என் மலர்
மொபைல்ஸ்
- ப்ளிப்கார்ட் வலைதளத்தில் அசத்தல் சலுகைகள் வழங்கும் சிறப்பு விற்பனையை அறிவித்து இருக்கிறது.
- சிறப்பு விற்பனையின் கீழ் போக்கோ ஸ்மார்ட்போன் மாடல்களுக்கு அசத்தல் தள்ளுபடி வழங்கப்படுகிறது.
ப்ளிப்கார்ட் வலைதளத்தில் போக்கோ நிறுவன ஸ்மார்ட்போன் மாடல்களுக்கு சிறப்பு சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. ப்ளிப்கார்ட் பிக் சேவிங்ஸ் டேஸ் சேல் நடைபெற்று வருகிறது. விற்பனையின் அங்கமாக போக்கோ ஸ்மார்ட்போன்களுக்கு இன்று (ஜனவரி 14) சிறப்பு சலுகைகள் வழங்கப்படுகின்றன.
போக்கோ M4 5ஜி, ஃபிளாக்ஷிப் போக்கோ F4 5ஜி ஸ்மார்ட்போன் உள்ளிட்ட மாடல்கள் இதுவரை இல்லாத விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இத்துடன் எஸ்பிஐ மற்றும் ஐசிஐசிஐ வங்கி கார்டு பயன்படுத்தும் போது 10 சதவீதம் உடனடி தள்ளுபடி வழங்கப்படுகிறது. அதன்படி ஸ்மார்ட்போன்களை ரூ. 6 ஆயிரத்து 999 விலையில் இருந்தே வாங்கிட முடியும்.

சலுகை விவரங்கள்:
போக்கோ X4 ப்ரோ 5ஜி 6 ஜிபி + 64 ஜிபி மாடல் ரூ. 13 ஆயிரத்து 999 (ரூ. 4 ஆயிரம் தள்ளுபடி)
போக்கோ X4 ப்ரோ 5ஜி 6 ஜிபி + 128 ஜிபி மாடல் ரூ. 15 ஆயிரத்து 499 (ரூ. 3 ஆயிரத்து 500 தள்ளுபடி)
போக்கோ X4 ப்ரோ 5ஜி 8 ஜிபி + 128 ஜிபி மாடல் ரூ. 16 ஆயிரத்து 999 (ரூ. 4 ஆயிரம் தள்ளுபடி)
போக்கோ F4 5ஜி 6 ஜிபி + 128 ஜிபி மாடல் ரூ. 24 ஆயிரத்து 999 (ரூ. 3 ஆயிரம் தள்ளுபடி)
போக்கோ F4 5ஜி 8 ஜிபி + 128 ஜிபி மாடல் ரூ. 22 ஆயிரத்து 999 (ரூ. 7 ஆயிரம் தள்ளுபடி)
போக்கோ F4 5ஜி 12 ஜிபி + 256 ஜிபி மாடல் ரூ. 26 ஆயிரத்து 999 (ரூ. 7 ஆயிரம் தள்ளுபடி)
போக்கோ M4 5ஜி 4 ஜிபி + 64 ஜிபி மாடல் ரூ. 10 ஆயிரத்து 249 (ரூ. 2 ஆயிரத்து 750 தள்ளுபடி)
போக்கோ M4 5ஜி 6 ஜிபி + 128 ஜிபி மாடல் ரூ. 12 ஆயிரத்து 249 (ரூ. 2 ஆயிரத்து 750 தள்ளுபடி)
போக்கோ M4 ப்ரோ 5ஜி 4 ஜிபி + 64 ஜிபி மாடல் ரூ. 11 ஆயிரத்து 249 (ரூ. 3 ஆயிரத்து 750 தள்ளுபடி)
போக்கோ M4 ப்ரோ 5ஜி 6 ஜிபி + 128 ஜிபி மாடல் ரூ. 13 ஆயிரத்து 249 (ரூ. 3 ஆயிரத்து 750 தள்ளுபடி)
போக்கோ M4 ப்ரோ 5ஜி 8 ஜிபி + 128 ஜிபி மாடல் ரூ. 14 ஆயிரத்து 249 (ரூ. 4 ஆயிரத்து 750 தள்ளுபடி)
போக்கோ M4 ப்ரோ AMOLED 6 ஜிபி + 64 ஜிபி மாடல் ரூ. 9 ஆயிரத்து 999 (ரூ. 5 ஆயிரம் தள்ளுபடி)
போக்கோ M4 ப்ரோ AMOLED 6 ஜிபி + 128 ஜிபி மாடல் ரூ. 10 ஆயிரத்து 999 (ரூ. 5 ஆயிரத்து 500 தள்ளுபடி)
போக்கோ M4 ப்ரோ AMOLED 8 ஜிபி + 128 ஜிபி மாடல் ரூ. 12 ஆயிரத்து 999 (ரூ. 5 ஆயிரத்து 500 தள்ளுபடி)
போக்கோ M5 (4 ஜிபி + 64 ஜிபி) மாடல் ரூ. 9 ஆயிரத்து 999 (ரூ. 2 ஆயிரத்து 500 தள்ளுபடி)
போக்கோ M5 (6 ஜிபி + 128 ஜிபி) மாடல் ரூ. 11 ஆயிரத்து 999 (ரூ. 2 ஆயிரத்து 500 தள்ளுபடி)
போக்கோ C31 (3 ஜிபி + 32 ஜிபி) மாடல் ரூ. 6 ஆயிரத்து 999 (ரூ. 1,500 தள்ளுபடி)
போக்கோ C31 (4 ஜிபி + 64 ஜிபி) மாடல் ரூ. 7 ஆயிரத்து 499 (ரூ. 2 ஆயிரம் தள்ளுபடி)
இந்த சலுகைகள் குறுகிய காலக்கட்டத்திற்கு அறிவிக்கப்பட்டு இருக்கின்றன. இவை ஜனவரி 20 ஆம் தேதி வரை வழங்கப்பட இருக்கிறது.
- கூகுள் நிறுவனத்தின் பிக்சல் ஸ்மார்ட்போன்களுக்கு ஒருவழியாக 5ஜி அப்டேட் வெளியாக இருக்கிறது.
