 சீரிஸ் போன்றே காட்சியளிக்கும் என தெரிகிறது.

    சாம்சங் கேலக்ஸி S23 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் பற்றி ஏராளமான விவரங்கள், ரெண்டர்கள் இணையத்தில் வெளியாகி வருகின்றன. புதிய கேலக்ஸி S23 சீரிஸ் டிசைன், அம்சங்கள், வெளியீட்டு தேதி என பல்வேறு தகவல்கள் தொடர்ந்து வெளியாகி உள்ளன. அந்த வரிசையில் தற்போது வெளியாகி இருக்கும் தகவல்களில் கேலக்ஸி S23 சீரிஸ் வெளியீடு ஏற்கனவே எதிர்பார்க்கப்பட்டதை விட தாமதம் ஆகும் என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

    முந்தைய தகவல்களின் படி புதிய சாம்சங் கேலக்ஸி S23 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் பிப்ரவரி மாதத்தின் முதல் வாரத்தில் அறிமுகம் செய்யப்படும் என கூறப்பட்டது. கேலக்ஸி S23 சீரிசில் கேலக்ஸி S23, கேலக்ஸி S23 பிளஸ் மற்றும் கேலக்ஸி S23 அல்ட்ரா என மூன்று மாடல்கள் இடம்பெற்று இருக்கும் என எதிர்பார்க்கலாம். தற்போதைய தகவலை டிப்ஸ்டர் அந்தோனி தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

    அதன்படி சாம்சங் கேலேக்ஸி S23 சீரிஸ் பிப்ரவரி மாத இறுதியில் அறிமுகம் செய்யப்படும் என அவர் மேலும் தெரிவித்து இருக்கிறார். புது ஃபிளாக்‌ஷிப் ஸ்மார்ட்போன்களின் விலை இறுதி செய்யப்படாத காரணத்தால், ஸ்மார்ட்போன்களின் விலை இறுதி செய்யப்படலாமல் இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். உண்மையில் கேலக்ஸி S23 சீரிஸ் வெளியீட்டில் தாமதம் ஏற்பட்டுள்ளதா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.

    இது பற்றி சாம்சங் தரப்பில் இதுவரை எந்த விதமான தகவலும் வழங்கப்படவில்லை. முன்னதாக புதிய கேலக்ஸி S23 சீரிஸ் டம்மி யூனிட்களின் புகைப்படம் இணையத்தில் வெளியாகி இருந்தது. இதில் கேலக்ஸி S23 மற்றும் கேலக்ஸி S23 பிளஸ் மாடல்கள், சாம்சங் இந்த ஆண்டு துவக்கத்தில் அறிமுகம் செய்த கேல்கஸி S22 மற்றும் கேலக்ஸி S22 பிளஸ் போன்றே காட்சியளிக்கின்றன.

    சிறப்பம்சங்களை பொருத்தவரை புதிய சாம்சங் கேலக்ஸி S23 மாடலில் 6.1 இன்ச் FHD+ AMOLED டிஸ்ப்ளே, 120Hz ரிப்ரெஷ் ரேட், குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 பிராசஸர், அதிகபட்சம் 12 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி, 50MP பிரைமரி கேமரா, 12MP அல்ட்ரா வைடு கேமரா, 10MP டெலிபோட்டோ லென்ஸ் வழங்கப்படுகிறது. இத்துடன் 3900 எம்ஏஹெச் பேட்டரி, 25 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்படும் என தெரிகிறது.

    Photo Courtesy: /Leaks

    • ஒன்பிளஸ் நிறுவனம் தனது ஃபிளாக்‌ஷிப் ஸ்மார்ட்போன் இந்திய வெளியீட்டு தேதியை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
    • ஃபிளாக்‌ஷிப் ஸ்மார்ட்போனுடன் முற்றிலும் புதிய இயர்பட்ஸ் மாடலை ஒன்பிளஸ் நிறுவனம் அறிமுகம் செய்ய இருக்கிறது.

