என் மலர்
மொபைல்ஸ்
ஹெச்.எம்.டி. குளோபல் நிறுவனம் இரண்டு நோக்கியா ஸ்மார்ட்போன்களின் விலை குறைப்பதாக அறிவித்துள்ளது. #Nokia
நோக்கியா நிறுவனத்தின் நோக்கியா 6.1 பிளஸ் மற்றும் நோக்கியா 5.1 பிளஸ் ஸ்மார்ட்போன்கள் கடந்த ஆண்டு ஆகஸ்டு மற்றும் செப்டம்பர் மாதத்தில் அறிமுகம் செய்யப்பட்டன. இவற்றின் விலை முறையே ரூ.15,999 மற்றும் ரூ.10,999 என நிர்ணயம் செய்யப்பட்டது.
அறிமுகமானது முதல் நோக்கியா ஸ்மார்ட்போன்களை வாங்குவோருக்கு பல்வேறு சலுகைகள் மற்றும் தள்ளுபடி வழங்கப்படுகிறது. நோக்கியா 5.1 பிளஸ் மற்றும் நோக்கியா 6.1 பிளஸ் ஸ்மார்ட்போன்களின் விலை குறைக்கப்பட்டிருக்கிறது. புதிய விலை நோக்கியா அதிகாரப்பூர்வ வலைதளத்தில் அப்டேட் செய்யப்பட்டிருக்கிறது.
நோக்கியா 6.1 பிளஸ் 4 ஜி.பி. ரேம் வேரியண்ட் மற்றும் நோக்கியா 5.1 பிளஸ் 3 ஜி.பி. வேரியண்ட் விலை ரூ.1,750 குறைக்கப்படுகிறது. இந்த விலை குறைப்பு குறுகிய காலக்கட்டத்திற்கு மட்டுமே கிடைக்கும் என தெரிகிறது. விலை குறைப்பை பெற வாடிக்கையாளர்கள் DEAL1750 குறியீடை பயன்படுத்த வேண்டும்.

விலை குறைப்பு மட்டுமின்றி ஏர்டெல் பயனர்களுக்கு கூடுதலாக ரூ.2000 கேஷ்பேக் வழங்கப்படுகிறது. கேஷ்பேக் தொகை ரூ.50 மதிப்புள்ள வவுச்சர்கள் வடிவில் வழங்கப்படுகிறது. இதற்கு பயனர்கள் ரூ.199, ரூ.249 அல்லது ரூ.448 சலுகைகளில் ஒன்றை தேர்வு செய்ய வேண்டும். இந்த சலுகைகளில் ஒன்றை தேர்வு செய்யும் போது 240 ஜி.பி. இலவச டேட்டா வழங்கப்படுகிறது.
விலைகுறைப்பின் படி நோக்கியா 5.1 பிளஸ் 3 ஜி.பி. ரேம் விலை ரூ.8,849-க்கும், நோக்கியா 6.1 பிளஸ் 4 ஜி.பி. ரேம் விலை ரூ.13,749-க்கும் கிடைக்கிறது. இரு நோக்கியா ஸ்மார்ட்போன்களின் புதிய விலை நோக்கியா வலைதளத்தில் அப்டேட் செய்யப்பட்டுள்ளது. இதற்கு பயனர்கள் பிரத்யேக குறியீட்டை பயன்படுத்த வேண்டும்.
கூகுள் நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட பிக்சல் 3ஏ மற்றும் பிக்சல் 3ஏ XL ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்யப்பட்டது. #Google
கூகுள் நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட பிக்சல் 3ஏ மற்றும் பிக்சல் 3ஏ XL ஸ்மார்ட்போன்கள் அறிமுகம் செய்யப்பட்டன. இரு ஸ்மார்ட்போன்களிலும் முறையே 5.5 இன்ச் மற்றும் 6.0 இன்ச் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் OLED டிஸ்ப்ளேக்கள் வழங்கப்பட்டுள்ளன.
இத்தடன் இவை ஸ்னாப்டிராகன் 670 பிராசஸர், 4 ஜி.பி. ரேம், டைட்டன் எம் செக்யூரிட்டி சிப், 12.2. எம்.பி. பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ், ஆப்டிக்கல் இமேஜ் ஸ்டேபிலைசேஷன் (OIS), டூயல் பிக்சல் ஆட்டோஃபோகஸ், 8 எம்.பி. செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது. இரு கேமராக்களிலும் ஏ.ஐ. சார்ந்த கேமரா அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளன.
கூகுளின் பிக்சல் 3ஏ மற்றும் பிக்சல் 3ஏ XL ஸ்மார்ட்போன்கள் ஆண்ட்ராய்டு 9.0 பை இயங்குதளம், பிக்சலின் டூ-டோன் வடிவமைப்பு, பாலிகார்பனைட் பாடி, ஆக்டிவ் எட்ஜ் ஸ்குவீஸ் ரெஸ்பான்ஸ், பின்புறம் கைரேகை சென்சார் கொண்டிருக்கின்றன.