- பிக்சல் ஸ்மார்ட்போன்களில் 5ஜி அப்டேட் முதற்கட்டமாக பீட்டா முறையில் வெளியிடப்பட்டு இருக்கிறது.
கூகுள் நிறுவனம் தனது பிக்சல் ஸ்மார்ட்போன்களுக்கு 5ஜி சப்போர்ட் வழங்க துவங்கி இருக்கிறது. இதற்கான QPR பீட்டா 2 அப்டேட் ஏர்டெல் மற்றும் ஜியோ பயனர்களுக்கு வெளியிடப்பட்டு வருகிறது. டிசம்பர் மாதம் வெளியான பிக்சல் ஃபீச்சர் டிராப்-இல் 5ஜி சப்போர்ட் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. எனினும், தற்போது இந்த அம்சம் பீட்டாவில் வெளியிடப்பட்டு இருக்கிறது.
முதற்கட்டமாக 5ஜி டெஸ்டிங் செய்யப்பட்டு, பயனர்களிடம் தரம், பயன்பாடு உள்ளிட்ட பிரிவுகளில் இருந்து கருத்து கேட்கப்படும் என கூகுள் அறிவித்து இருக்கிறது. டெஸ்டிங்கை தொடர்ந்து ஸ்டேபில் அப்டேட் 2023 முதல் காலாண்டு வாக்கில் வெளியிடப்பட இருக்கிறது. பீட்டா அப்டேட் என்பதால், இதில் அதிக பிழைகள் நிறைந்திருக்கும்.
பீட்டா டெஸ்டிங்கில் பங்கேற்க பிக்சல் 6a, பிக்சல் 7 அல்லது பிக்சல் 7 ப்ரோ மாடல்களில் பீட்டா திட்டத்தில் இணைந்து கொள்ளலாம். ஏற்கனவே ஆண்ட்ராய்டு 13 பீட்டா திட்டத்தில் இருப்பவர்களுக்கு, சமீபத்திய QPR அப்டேட் கிடைத்திருக்கும்.
- ரியல்மி நிறுவனம் உருவாக்கி வரும் புது ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்யும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது.
- ஸ்மார்ட்போனில் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியை வழங்க இருப்பதாக நீண்ட காலமாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
ரியல்மி நிறுவனம் GT நியோ 5 ஸ்மார்ட்போனை உருவாக்கி வருவது அனைவரும் அறிந்ததே. எனினும், இந்த ஸ்மார்ட்போன் பற்றி இணையத்தில் வெளியாகி இருக்கும் புது தகவலில் அதன் முக்கிய அம்சம் தெரியவந்துள்ளது. மேலும் புது ஸ்மார்ட்போன் இருவித ஆப்ஷன்களில் கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது.
ரியல்மி GT நியோ 5 பற்றி ஏற்கனவே பல்வேறு தகவல்கள் இணையத்தில் வெளியாகி இருக்கின்றன. இந்த நிலையில், தற்போது வெய்போ தளத்தில் வெளியாகி இருக்கும தகவல்களின்படி ரியல்மி GT நியோ 5 ஸ்மார்ட்போன் இருவித ஆப்ஷன்களில் கிடைக்கும் என கூறப்படுகிறது.
அம்சங்களை பொருத்தவரை ரியல்மி GT நியோ 5 மாடலின் இரு ஆப்ஷன்களிலும் குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 பிளஸ் ஜென் 1 பிராசஸர் வழங்கப்படுகிறது. இத்துடன் 6.74 இன்ச் OLED டிஸ்ப்ளே, 2722x1240 பிக்சல் ரெசல்யூஷன், 144Hz ரிப்ரெஷ் ரேட் வழங்கப்படுகிறது. இரு ஸ்மார்ட்போன்களும் 199 கிராம் எடை மற்றும் மூன்று கேமரா சென்சொர்களை கொண்டிருக்கிறது.
இவற்றில் 50MP பிரைமரி கேமரா, 8MP கேமரா மற்றும் 2MP லென்ஸ் வழங்கப்படுகிறது. இரு மாடல்களில் ஒற்றை வித்தியாசமாக சார்ஜிங் ரேட் மற்றும் பேட்டரி பேக் இருக்கின்றன. ஒரு மாடலில் 5000 எம்ஏஹெச் பேட்டரி, 150 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றொரு மாடலில் 4600 எம்ஏஹெச் பேட்டரி மற்றும் அதிவேக 240 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்படுகிறது.
முன்னதாக வெளியான தகவல்களிலும் ரியல்மி GT நியோ 5 இருவித ஆப்ஷன்களில் கிடைக்கும் என கூறப்பட்டது. சமீபத்திய TENAA சான்றளிக்கும் வலைதளத்தில் ரியல்மி GT நியோ 5 ஸ்மார்ட்போனின் இரு வெர்ஷன்கள் RMX706 மற்றும் RMX3708 மாடல் நம்பர் கொண்டிருக்கின்றன.
- சியோமி நிறுவனத்தின் புது ரெட்மி நோட் சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் சமீபத்தில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டன.
- ரெட்மி நோட் 12 சீரிசில் - நோட் 12 5ஜி, நோட் 12 ப்ரோ 5ஜி மற்றும் நோட் 12 ப்ரோ பிளஸ் 5ஜி என மூன்று மாடல்கள் கிடைக்கின்றன.
சியோமியின் துணை பிராண்டு ரெட்மி இந்திய சந்தையில் தனது ரெட்மி நோட் 12 சீரிஸ் ஸ்மார்ட்போன்களை கடந்த வாரம் (ஜனவரி 5) அறிமுகம் செய்தது. இந்த நிலையில், புதிய ரெட்மி நோட் 12 சீரிஸ் மாடல்களுக்கான விற்பனை இன்று (ஜனவரி 11) துவங்கியது. இந்திய சந்தையில் ரோட்மி நோட் 12 சீரிசில் ரெட்மி நோட் 12 5ஜி, ரெட்மி நோட் 12 ப்ரோ மற்றும் ரெட்மி நோட் 12 ப்ரோ பிளஸ் என மூன்று மாடல்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.
