என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
மொபைல்ஸ்

ரெட்மி K60 சீரிஸ் இந்திய விலை விவரம்

- சியோமி நிறுவனம் இந்திய சந்தையில் ரெட்மி K60 சீரிஸ் ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்யும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது.
- ரெட்மி K60 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் முதற்கட்டமாக சீன சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு ஏற்கனவ விற்பனை செய்யப்படுகிறது.
2022 டிசம்பர் மாத வாக்கில் ரெட்மி K60 சீரிஸ் ஸ்மார்ட்போன்களை சீன சந்தையில் அறிமுகம் செய்தது. வென்னிலா ரெட்மி K60, ரெட்மி K60 ப்ரோ மற்றும் ரெட்மி K60E என மூன்று மாடல்கள் ரெட்மி K60 சீரிசில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. புதிய ரெட்மி K60 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் விரைவில் இந்தியாவில் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனினும், இதற்கான அறிமுக தேதி இதுவரை அறிவிக்கப்படவில்லை.
இந்த நிலையில், சியோமி நிறுவனம் ரெட்மி K60 சீரிஸ் இந்திய விலை பற்றிய தகவல்களை வெளியிட்டு உள்ளது. புதிய ஸ்மார்ட்போன்கள் இந்திய சந்தையில் ரூ. 30 ஆயிரத்திற்கும் அதிக விலை பிரிவில் அறிமுகமாகின்றன. ரெட்மி K60 மற்றும் ரெட்மி K60 ப்ரோ ஸ்மார்ட்போன்களில் முறையே குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 பிளஸ் ஜென் 1 மற்றும் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 பிராசஸர்கள் வழங்கப்பட்டுள்ளன.
ரெட்மி K60E ஸ்மார்ட்போனில் மீடியாடெக் டிமென்சிட்டி 8200 சிப்செட் வழங்கப்பட்டு இருக்கிறது. ரெட்மி நோட் 12 சீரிஸ் இந்திய வெளியீட்டின் போது ரெட்மி K60 சீரிஸ் விலை விவரங்களை சியோமி நிறுவனம் வெளியிட்டது. அதில் ரெட்மி K60 சீரிஸ் விலை ரூ. 30 ஆயிரத்திற்கும் அதிகமாக நிர்ணயம் செய்யப்படுகிறது. சீன சந்தையில் ரெட்மி K60, ரெட்மி K60 ப்ரோ மற்றும் ரெட்மி K60E ஸ்மார்ட்போன்களின் விலை முறையே ரூ. 30 ஆயிரம், ரூ. 40 ஆயிரம் மற்றும் ரூ. 26 ஆயிரம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
K60 சீரிசில் டாப் எண்ட் மாடலான ரெட்மி K60 ப்ரோ 6.67 இன்ச் 2K 1440x3200 பிக்சல் AMOLED டிஸ்ப்ளே, 120Hz ரிப்ரெஷ் ரேட், ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 பிராசஸர், அதிகபட்சம் 16 ஜிபி LPDDR5X ரேம், 512 ஜிபி UFS 4.0 மெமரி, 50MP பிரைமரி கேமரா, OIS, 8MP அல்ட்ரா வைடு கேமரா, 2MP மேக்ரோ கேமரா, 16MP செல்ஃபி கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது.
ரெட்மி K60 ப்ரோ சீரிஸ் போன்றே ரெட்மி K60 மாடலிலும் 6.67 இன்ச் 2K 1440x3200 பிக்சல் AMOLED டிஸ்ப்ளே உள்ளது. ஸ்னாப்டிராகன் 8 பிளஸ் ஜென் 1 பிராசஸர் தவிர மற்ற அம்சங்கள் ரெட்மி K60 ப்ரோ மாடலில் உள்ளதை போன்றே வழங்கப்பட்டு இருக்கிறது. இதில் 64MP பிரைமரி கேமரா, 5000 எம்ஏஹெச் பேட்டரி, 120 வாட் வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங், 30 வாட் வயர்லெஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் உள்ளது. ரெட்மி K60 மாடலில் 5000 எம்ஏஹெச் பேட்டரி, 67 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