இத்துடன் இவை முறையே 3000 எம்.ஏ.ஹெச். மற்றும் 3700 எம்.ஏ.ஹெச். பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகின்றன. பேட்டரியை வேகமாக சார்ஜ் செய்ய 18 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் வழங்கப்பட்டுள்ளன.
கூகுள் பிக்சல் 3ஏ மற்றும் பிக்சல் 3ஏ XL சிறப்பம்சங்கள்:
- பிக்சல் 3ஏ: 5.6 இன்ச் 1080x2220 பிக்சல் FHD+ OLED 18.5:9 டிஸ்ப்ளே, 441 PPI, HDR
- டிராகன்டிரெயில் கிளாஸ் பாதுகாப்பு
- பிக்சல் 3ஏ XL: 6.0 இன்ச் 2160x1080 பிக்சல் FHD+ OLED 18:9 டிஸ்ப்ளே, 400 PPI, HDR
- டிராகன்டிரெயில் கிளாஸ் பாதுகாப்பு
- ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 670 10 என்.எம். பிராசஸர்
- அட்ரினோ 615 GPU
- 4 ஜி.பி. ரேம்
- 64 ஜி.பி. மெமரி
- ஆண்ட்ராய்டு 9.0 பை
- 12.2 எம்.பி. பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ், 1.4μm, ƒ/1.8, 76° FOV, OIS, EIS
- 8 எம்.பி. செல்ஃபி கேமரா, f/2.0, 84° FOV, 1.12μm
- கைரேகை சென்சார்
- ஆக்டிவ் எட்ஜ்
- 3.5 எம்.எம். ஆடியோ ஜாக்
- 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5 LE
- யு.எஸ்.பி. டைப்-சி
- 3000 எம்.ஏ.ஹெச். பேட்டரி
- 18 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங்
இந்தியாவில் புதிய பிக்சல் 3ஏ ஸ்மார்ட்போனின் விலை ரூ.39,999 என்றும் பிக்சல் 3ஏ XL ஸ்மார்ட்போனின் விலை ரூ.44,999 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. கூகுள் பிக்சல் 3ஏ மற்றும் பிக்சல் 3ஏ XL ஸ்மார்ட்போன்களுக்கான முன்பதிவு ப்ளிப்கார்ட் தளத்தில் இன்று (மே 8) காலை 10.00 மணிக்கு துவங்கி இவற்றின் விற்பனை மே 15 ஆம் தேதி முதல் நடைபெற இருக்கிறது.
புதிய பிக்சல் ஸ்மார்ட்போன்களில் ஏர்டெல் மற்றும் ரிலையன்ஸ் ஜியோ வழங்கும் இசிம் தொழில்நுட்பம் கொண்டிருக்கின்றன. இத்துடன் ஸ்மார்ட்போன்களுடன் மூன்று மாதங்களுக்கான யூடியூப் மியூசிக் பிரீமியம் சந்தா வழங்கப்படுகிறது.
ஹெச்.எம்.டி. குளோபல் நிறுவனம் இந்தியாவில் புதிய நோக்கியா ஸ்மார்ட்போனை பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்துள்ளது. #Nokia
ஹெச்.எம்.டி. குளோபல் நிறுவனம் இந்தியாவில் தனது புதிய ஆண்ட்ராய்டு ஒன் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது.
நோக்கியா 4.2 என அழைக்கப்படும் புதிய ஸ்மார்ட்போனில் 5.71 இன்ச் ஹெச்.டி. பிளஸ் வாட்டர்-டிராப் நாட்ச் டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 439 பிராசஸர், 3 ஜி.பி. ரேம், ஆண்ட்ராய்டு 9.0 பை இயங்குதளம், 13 எம்.பி. பிரைமரி கேமரா, 2 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா மற்றும் 8 எம்.பி. செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது.
கிளாஸ் பேக் கொண்டிருக்கும் நோக்கியா 4.2 மாடலில் பிரத்யேக டூயல் சிம் ஸ்லாட், மைக்ரோ எஸ்.டி. கார்டு ஸ்லாட், பவர் பட்டனில் நோட்டிஃபிகேஷன் லைட், பின்புறம் கைரேகை சென்சார், பிரத்யேக கூகுள் அசிஸ்டண்ட் பட்டன் மற்றும் 3000 எம்.ஏ.ஹெச். பேட்டரி வழங்கப்படுகிறது.

நோக்கியா 4.2 சிறப்பம்சங்கள்:
- 5.71 இன்ச் 1520x720 பிக்சல் 19:9 a-Si ஃபுல் வியூ 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே
- ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 439 பிராசஸர்
- அட்ரினோ 505 GPU
- 3 ஜி.பி. ரேம்
- 32 ஜி.பி. மெமரி
- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
- ஆண்ட்ராய்டு 9.0 பை
- டூயல் சிம் ஸ்லாட்
- 13 எம்.பி. பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ், PDAF, f/2.2, 1.12µm பிக்சல்
- 2 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா
- 8 எம்.பி. செல்ஃபி கேமரா, f/2.0, 1.12µm பிக்சல்
- டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத், மைக்ரோ யு.எஸ்.பி.
