என் மலர்
மொபைல்ஸ்
- ஒன்பிளஸ் நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ஃபிளாக்ஷிப் சீரிஸ் ஸ்மார்ட்போன் முதற்கட்டமாக சீனாவில் அறிமுகம்.
- புது ஒன்பிளஸ் 11 ஸ்மார்ட்போன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 பிராசஸர், அதிகபட்சம் 16 ஜிபி ரேம் கொண்டுள்ளது.
ஒன்பிளஸ் நிறுவனம் தனது புது ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போனினை சீன சந்தையில் அறிமுகம் செய்து இருக்கிறது. இதில் 6.7 இன்ச் 2.75D flexible ஸ்கிரீன், 2K ரெசல்யூஷன், 120Hz வேரியபில் ரிப்ரெஷ் ரேட், டால்பி விஷன் சப்போர்ட், ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 பிராசஸர், அதிகபட்சம் 16 ஜிபி ரேம், 512 ஜிபி வரையிலான மெமரி வழங்கப்பட்டு இருக்கிறது.
இத்துடன் அல்ட்ரா-ஹை பெர்ஃபார்மன்ஸ் கிராஃபைட், ஹீட் டெசிபேஷன் முறையை மாற்றப்பட்டு இருக்கிறது. இதனால் ஸ்மார்ட்போனில் வெப்பத்தை குறைக்கும் திறன் கிராஃபீனை விட 92 சதவீதம் அதிகரித்து இருக்கிறது. புதிய ஒன்பிளஸ் 11 ஸ்மார்ட்போன் கருந்துளை சார்ந்த டிசைன் செய்யப்பட்டு இருக்கிறது. இதன் எண்ட்லெஸ் பிளாக் மாடலில் நான்காம் தலைமுறை சில்க் கிலாஸ் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. இது கிட்டத்தட்ட பட்டுக்கு நிகரான அனுபவத்தை வழங்கும் என ஒன்பிளஸ் தெரிவித்துள்ளது.

ஒன்பிளஸ் மற்றும் AAC கூட்டணியில் இந்த ஸ்மார்ட்போன் உலகின் முதல் பயோனிக் வைப்ரேடிங் மோட்டார் கொண்டிருக்கிறது. இது 600mm³ அதிக சத்தம் கொண்ட ஒரே ஆண்ட்ராய்டு மோட்டார் ஆகும். இதில் உள்ள ஃபுல்-ஃபேஸ் மேக்னடிக் சர்கியுட் தொழில்நுட்பம் ஒரே சமயத்தில் இரு வைப்ரேஷன்களை கண்டறிய முடியும். அதிக ஃபிரேம் ரேட் மற்றும் நேடிவ் இமேஜ் குவாலிட்டிக்காக பிரத்யேக கிராஃபிக்ஸ் என்ஜின் கொண்ட உலகின் முதல் ஸ்மார்ட்போன் இது ஆகும்.
ஒன்பிளஸ் 11 அம்சங்கள்:
6.7 இன்ச் 3216x1440 பிக்சல் QHD+ 2.75D flexible curved AMOLED LTPO டிஸ்ப்ளே
120Hz ரிப்ரெஷ் ரேட், HDR10+, டால்பி விஷன், கார்னிங் கொரில்லா கிலாஸ் விக்டஸ்
ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 பிராசஸர்
அட்ரினோ 740 GPU
12 ஜிபி LPDDR5X ரேம், 256 ஜிபி UFS 4.0 மெமரி
16 ஜிபி LPDDR5X ரேம், 256 ஜிபி, 512 ஜிபி UFS 4.0 மெமரி
ஆண்ட்ராய்டு 13 மற்றும் கலர் ஒஎஸ் 13
டூயல் சிம் ஸ்லாட்
50MP பிரைமரி கேமரா, OIS
48MP அல்ட்ரா வைடு கேமரா
32MP டெலிபோட்டோ கேமரா
16MP செல்ஃபி கேமரா
இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார்
யுஎஸ்பி டைப் சி போர்ட், ஸ்டீரியோ ஸ்பீக்கர்
டால்பி அட்மோஸ்
5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5.3
யுஎஸ்பி டைப் சி
5000 எம்ஏஹெச் பேட்டரி
100 வாட் சூப்பர்வூக் ஃபாஸ்ட் சார்ஜிங்
விலை மற்றும் விற்பனை விவரங்கள்:
ஒன்பிளஸ் 11 ஸ்மார்ட்போனின் விலை சீன சந்தையில் 3 ஆயிரத்து 999 யுவான் இந்திய மதிப்பில் ரூ. 48 ஆயிரத்து 095 என துவங்குகிறது. இதன் டாப் எண்ட் மாடல் விலை 4 ஆயிரத்து 899 யுவான், இந்திய மதிப்பில் ரூ. 58 ஆயிரத்து 905 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. விற்பனை ஜனவரி 9 ஆம் தேதி துவங்குகிறது. இதன் இந்திய விலை மற்றும் விற்பனை விவரங்கள் பிப்ரவரி 7 ஆம் தேதி அறிவிக்கப்படுகின்றன.
- சாம்சங் நிறுவனத்தின் புதிய கேலக்ஸி F சீரிஸ் ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகமாகி இருக்கிறது.