    ஒன்பிளஸ் நிறுவனம் ஃபிளாக்‌ஷிப் ஒன்பிளஸ் 11 5ஜி ஸ்மார்ட்போனினை அடுத்த ஆண்டு பிப்ரவரி 7 ஆம் தேதி புது டெல்லியில் நடைபெற இருக்கும் "கிளவுட் 11" நிகழ்வில் அறிமுகம் செய்ய இருக்கிறது. இதே நிகழ்வில் ஒன்பிளஸ் பட்ஸ் ப்ரோ 2 மாடலையும் ஒன்பிளஸ் நிறுவனம் அறிமுகம் செய்ய இருக்கிறது. இது அந்நிறுவனம் ஏற்கனவே அறிமுகம் செய்த ஒன்பிளஸ் பட்ஸ் ப்ரோ மாடலின் மேம்பட்ட வெர்ஷன் ஆகும்.

    ஃபிளாக்‌ஷிப் ஸ்மார்ட்போன், ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் மாடல்கள் மட்டுமின்றி ஒன்பிளஸ் நிறுவனம் மேலும் சில சாதனங்களை அறிமுகம் செய்யலாம் என கூறப்படுகிறது. தற்போதைய டீசர்களில் "விட்னஸ் தி ஷேப் ஆஃப் பவர்" எனும் வாசகம் இடம்பெற்று இருக்கிறது. அதன்படி புது ஸ்மார்ட்போனில் அலெர்ட் ஸ்லைடர் மீண்டும் கொண்டுவரப்படுவது அம்பலமாகி இருக்கிறது. இந்த அம்சம் ஒன்பிளஸ் 10T மாடலில் நீக்கப்பட்டு இருந்தது.

    ஏற்கனவே எதிர்பார்க்கப்பட்டதை போன்றே புதய ஒன்பிளஸ் 11 5ஜி ஸ்மார்ட்போனில் ஹேசில்பிலாட் பிராண்டிங் கொண்ட கேமரா சென்சார்கள் வழங்கப்படுகிறது. ஒன்பிளஸ் பட்ஸ் ப்ரோ 2 டீசர் முந்தைய இயர்பட்ஸ் போன்ற டிசைன் கொண்டிருக்கும் என தெரியவந்துள்ளது. புது இயர்பட்ஸ் ஃபுல் பாடி, ஸ்டீரியோ தர ஆடியோ அனுபவம் வழங்கும் என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. பயனர் கருத்துக்களின் அடிப்படையில் இந்த அம்சங்கள் வழங்கப்படுவதாக தெரிகிறது.

    ஒன்பிளஸ் 11 ஸ்மார்ட்போனில் குவால்காம் நிறுவனத்தின் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 பிராசஸர் வழங்கப்படும் என அந்நிறுவனம் ஏற்கனவே அறிவித்து விட்டது. இதுவரை வெளியாகி இருக்கும் தகவல்களின் படி ஒன்பிளஸ் 11 5ஜி ஸ்மார்ட்போனில் 2K அல்லது குவாட் HD+ ஸ்கிரீன், இடது புறத்தில் பன்ச் ஹோல், UFS 4.0 ஸ்டோரேஜ், மெட்டல் ஃபிரேம், 50MP பிரைமரி கேமரா, 48MP அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ், 32MP டெலிபோட்டோ சென்சார், 5000 எம்ஏஹெச் பேட்டரி, 100 வாட் சூப்பர்வூக் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்படும் என கூறப்படுகிறது.

    ஒன்பிளஸ் பட்ஸ் ப்ரோ 2 மாடலில் 11mm மற்றும் 6mm டூயல் ஆடியோ டிரைவர்கள், 45db வரை அடாப்டிவ் ANC வசதி, ஒவ்வொரு இயர்பட்களிலும் மூன்று மைக்ரோபோன்கள், ப்ளூடூத் 5.2 மற்றும் LHDC 4.0 கோடெக் வழங்கப்படும் என தகவல் வெளியாகி உள்ளது. இந்த இயர்போன் ANC மோடில் ஆறு மணி நேரமும், ANC ஆஃப் செய்யப்பட்ட நிலையில் ஒன்பது மணி நேர பேட்டரி பேக்கப் வழங்கும் என தெரிகிறது.