- 3000 எம்.ஏ.ஹெச். பேட்டரி
நோக்கியா 4.2 ஸ்மார்ட்போன் பிளாக் மற்றும் பின்க் சேன்ட் நிறங்களில் கிடைக்கிறது. இந்தியாவில் நோக்கியா 4.2 விலை ரூ.10,990 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதன் விற்பனை நோக்கியா அதிகாரப்பூர்வ வலைதளத்தில் ஏழு நாட்களுக்கு பிரத்யேகமாகவும், அதன்பின் தேர்வு செய்யப்பட்ட விற்பனையாளர்களிடம் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அறிமுக சலுகைகள்:
- ஜூன் 10 ஆம் தேதிக்குள் நோக்கியா அதிகாரப்பூர்வ வலைதளத்தில் நோக்கியா 4.2 வாங்குவோர் “LAUNCHOFFER” ப்ரோமோ கோட் பயன்படுத்தி ரூ.500 உடனடி தள்ளுபடி பெறலாம்
- சர்விஃபை வழங்கும் ரூ.3500 மதிப்புள்ள ஸ்கிரீன் ரீபிளேஸ்மென்ட் வசதி
- தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை கொண்டு பணம் செலுத்தும் போது 10 சதவிகிதம் கேஷ்பேக் வழங்கப்படுகிறது
- வோடபோன் மற்றும் ஐடியா சந்தாதாரர்களுக்கு ரூ.2500 உடனடி கேஷ்பேக் வழங்கப்படுகிறது. இதை பெற ரூ.199 மற்றும் அதற்கும் அதிக தொகைக்கு ரீசார்ஜ் செய்ய வேண்டும்.
கூகுள் நிறுவனம் தனது பிக்சல் 3ஏ சீரிஸ் ஸ்மார்ட்போன்களை இன்னும் சில மணி நேரங்களில் அறிமுகம் செய்ய இருக்கும் நிலையில், இதன் விலை வெளியாகியுள்ளது. #Google
கூகுள் நிறுவனம் புதிய பிக்சல் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்யும் முன் அவற்றின் இந்திய விலை விவரங்கள் இணையத்தில் கசிந்துள்ளது. தற்சமயம் கிடைத்திருக்கும் தகவல்களில் கூகுள் பிக்சல் 3ஏ XL ஸ்மார்ட்போனின் 6 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி மாடல் விலை ரூ.44,999 வரை நிர்ணயம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது.
இத்துடன் ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்களும் வெளியாகியிருக்கிறது. அதன்படி பிக்சல் 3ஏ XL ஸ்மார்ட்போனில் 6.0 இன்ச் FHD பிளஸ் டிஸ்ப்ளே, 12.2 எம்.பி. பிரைமரி கேமரா, 8 எம்.பி. செல்ஃபி கேமரா, குவால்காம் ஸ்னாப்டிராகன் 710 பிராசஸர், 6 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.
முன்னதாக வெளியான தகவல்களிலும் புதிய பிக்சல் ஸ்மார்ட்போன் இதேபோன்ற அம்சங்களை கொண்டிருக்கும் என்றே கூறப்பட்டது. பிக்சல் 3ஏ X: ஸ்மார்ட்போனில் 6.0 இன்ச் 2220x1080 பிக்சல் OLED டிஸ்ப்ளே, குவால்காம் ஸ்னாப்டிராகன் 710 பிராசஸர், 3700 எம்.ஏ.ஹெச். பேட்டரி கொண்டிருக்கும் என தெரிகிறது.
இதுமட்டுமின்றி பட்ஜெட் பிக்சல் போன்களிலும் உயர் ரக பிக்சல் 3 போன்றே நைட் சைட் கேமரா அம்சங்கள் வழங்கப்படும் என கூறப்படுகிறது. அந்த வகையில் பிக்சல் 3ஏ ஸ்மார்ட்போனில் பிக்சல் 3 போன்ற கேமரா அமைப்பு கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வழக்கமான வெள்ளை மற்றும் கருப்பு நிறம் மட்டுமின்றி பிக்சல் 3ஏ மற்றும் பிக்சல் 3ஏ XL ஸ்மார்ட்போன்கள் புதிதாக பர்ப்பிள் நிற வேரியண்ட் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.
சியோமி நிறுவனம் இந்த ஆண்டின் முதல் காலாண்டில் விற்பனை செய்திருக்கும் மொத்த ஸ்மார்ட்போன் விவரங்களை வெளியிட்டுள்ளது. #Xiaomi
சீன ஸ்மார்ட்போன் நிறுவமான சியோமி சந்தை ஆய்வு நிறுவனங்களுக்கு எதிராக அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறது. 2019 ஆம் ஆண்டில் விற்பனை செய்யப்பட்ட மொத்த ஸ்மார்ட்போன் யூனிட்கள் பற்றி ஆய்வு நிறுவனங்கள் தவறான விவரம் வழங்கியதாக சியோமி தெரிவித்திருக்கிறது.