இதில் ரெட்மி நோட் 12 5ஜி ஸ்மார்ட்போன் 4 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி, 6 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி என இருவித ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இதன் விற்பனை அமேசான் தளத்தில் நடைபெறுகிறது. இந்த ஸ்மார்ட்போன் மிஸ்கிட் பிளாக், மேட் பிளாக் மற்றும் ஃபிராஸ்டெட் கிரீன் என மூன்று நிறங்களில் கிடைக்கிறது.

ரெட்மி நோட் 12 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் 6 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி, 8 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி மற்றும் 8 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி என மூன்று வேரியண்ட்களில் கிடைக்கிறது. ரெட்மி நோட் 12 ப்ரோ பிளஸ் மாடல் 8 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி மற்றும் 12 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி என இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கிறது.
ரெட்மி நோட் 12 ப்ரோ மற்றும் ரெட்மி நோட் 12 ப்ரோ பிளஸ் மாடல்கள் ப்ளிப்கார்ட் தளத்தில் விற்பனை செய்யப்படுகின்றன. இந்த ஸ்மார்ட்போன்கள் அப்சிடியன் பிளாக், ஆர்க்டிக் வைட் மற்றும் ஐஸ்பெர்க் புளூ என மூன்று வித நிறங்களில் கிடைக்கிறது. இவை தவிர மூன்று ஸ்மார்ட்போன்களும் Mi வலைதளம், Mi ஸ்டூடியோ மற்றும் Mi பார்ட்னர் ஸ்டோர்களிலும் விற்பனை செய்யப்படுகிறது.
புது ரெட்மி நோட் 12 சீரிஸ் ஸ்மார்ட்போன்களை வாங்குவோர் ஐசிஐசிஐ வங்கி கிரெடிட் கார்டு பயன்படுத்தும் போதும், எக்சேன்ஜ் சலுகையின் கீழ் சிறப்பு தள்ளுபடி பெற முடியும். ரெட்மி நோட் 12 வாங்குவோருக்கு ரூ. 1500, நோட் 12 ப்ரோ மற்றும் நோட் 12 ப்ரோ பிளஸ் மாடல்களுக்கு ரூ. 3 ஆயிரம் வரையிலான தள்ளுபடி வழங்கப்படுகிறது. இத்துடன் பழைய சியோமி/Mi அல்லது ரெட்மி ஸ்மார்ட்போன் வாங்கும் போது ரூ. 1000 தள்ளுபடி வழங்கப்படுகிறது.
விலை விவரங்கள்:
ரெட்மி நோட் 12 5ஜி 4 ஜிபி ரேம், 128 ஜிபி ரூ. 17 ஆயிரத்து 999
ரெட்மி நோட் 12 5ஜி 6 ஜிபி ரேம், 128 ஜிபி ரூ. 19 ஆயிரத்து 999
வங்கி தள்ளுபடி மற்றும் எக்சேன்ஜ் சலுகைகளை பெறும் பட்சத்தில் இந்த ஸ்மார்ட்போனினை முறையே ரூ. 15 ஆயிரத்து 499 மற்றும் ரூ. 17 ஆயிரத்து 499 விலையில் வாங்கிட முடியும்.
ரெட்மி நோட் 12 ப்ரோ 6 ஜிபி, 128 ஜிபி ரூ. 24 ஆயிரத்து 999
ரெட்மி நோட் 12 ப்ரோ 8 ஜிபி, 128 ஜிபி ரூ. 26 ஆயிரத்து 999
ரெட்மி நோட் 12 ப்ரோ 8 ஜிபி, 256 ஜிபி ரூ. 27 ஆயிரத்து 999
ரெட்மி நோட் 12 ப்ரோ பிளஸ் 8 ஜிபி, 256 ஜிபி ரூ. 29 ஆயிரத்து 999
ரெட்மி நோட் 12 ப்ரோ பிளஸ் 12 ஜிபி, 256 ஜிபி ரூ. 32 ஆயிரத்து 999
அறிமுக சலுகையாக ஐசிஐசிஐ வங்கி கார்டு மற்றும் மாத தவணை முறைக்கு ரூ. 3 ஆயிரம் உடனடி தள்ளுபடி மற்றும் ரூ. 3 ஆயிரம் எக்சேன்ஜ் போனஸ் வழங்கப்படுகிறது. ஏற்கனவே பயன்படுத்தி வரும் பழைய சியோமி, Mi அல்லது ரெட்மி ஸ்மார்ட்போன்களை எக்சேன்ஜ் செய்யும் போது கூடுதலாக ரூ. 1000 தள்ளுபடி வழங்கப்படுகிறது.
- சியோமி நிறுவனம் இந்திய சந்தையில் மற்றொரு ரெட்மி ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்யும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது.
- புதிய ரெட்மி ஸ்மார்ட்போன் 2023 சர்வதேச மொபைல் காங்கிரஸ் நிகழ்வுக்கு முன்பே அறிமுகம் செய்யப்படும் என கூறப்படுகிறது.
சியோமியின் துணை பிராண்டு ரெட்மி இந்திய சந்தையில் புதிய ரெட்மி 12C ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்ய இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் அடுத்த மாத வாக்கில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படுகிறது. கடந்த வாரம் ரெட்மி பிராண்டு புதிய ரெட்மி 12C ஸ்மார்ட்போனை சீன சந்தையில் அறிமுகம் செய்தது.
இந்த ஸ்மார்ட்போனின் இந்திய வேரியண்ட் சீன மாடலை போன்ற டிசைன் மற்றும் அம்சங்களை கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. இந்தியாவில் ரெட்மி 12C ஸ்மார்ட்போன் 2023 சர்வதேச மொபைல் காங்கிரஸ் நிகழ்வுக்கு முன் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.

2023 சர்வதேச மொபைல் காங்கிரஸ் நிகழ்வு பார்சிலோனாவில் பிப்ரவரி 27 ஆம் தேதி துவங்கி மார்ச் 2 ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. அம்சங்களை பொருத்தவரை இந்த ஸ்மார்ட்போன் அதன் சீன வேரியண்டை போன்றே வழங்கப்படும் என தெரிகிறது. அந்த வகையில் ரெட்மி 12C ஸ்மார்ட்போனில் 6.71 இன்ச் HD+ டிஸ்ப்ளே, மீடியாடெக் ஹீலியோ G85 பிராசஸர், அதிகபட்சம் 6 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி, 5000 எம்ஏஹெச் பேட்டரி, 10 வாட் சார்ஜிங் வழங்கப்பட்டு இருக்கிறது.