    • சாம்சங் நிறுவனம் இந்திய சந்தையில் புது ஸ்மார்ட்போன்களை தொடர்ச்சியாக அறிமுகம் செய்து வருகிறது.
    • சாம்சங் அறிமுகம் செய்திருக்கும் இரண்டு புது A சீரிஸ் ஸ்மார்ட்போன்களிலும் ஆண்ட்ராய்டு 12 ஒஎஸ் வழங்கப்பட்டு இருக்கிறது.

    சாம்சங் நிறுவனம் கேலக்ஸி A04e மற்றும் கேலக்ஸி A04 ஸ்மார்ட்போன்களை இந்திய சந்தையில் அறிமுகம் செய்து இருக்கிறது. இரு ஸ்மார்ட்போன்களிலும் 6.5 இன்ச் HD+ LCD இன்ஃபினிட்டி V டிஸ்ப்ளே, மீடியாடெக் ஹீலியோ P35 பிராசஸர், 4 ஜிபி ரேம், 4 ஜிபி விர்ச்சுவல் ரேம், ரேம் பிளஸ் அம்சம், ஆண்ட்ராய்டு 12 ஒஎஸ் வழங்கப்பட்டு இருக்கிறது.

    கேலக்ஸி A04 ஸ்மார்ட்போனில் 50MP பிரைமரி கேமரா, கேலக்ஸி A04e மாடலில் 13MP டூயல் கேமரா சென்சார்கள் வழங்கப்பட்டுள்ளன. இரு ஸ்மார்ட்போன்களிலும் 5MP செல்ஃபி கேமரா, ரியர் டெப்த் லைவ் ஃபோக்கஸ் கேமரா, பல்வேறு கேமரா மோட்கள் வழங்கப்பட்டு இருக்கின்றன. இத்துடன் 5000 எம்ஏஹெச் பேட்டரி, இன்-பாக்ஸ் டைப் சி ஃபாஸ்ட் சார்ஜர் உள்ளது.

    சாம்சங் கேலக்ஸி A04e அம்சங்கள்:

    6.5 இன்ச் 1560x720 பிக்சல் HD+LCD இன்ஃபினிட்டி V டிஸ்ப்ளே

    ஆக்டா கோர் மீடியாடெக் ஹீலியோ P35 பிராசஸர்

    IMG PowerVR GE8320 GPU

    3 ஜிபி ரேம், 32 ஜிபி மெமரி

    3 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி

    4 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி

    மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி

    ஆண்ட்ராய்டு 12 மற்றும் ஒன் யுஐ 4.1

    டூயல் சிம் ஸ்லாட்

    13MP பிரைமரி கேமரா, எல்இடி ஃபிளாஷ், f/2.2

    2MP டெப்த் சென்சார், f/2.4

    5MP செல்ஃபி கேமரா, f/2.2

    3.5mm ஆடியோ ஜாக்

    டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5.0

    5000 எம்ஏஹெச் பேட்டரி

    சாம்சங் கேலக்ஸி A04 அம்சங்கள்:

    6.5 இன்ச் 1560x720 பிக்சல் HD+LCD இன்ஃபினிட்டி V டிஸ்ப்ளே

    ஆக்டா கோர் மீடியாடெக் ஹீலியோ P35 பிராசஸர்

    IMG PowerVR GE8320 GPU

    4 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி

    4 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி

    மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி

    ஆண்ட்ராய்டு 12 மற்றும் ஒன் யுஐ 4.1

    டூயல் சிம் ஸ்லாட்

    50MP பிரைமரி கேமரா, எல்இடி ஃபிளாஷ், f/1.8

    2MP டெப்த் சென்சார், f/2.4

    5MP செல்ஃபி கேமரா, f/2.2

    3.5mm ஆடியோ ஜாக்

    டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5.0

    5000 எம்ஏஹெச் பேட்டரி

    விலை மற்றும் விற்பனை விவரங்கள்:

    சாம்சங் கேலக்ஸி A04e ஸ்மார்ட்போன் லைட் புளூ மற்றும் காப்பர் நிறங்களில் கிடைக்கிறது. இதன் 3 ஜிபி ரேம், 32 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 9 ஆயிரத்து 299 என்றும், 3 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 9 ஆயிரத்து 999 என்றும் 4 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 11 ஆயிரத்து 499 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

    கேலக்ஸி A04 ஸ்மார்ட்போன் கிரீன், பிளாக் மற்றும் காப்பர் நிறங்களில் கிடைக்கிறது. இதன் 4 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 11 ஆயிரத்து 999 என்றும் 4 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 12 ஆயிரத்து 999 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இரு ஸ்மார்ட்போன்களின் விற்பனை சாம்சங் வலைதளம் மற்றும் தேர்வு செய்யப்பட்ட ரிடெயில் ஸ்டோர்களில் நாளை (டிசம்பர் 20) முதல் விற்பனைக்கு வருகிறது.

