என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  வில்லுக்குறி அருகே கஞ்சா வைத்திருந்த கல்லூரி மாணவர் கைது
  X

  வில்லுக்குறி அருகே கஞ்சா வைத்திருந்த கல்லூரி மாணவர் கைது

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • வில்லுக்குறி போலீசார் 180 கிராம் கஞ்சா பறிமுதல்
  • சுசீந்திரம் போலீசார் 50 கிராம் கஞ்சா பறிமுதல்

  கன்னியாகுமரி:

  தக்கலை மதுவிலக்கு அமல் பிரிவு (பொறுப்பு) உதவி ஆய்வாளர் ஜெயசேகர் தலைமையிலான போலீசார் நேற்று வில்லுக்குறி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

  அப்போது வில்லுக்குறி அரசு தொடக்கப் பள்ளி முன்பு வாலிபர் ஒருவர் மோட்டார் சைக்கிளில் சந்தேகத்திற்கிடமாக நின்று கொண்டிருந்தார்.

  மோட்டார் சைக்கிளை சோதனை செய்த போது 180 கிராம் கஞ்சா இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது. இதையடுத்து பைக்குடன் கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் அவரை கைது செய்தனர்.

  விசாரணையில் அவர், திருவிடைக்கோடை சேர்ந்த விஷ்ணுகுமார் (வயது 19) என தெரிய வந்தது. மேலும் இவர் கள்ளியங்காடு அருகே உள்ள ஒரு தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார் என்பது குறிப்பிடத் தக்கது.

  சுசீந்திரம் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் ஆஷா ஜெபகர் தலைமையில் போலீசார் சொத்தவிளை பீச்சில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அங்கு சந்தேகப் படும்படியாக நின்று கொண்டிருந்த ஒரு நபரை பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர் எறும்புகாடு பக்தன்காடு பகுதியை சேர்ந்த மணிகண்ட பிரபு என்பது தெரிய வந்தது.

  அவரை சோதனை செய்த போது அவரிடம் இருந்து 50 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. அவரிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்ட போது இந்த கஞ்சா அதிக லாப நோக்கோடு விற்பதற்காக வைக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது. அதனைத் தொடர்ந்து அவரை கைது செய்து அவர் மீது வழக்குபதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். ஏற்கனவே மணிகண்ட பிரபு மீது ராஜாக்க மங்கலம், கோட்டார் போன்ற போலீஸ் நிலையங்களில் இது போன்ற வழக்குகள் இருப்பது குறிப்பிடத்தக்கது.

  Next Story
  ×