புகைப்படங்களை எடுக்க 5MP செல்ஃபி கேமரா, 50MP பிரைமரி கேமரா, 0.08MP டெப்த் சென்சார் வழங்கப்படுகிறது. புதிய ரெட்மி 12C ஸ்மார்ட்போனின் இந்திய வெளியீட்டு தேதி, இந்திய விலை பற்றிய தகவல்கள் மர்மமாகவே உள்ளது. எனினும், இதுபற்றிய அறிவிப்பு வரும் நாட்களில் வெளியாகும் என எதிர்பார்க்கலாம்.
- ஐகூ நிறுவனத்தின் புது ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் அதிகபட்சம் 16 ஜிபி ரேம் கொண்டிருக்கிறது.
- இதில் சாம்சங் E6 AMOLED ஸ்கிரீன், 144Hz ரிப்ரெஷ் ரேட் கொண்ட டிஸ்ப்ளே பேனல் வழங்கப்பட்டு இருக்கிறது.
ஐகூ நிறுவனம் இந்திய சந்தையில் தனது புது ஃபிளாஷிப் ஸ்மார்ட்போன்- ஐகூ 11 அறிமுகம் செய்தது. இதில் 6.78 இன்ச் QHD+ சாம்சங் E6 AMOLED வளைந்த ஸ்கிரீன், 144Hz ரிப்ரெஷ் ரேட், LTPO 4.0 தொழில்நுட்பம், 300Hz டச் சாம்ப்லிங் ரேட் வழங்கப்பட்டு இருக்கிறது. ஐகூ உருவாக்கிய LTPO தொழில்நுட்பம் ஒரு ஸ்கிரீனில் ஒரே சமயத்தில் 60Hz மற்றும் 120Hz என இருவித ரிப்ரெஷ் ரேட்களை செயல்படுத்தும் என ஐகூ தெரிவித்து இருக்கிறது.
இது போன்ற டிஸ்ப்ளே அம்சம் கொண்ட இந்தியாவின் முதல் ஸ்மார்ட்போன் இது ஆகும். இத்துடன் குவால்காம் நிறுவனத்தின் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 பிராசஸர் கொண்டு அறிமுகமாகி இருக்கும் இந்தியாவின் முதல் ஸ்மார்ட்போன் ஐகூ 11 ஆகும். இந்த ஸ்மார்ட்போனில் ஏவியேஷன் கிரேடு அலுமினியம் ஃபிரேம் உள்ளது. இத்துடன் 8 ஜிபி மற்றும் 16 ஜிபி LPDDR5X ரேம், 8 ஜிபி வரை விர்ச்சுவல் ரேம், ரேம் எக்ஸ்பான்ஷன் வசதி உள்ளது.

ஐகூ 11 அம்சங்கள்:
6.78 இன்ச் 3200x1440 பிக்சல் QHD+ வளைந்த E6 LTPO 4.0 AMOLED டிஸ்ப்ளே
ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 பிராசஸர்
அட்ரினோ 740 GPU
8 ஜிபி, 16 ஜிபி LPDDR5X ரேம்
256 ஜிபி UFS 4.0 மெமரி
ஆண்ட்ராய்டு 13 மற்றும் ஃபன்டச் ஒஎஸ் 13
டூயல் சிம் ஸ்லாட்
50MP பிரைமரி கேமரா, OIS, எல்இடி ஃபிளாஷ்
8MP அல்ட்ரா வைடு கேமரா
13MP 2x டெலிபோட்டோ கேமரா
16MP செல்ஃபி கேமரா
இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார்
யுஎஸ்பி டைப் சி ஆடியோ, ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், ஹை-ஃபை ஆடியோ
5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை 6, ப்ளூடூத் 5.3
யுஎஸ்பி டைப் சி
5000 எம்ஏஹெச் பேட்டரி
120 வாட் அல்ட்ரா ஃபாஸ்ட் ஃபிளாஷ் சார்ஜிங்
விலை மற்றும் விற்பனை விவரங்கள்:
ஐகூ 11 ஸ்மார்ட்போனின் 8 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி மாடல் ஆல்ஃபா மற்றும் கிளாஸ் பேக் விலை ரூ. 59 ஆயிரத்து 999 என்றும் 16 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி, சிலிகான் லெதர் பேக் மற்றும் பிஎம்டபிள்யூ டிசைன் மாடல் விலை ரூ. 64 ஆயிரத்து 999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
இந்திய சந்தையில் புதிய ஐகூ 11 ஸ்மார்ட்போன் அமேசான் மற்றும் ஐகூ வலைதளங்களில் விற்பனை செய்யப்பட இருக்கிறது. விற்பனை ஜனவரி 13 ஆம் தேதி மதியம் 12 மணிக்கு துவங்குகிறது. அமேசான் பிரைம் சந்தா வைத்திருப்போர் ஜனவரி 12 ஆம் தேதியே ஐகூ 11 ஸ்மார்ட்போனினை வாங்கிட முடியும்.
- மோட்டோரோலா நிறுவனத்தின் புதிய எட்ஜ் 30 ஸ்பெஷல் எடிஷன் ஸ்மார்ட்போன் தற்போது மூன்று வித நிறங்களில் கிடைக்கிறது.
- கடந்த மாதம் மிட் ரேன்ஜ் பிரிவில் அறிமுகம் செய்யப்பட்ட மோட்டோ எட்ஜ் 30 ஃபியுஷன் 32MP செல்ஃபி கேமரா கொண்டுள்ளது.
மோட்டோரோலா நிறுவனம் தனது எட்ஜ் 30 ஃபியுஷன் ஸ்மார்ட்போனினை மிட் ரேன்ஜ் பிரிவில் அறிமுகம் செய்தது. முதற்கட்டமாக இந்த ஸ்மார்ட்போன் காஸ்மிக் கிரே மற்றும் சோலார் கோல்டு என இருவித நிறங்களில் விற்பனை செய்யப்பட்டு வந்தது. தற்போது இந்த ஸ்மார்ட்போன் விவா மக்னெடா ஸ்பெஷல் எடிஷன் மாடல் வடிவில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.