    • அமேசான் வலைதளத்தில் ஸ்மார்ட்போன்களுக்கு அசத்தல் சலுகை வழங்கும் சிறப்பு தள்ளுபடி நடைபெற்று வருகிறது.
    • ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் மாடல்களுக்கு அவ்வப்போது ஆன்லைன் தளங்களில் அசத்தல் சலுகைகள் வழங்கப்படுகிறது.

    அமேசான் வலைதளத்தில் "ஸ்மார்ட்போன் அப்கிரேடு டேஸ்" பெயரில் சிறப்பு விற்பனையை இந்தியாவில் நடத்தி வருகிறது. இதில் ஸ்மார்ட்போன்களுக்கு தள்ளுபடி, வங்கி சலுகைகள், மாத தவணை முறையில் வட்டியில்லா சலுகைகள், எக்சேன்ஜ் தள்ளுபடி என ஏராள பலன்கள் வழங்கப்படுகிறது. தற்போது துவங்கி இருக்கும் சிறப்பு தள்ளுபடி விற்பனை டிசம்பர் 18 ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது.

    சிறப்பு விற்பனையில் ஐபோன் 14 மாடலுக்கு தள்ளுபடி வழங்கப்படுகிறது. அதன்படி ஐபோன் 14 ஸ்மார்ட்போனின் 128 ஜிபி மாடலின் விலை ரூ. 78 ஆயிரத்து 740 என மாற்றப்பட்டு இருக்கிறது. இத்துடன் ஹெச்டிஎப்சி வங்கி கார்டுகளுக்கு ரூ. 5 ஆயிரம் உடனடி தள்ளுபடி வழங்கப்படுகிறது. இதுதவிர சிட்டி யூனியன் மற்றும் ஹெச்எஸ்பிசி வங்கி கார்டுகளுக்கும் ரூ. 5 ஆயிரம் தள்ளுபடி வழங்கப்படுகிறது.

    ஹெச்டிஎப்சி வங்கி கிரெடிட் அல்லது டெபிட் கார்டுகளுக்கு ரூ. 5 ஆயிரம் உடனடி தள்ளுபடி வழங்கப்படுகிறது. இதன் மூலம் ஐபோன் 14 மாடலின் விலை ரூ. 73 ஆயிரத்து 740 என மாறி விடுகிறது. இத்துடன் பழைய ஸ்மார்ட்போன்களை எக்சேன்ஜ் செய்யும் போது ரூ. 28 ஆயிரம் வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது. அந்த வகையில், எக்சேன்ஜ் மற்றும் வங்கி சலுகைகளை சேர்க்கும் போது ஐபோன் 14 மாடலை ரூ. 57 ஆயிரம் பட்ஜெட்டில் வாங்கிட முடியும்.

    ஐபோன் 14 அம்சங்கள்:

    அம்சங்களை பொருத்தவரை ஐபோன் 14 மாடலில் 6.1 இன்ச் சூப்பர் ரெட்டினா XDR OLED டிஸ்ப்ளே, மெல்லிய பெசல்கள், 60Hz ரிப்ரெஷ் ரேட், ஏ15 பயோனிக் சிப், 4 ஜிபி ரேம் வழங்கப்பட்டு இருக்கிறது. ஐபோன் 14 மாடல் 128 ஜிபி, 256 ஜிபி மற்றும் 512 ஜிபி என மூன்று வித மெமரி ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இதில் ஐஒஎஸ் 16 வழங்கப்பட்டு இருக்கிறது.