சியோமி நிறுவன தலைவர் லெய் ஜூன், 2019 ஆண்டிற்கான முதல் காலாண்டு காலத்தில் விற்பனையான மொத்த ஸ்மார்ட்போன் பற்றி சில சந்தை ஆய்வு மையங்கள் வெளியிட்ட தகவல்களை பல்வேறு ஊடக நிறுவனங்கள் வெளியிட்டன. இதுகுறித்து லெய் ஜூன் அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருப்பதாகவது.
"இவ்வாறு வெளியான விவரங்கள் சரியானதாக இல்லை. இவை எங்களது ஸ்மார்ட்போன் விநியோகத்திற்கு முற்றிலும் முரணாக இருக்கிறது. 2019 முதல் காலாண்டில் எங்களது ஸ்மார்ட்போன் விற்பனை 2.75 கோடிகளை கடந்திருக்கிறது" என லெய் ஜூன் அறிக்கையில் தெரிவித்திருக்கிறார்.
முன்னதாக வெளியான தகவல்களில் 2019 முதல் காலாண்டில் சியோமி நிறுவனம் மொத்தம் 2.5 கோடி ஸ்மார்ட்போன்களை விற்பனை செய்திருந்ததாக சர்வதேச டேட்டா கார்ப்பரேஷன் (ஐ.டி.சி.) தெரிவித்தது. இத்துடன் சியோமி நிறுவனம் முந்தைய ஆண்டுடன் ஒப்பிடும் போது 10.2 சதவிகிதம் சரிவை சந்தித்ததாக ஐ.டி.சி. தெரிவித்தது.
ஆசிய பசிபிக் பகுதியில் இந்தியாவில் மட்டுமே சியோமி வளர்ச்சியை பதிவு செய்திருந்தது என ஐ.டி.சி. தெரிவித்தது. மற்றொரு சந்தை ஆய்வு நிறுவனம் சியோமி நிறுவனம் மொத்தம் 2.78 கோடி ஸ்மார்ட்போன்களை விற்பனை செய்திருந்தது என தெரிவித்தது. #Xiaomi
சியோமி நிறுவன தலைவர் லெய் ஜூன், 2019 ஆண்டிற்கான முதல் காலாண்டு காலத்தில் விற்பனையான மொத்த ஸ்மார்ட்போன் பற்றி சில சந்தை ஆய்வு மையங்கள் வெளியிட்ட தகவல்களை பல்வேறு ஊடக நிறுவனங்கள் வெளியிட்டன. இதுகுறித்து லெய் ஜூன் அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருப்பதாகவது.
"இவ்வாறு வெளியான விவரங்கள் சரியானதாக இல்லை. இவை எங்களது ஸ்மார்ட்போன் விநியோகத்திற்கு முற்றிலும் முரணாக இருக்கிறது. 2019 முதல் காலாண்டில் எங்களது ஸ்மார்ட்போன் விற்பனை 2.75 கோடிகளை கடந்திருக்கிறது" என லெய் ஜூன் அறிக்கையில் தெரிவித்திருக்கிறார்.
முன்னதாக வெளியான தகவல்களில் 2019 முதல் காலாண்டில் சியோமி நிறுவனம் மொத்தம் 2.5 கோடி ஸ்மார்ட்போன்களை விற்பனை செய்திருந்ததாக சர்வதேச டேட்டா கார்ப்பரேஷன் (ஐ.டி.சி.) தெரிவித்தது. இத்துடன் சியோமி நிறுவனம் முந்தைய ஆண்டுடன் ஒப்பிடும் போது 10.2 சதவிகிதம் சரிவை சந்தித்ததாக ஐ.டி.சி. தெரிவித்தது.
ஆசிய பசிபிக் பகுதியில் இந்தியாவில் மட்டுமே சியோமி வளர்ச்சியை பதிவு செய்திருந்தது என ஐ.டி.சி. தெரிவித்தது. மற்றொரு சந்தை ஆய்வு நிறுவனம் சியோமி நிறுவனம் மொத்தம் 2.78 கோடி ஸ்மார்ட்போன்களை விற்பனை செய்திருந்தது என தெரிவித்தது. #Xiaomi
ஹெச்.டி.சி. நிறுவனம் புதிதாக என்ட்ரி-லெவல் ஸ்மார்ட்போன் ஒன்றை உருவாக்கி வருவதாகவும் இதில் 6 ஜி.பி. ரேம் வழங்கப்படலாம் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. #HTC
ஆண்ட்ராய்டு இயங்குதளத்தில் முதல் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்த பெருமை தாய்வானை சேர்ந்த ஹெச்.டி.சி. நிறுவனத்தை சேரும். கடந்த காலக்கட்டங்களில் பல்வேறு ஸ்மார்ட்போன்களில் வித்தியாசமான அம்சங்களை வழங்கிய ஹெச்.டி.சி. சமீப காலங்களில் சீன நிறுவனங்களால் சரிவை சந்தித்து வருகிறது.