- விலை மற்றும் அம்சங்கள் அடிப்படையில் இந்த மாடல் கேலக்ஸி F சீரிசில் எண்ட்ரி லெவல் ஸ்மார்ட்போன் ஆகும்.
சாம்சங் நிறுவனம் இந்திய சந்தையில் புதிய கேலக்ஸி F04 ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்து இருக்கிறது. புது ஸ்மார்ட்போனில் 6.5 இன்ச் HD+ இன்ஃபினிட்டி V டிஸ்ப்ளே, மீடியாடெக் ஹீலியோ P35 பிராசஸர், 4 ஜிபி ரேம், 4 ஜிபி வரை விர்ச்சுவல் ரேம், ரேம் பிளஸ் போன்ற அம்சங்கள் வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் 13MP பிரைமரி கேமரா, 2MP டெப்தி கேமரா, 5MP செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது.
இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 12 மற்றும் ஒன் யுஐ, இரண்டு ஆண்டுகளுக்கு ஒஎஸ் அப்டேட், 5000 எம்ஏஹெச் பேட்டரி, 15 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் மற்ற குறைந்த விலை கேலக்ஸி ஸ்மார்ட்போன்களை போன்றே இந்த மாடலிலும் கைரேகை சென்சார் வழங்கப்படவில்லை.

சாம்சங் கேலக்ஸி F04 அம்சங்கள்:
6.5 இன்ச் 1560x720 பிக்சல் HD+ LCD இன்ஃபினிட்டி V டிஸ்ப்ளே
ஆக்டா கோர் மீடியாடெக் ஹீலியோ P35 பிராசஸர்
IMG PowerVR GE8320 GPU
4 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி
மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
ஆண்ட்ராய்டு 12 மற்றும் ஒன் யுஐ
டூயல் சிம் ஸ்லாட்
13MP பிரைமரி கேமரா, எல்இடி ஃபிளாஷ்
2MP டெப்த் சென்சார்
5MP செல்ஃபி கேமரா
3.5mm ஆடியோ ஜாக், எஃப்எம் ரேடியோ
டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5
5000 எம்ஏஹெச் பேட்டரி
15 வாட் ஃபாட் சார்ஜிங்
விலை மற்றும் விற்பனை விவரங்கள்:
சாம்சங் கேலக்ஸி F04 ஸ்மார்ட்போன் ஜேட் பர்பில் மற்றும் ஒபல் கிரீன் என இரண்டு விதமான நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை ரூ. 9 ஆயிரத்து 499 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. விற்பனை ஜனவரி 12 ஆம் தேதி கேலக்ஸி F04 ஸ்மார்ட்போன் விற்பனை துவங்க இருக்கிறது. அறிமுக சலுகையாக சாம்சங் கேலக்ஸி F04 ஸ்மார்ட்போன் ரூ. 7 ஆயிரத்து 499 விலையில் கிடைக்கும்.
இத்துடன் ஐசிஐசிஐ வங்கி கிரெடிட் கார்டு பரிவர்த்தனைகளுக்கு ரூ. 1000 தள்ளுபடி, விற்பனை துவங்கும் முதல் நாளில் ரூ. 1000 தள்ளுபடி வழங்கப்படுகிறது.
- கூகுள் நிறுவனம் பிக்சல் ஃபோல்டு பெயரில் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனினை உருவாக்கி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
- புதிய பிக்சல் ஃபோல்டு மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் உற்பத்தி பற்றி புது தகவல்கள் இணையத்தில் வெளியாகி இருக்கிறது.
கூகுள் நிறுவனம் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனை உருவாக்கி வருவதாக நீண்ட காலமாக தகவல் வெளியாகி வருகின்றன. பிக்சல் ஃபோல்டு பெயரில் இந்த ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படலாம் என்றும் கூறப்படுகிறது. இந்த நிலையில், தற்போது வெளியாகி இருக்கும் புது தகவல்களின் படி கூகுள் நிறுவன மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்கள் சாம்சங் மாடல்களுக்கு போட்டியாக அமையும் என கூறப்படுகிறது.
வினியோக பிரிவு சார்ந்து வெளியாகி இருக்கும் தகவல்களின் படி பிக்சல் ஃபோல்டு உற்பத்தி பணிகள் ஜூலை முதல் செப்டம்பர் மாதம் வரையிலான காலாண்டு வாக்கில் துவங்கும் என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. இது இந்த ஆண்டின் மூன்றாவது காலாண்டு ஆகும். சாம்சங் டிஸ்ப்ளே வெளியிட்டு இருக்கும் தகவல்களில் கேலக்ஸி Z ஃபோல்டு 5 மற்றும் கூகுள் பிக்சல் ஃபோல்டு மாடல்களுக்கான முன்பதிவு கிடைத்திருப்பதாக தெரிவித்து இருக்கிறது.
பிக்சல் ஃபோல்டு ஸ்மார்ட்போனில் 7.57 இன்ச் OLED பிரைமரி டிஸ்ப்ளே, 5.6 இன்ச் கவர் ஸ்கிரீன் கொண்டிருக்கும் என்றும் இந்த ஸ்மார்ட்போனின் உற்பத்தி பணிகள் ஜூலை அல்லது ஆகஸ்ட் மாத வாக்கில் துவங்க இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் பிக்சல் ஃபோல்டு ஸ்மார்ட்போனின் வெளியீடு கேலக்ஸி Z ஃபோல்டு 5 மாடலை தொடர்ந்து அறிமுகமாகும் என தகவல் வெளியாகி உள்ளது. மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் சந்தையில் முன்னணி உற்பத்தியாளராக சாம்சங் விளங்குகிறது.