விவா மக்னெடா 2023 ஆண்டின் பண்டோன் நிறம் ஆகும். பண்டோன் 18-1750 நிறத்தில் அறிமுகமாகி இருக்கும் முதல் ஸ்மார்ட்போன் இது என மோட்டோரோலா தெரிவித்துள்ளது. இயற்கையை சார்ந்து அதிநவீன தொழில்நுட்பத்தில் உருவாகி இருக்கும் இந்த நிறம் பல்வேறு விதங்களை பிரதிபலிக்கிறது.

இந்த ஸ்மார்ட்போனின் பின்புறம் மென்மையான சைவ லெதர் மூலம் உருவாக்கப்பட்ட பாகம் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. இது பாலிஷ்டு சாண்ட்பிலாஸ்ட் செய்யப்பட்ட அலுமினியம் ஃபிரேம், 3D கிலாஸ் கொண்டிருக்கிறது. இவைதவிர இந்த ஸ்மார்ட்போனின் அம்சங்கள் எட்ஜ் 30 ஃபியுஷன் மாடலில் உள்ளதை போன்றே வழங்கப்பட்டு இருக்கிறது.
மோட்டோரோலா எட்ஜ் 30 ஃபியுஷன் அம்சங்கள்:
6.55 இன்ச் 2400x1080 பிக்சல் FHD+ 10-பிட் OLED எண்ட்லெஸ் எட்ஜ் டிஸ்ப்ளே, 144Hz ரிப்ரெஷ் ரேட்
கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பு
ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 888 பிளஸ் பிராசஸர்
அட்ரினோ 660 GPU
8ஜிபி LPDDR5 ரேம்
128ஜிபி UFS 3.1 மெமரி
ஆண்ட்ராய்டு 12
டூயல் சிம் ஸ்லாட்
50MP பிரைமரி கேமரா, OIS
13MP அல்ட்ரா வைடு கேமரா, மேக்ரோ ஆப்ஷன்
2MP டெப்த் சென்சார், எல்இடி ஃபிலாஷ்
32MP AF செல்ஃபி கேமரா
யுஎஸ்பி டைப் சி ஆடியோ, ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், டால்பி அட்மோஸ்
இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார்
டஸ்ட் மற்றும் ஸ்பிலாஷ் ரெசிஸ்டண்ட்
5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5.2
யுஎஸ்பி டைப் சி
4400 எம்ஏஹெச் பேட்டரி, 68 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங்
விலை மற்றும் விற்பனை விவரங்கள்:
மோட்டோரோலா எட்ஜ் 30 ஃபியுஷன் விவா மக்னெடா ஸ்பெஷல் எடிஷன் ஸ்மார்ட்போன் ப்ளிப்கார்ட் தளத்தில் ஜனவரி 12 ஆம் தேதி மதியம் 3 மணிக்கு விற்பனைக்கு வருகிறது. இதன் விலை ரூ. 42 ஆயிரத்து 999 ஆகும். எனினும், அறிமுக சலுகையாக இந்த ஸ்மார்ட்போன் ரூ. 39 ஆயிரத்து 999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் 8 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி என ஒற்றை வேரியண்டில் மட்டுமே கிடைக்கிறது.
இதுதவிர புது மோட்டோ எட்ஜ் ஸ்மார்ட்போன் வாங்குவோர் இண்டஸ்இண்ட் வங்கி கிரெடிட் கார்டு கொண்டு மாத தவணை முறையை பயன்படுத்தும் போது ரூ. 3 ஆயிரம் வரை உடனடி தள்ளுபடி பெறலாம். இத்துடன் ஜியோ வாடிக்கையாளர்களுக்கு ரூ. 7 ஆயிரத்து 699 மதிப்பிலான பலன்கள் வழங்கப்படுகிறது.
- டெக்னோ நிறுவனத்தின் புதிய ஃபேண்டம் X2 ஸ்மார்ட்போனிற்கு வட்டியில்லா மாத தவணை முறை வசதி வழங்கப்படுகிறது.
- புது டெக்னோ ஸ்மார்ட்போனில் 120Hz ரிப்ரெஷ் ரேட் கொண்ட FHD+ ஸ்கிரீன், இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார் உள்ளது.
டெக்னோ நிறுவனம் சமீபத்தில் தான் தனது ஃபேண்டம் X2 ஸ்மார்ட்போனினை சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்தது. இதற்கான முன்பதிவு ஜனவரி 2 ஆம் தேதியில் இருந்தே நடைபெற்று வந்தது. இந்த நிலையில், ஃபேண்டம் X2 ஸ்மார்ட்போனின் விற்பனை இன்று (ஜனவரி 09) துவங்குகிறது.
அறிமுக சலுகையாக புதிய டெக்னோ ஃபேண்டம் X2 ஸ்மார்ட்போனின் விலை ரூ. 39 ஆயிரத்து 999 ஆகும். இதன் விற்பனை அமேசான் இந்தியா தளத்தில் மதியம் 12 மணிக்கு துவங்குகிறது. ஜனவரி 31 ஆம் தேதி வரை இந்த ஸ்மார்ட்போன் வாங்குவோருக்கு சிறப்பு சலுகைகள் வழங்கப்படுகின்றன.

அதன்படி பழைய ஸ்மார்ட்போனை எக்சேன்ஜ் செய்து ஃபேண்டம் X2 வாங்குவோருக்கு ரூ. 5 ஆயிரம் கூடுதல் தள்ளுபடி, 12 மாதங்களுக்கு அமேசான் பிரைம் சந்தா மற்றும் மாதம் ரூ. 6 ஆயிரத்து 667 கட்டணத்தில் வட்டியில்லா மாத தவணை முறை வசதியும் வழங்கப்படுகிறது.