சீன ஸ்மார்ட்போன் பிராண்டுகள் வழங்கும் மலிவு விலை ஸ்மார்ட்போன்களை ஹெச்.டி.சி. வழங்க தவறியதே அதன் சரிவுக்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. அந்த வகையில் கீக்பென்ச் தளத்தில் இருந்து கிடைத்திருக்கும் புதிய தகவல்களில் ஹெச்.டி.சி. என்ட்ரி-லெவல் ஸ்மார்ட்போன் ஒன்றை உருவாக்கி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெயரிடப்படாத ஹெச்.டி.சி. ஸ்மார்ட்போன் HTC 2Q741 என்ற மாடல் நம்பருடன் கீக்பென்ச் தளத்தில் இடம்பெற்றிருக்கிறது. கீக்பென்ச் தளத்தின்படி இந்த ஸ்மார்ட்போன் சிங்கிள் கோரில் 897 புள்ளிகளையும், மல்டி-கோரில் 4385 புள்ளிகளை பெற்றிருக்கிறது. அதன் படி இந்த ஸ்மார்ட்போன் மீடியாடெக் ஆக்டாகோர் சிப்செட் மற்றும் 6 ஜி.பி. ரேம் கொண்டிருக்கும் என தெரிகிறது.
பென்ச்மார்க் தளத்தின் படி ஸ்மார்ட்போனில் என்ட்ரி-லெவல் பிராசஸர் மற்றும் 6 ஜி.பி. ரேம் கொண்டிருக்கும் என தெரிகிறது. இத்துடன் இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 9 பை இயங்குதளம் மற்றும் கஸ்டம் ஸ்கின் கொண்டிருக்கும் என தெரிகிறது. இதுதவிர ஹெச்.டி.சி. நிறுவனம் குவால்காம் ஸ்னாப்டிராகன் 710 பிராசஸர் கொண்ட மற்றொரு ஸ்மார்ட்போனையும் உருவாக்கி வருகிறது.
இந்த ஸ்மார்ட்போன் HTC 2Q7A100 என்ற மாடல் நம்பருடன் உருவாகி வருகிறது. தேர்வு செய்யப்பட்ட சந்தைகளில் குவால்காம் வேரியண்ட்டையும், மற்ற நாடுகளில் மீடியாடெக் வேரியண்ட் ஸ்மார்ட்போனை ஹெச்.டி.சி. அறிமுகம் செய்யலாம் என கூறப்படுகிறது. இந்தியாவில் ஹெச்.டி.சி. புதிய ஸ்மார்ட்போன் விலை கணிசமாக நிர்ணயம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியாவில் ஒப்போ நிறுவன ஸ்மார்ட்போனின் விலையில் ரூ.4000 குறைப்பதாக அந்நிறுவனம் அறிவித்திருக்கிறது. #OPPO
ஒப்போ நிறுவனம் இந்தியாவில் தனது ஏ3எஸ் ஸ்மார்ட்போனின் விலையை குறைத்திருக்கிறது. ஒப்போ ஏ3எஸ் ஸ்மார்ட்போனின் 2 ஜி.பி. ரேம் மற்றும் 3 ஜி.பி. ரேம் வேரியண்ட் விலை குறைக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் ஒப்போ ஏ3எஸ் ஸ்மார்ட்போன் பேஸ் வேரியண்ட் ரூ.7,990 விலையில் கிடைக்கிறது.
முன்னதாக ஒப்போ ஏ3எஸ் 2 ஜி.பி. ரேம், 16 ஜி.பி. மெமரி மாடல் விலை ரூ.10,990 விலையிலும், 3 ஜி.பி. ரேம், 32 ஜி.பி. மெமரி மாடல் விலை ரூ.13,990 விலையில் அறிமுகம் செய்யப்பட்டது. தற்சமசம் விலை குறைப்புக்கு பின் 2 ஜி.பி. ரேம் விலை ரூ.7,990 என்றும் 3 ஜி.பி. ரேம் விலை ரூ.9,990 என மாற்றப்பட்டுள்ளது.

சிறப்பம்சங்களை பொருத்தவரை ஒப்போ ஏ3எஸ் ஸ்மார்ட்போனில் 6.2 இன்ச் ஹெச்.டி. பிளஸ் 19:9 டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 450 பிராசஸர், கலர் ஓ.எஸ். 5.1 சார்ந்த ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ இயங்குதளம் கொண்டிருக்கிறது. புகைப்படம் எடுக்க 13 எம்.பி. பிரைமரி கேமரா, 2 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா, 8 எம்.பி. செல்ஃபி கேமரா மற்றும் ஏ.ஐ. பியூடிஃபை அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளது.
இத்துடன் பிரத்யேக டூயல் சிம் ஸ்லாட், மைக்ரோ எஸ்.டி. கார்டு ஸ்லாட் மற்றும் 4230 எம்.ஏ.ஹெச். பேட்டரி வழங்கப்பட்டுள்ளது. இந்தியாவில் ஒப்போ ஏ3எஸ் ஸ்மார்ட்போன் கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதத்தில் அறிமுகம் செய்யப்பட்டது.