அந்த வகையில், கூகுள் நிறுவனத்தின் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் சாம்சங் மாடல்களிடம் கடும் போட்டியை எதிர்கொள்ள வேண்டி இருக்கும். மேலும் சாம்சங் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனை தொடர்ந்து வெளியாகும் போது பிக்சல் ஃபோல்டு விற்பனை பெருமளவு பாதிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது. பிக்சல் ஃபோல்டு பற்றிய விவரங்கள் மர்மமாக இருக்கும் நிலையில், இந்த மாடலில் ஆண்ட்ராய்டு 14L ஒஎஸ் வழங்கப்படும் என கூறப்படுகிறது.
- டெக்னோ நிறுவனத்தின் புதிய ஃபேண்டம் X2 ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 12 சார்ந்த ஒஎஸ் கொண்டிருக்கிறது.
- டெக்னோ ஃபேண்டம் X2 மாடலில் பிரத்யேக யுனிபாடி 3.5டி லூனார் கிரேட்டர் டிசைன் வழங்கப்பட்டு இருக்கிறது.
டெக்னோ நிறுவனம் ஃபேண்டம் X2 ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போனினை இந்தியாவில் அறிமுகம் செய்து இருக்கிறது. இதில் 6.8 இன்ச் FHD+ 120Hz AMOLED ஸ்கிரீன், 64MP பிரைமரி கேமரா, OIS, 32MP செல்ஃபி கேமரா, 5160 எம்ஏஹெச் பேட்டரி, 45 வாட் ஃபிலாஷ் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது.
புதிய டெக்னோ ஃபேண்டம் X2 ஸ்மார்ட்போன் இந்தியாவில் ரூ. 40 ஆயிரம் பட்ஜெட்டில் மீடியாடெக் டிமென்சிட்டி 9000 5ஜி சிப்செட் கொண்ட முதல் ஸ்மார்ட்போன் எனும் பெருமையை பெற்றுள்ளது. இதில் பிரத்யேக யுனிபாடி டபுள்-கர்வ்டு பில்டு மற்றும் 3.5D லூனார் கிரேட்டர் டிசைன் கொண்டிருக்கிறது.

டெக்னோ ஃபேண்டம் X2 அம்சங்கள்:
6.8 இன்ச் 1080x2400 பிக்சல் FHD+ AMOLED டிஸ்ப்ளே, 120Hz ரிப்ரெஷ் ரேட்
கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் பாதுகாப்பு
ஆக்டா கோர் மீடியாடெக் 9000 பிராசஸர்
மாலி G710 10-கோர் GPU
8 ஜிபி ரேம்
256 ஜிபி மெமரி
ஆண்ட்ராய்டு 12 மற்றும் ஹைஒஎஸ் 12
டூயல் சிம் ஸ்லாட்
64MP பிரைமரி கேமரா, OIS
13MP அல்ட்ரா வைடு கேமரா
2MP கேமரா
32MP செல்ஃபி கேமரா
இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார்
யுஎஸ்பி டைப் சி ஆடியோ, ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள்
5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை 6
ப்ளூடூத் 5.3, யுஎஸ்பி டைப் சி
5160 எம்ஏஹெச் பேட்டரி
45 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங்
விலை மற்றும் விற்பனை விவரங்கள்:
டெக்னோ ஃபேண்டம் X2 ஸ்மார்ட்போன் மூன்லைட் சில்வர் மற்றும் ஸ்டார்டஸ்ட் கிரே என இரண்டு நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை ரூ. 39 ஆயிரத்து 999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்த ஸ்மார்ட்போனிற்கான முன்பதிவு ஏற்கனவே துவங்கி நடைபெற்று வருகிறது. விற்பனை அமேசான், சில்லறை விற்பனை மையங்களில் ஜனவரி 9 ஆம் தேதி துவங்க இருக்கிறது.
- சியோமி நிறுவனம் இந்திய சந்தையில் புதிய ரெட்மி நோட் 12 சீரிஸ் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்ய இருக்கிறது.
- புதிய ரெட்மி நோட் 12 சீரிஸ் மாடல்களில் 200MP பிரைமரி கேமரா, சூப்பர் AMOLED டிஸ்ப்ளே போன்ற அம்சங்கள் வழங்கப்பட இருக்கிறது.
சியோமி நிறுவனம் ரெட்மி நோட் 12 சீரிஸ் இந்திய வெளியீட்டை உறுதிப்படுத்தி விட்டது. புது ரெட்மி நோட் 12 சீரிஸ் மாடல்களில் 120Hz ரிப்ரெஷ் ரேட் கொண்ட சூப்பர் AMOLED டிஸ்ப்ளே, 200MP பிரைமரி கேமரா வழங்கப்படுகிறது. எனினும், ரெட்மி நோட் 12 சீரிஸ் வெளியீட்டுக்கு முன் சியோமி நிறுவனம் ரெட்மி நோட் 11 ப்ரோ பிளஸ் 5ஜி ஸ்மார்ட்போனின் விலையை குறைத்து இருக்கிறது. விலை குறைப்பின் படி இந்த ஸ்மார்ட்போன் விலை ரூ. 20 ஆயிரத்திற்கும் கீழ் கிடைக்கிறது.