டெக்னோ ஃபேண்டம் X2 அம்சங்கள்:
6.8 இன்ச் 1080x2400 பிக்சல் FHD+ AMOLED டிஸ்ப்ளே, 120Hz ரிப்ரெஷ் ரேட்
கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் பாதுகாப்பு
ஆக்டா கோர் மீடியாடெக் 9000 பிராசஸர்
மாலி G710 10-கோர் GPU
8 ஜிபி ரேம்
256 ஜிபி மெமரி
ஆண்ட்ராய்டு 12 மற்றும் ஹைஒஎஸ் 12
டூயல் சிம் ஸ்லாட்
64MP பிரைமரி கேமரா, OIS
13MP அல்ட்ரா வைடு கேமரா
2MP கேமரா
32MP செல்ஃபி கேமரா
இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார்
யுஎஸ்பி டைப் சி ஆடியோ, ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள்
5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை 6
ப்ளூடூத் 5.3, யுஎஸ்பி டைப் சி
5160 எம்ஏஹெச் பேட்டரி
45 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங்
புதிய டெக்னோ ஃபேண்டம் X2 ஸ்மார்ட்போன் மூன்லைட் சில்வர் மற்றும் ஸ்டார்டஸ்ட் கிரே என இரண்டு நிறங்களில் கிடைக்கிறது.
- சாம்சங் நிறுவனத்தின் புதிய கேலக்ஸி A சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் 8 ஜிபி ரேம் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.
- புதிய கேலக்ஸி A சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் முழு சார்ஜ் செய்தால் அதிகபட்சம் இரண்டு நாட்களுக்கு பேட்டரி லைஃப் வழங்கும் என தெரிகிறது.
சாம்சங் நிறுவனம் கேலக்ஸி A14 5ஜி ஸ்மார்ட்போனினை அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய சந்தைகளில் சமீபத்தில் அறிமுகம் செய்தது. தற்போது புதிய சாம்சங் கலேகஸி A சீரிஸ் ஸ்மார்ட்போன்களுக்கான டீசரை சாம்சங் வெளியிட்டு உள்ளது. டீசரில் புது ஸ்மார்ட்போன்களின் அம்சங்களும் தெரியவந்துள்ளது. எனினும், இவற்றின் பெயர் விவரங்களை சாம்சங் இதுவரை அறிவிக்கவில்லை.
இதுகுறித்து வெளியாகி இருக்கும் தகவல்களில் புது ஸ்மார்ட்போன்கள் கேலக்ஸி A34 5ஜி மற்றும் கேலக்ஸி A54 5ஜி பெயர்களில் அறிமுகமாகும் என கூறப்படுகிறது. இரு மாடல்களும் சமீபத்தில் கீக்பென்ச் மற்றும் ப்ளூடூத் SIG வலைதளங்களில் லீக் ஆகி இருந்தன. சாம்சங் இந்தியா அதிகாரப்பூர்வ வலைதளத்தில் உருவாக்கப்பட்டு இருக்கும் மைக்ரோசைட் கேலக்ஸி A சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் ஜனவரி 18 ஆம் தேதி அறிமுகமாகும் என தெரிவித்து இருக்கிறது.

புது ஸ்மார்ட்போன்கள் ஆசம் பிளாக், ஆசம் பர்கண்டி மற்றும் ஆசம் கிரீன் என மூன்று விதமான நிறங்களில் கிடைக்கும். இத்துடன் 6.6 இன்ச் FHD டிஸ்ப்ளே, 120Hz ரிப்ரெஷ் ரேட், வாட்டர் டிராப் ரக நாட்ச் வழங்கப்படுகிறது. இத்துடன் இரண்டு நாட்களுக்கு பேக்கப் வழங்கும் பேட்டரி, மூன்று கேமரா சென்சார்கள், OIS, அதிவேக 5ஜி பிராசஸர், 8 ஜிபி வரை ரேம், சாம்சங் ஒன் யுஐ, லாக் ஸ்கிரீன் பெர்சனலைசேஷன், ஸ்ப்லிட் ஸ்கிரீன், குயிக் ஷேர் மற்றும் பிரைவசி டேஷ்போர்டு வழங்கப்படுகிறது.
முன்னதாக அறிமுகம் செய்யப்பட்ட கேலக்ஸி A14 5ஜி ஸ்மார்ட்போனில் 6.6 இன்ச் PLS LCD ஸ்கிரீன், 90Hz ரிப்ரெஷ் ரேட், மீடியாடெக் டிமென்சிட்டி 700 பிராசஸர், 4 ஜிபி ரேம், 50MP பிரைமரி கேமராவுடன் மூன்று சென்சார்கள், 13MP செல்ஃபி கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் ஆண்ட்ராய்டு 13 சார்ந்த ஒன் யுஐ 5.0, 5000 எம்ஏஹெச் பேட்டரி, 15 வாட் சார்ஜி வசதி கொண்டிருக்கிறது.
- சியோமி நிறுவனம் இந்திய சந்தையில் ரெட்மி K60 சீரிஸ் ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்யும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது.
- ரெட்மி K60 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் முதற்கட்டமாக சீன சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு ஏற்கனவ விற்பனை செய்யப்படுகிறது.
2022 டிசம்பர் மாத வாக்கில் ரெட்மி K60 சீரிஸ் ஸ்மார்ட்போன்களை சீன சந்தையில் அறிமுகம் செய்தது. வென்னிலா ரெட்மி K60, ரெட்மி K60 ப்ரோ மற்றும் ரெட்மி K60E என மூன்று மாடல்கள் ரெட்மி K60 சீரிசில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. புதிய ரெட்மி K60 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் விரைவில் இந்தியாவில் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனினும், இதற்கான அறிமுக தேதி இதுவரை அறிவிக்கப்படவில்லை.
இந்த நிலையில், சியோமி நிறுவனம் ரெட்மி K60 சீரிஸ் இந்திய விலை பற்றிய தகவல்களை வெளியிட்டு உள்ளது. புதிய ஸ்மார்ட்போன்கள் இந்திய சந்தையில் ரூ. 30 ஆயிரத்திற்கும் அதிக விலை பிரிவில் அறிமுகமாகின்றன. ரெட்மி K60 மற்றும் ரெட்மி K60 ப்ரோ ஸ்மார்ட்போன்களில் முறையே குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 பிளஸ் ஜென் 1 மற்றும் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 பிராசஸர்கள் வழங்கப்பட்டுள்ளன.