மோட்டோரோலா நிறுவனத்தின் புதிய ஒன் விஷன் ஸ்மார்ட்போனின் அறிமுக தேதியை தொடர்ந்து பார்ப்போம். #Motorola
மோட்டோரோலா நிறுவனம் தனது ஒன் விஷன் ஸ்மார்ட்போனை மே 15 ஆம் தேதி அறிமுகம் செய்ய இருக்கிறது. முதற்கட்டமாக இந்த ஸ்மார்ட்போன் பிரேசிலில் அறிமுகம் செய்யப்படுகிறது.
புதிய ஸ்மார்ட்போனுடன் மோட்டோரோலா நிறுவனம் ஒன் ஆக்ஷனையும் அறிமுகம் செய்யலாம். இதே விழாவில் மோட்டோ இசட்4 ஸ்மார்ட்போன் அறிமுகமாவது பற்றி இதுவரை எவ்வித தகவலும் இல்லை.

மோட்டோரோலா ஒன் விஷன் ஸ்மார்ட்போனில் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் 1080x2560 பிக்சல் பன்ச் ஹோல் டிஸ்ப்ளே, எக்சைனோஸ் 9610 10 என்.எம். பிராசஸர், ஆண்ட்ராய்டு பை இயங்குதளம், 48 எம்.பி. பிரைமரி கேமரா வழங்கப்படுகிறது. இந்த கேமரா கொண்டு 12 எம்.பி. தரத்தில் புகைப்படங்களை எடுக்க முடியும்.
இத்துடன் இது குறைந்த வெளிச்சத்திலும் தரமான புகைப்படம் எடுக்க வழி செய்கிறது. இதுமட்டுமின்றி இரண்டாவது பிரைமரி கேமரா சென்சார், 3 ஜி.பி. அல்லது 4 ஜி.பி. ரேம் மற்றும் 32, 64 அல்லது 128 ஜி.பி. மெமரி மற்றும் 3500 எம்.ஏ.ஹெச். பேட்டரி மூலம் சக்தியூட்டப்படலாம் என தெரிகிறது.
ரியல்மி பிராண்டு இந்தியாவில் தனது ரியல்மி 3 ஸ்மார்ட்போனின் புதிய வேரியண்ட்டை அறிமுகம் செய்துள்ளது. #Realme
ரியல்மி பிராண்டு இந்தியாவில் ரியல்மி 3 ஸ்மார்ட்போனினை மார்ச் மாதம் அறிமுகம் செய்தது. ரியல்மி 3 ஸ்மார்ட்போனின் 3 ஜி.பி. ரேம், 32 ஜி.பி. மெமரி பேஸ் மாடலாக ரூ.8,999 விலையில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. இத்துடன் ரியல்மி 3 4 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி மாடல் ரூ.10,999 விலையில் அறிமுகம் செய்யப்பட்டது.
தற்சமயம் ரியல்மி 3 ஸ்மார்ட்போன் 3 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி மாடல் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. புதிய ரியல்மி 3 வேரியண்ட் ப்ளிப்கார்ட் தளத்தில் கிடைக்கிறது. முன்னதாக ரியல்மி 3 ப்ரோ ஸ்மார்ட்போன் 6 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி வேரியண்ட் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது.

ரியல்மி 3 சிறப்பம்சங்கள்:
- 6.2 இன்ச் 1520x720 பிக்சல் 19:9 HD+ IPS டிஸ்ப்ளே
- கார்னிங் கொரில்லா கிளாஸ் 3
- ஆக்டா-கோர் மீடியாடெக் ஹீலியோ P70 12 என்.எம். பிராசஸர்
- 900 மெகாஹெர்ட்ஸ் ARM Mali-G72 MP3 GPU
- 3 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி
- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
- டூயல் சிம்
- ஆண்ட்ராய்டு 9.0 பை மற்றும் கலர் ஓ.எஸ். 6.0
- 13 எம்.பி. பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ், f/1.8, PDAF
- 2 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா, f/2.4
- 13 எம்.பி. செல்ஃபி கேமரா, f/2.0
- ஸ்பிளாஷ் மற்றும் டஸ்ட் ப்ரூஃப்
- 3.5 எம்.எம். ஆடியோ ஜாக், எஃப்.எம். ரேடியோ
- டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 4.2
- 4230 எம்.ஏ.ஹெச். பேட்டரி
புதிய ரியல்மி 3 ஸ்மார்ட்போனின் 3 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மாடல் விலை ரூ.9,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதன் விற்பனை ப்ளிப்கார்ட் தளத்தில் துவங்கியிருக்கிறது.
ப்ளிப்கார்ட் வலைதளத்தில் கூகுள் பிக்சல் ஸ்மார்ட்போனிற்கான டீசர் வெளியிடப்பட்டுள்ளது. இதில் ஸ்மார்ட்போனின் வெளியீடு தேதி மற்றும் விவரங்கள் வெளியாகியுள்ளது. #Google
கூகுள் நிறுவன பிக்சல் ஸ்மார்ட்போனின் விவரங்கள் இணையத்தில் லீக் ஆகி வந்தது. இதன் தொடர்ச்சியாக கூகுள் வலைதளத்தில் புதிய பிக்சல் ஸ்மார்ட்போன்களின் பெயர் தவறுதலாக வெளியானது. அதன்படி புதிய ஸ்மார்ட்போன்கள் பிக்சல் 3ஏ என்ற பெயரில் அறிமுகமாகும் என தெரிகிறது.