ரெட்மி நோட் 11 ப்ரோ பிளஸ் 5ஜி இந்த சீரிசில் டாப் எண்ட மாடல் ஆகும். இந்த ஸ்மார்ட்போனின் 6 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 20 ஆயிரத்து 999 என நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது. தற்போது இதன் விலை ரூ. 19 ஆயிரத்து 999 என மாறி இருக்கிறது. குறைக்கப்பட்ட புது விலை சியோமி இந்தியா அதிகாரப்பூர்வ வலைதளத்தில் ஏற்கனவே மாற்றப்பட்டு விட்டது.

மேலும் ஐசிஐசிஐ வங்கி கார்டு பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு அமேசான் ரூ. 2 ஆயிரம் தள்ளுபடி வழங்குகிறது. ப்ளிப்கார்ட் தளத்தில் இந்த ஸ்மார்ட்போனின் விலை ரூ. 19 ஆயிரத்து 790 என பட்டியலிடப்பட்டு இருக்கிறது. பேங்க் ஆஃப் பரோடா மற்றும் ஃபெடரல் வங்கி கார்டுகளுக்கு ரூ. 1000 தள்ளுபடி வழங்கப்படுகிறது. இதன் 8 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி மற்றும் 8 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி மாடல்களுக்கும் இது போன்ற தள்ளுபடி வழங்கப்படுகிறது.
அம்சங்களை பொருத்தவரை ரெட்மி நோட் 11 ப்ரோ பிளஸ் 5ஜி மாடலில் 120Hz ரிப்ரெஷ் ரேட் கொண்ட AMOLED டிஸ்ப்ளே, 108MP பிரைமரி கேமரா, 67 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங், ஸ்டீரியோ ஸ்பீக்கர், டால்பி அட்மோஸ் உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கிறது.
- சாம்சங் நிறுவனத்தின் குறைந்த விலை கேலக்ஸி F சீரிஸ் ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகமாகிறது.
- புதிய கேலக்ஸி F சீரிஸ் ஸ்மார்ட்போன் இரண்டு வித நிறங்கள் மற்றும் கிளாசி டிசைன் கொண்டிருக்கும் என தெரியவந்துள்ளது.
சாம்சங் நிறுவனம் புது எண்ட்ரி லெவல் ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்ய இருப்பதாக கடந்த வாரம் தகவல்கள் வெளியாகி இருந்தது. தற்போது கேலக்ஸி F04 ஸ்மார்ட்போனின் வெளியீடு ஜனவரி 04 ஆம் தேதி நடைபெறும் என தெரியவந்துள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் ப்ளிப்கார்ட் தளத்தில் விற்பனை செய்யப்படும் என்றும் இதன் விலை ரூ. 8 ஆயிரத்திற்குள் நிர்ணயம் செய்யப்படும் என்றும் டீசரில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.
அம்சங்களை பொருத்தவரை புதிய சாம்சங் கேலக்ஸி F04 ஸ்மார்ட்போனில் 6.5 இன்ச் ஸ்கிரீன், மீடியாடெக் P35 பிராஸசஸர், டூயல் கேமரா சென்சார்கள், 4 ஜிபி ரேம், 4 ஜிபி வரை கூடுதல் விர்ச்சுவல் ரேம், ரேம் பிளஸ் அம்சம் வழங்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் ஸ்டைலிஷ் டிசைன், 5000 எம்ஏஹெச் பேட்டரி பேக்கப் மற்றும் சக்திவாய்ந்த அம்சங்களை கொண்டிருக்கிறது.

ஆண்ட்ராய்டு 12 சார்ந்த ஒன்யுஐ கொண்டிருக்கும் கேலக்ஸி F04 ஸ்மார்ட்போன் இரண்டு ஒஎஸ் அப்டேட்களை பெறும். இந்திய சந்தையில் புதிய சாம்சங் கேலக்ஸி F04 ஸ்மார்ட்போனின் விலை ரூ. 8 ஆயிரத்திற்கும் குறைவாகவே நிர்ணயம் செய்யப்பட இருக்கிறது. கேலக்ஸி F சீரிசில் குறைந்த விலை ஸ்மார்ட்போனாக புதிய கேலக்ஸி F04 இருக்கும் என எதிர்பார்க்கலாம்.
முந்தைய கேலக்ஸி M04 ஸ்மார்ட்போனில் 6.5 இன்ச் HD+ இன்ஃபினிட்டி வி டிஸ்ப்ளே, மீடியாடெக் ஹீலியோ P35 பிராசஸர், 4 ஜிபி ரேம், 4 ஜிபி விர்ச்சுவல் ரேம், ரேம் பிளஸ், 13MP பிரைமரி கேமரா, 2MP டெப்த் கேமரா, 5MP செல்ஃபி கேமரா, 5000 எம்ஏஹெச் பேட்டரி வழங்கப்பட்டு இருக்கிறது.
- ரெட்மி பிராண்டிங்கில் புது ஸ்மார்ட்போன் பட்ஜெட் விலையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.
- புது ரெட்மி ஸ்மார்ட்போன் கைகளில் இருந்து நழுவாமல் இருக்க செய்யும் டிசைன், கைரேகை சென்சார் கொண்டிருக்கிறது.
