search icon
என் மலர்tooltip icon

    மொபைல்ஸ்

    இரு கேலக்ஸி A சீரிஸ் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்த சாம்சங்
    X

    இரு கேலக்ஸி A சீரிஸ் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்த சாம்சங்

    • சாம்சங் நிறுவனத்தின் புதிய கேலக்ஸி A சீரிஸ் ஸ்மார்ட்போன்களில் 5ஜி கனெக்டிவிட்டி வழங்கப்பட்டு இருக்கிறது.
    • ஏற்கனவே சர்வதேச சந்தையில் அறிமுகமான புது ஸ்மார்ட்போன்கள் தற்போது இந்தியாவில் அறிமுகமாகி இருக்கின்றன.

    சாம்சங் கேலக்ஸி A14 5ஜி மற்றும் கேலக்ஸி A23 5ஜி ஸ்மார்ட்போன்கள் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளன. இவை அந்நிறுவனம் கடந்த ஆண்டு அறிமுகம் செய்த கேலக்ஸி A13 மற்றும் கேலக்ஸி A22 ஸ்மார்ட்போன்களின் மேம்பட்ட வெர்ஷன் ஆகும். ஏற்கனவே சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், இவற்றின் இந்திய வெர்ஷன் அம்சங்களில் எவ்வித மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை.

    அந்த வகையில் கேலக்ஸி A14 5ஜி மாடலில் 6.6 இன்ச் FHD+ 90Hz ஸ்கிரீன், மீடியாடெக் டிமென்சிட்டி 700 பிராசஸர் வழங்கப்பட்டு இருக்கின்றன. கேலக்ஸி A23 5ஜி மாடல் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாத வாக்கில் சர்வதேச சந்தையில் அறிமுகமானது. இதில் 6.6 இன்ச் FHD+ 120Hz ஸ்கிரீன், ஸ்னாப்டிராகன் 695 பிராசஸர் வழங்கப்பட்டு இருக்கிறது.

    சாம்சங் கேலக்ஸி A14 5ஜி அம்சங்கள்:

    6.6 இன்ச் 1080x2408 பிக்சல் FHD+ இன்ஃபினிட்டி வி எல்சிடி டிஸ்ப்ளே, 90Hz ரிப்ரெஷ் ரேட்

    ஆக்டா கோர் மீடியாடெக் டிமென்சிட்டி 700 பிராசஸர்

    மாலி-G57 MC2 GPU

    4 ஜிபி LPDDR4X ரேம், 64 ஜிபி மெமரி

    6 ஜிபி, 8 ஜிபி LPDDR4X ரேம், 128 ஜிபி மெமரி

    மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி

    ஆண்ட்ராய்டு 13 மற்றும் ஒன் யுஐ 5.0

    டூயல் சிம் ஸ்லாட்

    50MP பிரைமரி கேமரா

    2MP டெப்த் கேமரா

    2MP மேக்ரோ சென்சார்

    13MP செல்ஃபி கேமரா

    பக்கவாட்டில் கைரேகை சென்சார்

    3.5mm ஆடியோ ஜாக்

    5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5.1

    யுஎஸ்பி டைப் சி

    5000 எம்ஏஹெச் பேட்டரி

    15 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங்

    சாம்சங் கேலக்ஸி A23 5ஜி அம்சங்கள்:

    6.6 இன்ச் 2400x1080 பிக்சல் FHD+ இன்ஃபினிட்டி வி எல்சிடி டிஸ்ப்ளே

    ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 695 பிராசஸர்

    அட்ரினோ 619L GPU

    6 ஜிபி, 8 ஜிபி ரேம்

    256 ஜிபி மெமரி

    மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி

    ஆண்ட்ராய்டு 13 மற்றும் ஒன் யுஐ 5.0

    டூயல் சிம் ஸ்லாட்

    50MP பிரைமரி கேமரா

    5MP அல்ட்ரா வைடு கேமரா

    2MP டெப்த் கேமரா

    2MP மேக்ரோ சென்சார்

    8MP செல்ஃபி கேமரா

    பக்கவாட்டில் கைரேகை சென்சார்

    5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5.1

    யுஎஸ்பி டைப் சி

    5000 எம்ஏஹெச் பேட்டரி

    25 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங்

    விலை மற்றும் விற்பனை விவரங்கள்:

    புதிய சாம்சங் கேலக்ஸி A14 5ஜி ஸ்மார்ட்போன் டார்க் ரெட், லைட் கிரீன் மற்றும் பிளாக் என மூன்று விதமான நிறங்களில் கிடைக்கிறது. இதன் 4 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 16 ஆயிரத்து 499 என்றும், 6 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 18 ஆயிரத்து 999 என்றும் 8 ஜிபி ரேம், 128 ஜிபி மாடல் விலை ரூ. 20 ஆயிரத்து 999 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

    கேலக்ஸி A23 5ஜி ஸ்மார்ட்போன் சில்வர், லைட் புளூ மற்றும் ஆரஞ்சு நிறங்களில் கிடைக்கிறது. இதன் 6 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 22 ஆயிரத்து 999 என்றும் 8 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 24 ஆயிரத்து 999 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

    இரு ஸ்மார்ட்போன்களின் விற்பனை சாம்சங் பிரத்யேக மற்றும் பார்ட்னர் ஸ்டோர்கள், சாம்சங் வலைதளம் மற்றும் முன்னணி ஆன்லைன் வலைதளங்களில் ஜனவரி 20 ஆம் தேதி துவங்குகிறது. எனினும், சாம்சங் அதிகாரப்பூர்வ வலைதளத்தில் இதன் விற்பனை ஜனவரி 18 ஆம் தேதி மதியம் 12 மணி முதல் விற்பனைக்கு கிடைக்கும்.

    அறிமுக சலுகையாக கேலக்ஸி A23 5ஜி மற்றும் A14 5ஜி ஸ்மார்ட்போன்களை வாங்குவோர் எஸ்பிஐ, ஐடிஎஃப்சி மற்றும் செஸ்ட்மணி மூலம் பணம் செலுத்தும் போது முறையே ரூ. 2 ஆயிரம் மற்றும் ரூ. 1500 கேஷ்பேக் பெற முடியும்.

    Next Story
    ×