தற்சமயம் ப்ளிப்கார்ட் தனது வலைதளத்தில் பிக்சல் 3ஏ மற்றும் பிக்சல் 3ஏ XL ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் மே 8 ஆம் தேதி அறிமுகமாகும் என தெரிவித்திருக்கிறது. இத்துடன் ஸ்மார்ட்போன்களின் புதிய டீசரையும் பதிவிட்டிருக்கிறது. டீசருடன் பிக்சல் 3ஏ மற்றும் 3ஏ XL ஸ்மார்ட்போன்களின் கேமரா அம்சம் பற்றிய விவரங்கள் இடம்பெற்றிருக்கிறது.
அதன்படி புதிய பிக்சல் ஸ்மார்ட்போன்களில் குறைந்த வெளிச்சத்திலும் தலைசிறந்த புகைப்படம் எடுக்கும் கேமரா வழங்கப்படும் என தெரிகிறது. இத்துடன் ஸ்மார்ட்போனின் மேல்புறம் மற்றும் கீழ்பக்கம் மெல்லிய பெசல்கள் வழங்கப்படுகிறது. இதைத் தொடர்ந்து மற்றொரு டீசர் பதிவிடப்பட்டுள்ளது.
இதில் “பிக்சல் யுனிவர்சில் மே 8 ஆம் தேதி புதிதாக ஒன்று மிகப் பெரியதாக வெளியாக இருக்கிறது" என குறிப்பிடப்பட்டுள்ளது. இத்துடன் பிக்சல் ஸ்மார்ட்போனின் புகைப்படமும் இடம்பெற்றிருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் மே 8 ஆம் தேதி இந்தியாவில் அறிமுகமாகி ப்ளிப்கார்ட் தளத்தில் மட்டும் பிரத்யேகமாக விற்பனை செய்யப்பட இருக்கிறது.
இதுவரை வெளியாகியிருக்கும் தகவல்களில் பிக்சல் 3ஏ ஸ்மார்ட்போனில் 5.6 இன்ச் FHD+ OLED 18.5:9 டிஸ்ப்ளே, குவால்காம் ஸ்னாப்டிராகன் 670 ஆக்டா-கோர் பிராசஸர் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. பிக்சல் 3ஏ XL ஸ்மார்ட்போனில் 6.0 இன்ச் FHD+ OLED 18.5:9 டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 710 பிராசஸர் கொண்டிருக்கும் என தெரிகிறது.
இத்துடன் இரண்டு ஸ்மார்ட்போன்களிலும் 4 ஜி.பி. ரேம், 32 ஜி.பி. / 64 ஜி.பி. மெமரி கொண்டிருக்கும். புகைப்படம் எடுக்க பிக்சல் 3 மற்றும் பிக்சல் 3XL மாடல்களில் வழங்கப்பட்டிருக்கும் 12.2 எம்.பி. பிரைமரி கேமரா மற்றும் 8 எம்.பி. வைடு ஆங்கிள் செல்ஃபி கேமரா வழங்கப்படும் என கூறப்படுகிறது.
ரியல்மி பிராண்டின் புதிய ஸ்மார்ட்போன் ஸ்னாப்டிராகன் 855 பிராசஸர், 48 எம்.பி. கேமராவுடன் உருவாவதாக தகவல் வெளியாகியுள்ளது. #Realme
ஒப்போவின் ரியல்மி பிராண்டு இரண்டு புதிய ஸ்மார்ட்போன்களை விரைவில் அறிமுகம் செய்ய இருக்கிறது. இரண்டு ரியல்மி ஸ்மார்ட்போன்களும் TENAA வலைதளத்தில் RMX1851 மற்றும் RMX1901 மாடல் நம்பர்களை கொண்டிருக்கின்றன. இவற்றில் ஒன்று ரியல்மி 3 ப்ரோ என அழைக்கப்படலாம். பெயருக்கு ஏற்றார்போல் இது ரியல்மியின் ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போனாக இருக்கும் என தெரிகிறது.
புதிய ரியல்மி ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போனில் குவால்காமின் ஸ்னாப்டிராகன் 855 பிராசஸர் வழங்கப்படலாம். இதே பிராசஸர் சாம்சங் கேலக்ஸி எஸ்10 சீரிஸ், சியோமி Mi 9 மற்றும் இதர டாப் எண்ட் ஸ்மார்ட்பன்களில் வழங்கப்பட்டுள்ளது. சியோமி நிறுவனமும் ஸ்னாப்டிராகன் 855 பிராசஸர் கொண்ட ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்ய இருக்கிறது.