சியோமி நிறுவனத்தின் புது ஸ்மார்ட்போன் ரெட்மி பிராண்டிங்கில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. சமீபத்தில் தான் ரெட்மி பிராண்டின் ரெட்மி நோட் 12 ப்ரோ ஸ்பீடு எடிஷன் மற்றும் அக்ஸரீக்கள் அறிமுகம் செய்யப்பட்டன. தற்போது அறிமுகமாகி இருக்கும் ஸ்மார்ட்போன் ரெட்மி 12C என அழைக்கப்படுகிறது. இதில் 6.71 இன்ச் HD+ ஸ்கிரீன் கொண்ட டிஸ்ப்ளே, மீடியாடெக் ஹீலியோ G85 பிராசஸர், LPDDR4X ரேம், eMMC 5.1 ஃபிளாஷ் மெமரி, 5000 எம்ஏஹெச் பேட்டரி கொண்டிருக்கிறது.
புகைப்படங்களை எடுக்க 50MP பிரைமரி கேமரா, டெப்த் கேமரா, 5MP செல்ஃபி கேமரா வழங்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனின் பேக் பேனல்- கைகளில் இருந்து நழுவாத வகையில் டெக்ஸ்ச்சர் ஃபினிஷ் மற்றும் ஸ்டிரைப்கள் உள்ளது. இத்துடன் கைரேகை சென்சார் உள்ளது.

ரெட்மி 12C அம்சங்கள்:
6.71 இன்ச் HD+ ஸ்கிரீன் கொண்ட டிஸ்ப்ளே
மீடியாடெக் ஹீலியோ G85 பிராசஸர்
4 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி
4 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி
6 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி
மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
ஆண்ட்ராய்டு 12 சார்ந்த MIUI 13
கைரேகை சென்சார்
மைக்ரோ யுஎஸ்பி போர்ட்
3.5mm ஹெட்போன் ஜாக்
4ஜி, மைக்ரோ எஸ்டி ஸ்லாட்
5000 எம்ஏஹெச் பேட்டரி
விலை மற்றும் விற்பனை விவரங்கள்:
ரெட்மி 12C ஸ்மார்ட்போனின் விலை 699 யுவான், இந்திய மதிப்பில் ரூ. 8 ஆயிரத்து 385 என துவங்குகிறது. இதன் டாப் எண்ட் மாடல் விலை 899 யுவான், இந்திய மதிப்பில் ரூ. 10 ஆயிரத்து 784 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்த ஸ்மார்ட்போனினை விற்பனை தற்போது மெயின்லேண்ட் சீனாவில் மட்டுமே நடைபெற்று வருகிறது.
- ஒன்பிளஸ் நிறுவனம் அடுத்த ஆண்டு துவக்கத்திலேயே புது ஃபிளாக்ஷிப் சீரிஸ் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்ய இருக்கிறது.
- புதிய ஒன்பிளஸ் 11 ஸ்மார்ட்போனிற்கான டீசர்களை ஒன்பிளஸ் நிறுவனம் தொடர்ந்து வெளியிட்டு வருகிறது.
ஒன்பிளஸ் நிறுவனம் ஒன்பிளஸ் 11R எனும் ஸ்மார்ட்போனை உருவாக்கி வருவதாக தகவல்கள் வெளியாகி வந்தன. இந்த ஸ்மார்ட்போனின் விவரங்களும் தொடர்ச்சியாக லீக் ஆகி வந்தன. அந்த வரிசையில், தற்போது ஒன்பிளஸ் 11R ஸ்மார்ட்போன் புது புகைப்படங்கள் லீக் ஆகி இருக்கின்றன.
அதன்படி புதிய ஒன்பிளஸ் 11R ஸ்மாரட்போனில் கர்வ்டு எட்ஜ் கொண்ட ஸ்கிரீன், மத்தியில் பன்ச் ஹோல் வழங்கப்படும் என தெரியவந்துள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் ஸ்கிரீன் 1220 பிக்சல் டிஸ்ப்ளே, 50MP பிரைமரி கேமரா, OIS, IR பிளாஸ்டர் உள்ளிட்ட அம்சங்கள் வழங்கப்படும் என தெரிகிறது.

2022 ஆண்டின் அரையாண்டு வாக்கில் தான் ஒன்பிளஸ் 10R ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த மாடல் மிட் ரேன்ஜ் மற்றும் பிரீமியம் பரிவுகளுக்கு மத்தியில் நிலைநிறுத்தப்பட்டது. ஒன்பிளஸ் 11 ஸ்மார்ட்போன் முழுக்க முழுக்க ஃபிளாக்ஷிப் மாடல் என்பதால், ஒன்பிளஸ் 11R மாடல் விலை சற்றே அதிகமாகவே இருக்கும் என எதிர்பார்க்கலாம். 2023 மாடல்களில் ப்ரோ பெயரை பயன்படுத்த வேண்டாம் என்று ஒன்பிளஸ் முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.
