search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வெள்ளாடு"

    • கொட்டகையில் கட்டி இருந்த 4 செம்மறி ஆடுகள் மர்ம விலங்கு கடித்து இறந்திருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
    • சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் பதிவான கால் தடத்தை வைத்து விசாரணை நடத்தியதில் அந்த கால் தடம் சிறுத்தை உடையது என்பதை உறுதி செய்தனர்.

    சத்தியமங்கலம்:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த சிக்கரசம் பாளையத்தை சேர்ந்தவர் ரவிச்சந்திரன். இவர் தனது 3 ஏக்கர் தோட்டத்தில்

    மல்லிகை சாகுபடி செய்து வருவதோடு, கால்நடைகளையும் வளர்த்து வருகிறார்.

    இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல் தோட்டத்து கொட்டகையில் 4 செம்மறி ஆடுகளை கட்டி தீவனம் போட்டு

    விட்டு ஊருக்கு சென்றுவிட்டார். நேற்று காலை வந்து பார்த்தபோது கொட்டகையில் கட்டி இருந்த 4 செம்மறி ஆடுகள் மர்ம விலங்கு

    கடித்து இறந்திருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    இது குறித்து சத்தியமங்கலம் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் பதிவான கால்

    தடத்தை வைத்து விசாரணை நடத்தியதில் அந்த கால் தடம் சிறுத்தை உடையது என்பதை உறுதி செய்தனர். இதனால் அப்பகுதி மக்கள்

    கடும் பீதி அடைந்துள்ளனர்.

    மீண்டும் ஆட்டை தேடி சிறுத்தை ஊருக்குள் எந்த நேரத்திலும் வரலாம் என்பதால் கிராம மக்கள் அதிர்ச்சியில் உறைந்து உள்ளனர்.

    உடனடியாக கூண்டு வைத்து சிறுத்தை பிடிக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர். இதனையடுத்து அந்த பகுதியில்

    வனத்துறையினர் 4 கண்காணிப்பு கேமிராக்களை பொருத்தி சிறுத்தை நடமாட்டத்தை கண்காணித்து வருகின்றனர்.

    • காலை 10 மணி அளவில் நடைபெறுகிறது.
    • வெள்ளாடு வளா்ப்பில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் பங்கேற்று கொள்ளலாம்.

    திருப்பூர் :

    திருப்பூா் மாவட்டத்தில் உள்ள விவசாயிகளுக்கான வெள்ளாடு வளா்ப்பு தொடா்பான பயிற்சி நாளை 25-ந்தேதி நடைபெறுகிறது.

    இதுகுறித்து கால்நடை மருத்துவப் பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தின் தலைவா் ஆா்.மதிவாணன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:- திருப்பூா் பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள கால்நடை மருத்துவப் பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் வெள்ளாடு வளா்ப்பு தொடா்பான பயிற்சி நாளை ( வியாழக்கிழமை) காலை 10 மணி அளவில் நடைபெறுகிறது.மாவட்டத்தில் வெள்ளாடு வளா்ப்பில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் இந்தப் பயிற்சியில் பங்கேற்று தங்களது சந்தேகங்களைத் தெளிவுபடுத்திக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • கொளத்துப்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட கிராமங்களில் ஆடுகளுக்கான நோய் தடுப்பூசி முகாம் நடை பெற்றது.
    • முகாமில் மருத்துவ குழுவினர் வெள்ளாடு, செம்மறி ஆடு, விலையில்லா ஆடுகளுக்கு நோய் கொல்வி தடுப்பூசி போட்டனர்.

    கொடுமுடி:

    கொடுமுடி அருகே கொளத்துப்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட தேவம்பாளையம், கொம்ப னைப்புதூர் கிராமங்களில் ஆடுகளுக்கான நோய் தடுப்பூசி முகாம் நடை பெற்றது.

    ஈரோடு மாவட்ட கலெக்டர் கிருஷ்ண னுண்ணி உத்தரவின் பேரில் கால்நடை உதவி இயக்குனர் டாக்டர்.கோவிந்தராஜ் முன்னிலையில் இம்முகாம் நடைபெற்றது.

    முகாமில் கொம்ப னைப்புதூர் கால்நடை உதவி மருத்துவமனை டாக்டர். சி.விஜயகுமார் தலைமையில் மருத்துவ குழுவினர் வெள்ளாடு, செம்மறி ஆடு, விலையில்லா ஆடுகளுக்கு நோய் கொல்வி தடுப்பூசி போட்டனர்.

    இதில் கால்நடை பராமரிப்பு உதவியாளர் பி.ஆர்.சிவக்குமார் மற்றும் மருத்துவ பணியாளர்கள் கலந்து கொண்டு சிகிச்சை அளித்தனர்.

    • ஆதரவற்ற விதவைகள் மற்றும் கணவனால் கைவிடப்பட்ட பெண்களுக்கு கால்நடை துறை சார்பில் வெள்ளாடுகள் வழங்கும் விழா நடைபெற்றது.
    • விழாவில் 100 பயனாளிகளுக்கு தலா ரூ.17,500 மதிப்புள்ள 5 வெள்ளாடுகள் ஒவ்வொரு பயனாளிக்கும் வழங்கப்பட்டது.

    புதுக்கோட்டை:

    கந்தர்வகோட்டை ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் வாழும் ஆதரவற்ற விதவைகள் மற்றும் கணவனால் கைவிடப்பட்ட பெண்களுக்கு புதுக்கோட்டை மாவட்ட கால்நடை துறை சார்பில் வெள்ளாடுகள் வழங்கும் விழா புதிய பேருந்து நிலையம் அருகே நடைபெற்றது.

    விழாவில் 100 பயனாளிகளுக்கு தலா ரூ.17,500 மதிப்புள்ள 5 வெள்ளாடுகள் ஒவ்வொரு பயனாளிக்கும் வழங்கப்பட்டது.

    விழாவில் கந்தர்வகோட்டை சட்டமன்ற உறுப்பினர் சின்னத்துரை கலந்து கொண்டு பயனாளிகளுக்கு முழு மானியத்தில் வெள்ளாடுகளை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் கந்தர்வகோட்டை ஒன்றிய குழு தலைவர் கார்த்திக், திமுக வடக்கு ஒன்றிய செயலாளர் தமிழ் ஐயா, நகரச் செயலாளர் ராஜா, கால்நடை துறை மருத்துவர்கள் செந்தில்குமார், பிரசாத், செந்தில் ராஜன், தினேஷ்குமார், மகேஸ்வரி, கவின் குமார் மற்றும் கால்நடை துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    ×