search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வில்லுக்குறி"

    • தீயணைப்பு துறையினர் விரைந்து செயல் பட்டு தீயை அணைத்தனர்.
    • காய்ந்த சருகுகளுக்கு தீயணைப்பு துறையினரே தீ வைத்து எரித்தது தெரியவந்தது.

    கன்னியாகுமரி:

    குமரி மாவட்டம் வில்லுக்குறி அருகே மாம்பழத்துறையாறு அணை உள்ளது.

    இந்த அணை அமைந்து உள்ளது மேற்கு தொடர்ச்சி மலை பகுதியாகும். இந்த மலையடிவாரத்தில் சிலர் வசித்து வருகின்றனர். மலை யில் ஏராளமான மரங்கள் செடிகள் உள்ள நிலையில், வெப்ப காலங்களில் இங்கு திடீரென தீ விபத்து ஏற்படுவது வழக்கம்.

    இதனை தடுக்க வனத் துறையினரும் தீயணைப்பு துறை யினரும் அடிக்கடி முன் எச்சரிக்கை நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்த நிலையில் நேற்று மாலை 6 மணிக்கு மலைப்பகுதியில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    சுமார் 2 கி.மீட்டர் தூரத்திற்கு தீ பரவி எரிய தொடங்கியது. தீயணைப்பு துறையினர் விரைந்து செயல் பட்டு தீயை அணைத்தனர். இதுபற்றி விசாரித்த போது, மலையின் கீழ் பகுதியில் வசிக்கும் மக்களின் பாது காப்பு கருதி, காய்ந்த சருகு களுக்கு தீயணைப்பு துறை யினரே தீ வைத்து எரித்தது தெரியவந்தது.

    வெப்ப நேரங்களில் மலைப்பகுதியில் காய்ந்த சருகுகளில் தீ பிடித்தால், அது காட்டுத்தீயாக மாறி விடும். எனவே அந்த காலங்களில் மலையடிவாரத்தின் அருகே கிடக்கும் சருகுகளுக்கு தீ வைத்து அணைப்பது வழக்கமான ஓன்று தான். அது போல தான் தற்போதும் நடந்துள்ளது என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    • வில்லுக்குறி திருவிடைக்கோட்டில் வசித்து வரும் சகோதரியை பார்க்க சென்றவர் வீடு திரும்பவில்லை
    • இரணியல் போலீசார் வழக்கு பதிவு செய்து மூதாட்டியை தேடி வருகின்றனர்.

    கன்னியாகுமரி:

    தக்கலை கொல்லம் விளையை சேர்ந்த மணி மனைவி சைலஜா (வயது59). இவர் வில்லுக்குறி திருவிடைக்கோட்டில் வசித்து வரும் சகோதரியை பார்க்க சென்று உள்ளார். அதன் பிறகு சைலஜா வீடு திரும்ப வில்லை.

    இது குறித்து அவரது மகன் கோலப்பன் (37) இரணியல் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் இரணியல் போலீசார் வழக்கு பதிவு செய்து மூதாட்டியை தேடி வருகின்றனர்.

    • வில்லுக்குறி போலீசார் 180 கிராம் கஞ்சா பறிமுதல்
    • சுசீந்திரம் போலீசார் 50 கிராம் கஞ்சா பறிமுதல்

    கன்னியாகுமரி:

    தக்கலை மதுவிலக்கு அமல் பிரிவு (பொறுப்பு) உதவி ஆய்வாளர் ஜெயசேகர் தலைமையிலான போலீசார் நேற்று வில்லுக்குறி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது வில்லுக்குறி அரசு தொடக்கப் பள்ளி முன்பு வாலிபர் ஒருவர் மோட்டார் சைக்கிளில் சந்தேகத்திற்கிடமாக நின்று கொண்டிருந்தார்.

    மோட்டார் சைக்கிளை சோதனை செய்த போது 180 கிராம் கஞ்சா இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது. இதையடுத்து பைக்குடன் கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் அவரை கைது செய்தனர்.

    விசாரணையில் அவர், திருவிடைக்கோடை சேர்ந்த விஷ்ணுகுமார் (வயது 19) என தெரிய வந்தது. மேலும் இவர் கள்ளியங்காடு அருகே உள்ள ஒரு தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார் என்பது குறிப்பிடத் தக்கது.

    சுசீந்திரம் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் ஆஷா ஜெபகர் தலைமையில் போலீசார் சொத்தவிளை பீச்சில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அங்கு சந்தேகப் படும்படியாக நின்று கொண்டிருந்த ஒரு நபரை பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர் எறும்புகாடு பக்தன்காடு பகுதியை சேர்ந்த மணிகண்ட பிரபு என்பது தெரிய வந்தது.

    அவரை சோதனை செய்த போது அவரிடம் இருந்து 50 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. அவரிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்ட போது இந்த கஞ்சா அதிக லாப நோக்கோடு விற்பதற்காக வைக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது. அதனைத் தொடர்ந்து அவரை கைது செய்து அவர் மீது வழக்குபதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். ஏற்கனவே மணிகண்ட பிரபு மீது ராஜாக்க மங்கலம், கோட்டார் போன்ற போலீஸ் நிலையங்களில் இது போன்ற வழக்குகள் இருப்பது குறிப்பிடத்தக்கது.

    • ஆசாரிப்பள்ளம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
    • போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தனிஸ்லாஸ் வழக்கு பதிவு செய்து விசாரணை

    கன்னியாகுமரி:

    இரணியல் அருகே வில்லுக்குறி வெள்ளச்சிவிளையை சேர்ந்தவர் செல்லத்துரை, இவரது மனைவி ஷைலஜா (வயது 42). இவர் நேற்று காலை தனது மொபட்டில் தக்கலையிலிருந்து வீடு திரும்பும் வழியில் வெள்ளச்சிவிளை என்ற இடத்தில் எதிரில் வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியதில் கீழே விழுந்து தலையில் பலத்த காயமடைந்து தக்கலை மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

    மேல் சிகிச்சைக்காக ஆசாரிப்பள்ளம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தும் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு உயிர் இழந்தார். இது குறித்து அவரது கணவர் செல்லத்துரை அளித்த புகாரில் பேரில் இரணியல் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தனிஸ்லாஸ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார்.

    ×