அந்த வகையில் ஒன்பிளஸ் 11R ஸ்மார்ட்போன் குவால்காம் நிறுவனத்தின் ஸ்னாப்டிராகன் 8 பிளஸ் ஜென் 1 பிராசஸர், 5000 எம்ஏஹெச் பேட்டரி, 100 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் போன்ற அம்சங்களை கொண்டிருக்கலாம். இந்த ஸ்மார்ட்போன் ஒப்போ ரெனோ 9 ப்ரோ பிளஸ் மாடலை சார்ந்து உருவாக்கப்படுவதாக கூறப்படுகிறது. ஒப்போ மாடலில் 6.7 இன்ச் AMOLED ஸ்கிரீன், IMX890 சென்சார் வழங்கப்பட்டு இருக்கிறது.
ஒன்பிளஸ் 11 ஸ்மார்ட்போனுடன் ஒன்பிளஸ் 11R மாடலும் அறிமுகம் செய்யப்படுமா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. முதற்கட்டமாக ஒன்பிளஸ் 11 ஸ்மார்ட்போன் சீன சந்தையில் ஜனவரி 4 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இதன் சர்வதேச வெளியீடு பிப்ரவரி 7 ஆம் தேதி நடைபெற இருக்கிறது.
Photo Courtesy: Twitter | heyitsyogesh
- மடிக்கக்கூடிய சாதனங்கள் சந்தையில் ஆப்பிள் நிறுவனம் களமிறங்குவது பற்றி புது தகவல் வெளியாகி உள்ளது.
- மடிக்கக்கூடிய ஐபோன் மாடலில் யுஎஸ்பி டைப் சி போர்ட் வழங்கப்படும் என்றும் இது ஐபோன் ஃபோல்டு என்று அழைக்கப்படுகிறது.
சாம்சங், ஹூவாய், ஒப்போ மற்றும் சியோமி என பல்வேறு நிறுவனங்கள் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் பிரிவில் களமிறங்கி விட்டன. ஆப்பிள் மற்றும் கூகுள் நிறுவனங்கள் இந்த பிரிவில் புது மாடல்களை அறிமுகம் செய்வது பற்றி அவ்வப்போது தகவல்கள் வெளியாகி வருகின்றன. அந்த வரிசையில், தற்போது வெளியாகி இருக்கும் தகவல்களில் மடிக்கக்கூடிய ஐபோன் மாடல் 2025 வாக்கில் அறிமுகம் செய்யப்படும் என கூறப்படுகிறது.
புதிய மடிக்கக்கூடிய ஐபோன் மாடல் "ஐபோன் ஃபோல்டு" பெயரில் அழைக்கப்படும் என்றும் இதில் யுஎஸ்பி டைப் சி போர்ட் மற்றும் மேக்சேஃப் வசதி வழங்கப்பட்டு இருக்கும் என்றும் கூறப்படுகிறது. இவைதவிர புதிய ஐபோன் ஃபோல்டு மாடலில் டச் ஐடி அல்லது ஃபேஸ் ஐடி போன்ற அம்சங்கள் வழங்கப்படும் என தகவல் வெளியாகி உள்ளது. இதற்காக ஆப்பிள் நிறுவனம் எல்ஜி-யுடன் இணைந்து மிக மெல்லிய கவர் கிலாஸ் உருவாக்கி வருவதாகவும் கூறப்படுகிறது.
இது மட்டுமின்றி ஆப்பிளஅ நிறுவனம் சொந்த சிப் டிசைன் பிரிவில் தொடர்ந்து முதலீடு செய்யும் என்றும் கூறப்படுகிறது. தற்போது ஆப்பிள் நிறுவனம் தனது ஐபோன் மற்றும் ஐபேட் மாடல்களுக்கான சொந்த சிப்செட்களை டிசைன் செய்து வருகிறது. எனினும், 5ஜி கனெக்டிவிட்டியை வழங்க ஆப்பிள் நிறுவனம் குவால்காம் நிறுவன மோடெம்களை சார்ந்து இருக்கிறது. டிஸ்ப்ளே சப்ளை செயின் கன்சல்டண்ட் ஆய்வாளர் ராஸ் யங் ஆப்பிள் நிறுவனத்தின் மடிக்கக்கூடிய ஐபோன் மாடல் 2025 வரை அறிமுகமாகாது என தெரிவித்து இருந்தார்.
ஆப்பிள் நிறுவனம் தற்போது 20 இன்ச் அளவில் மடிக்கக்கூடிய டிஸ்ப்ளே வாங்குவது குறித்த பேச்சுவார்த்தையை நடத்தி வருகிறது. அந்த வகையில் மடிக்கக்கூடிய மேக்புக் மாடல்களை ஆப்பிள் உருவாக்க நினைப்பதாகவே தெரிகிறது. மடிக்கப்பட்ட நிலையிலும், முழுமையாக திறக்கப்பட்ட நிலையிலும் பயன்படுத்தக்கூடிய மேக்புக் மாடல்கள் 2026 அல்லது 2027 வாக்கில் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கலாம்.
Photo Courtesy: iOS Beta News/YouTube
- சாம்சங் நிறுவனம் இந்திய சந்தையில் முற்றிலும் புது ஸ்மார்ட்போனினை பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்ய இருக்கிறது.
- புது சாம்சங் ஸ்மார்ட்போனின் விற்பனை ப்ளிப்கார்ட் தளத்தில் பிரத்யேகமாக விற்பனை செய்யப்பட இருக்கிறது.
