இரணியல் வில்லுக்குறி அருகே சாலை விபத்தில் பெண் பலி

ஆசாரிப்பள்ளம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தனிஸ்லாஸ் வழக்கு பதிவு செய்து விசாரணை
இரணியல் வில்லுக்குறி அருகே சாலை விபத்தில் பெண் பலி
Published on

கன்னியாகுமரி:

இரணியல் அருகே வில்லுக்குறி வெள்ளச்சிவிளையை சேர்ந்தவர் செல்லத்துரை, இவரது மனைவி ஷைலஜா (வயது 42). இவர் நேற்று காலை தனது மொபட்டில் தக்கலையிலிருந்து வீடு திரும்பும் வழியில் வெள்ளச்சிவிளை என்ற இடத்தில் எதிரில் வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியதில் கீழே விழுந்து தலையில் பலத்த காயமடைந்து தக்கலை மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

மேல் சிகிச்சைக்காக ஆசாரிப்பள்ளம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தும் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு உயிர் இழந்தார். இது குறித்து அவரது கணவர் செல்லத்துரை அளித்த புகாரில் பேரில் இரணியல் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தனிஸ்லாஸ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com