    கனெக்டிவிட்டிக்கு 5ஜி, வைபை, டூயல் சிம், ப்ளூடூத், ஜிபிஎஸ், லைட்னிங் போர்ட் வழங்கப்பட்டுள்ளது. புகைப்படங்களை எடுக்க 12MP வைடு ஆங்கில் கேமரா, 12MP அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனில் டால்பி விஷன் வீடியோ ரெக்கார்டிங் வசதி உள்ளது.

    • ஹெச்எம்டி குளோபல் நிறுவனம் இந்திய சந்தையில் புது நோக்கியா ஸ்மார்ட்போனினை பட்ஜெட் பிரிவில் அறிமுகம் செய்தது.
    • புதிய நோக்கியா ஸ்மார்ட்போனின் பின்புறம் கைரேகை சென்சார், 5050 எம்ஏஹெச் பேட்டரி வழங்கப்பட்டு இருக்கிறது.

    ஹெச்எம்டி குளோபல் நிறுவனம் நோக்கியா C31 ஸ்மார்ட்போனினை இந்திய சந்தையில் அறிமுகம் செய்து இருக்கிறது. முன்னதாக இந்த ஸ்மார்ட்போன் செப்டம்பர் மாத வாக்கில் அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. புதிய நோக்கியா C31 ஸ்மார்ட்போனில் 6.7 இன்ச் HD+ நாட்ச் ஸ்கிரீன், ஆக்டா கோர் பிராசஸர், அதிகபட்சம் 4 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி, ஆண்ட்ராய்டு 12 ஒஎஸ் வழங்கப்பட்டு இருக்கிறது.

    இத்துடன் இரண்டு ஆண்டுகளுக்கு காலாண்டு செக்யூரிட்டி அப்டேட்கள் வழங்கப்பட இருக்கிறது. பிரபல செயலிகள் பிரீ-இன்ஸ்டால் செய்யப்பட்டு கிடைக்கும் நோக்கியா C31 ஸ்மார்ட்போனில் புகைப்படங்களை எடுக்க 13MP பிரைமரி கேமரா, 2MP டெப்த், 2MP மேக்ரோ கேமரா, 5MP செல்ஃபி கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது. நார்டிக் டிசைன் கொண்டிருக்கும் நோக்கியா C31 ஸ்மார்ட்போன் பின்புறம் கைரேகை சென்சார் மற்றும் 5050 எம்ஏஹெச் பேட்டரி கொண்டிருக்கிறது.

    நோக்கியா C31 அம்சங்கள்:

    6.7 இன்ச் 1600x720 பிக்சல் HD+ V நாட்ச் எல்சிடி ஸ்கிரீன்

    1.6 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டாகோர் யுனிசாக் SC9863A1 பிராசஸர்

    IMG8322 GPU

    3 ஜிபி ரேம், 32 ஜிபி மெமரி

    4 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி

    மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி

    டூயல் சிம் ஸ்லாட்

    ஆண்ட்ராய்டு 12

    13MP பிரைமரி கேமரா

    2MP டெப்த் கேமரா

    2MP மேக்ரோ கேமரா

    5MP செல்ஃபி கேமரா

    பின்புறம் கைரேகை சென்சார்

    3.5mm ஆடியோ ஜாக், எஃப்எம் ரேடியோ

    டஸ்ட் மற்றும் ஸ்பிலாஷ் ரெசிஸ்டண்ட்

    டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 4.2

    மைக்ரோ யுஎஸ்பி

    5050 எம்ஏஹெச் பேட்டரி

    10 வாட் சார்ஜிங்

    விலை மற்றும் விற்பனை விவரங்கள்:

    புதிய நோக்கியா C31 ஸ்மார்ட்போன் சார்கோல், மிண்ட் மற்றும் சியான் நிறங்களில் கிடைக்கிறது. இதன் 3 ஜிபி ரேம், 32 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 9 ஆயிரத்து 999 என்றும் 4 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 10 ஆயிரத்து 999 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. விற்பனை நோக்கியா மற்றும் சில்லறை விற்பனை மையங்களில் ஏற்கனவே துவங்கி நடைபெற்று வருகிறது. மற்ற ஆன்லைன் வலைதளங்களில் விரைவில் விற்பனைக்கு வருகிறது.

    ×