சாம்சங் நிறுவனம் கேலக்ஸி F04 ஸ்மார்ட்போனினை விரைவில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்ய இருக்கிறது. 2023 ஆண்டு துவக்கத்தில் புதிய கேலக்ஸி F சீரிஸ் ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகமாகிறது. முஎ்னதாக இம்மாத துவக்கத்தில் கேலக்ஸி M04, கேலக்ஸி A04 மற்றும் கேலக்ஸி A04e ஸ்மார்ட்போன்களை சாம்சங் அறிமுகம் செய்து இருந்தது குறிப்பிடத்தக்கது.
புதிய சாம்சங் கேலக்ஸி F04 ஸ்மார்ட்போனில் 6.5 இன்ச் ஸ்கிரீன், டூயல் கேமரா சென்சார்கள், 4 ஜிபி ரேம், 4 ஜிபி வரை கூடுதல் விர்ச்சுவல் ரேம், ரேம் பிளஸ் அம்சம் வழங்கப்படும் என கூறப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் ஸ்டைலிஷ் டிசைன், நீண்ட நேர பேட்டரி பேக்கப் மற்றும் சக்திவாய்ந்த அம்சங்களை மிக குறைந்த விலையில் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.

முந்தைய கேலக்ஸி M04 ஸ்மார்ட்போனில் 6.5 இன்ச் HD+ இன்ஃபினிட்டி வி டிஸ்ப்ளே, மீடியாடெக் ஹீலியோ P35 பிராசஸர், 4 ஜிபி ரேம், 4 ஜிபி விர்ச்சுவல் ரேம், ரேம் பிளஸ், 13MP பிரைமரி கேமரா, 2MP டெப்த் கேமரா, 5MP செல்ஃபி கேமரா, 5000 எம்ஏஹெச் பேட்டரி வழங்கப்பட்டு இருக்கிறது.
இந்திய சந்தையில் புதிய சாம்சங் கேலக்ஸி F04 ஸ்மார்ட்போனின் விலை ரூ. 8 ஆயிரத்திற்கும் குறைவாகவே நிர்ணயம் செய்யப்பட இருக்கிறது. கேலக்ஸி F சீரிசில் குறைந்த விலை ஸ்மார்ட்போனாக புதிய கேலக்ஸி F04 இருக்கும் என எதிர்பார்க்கலாம். இந்த ஸ்மார்ட்போனின் சரியான வெளியீட்டு தேதி மற்றும் இதர விவரங்கள் வரும் வாரங்களில் தெரியவரும்.
- போக்கோ நிறுவனத்தின் புது ஸ்மார்ட்போன் இந்திய வெளியீடு விரைவில் நடைபெற இருக்கிறது.
- இந்த ஸ்மார்ட்போனின் விற்பனை ப்ளிப்கார்ட் தளத்தில் நடைபெறும் என தற்போதைய டீசர்களில் தெரியவந்துள்ளது.
போக்கோ நிறுவனம் இந்திய சந்தையில் போக்கோ C50 ஸ்மார்ட்போனினை விரைவில் அறிமுகம் செய்ய இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனின் விவரங்கள் IMEI மற்றும் கூகுள் பிளே சப்போர்ட் கொண்ட சாதனங்கள் பட்டியலில் இடம்பிடித்து இருந்தது. தற்போது இந்த ஸ்மார்ட்போனின் டீசரை போக்கோ இந்தியா அதன் அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு இருக்கிறது. அதன்படி புதிய போக்கோ C50 ஸ்மார்ட்போனின் இந்திய வெளியீடு விரைவில் நடைபெறலாம்.
முன்னதாக இணையத்தில் வெளியான தகவல்களின் படி போக்கோ C50 ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் ஜனவரி 3 ஆம் தேதி அறிமுகம் செய்யப்படும் என கூறப்பட்டது. அடுத்த ஆண்டு இந்திய சந்தையில் போக்கோ அறிமுகம் செய்யும் முதல் ஸ்மார்ட்போனாக போக்கோ C50 இருக்கும் என தெரிகிறது. ஏற்கனவே 2021 செப்டம்பர் மாத வாக்கில் போக்கோ C31 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டது.

இதுதவிர நவம்பர் மாதத்திலேயே போக்கோ C50 ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்படும் என போக்கோ அறிவித்து இருந்தது. பின் எவ்வித காரணமும் தெரிவிக்காமல், இதன் வெளியீடு தாமதமானது. தற்போது அதிகாரப்பூர்வ டீசர் வெளியாகி இருக்கும் நிலையில், போக்கோ C50 ஸ்மார்ட்போன் விரைவில் இந்திய சந்தையில் அறிமுகமாகும் என எதிர்பார்க்கலாம்.
முந்தைய தகவல்களில் போக்கோ C50 ஸ்மார்ட்போன் ரெட்மி A1+ மாடலின் ரிபிராண்டு செய்யப்பட்ட வெர்ஷன் என கூறப்பட்டது. தற்போது விற்பனை செய்யப்படும் ரெட்மி A1+ ஸ்மார்ட்போனில் 6.52 இன்ச் HD+ டிஸ்ப்ளே, வாட்டர் டிராப் நாட்ச், 400 நிட்ஸ் பிரைட்னஸ், லெதர் டெக்ஸ்ச்சர் டிசைன் வழங்கப்பட்டு இருக்கிறது.
