என் மலர்tooltip icon

    மொபைல்ஸ்

    அதிகபட்சம் 16 ஜிபி ரேம் கொண்ட ஒன்பிளஸ் 11R 5ஜி இந்தியாவில் அறிமுகம்
    X

    அதிகபட்சம் 16 ஜிபி ரேம் கொண்ட ஒன்பிளஸ் 11R 5ஜி இந்தியாவில் அறிமுகம்

    • ஒன்பிளஸ் நிறுவனம் இந்திய சந்தையில் தனது புதிய ஒன்பிளஸ் 11R 5ஜி ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்தது.
    • புதிய ஒன்பிளஸ் 11R 5ஜி மாடலில் ஸ்னாப்டிராகன் 8 பிளஸ் ஜென் 1 பிராசஸர், அதிகபட்சம் 16 ஜிபி ரேம் வழங்கப்பட்டு இருக்கிறது.

    ஒன்பிளஸ் 11 ஸ்மார்ட்போனுடன் ஒன்பிளஸ் நிறுவனம் ஒன்பிளஸ் 11R 5ஜி ஸ்மார்ட்போனையும் அறிமுகம் செய்து இருக்கிறது. இது சற்றே விலை குறைந்த ஒன்பிளஸ் 11 சீரிஸ் மாடல் ஆகும். புதிய ஒன்பிளஸ் 11R 5ஜி மாடலில் 6.74 இன்ச் 1.5K 120Hz AMOLED ஸ்கிரீன், ஸ்னாப்டிராகன் 8 பிளஸ் ஜென் 1 பிராசஸர், அதிகபட்சம் 16 ஜிபி ரேம் போன்ற அம்சங்கள் வழங்கப்பட்டு இருக்கிறது.

    கிளாஸ் பேக் கொண்டிருக்கும் ஒன்பிளஸ் 11R 5ஜி மாடலில் புகைப்படங்களை எடுக்க 50MP பிரைமரி கேமரா, OIS, 8MP அல்ட்ரா வைடு கேமரா, 2MP மேக்ரோ கேமரா மற்றும் 16MP செல்ஃபி கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது. 5000 எம்ஏஹெச் பேட்டரி மூலம் சக்தியூட்டப்படும் ஒன்பிளஸ் 11R 5ஜி மாடலில் 100 வாட் சூப்பர்வூக் சார்ஜிங் வழங்கப்பட்டுள்ளது. இது ஸ்மார்ட்போனை 25 நிமிடங்களில் முழுமையாக சார்ஜ் செய்துவிடும்.

    ஒன்பிளஸ் 11R 5ஜி அம்சங்கள்:

    6.74 இன்ச் 2772x1240 பிக்சல் AMOLED ஸ்கிரீன், 120Hz அடாப்டிவ் ரிப்ரெஷ் ரேட்

    ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 8 பிளஸ் ஜென் 2 பிராசஸர்

    அட்ரினோ 730 GPU

    8 ஜிபி LPDDR5 ரேம், 128 ஜிபி UFS 3.1 மெமரி

    12 ஜிபி LPDDR5X ரேம், 256 ஜிபி UFS 3.1 மெமரி

    ஆண்ட்ராய்டு 13 மற்றும் கலர்ஒஎஸ் 13

    டூயல் சிம் ஸ்லாட்

    50MP பிரைமரி கேமரா, OIS

    8MP அல்ட்ரா வைடு கேமரா

    2MP மேக்ரோ கேமரா

    16MP செல்ஃபி கேமரா

    இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார்

    யுஎஸ்பி டைப் சி ஆடியோ, ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், டால்பி அட்மோஸ்

    5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை 6, ப்ளூடூத் 5.2

    யுஎஸ்பி டைப் சி

    5000 எம்ஏஹெச் பேட்டரி

    100 வாட் சூப்பர்வூக் ஃபாஸ்ட் சார்ஜிங்

    விலை மற்றும் விற்பனை விவரங்கள்:

    ஒன்பிளஸ் 11R 5ஜி ஸ்மார்ட்போன் சோனிக் பிளாக் மற்றும் கேலக்டிக் சில்வர் என இரண்டு விதமான நிறங்களில் கிடைக்கிறது. இதன் 8 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 39 ஆயிரத்து 999 என்றும் 16 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 44 ஆயிரத்து 999 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. புதிய ஒன்பிளஸ் 11R 5ஜி ஸ்மார்ட்போனிற்கான முன்பதிவு பிப்ரவரி 21 ஆம் தேதி துவங்குகிறது. விற்பனை பிப்ரவரி 28 ஆம் தேதி துவங்குகிறது.

    Next Story
    ×