search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விபி துரைசாமி"

    • அ.தி.மு.க.-பா.ஜனதா கூட்டணி முறிந்தது.
    • அ.தி.மு.க.வுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடந்து வருவதாக பா.ஜனதா துணை தலைவர் வி.பி.துரைசாமி கூறியது பரபரப்பை ஏற்படுத்தியது.

    சென்னை:

    அ.தி.மு.க.வுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடந்து வருவதாக பா.ஜனதா துணை தலைவர் வி.பி.துரைசாமி கூறியது பரபரப்பை ஏற்படுத்தியது.

    அண்ணாமலை டெல்லியில் இருக்கும் நிலையில் நிர்வாகிகள் தனியாக ஆலோசனை நடத்தியதால் டெல்லி தலைமை மீண்டும் கூட்டணியை புதுப்பிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதோ என்ற சந்தேகம் எழுந்தது.

    அ.தி.மு.க.-பா.ஜனதா கூட்டணி முறிந்தது. இனி எந்த காலத்திலும் கூட்டணி இல்லை என்ற தலைமையின் முடிவை அதிகாரப்பூர்வமாக அறிவித்தவர் துணை பொது செயலாளர் முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி.

    கூட்டணி பேச்சுவார்த்தை நடப்பதாக பா.ஜனதா தரப்பில் தெரிவிக்கப்பட்டது பற்றி கே.பி. முனுசாமியை தொடர்பு கொண்டு கேட்டபோது 'உறுதியாக அப்படி எதுவும் நடக்கவில்லை' என்றார்.

    • கமலாலயத்தில் முக்கிய நிர்வாகிகள் அண்ணாமலை இல்லாமல் கூடி ஆலோசனை நடத்தினார்கள்.
    • சுதாகர்ரெட்டி கூறும்போது கூட்டணி பற்றி தேவையான நேரத்தில் தேவையான இடத்தில் எங்கள் பதிலை அறிவிப்போம் என்றார்.

    சென்னை:

    தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை தலைமையில் இன்று மாவட்ட தலைவர்கள், மாநில நிர்வாகிகள் கூட்டம் நடப்பதாக இருந்தது. ஆனால் அண்ணாமலை டெல்லியில் இருப்பதால் இந்த கூட்டம் ஒத்தி வைக்கப்பட்டது.

    இந்நிலையில் கட்சி அலுவலகமான கமலாலயத்தில் முக்கிய நிர்வாகிகள் அண்ணாமலை இல்லாமல் கூடி ஆலோசனை நடத்தினார்கள்.

    இந்த கூட்டத்தில் மேலிட இணை பொறுப்பாளர் சுதாகர்ரெட்டி, அமைப்பு செயலாளர் கேசவவிநாயகன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    மாநில நிர்வாகிகள், கோட்ட பொறுப்பாளர்கள் ஆகியோருடன் ஆலோசனை நடத்தினார்கள். இந்த கூட்டத்தில் கலந்துகொள்ள வந்த பா.ஜனதா துணைத் தலைவர் வி.பி.துரைசாமி கூறும்போது, அ.தி.மு.க.வுடன் கூட்டணி பேச்சு வார்த்தை நடக்கிறது. கூட்டணி தொடர வேண்டும் என்பதால்தான் ஆலோசனை நடக்கிறது என்றார்.

    மேலிட இணை பொறுப்பாளர் சுதாகர்ரெட்டி கூறும்போது, கூட்டணி பற்றி தேவையான நேரத்தில் தேவையான இடத்தில் எங்கள் பதிலை அறிவிப்போம் என்றார்.

    ×