இத்துடன் மீடியாடெக் ஹீலியோ A22 பிராசஸர், IMG பவர்விஆர் GPU, ஆண்ட்ராய்டு 12 கோ எடிஷன் ஒஎஸ், 5000 எம்ஏஹெச் பேட்டரி, 10 வாட் சார்ஜிங், 8MP பிரைமரி கேமரா, 5MP செல்ஃபி கேமரா, கைரேகை சென்சார், மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட், 3.5mm ஆடியோ ஜாக் உள்ளிட்ட அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளது.
- சியோமி நிறுவனத்தின் புது ரெட்மி K60 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் சீன சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.
- K60 சீரிசில் ரெட்மி K60 ப்ரோ ஸ்மார்ட்போன் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 பிராசஸர் கொண்டிருக்கிறது.
சியோமி நிறுவனம் ரெட்மி K60E, ரெட்மி K60 மற்றும் டாப் எண்ட் ரெட்மி K60 ப்ரோ ஸ்மாரட்போன்களை சீன சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. ரெட்மி K60 ப்ரோ ஸ்மார்ட்போனில் 6.67 இன்ச் 2K AMOLED ஃபிளாட் ஸ்கிரீன், 1400 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், 120Hz ரிப்ரெஷ் ரேட், HDR10+, டால்பி விஷன் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது.
இத்துடன் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 பிராசஸர், அதிகபட்சம் 16 ஜிபி ரேம், 512 ஜிபி மெமரி வழங்கப்பட்டு இருக்கிறது. புகைப்படங்களை எடுக்க 50MP பிரைமரி கேமரா, OIS+EIS, சைபர்ஃபோக்கஸ் 2.0 தொழில்நுட்பம், 8MP அல்ட்ரா வைடு ஆங்கில் கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது.

ரெடச்மி K60 மாடலில் இதே போன்ற ஸ்கிரீன், ஸ்னாப்டிராகன் 8 பிளஸ் ஜென் 1 பிராசஸர், அதிகபட்சம் 16 ஜிபி ரேம், 512 ஜிபி மெமரி, 64MP பிரைமரி கேமரா, OIS வழங்கப்பட்டுள்ளது. ரெட்மி K60 ஸ்மார்ட்போன் கிலாஸ் மற்றும் லெதர் பேக் வெர்ஷன்களில் கிடைக்கிறது. ரெட்மி K60 ப்ரோ சாம்பியன்ஷிப் எடிஷன் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இதில் இருபுறமும் கார்பன் ஃபைபர் ஹை கிலாஸ் ஸ்பீடு லைன் கொண்டிருக்கிறது.
ரெட்மி K60E மாடலில் 2K AMOLED ஸ்கிரீன், மீடியாடெக் டிமென்சிட்டி 8200 பிராசஸர், அதிகபட்சம் 12 ஜிபி ரேம், 512 ஜிபி மெமரி, 48MP பிரைமரி கேமரா, OIS வழங்கப்பட்டு இருக்கிறது. ரெட்மி K60 ப்ரோ ஸ்மார்ட்போனில் 5000 எம்ஏஹெச் பேட்டரி, 120 வாட் சார்ஜிங் வசதி உள்ளது. ரெட்மி K60 மற்றும் K60E ஸ்மார்ட்போன்களில் 5500 எம்ஏஹெச் பேட்டரி மற்றும் 67 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது.
ரெட்மி K60 மற்றும் K60 ப்ரோ ஸ்மார்ட்போன்களில் 30 வாட் வயர்லெஸ் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது. அந்த வகையில் வயர்லெஸ் சார்ஜிங் வசதி கொண்ட முதல் ரெட்மி பிராண்டு ஸ்மார்ட்போன் எனும் பெருமையை இந்த மாடல்கள் பெற்றுள்ளன.
விலை மற்றும் விற்பனை விவரங்கள்:
ரெட்மி K60 ப்ரோ 8 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி மாடல் 3 ஆயிரத்து 299 யுவான், இந்திய மதிப்பில் ரூ. 39 ஆயிரத்து 260 என துவங்குகிறது. இதன் டாப் எண்ட் 16 ஜிபி ரேம், 512 ஜிபி மெமரி மாடல் விலை 4 ஆயிரத்து 299 யுவான், இந்திய மதிப்பில் ரூ. 54 ஆயிரத்து 730 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
ரெட்மி K60 ஸ்மார்ட்போனின் 8 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி மாடல் 2 ஆயிரத்து 499 யுவான், இந்திய மதிப்பில் ரூ. 29 ஆயிரத்து 740 என துவங்குகிறது. இதன் டாப் எண்ட் 16 ஜிபி ரேம், 512 ஜிபி மெமரி மாடல் விலை 3 ஆயிரத்து 599 யுவான், இந்திய மதிப்பில் ரூ. 42 ஆயிரத்து 830 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
ரெட்மி K60E ஸ்மார்ட்போனின் 8 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி மாடல் 2 ஆயிரத்து 199 யுவான், இந்திய மதிப்பில் ரூ. 26 ஆயிரத்து 170 என துவங்குகிறது. இதன் டாப் எண்ட் 12 ஜிபி ரேம், 512 ஜிபி மெமரி மாடல் விலை 2 ஆயிரத்து 799 யுவான், இந்திய மதிப்பில் ரூ. 33 ஆயிரத்து 315 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.






