search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வேலுநாச்சியார்"

    • இயக்குனர் ஆர். அரவிந்தராஜ் இயக்கத்தில் உருவாகும் திரைப்படம் 'வீரமங்கை வேலுநாச்சியார்' .
    • இந்த படத்தை டிரண்ட்ஸ் சினிமாஸ் பேனரில் ஜெ.எம்.பஷீர் தயாரிக்கிறார்.

    இயக்குனர் ஆர். அரவிந்தராஜ் இயக்கத்தில் உருவாகும் திரைப்படம் 'வீரமங்கை வேலுநாச்சியார்' . இந்த படத்தில் வேலுநாச்சியாராக முதன்மை வேடத்தில் நடித்து திரையுலகில் அறிமுகம் ஆகிறார் ஆயிஷா. டிரண்ட்ஸ் சினிமாஸ் பேனரில் ஜெ.எம்.பஷீர் இந்த படத்தை தயாரிக்கிறார்.

    'வீரமங்கை வேலுநாச்சியார்' திரைப்படத்தில் முக்கிய பாத்திரமான பெரிய மருதாக இப்படத்தின் தயாரிப்பாளரும், 'தேசிய தலைவர்' திரைப்படத்தில் பசுகம்பொன் முத்துராமலிங்க தேவராக நடித்திருப்பவருமான ஜெ.எம்.பஷீர் நடிக்கிறார். இவரது மகள் தான் ஆயிஷா என்பது குறிப்பிடத்தக்கது.

    'வீரமங்கை வேலுநாச்சியார்' திரைப்படத்தின் அறிமுக நிகழ்ச்சி சென்னை தியாகராய நகரில் நடைபெற்றது. திரைப்படம் குறித்து பேசிய தயாரிப்பாளரும் நடிகருமான ஜெ.எம்.பஷீர், "வேலு நாச்சியார் அவர்களின் வாழ்க்கை வரலாற்றை திரையில் கொண்டு வருவதில் மிகவும் பெருமை அடைகிறோம். இதில் முதன்மை வேடத்தில் எனது மகள் ஆயிஷா நடிப்பது பெரும் மகிழ்ச்சி," என்றார்.


    ஆயிஷா

    மேலும், நமது நாட்டுக்காகவும், தேச விடுதலைக்காகவும் தன்னலம் இன்றி போராடிய மாபெரும் ஆளுமைகள் குறித்து இன்றைய இளைய சமுதாயம் அறிவது அவசியம் என்றும் இதன் காரணமாகவே 'தேசிய தலைவர்' மற்றும் 'வீரமங்கை வேலுநாச்சியார்' உள்ளிட்ட திரைப்படங்களை தான் தயாரித்து வருவதாகவும் பஷீர் தெரிவித்தார்.

    'தேசிய தலைவர்' திரைப்படம் அடுத்த மாதம் திரைக்கு வர உள்ள நிலையில் அதை தொடர்ந்து 'வீர மங்கை வேலு நாச்சியார்' படப்பிடிப்பு தொடங்கும் என்று பஷீர் கூறினார். வரலாற்று ஆவணங்களை ஆய்வு செய்து இப்படத்தின் ஸ்கிரிப்ட் உருவாக்கப்பட்டுள்ளது என அவர் தெரிவித்தார்.

    'வீர மங்கை வேலு நாச்சியார்' திரைப்படத்திற்கு ஜெ ஸ்ரீதர் ஒளிப்பதிவு செய்ய, சண்டைக் காட்சிகளை மிராக்கிள் மைக்கேல் வடிவமைக்கிறார். பிரபல நடிகர்கள் மற்றும் முன்னணி தொழில்நுட்ப கலைஞர்கள் இப்படத்திற்காக இணைய உள்ளனர். இது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று தயாரிப்பாளர் ஜெ எம் பஷீர் கூறினார்.

    • இந்திய விடுதலைப் போராட்ட வரலாற்றில் தென்னகத்தின் தியாக அத்தியாயங்களைத் தம் வீரத்தால் எழுதிய முன்னோடிகளான வீரமங்கை வேலுநாச்சியார், வீரபாண்டிய கட்டபொம்மன் ஆகியோரின் பிறந்தநாள் இன்று.
    • 1857 சிப்பாய் கலகத்துக்கு ஒரு நூற்றாண்டுக்கு முன்பிருந்தே விடுதலைப் போராட்ட விதைகளை ஊன்றிய மண் தமிழ்நாடு எனத் தம் நெஞ்சில் பதிய வேண்டும்.

    சென்னை:

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைதளப்பதிவில் கூறி இருப்பதாவது:-

    பதினெட்டாம் நூற்றாண்டிலேயே இந்திய விடுதலைப் போராட்ட வரலாற்றில் தென்னகத்தின் தியாக அத்தியாயங்களைத் தம் வீரத்தால் எழுதிய முன்னோடிகளான வீரமங்கை வேலுநாச்சியார், வீரபாண்டிய கட்டபொம்மன் ஆகியோரின் பிறந்தநாள் இன்று.

    வரி கட்ட மறுத்து, ஆங்கிலேயர்களின் படைபலத்தை எதிர்த்து, உயிரைவிடத் தன்மானமே பெரிதெனத் தமிழரின் பண்பைப் பறைசாற்றிய இவ்விருவரின் வீரத்தை இந்தியர் அனைவரும் அறிய வேண்டும். 1857 சிப்பாய்க் கலகத்துக்கு ஒரு நூற்றாண்டுக்கு முன்பிருந்தே விடுதலைப் போராட்ட விதைகளை ஊன்றிய மண் தமிழ்நாடு எனத் தம் நெஞ்சில் பதிய வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    ×