ரெட்மி K60E ஸ்மார்ட்போனில் மீடியாடெக் டிமென்சிட்டி 8200 சிப்செட் வழங்கப்பட்டு இருக்கிறது. ரெட்மி நோட் 12 சீரிஸ் இந்திய வெளியீட்டின் போது ரெட்மி K60 சீரிஸ் விலை விவரங்களை சியோமி நிறுவனம் வெளியிட்டது. அதில் ரெட்மி K60 சீரிஸ் விலை ரூ. 30 ஆயிரத்திற்கும் அதிகமாக நிர்ணயம் செய்யப்படுகிறது. சீன சந்தையில் ரெட்மி K60, ரெட்மி K60 ப்ரோ மற்றும் ரெட்மி K60E ஸ்மார்ட்போன்களின் விலை முறையே ரூ. 30 ஆயிரம், ரூ. 40 ஆயிரம் மற்றும் ரூ. 26 ஆயிரம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
K60 சீரிசில் டாப் எண்ட் மாடலான ரெட்மி K60 ப்ரோ 6.67 இன்ச் 2K 1440x3200 பிக்சல் AMOLED டிஸ்ப்ளே, 120Hz ரிப்ரெஷ் ரேட், ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 பிராசஸர், அதிகபட்சம் 16 ஜிபி LPDDR5X ரேம், 512 ஜிபி UFS 4.0 மெமரி, 50MP பிரைமரி கேமரா, OIS, 8MP அல்ட்ரா வைடு கேமரா, 2MP மேக்ரோ கேமரா, 16MP செல்ஃபி கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது.
ரெட்மி K60 ப்ரோ சீரிஸ் போன்றே ரெட்மி K60 மாடலிலும் 6.67 இன்ச் 2K 1440x3200 பிக்சல் AMOLED டிஸ்ப்ளே உள்ளது. ஸ்னாப்டிராகன் 8 பிளஸ் ஜென் 1 பிராசஸர் தவிர மற்ற அம்சங்கள் ரெட்மி K60 ப்ரோ மாடலில் உள்ளதை போன்றே வழங்கப்பட்டு இருக்கிறது. இதில் 64MP பிரைமரி கேமரா, 5000 எம்ஏஹெச் பேட்டரி, 120 வாட் வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங், 30 வாட் வயர்லெஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் உள்ளது. ரெட்மி K60 மாடலில் 5000 எம்ஏஹெச் பேட்டரி, 67 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளது.
- சியோமி நிறுவனம் ஏற்கனவே அறிவித்தப்படி இந்திய சந்கையில் தனது புது ரெட்மி நோட் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்தது.
- புதிய ரெட்மி நோட் 12 5ஜி ஸ்மார்ட்போனில் ஸ்னாப்டிராகன் 4 ஜென் 1 பிராசஸர் வழங்கப்பட்டு இருக்கிறது.
ரெட்மி நோட் 12 ப்ரோ மற்றும் நோட் 12 ப்ரோ பிளஸ் 5ஜி ஸ்மார்ட்போன்களுடன் சியோமி நிறுவனத்தின் ரெட்மி நோட் 12 5ஜி ஸ்மார்ட்போனும் இந்திய சந்தையில் அறிமுகமானது. புதிய ரெட்மி நோட் ஸ்மார்ட்போனில் 6.67 இன்ச் FHD+ AMOLED டிஸ்ப்ளே, 120Hz ரிப்ரெஷ் ரேட், ஸ்னாப்டிராகன் 4 ஜென் 1 பிராசஸர், அதிகபட்சம் 6 ஜிபி ரேம், 13MP செல்ஃபி கேமரா போன்ற அம்சங்கள் வழங்கப்பட்டு இருக்கிறது.
7.98 மில்லிமீட்டர் அளவில் உருவாகி இருக்கும் நிலையில், இதுவரை வெளியான ரெட்மி நோட் சீரிஸ் மாடல்களில் மிகவும் மெல்லிய நோட் ஸ்மார்ட்போன் இது என சியோமி தெரிவித்து இருக்கிறது. ஆண்ட்ராய்டு 12 மற்றும் MIUI 13 ஒஎஸ் கொண்டிருக்கும் ரெட்மி நோட் 12 5ஜி ஸ்மார்ட்போனிற்கு இரண்டு ஆண்ட்ராய்டு ஒஎஸ் அப்டேட்கள், நான்கு ஆண்டுகள் செக்யுரிட்டி அப்டேட்கள் வழங்கப்பட இருக்கிறது.

இத்துடன் 48MP பிரைமரி கேமரா, 8MP அல்ட்ரா வைடு கேமரா, 2MP மேக்ரோ சென்சார், பக்கவாட்டில் கைரேகை சென்சார், 5000 எம்ஏஹெச் பேட்டரி, 33 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டுள்ளது.
ரெட்மி நோட் 12 5ஜி அம்சங்கள்:
6.67 இன்ச் FHD+ 1080x2400 பிக்சல் சூப்பர் AMOLED டிஸ்ப்ளே, 120Hz ரிப்ரெஷ் ரேட்
கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 பாதுகாப்பு
ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 4 ஜென் 1 பிராசஸர்
அட்ரினோ GPU
4 ஜிபி, 6 ஜிபி LPDDR4X ரேம்
128 ஜிபி UFS 2.2 மெமரி
மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
ஆண்ட்ராய்டு 12 மற்றும் MIUI 13
ஹைப்ரிட் டூயல் சிம் ஸ்லாட்
48MP பிரைமரி கேமரா
8MP அல்ட்ரா வைடு கேமரா
2MP மேக்ரோ கேமரா
13MP செல்ஃபி கேமரா
பக்கவாட்டில் கைரேகை சென்சார்
3.5mm ஆடியோ ஜாக்
டஸ்ட் மற்றும் ஸ்பிலாஷ் ரெசிஸ்டண்ட்
5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை 6, ப்ளூடூத் 5.1
யுஎஸ்பி டைப் சி
5000 எம்ஏஹெச் பேட்டரி
33 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங்
விலை மற்றும் விற்பனை விவரங்கள்:
ரெட்மி நோட் 12 5ஜி ஸ்மார்ட்போன் ஃபிராஸ்டெட் கிரீன், மேட் பிளாக் மற்றும் மிஸ்டிக் புளூ போன்ற நிறங்களில் கிடைக்கிறது. இதன் 4 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 17 ஆயிரத்து 999 என்றும் 6 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 19 ஆயிரத்து 999 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. வங்கி தள்ளுபடி மற்றும் எக்சேன்ஜ் சலுகைகளை பெறும் பட்சத்தில் இந்த ஸ்மார்ட்போனினை முறையே ரூ. 15 ஆயிரத்து 499 மற்றும் ரூ. 17 ஆயிரத்து 499 விலையில் வாங்கிட முடியும்.
