டெக்னோ ஃபேண்டம் X2 இந்திய விற்பனை துவக்கம்!

டெக்னோ நிறுவனத்தின் புதிய ஃபேண்டம் X2 ஸ்மார்ட்போனிற்கு வட்டியில்லா மாத தவணை முறை வசதி வழங்கப்படுகிறது. புது டெக்னோ ஸ்மார்ட்போனில் 120Hz ரிப்ரெஷ் ரேட் கொண்ட FHD+ ஸ்கிரீன், இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார் உள்ளது.
டெக்னோ ஃபேண்டம் X2 இந்திய விற்பனை துவக்கம்!
Published on

டெக்னோ நிறுவனம் சமீபத்தில் தான் தனது ஃபேண்டம் X2 ஸ்மார்ட்போனினை சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்தது. இதற்கான முன்பதிவு ஜனவரி 2 ஆம் தேதியில் இருந்தே நடைபெற்று வந்தது. இந்த நிலையில், ஃபேண்டம் X2 ஸ்மார்ட்போனின் விற்பனை இன்று (ஜனவரி 09) துவங்குகிறது.

அறிமுக சலுகையாக புதிய டெக்னோ ஃபேண்டம் X2 ஸ்மார்ட்போனின் விலை ரூ. 39 ஆயிரத்து 999 ஆகும். இதன் விற்பனை அமேசான் இந்தியா தளத்தில் மதியம் 12 மணிக்கு துவங்குகிறது. ஜனவரி 31 ஆம் தேதி வரை இந்த ஸ்மார்ட்போன் வாங்குவோருக்கு சிறப்பு சலுகைகள் வழங்கப்படுகின்றன.

அதன்படி பழைய ஸ்மார்ட்போனை எக்சேன்ஜ் செய்து ஃபேண்டம் X2 வாங்குவோருக்கு ரூ. 5 ஆயிரம் கூடுதல் தள்ளுபடி, 12 மாதங்களுக்கு அமேசான் பிரைம் சந்தா மற்றும் மாதம் ரூ. 6 ஆயிரத்து 667 கட்டணத்தில் வட்டியில்லா மாத தவணை முறை வசதியும் வழங்கப்படுகிறது.

டெக்னோ ஃபேண்டம் X2 அம்சங்கள்:

6.8 இன்ச் 1080x2400 பிக்சல் FHD+ AMOLED டிஸ்ப்ளே, 120Hz ரிப்ரெஷ் ரேட்

கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் பாதுகாப்பு

ஆக்டா கோர் மீடியாடெக் 9000 பிராசஸர்

மாலி G710 10-கோர் GPU

8 ஜிபி ரேம்

256 ஜிபி மெமரி

ஆண்ட்ராய்டு 12 மற்றும் ஹைஒஎஸ் 12

டூயல் சிம் ஸ்லாட்

64MP பிரைமரி கேமரா, OIS

13MP அல்ட்ரா வைடு கேமரா

2MP கேமரா

32MP செல்ஃபி கேமரா

இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார்

யுஎஸ்பி டைப் சி ஆடியோ, ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள்

5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை 6

ப்ளூடூத் 5.3, யுஎஸ்பி டைப் சி

5160 எம்ஏஹெச் பேட்டரி

45 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங்

புதிய டெக்னோ ஃபேண்டம் X2 ஸ்மார்ட்போன் மூன்லைட் சில்வர் மற்றும் ஸ்டார்டஸ்ட் கிரே என இரண்டு நிறங்களில் கிடைக்கிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com