ரியல்மி ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போனில் புகைப்படம் எடுக்க 48 எம்.பி. பிரைமரி கேமரா, மற்றும் இரண்டாவது பிரைமரி கேமரா ஒன்றும் வழங்கப்படலாம் என கூறப்படுகிறது. இதில் 6.5 இன்ச் டிஸ்ப்ளே, இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார், பாப்-அப் ரக செல்ஃபி கேமரா வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த ஸ்மார்ட்போன் 3680 எம்.ஏ.ஹெச். பேட்டரி மற்றும் 50 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. ரியல்மியின் புதிய ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் முதற்கட்டமாக சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டு அதன்பின் மற்ற நாடுகளில் வெளியிடுவது பற்றிய அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
சீனாவில் ரியல்மி ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் விலை RMB 2999 (இந்திய மதிப்பில் ரூ.31,100) வரை நிர்ணயம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது. சமீபத்தில் ரியல்மி பிராண்டு இந்தியாவில் ரியல்மி 3 ப்ரோ ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்தது. இந்த ஸ்மார்ட்போன் 4 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி மற்றும் 6 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி மற்றும் 6 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி உள்ளிட்ட வேரியண்ட்களில் கிடைக்கிறது.
சிறப்பம்சங்களை பொருத்தவரை ரியல்மி 3 ப்ரோ மாடலில் 6.3 இன்ச் 2340x1080 பிக்சல் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் டிஸ்ப்ளே, கார்னிங் கொரில்லா கிளாஸ் 5, ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 710 10 என்.எம். பிராசஸர், அட்ரினோ 616 GPU கிராஃபிக்ஸ், கலர் ஓ.எஸ். 6.0 சார்ந்த ஆண்ட்ராய்டு 9.0 (பை) இயங்குதளம் கொண்டிருக்கிறது.
புகைப்படங்களை எடுக்க 16 எம்.பி. பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ், 1/2.6″ சோனி IMX519 1.22μm சென்சார், f/1.7, EIS, 5 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா, f/2.4, 960fps சூப்பர் ஸ்லோ-மோ வசதி மற்றும் 25 எம்.பி. செல்ஃபி கேமரா, f/2.0, 1/2.8″ வழங்கப்பட்டுள்ளது.
புகைப்படம் நன்றி: TENAA
சாம்சங் நிறுவனம் சமீபத்தில் அறிமுகம் செய்த புதிய கேலக்ஸி எஸ்10 ஸ்மார்ட்போன்களுக்கு அதிரடி சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. #GalaxyS10
சாம்சங் நிறுவனம் சமீபத்தில் அறிமுகம் செய்த புதிய கேலக்ஸி எஸ்10 சீரிஸ் ஸ்மார்ட்போன்களுக்கு தள்ளுபடி மற்றும் கேஷ்பேக் போன்ற சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இவற்றை பயன்படுத்தி புதிய ஸ்மார்ட்போன்களை ரூ.46,900 முதல் வாங்க முடியும். அந்த வகையில் பயனர்களுக்கு ரூ.11,000 வரை தள்ளுபடி கிடைக்கும்.
சாம்சங் கேலக்ஸி எஸ்10இ ஸ்மார்ட்போன் வாங்குவோர் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தும் போது ரூ.9,000 வரை கேஷ்பேக் வழங்கப்படுகிறது. மற்ற வங்கி கார்டுகளை பயன்படுத்தும் போது ரூ.5000 கேஷ்பேக் பெறலாம். அந்த வகையில் தேர்வு செய்யப்பட்ட கார்டுகளை கொண்டு பணம் செலுத்தும் போது ரூ.9000 வரை கேஷ்பேக் பெறலாம்.

கேலக்ஸி எஸ்10 (128 ஜி.பி.) வாங்குவோர் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை கொண்டு பணம் செலுத்தும் போது ரூ.6000 கேஷ்பேக்கும், மற்ற கார்டுகளை பயன்படுத்தும் போது ரூ.5000 வரை கேஷ்பேக் பெற முடியும். இதேபோன்று 512 ஜி.பி. மாடல் வாங்கும் போது ரூ.8,000 வரை உடனடி கேஷ்பேக் வழங்கப்படுகிறது.
கேலக்ஸி எஸ்10 பிளஸ் 128 ஜி.பி., 512 ஜி.பி. அல்லது 1000 ஜி.பி. வேரியண்ட்களை வாங்கும் போது ரூ.9000 அப்கிரேடு போனஸ் மற்றும் தேர்வு செய்யப்பட் வங்கி கார்டுகளை பயன்படுத்து்ம போது ரூ.6000 வரை கேஷ்பேக் வழங்கப்படுகிறது. இச்சலுகையின்றி கேல்கஸி எஸ்10 பிளஸ் 1000 ஜி.பி. வேரியண்ட் விலை ரூ.1,17,900 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
கேலக்ஸி எஸ்10 (512 ஜி.பி.) மாடல் ரூ.84,900 என்றும் 128 ஜி.பி. மாடல் விலை ரூ.66,900 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. கேலக்ஸி எஸ்10இ 128 ஜி.பி. மாடல் விலை ரூ.55,900 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.