புதிய ரெட்மி நோட் 12 5ஜி ஸ்மார்ட்போனின் விற்பனை அமேசான், Mi வலைதளம் மற்றும் ஆஃப்லைன் ஸ்டோர்களில் ஜனவரி 11 ஆம் தேதி துவங்குகிறது.
- ஒன்பிளஸ் நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ஃபிளாக்ஷிப் சீரிஸ் ஸ்மார்ட்போன் முதற்கட்டமாக சீனாவில் அறிமுகம்.
- புது ஒன்பிளஸ் 11 ஸ்மார்ட்போன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 பிராசஸர், அதிகபட்சம் 16 ஜிபி ரேம் கொண்டுள்ளது.
ஒன்பிளஸ் நிறுவனம் தனது புது ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போனினை சீன சந்தையில் அறிமுகம் செய்து இருக்கிறது. இதில் 6.7 இன்ச் 2.75D flexible ஸ்கிரீன், 2K ரெசல்யூஷன், 120Hz வேரியபில் ரிப்ரெஷ் ரேட், டால்பி விஷன் சப்போர்ட், ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 பிராசஸர், அதிகபட்சம் 16 ஜிபி ரேம், 512 ஜிபி வரையிலான மெமரி வழங்கப்பட்டு இருக்கிறது.
இத்துடன் அல்ட்ரா-ஹை பெர்ஃபார்மன்ஸ் கிராஃபைட், ஹீட் டெசிபேஷன் முறையை மாற்றப்பட்டு இருக்கிறது. இதனால் ஸ்மார்ட்போனில் வெப்பத்தை குறைக்கும் திறன் கிராஃபீனை விட 92 சதவீதம் அதிகரித்து இருக்கிறது. புதிய ஒன்பிளஸ் 11 ஸ்மார்ட்போன் கருந்துளை சார்ந்த டிசைன் செய்யப்பட்டு இருக்கிறது. இதன் எண்ட்லெஸ் பிளாக் மாடலில் நான்காம் தலைமுறை சில்க் கிலாஸ் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. இது கிட்டத்தட்ட பட்டுக்கு நிகரான அனுபவத்தை வழங்கும் என ஒன்பிளஸ் தெரிவித்துள்ளது.

ஒன்பிளஸ் மற்றும் AAC கூட்டணியில் இந்த ஸ்மார்ட்போன் உலகின் முதல் பயோனிக் வைப்ரேடிங் மோட்டார் கொண்டிருக்கிறது. இது 600mm³ அதிக சத்தம் கொண்ட ஒரே ஆண்ட்ராய்டு மோட்டார் ஆகும். இதில் உள்ள ஃபுல்-ஃபேஸ் மேக்னடிக் சர்கியுட் தொழில்நுட்பம் ஒரே சமயத்தில் இரு வைப்ரேஷன்களை கண்டறிய முடியும். அதிக ஃபிரேம் ரேட் மற்றும் நேடிவ் இமேஜ் குவாலிட்டிக்காக பிரத்யேக கிராஃபிக்ஸ் என்ஜின் கொண்ட உலகின் முதல் ஸ்மார்ட்போன் இது ஆகும்.
ஒன்பிளஸ் 11 அம்சங்கள்:
6.7 இன்ச் 3216x1440 பிக்சல் QHD+ 2.75D flexible curved AMOLED LTPO டிஸ்ப்ளே
120Hz ரிப்ரெஷ் ரேட், HDR10+, டால்பி விஷன், கார்னிங் கொரில்லா கிலாஸ் விக்டஸ்
ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 பிராசஸர்
அட்ரினோ 740 GPU
12 ஜிபி LPDDR5X ரேம், 256 ஜிபி UFS 4.0 மெமரி
16 ஜிபி LPDDR5X ரேம், 256 ஜிபி, 512 ஜிபி UFS 4.0 மெமரி
ஆண்ட்ராய்டு 13 மற்றும் கலர் ஒஎஸ் 13
டூயல் சிம் ஸ்லாட்
50MP பிரைமரி கேமரா, OIS
48MP அல்ட்ரா வைடு கேமரா
32MP டெலிபோட்டோ கேமரா
16MP செல்ஃபி கேமரா
இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார்
யுஎஸ்பி டைப் சி போர்ட், ஸ்டீரியோ ஸ்பீக்கர்
டால்பி அட்மோஸ்
5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5.3
யுஎஸ்பி டைப் சி
5000 எம்ஏஹெச் பேட்டரி
100 வாட் சூப்பர்வூக் ஃபாஸ்ட் சார்ஜிங்
விலை மற்றும் விற்பனை விவரங்கள்:
ஒன்பிளஸ் 11 ஸ்மார்ட்போனின் விலை சீன சந்தையில் 3 ஆயிரத்து 999 யுவான் இந்திய மதிப்பில் ரூ. 48 ஆயிரத்து 095 என துவங்குகிறது. இதன் டாப் எண்ட் மாடல் விலை 4 ஆயிரத்து 899 யுவான், இந்திய மதிப்பில் ரூ. 58 ஆயிரத்து 905 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. விற்பனை ஜனவரி 9 ஆம் தேதி துவங்குகிறது. இதன் இந்திய விலை மற்றும் விற்பனை விவரங்கள் பிப்ரவரி 7 ஆம் தேதி அறிவிக்கப்படுகின்றன.






