என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "லோகேஷ்கனகராஜ்"

    • பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான 'சர்தார்' திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
    • இப்படத்தின் வெற்றியை கொண்டாடும் வகையில் படக்குழு செய்தியாளர்களை சந்தித்தது.

    பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் கார்த்தி கதாநாயகனாக நடித்த படம் 'சர்தார்'. இதில் மிரட்டும் வில்லனாக இந்தி நடிகர் சங்கி பாண்டே நடித்திருந்தார். மேலும், ராஷிகண்ணா, ரெஜிஷா விஜயன், லைலா, யுகி சேது, முனிஷ்காந்த், மாஸ்டர் ரித்விக், அவினாஷ், முரளி ஷர்மா மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.

     

    சர்தார்

    சர்தார்

    பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார். 'சர்தார்' திரைப்படம் அக்டோபர் மாதம் 21-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

     

    சர்தார் - கார்த்தி

    சர்தார் - கார்த்தி

    இந்நிலையில் சர்தார் படத்தின் வெற்றியைத் கொண்டாடும் வகையில் படக்குழு செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது 'கைதி 2' எப்பொழுது வரும் என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு, அடுத்த வருடம் படத்திற்கான பணிகளை ஆரம்பிக்க உள்ளதாக கார்த்தி தெரிவித்தார்.

     

    கார்த்தி

    கார்த்தி

    மேலும் லோகேஷ் கனகராஜ் தன் முந்தைய படத்தின் கதாபாத்திரங்களை அடுத்த படத்திலும் தொடர்ச்சியாக கொண்டு வருகிறார். அதேபோல் 'தளபதி 67' படத்தில் நீங்கள் இணைய வாய்ப்புள்ளதா? என்ற கேள்விக்கு, "அது தெரியவில்லை. அது எளிதும் கிடையாது. நாம் ஆசைப்படலாம். இரண்டு படத்திற்கும் தயாரிப்பாளர்கள் வேறு. அது தயாரிப்பாளர்கள் கையில் தான் இருக்கிறது" என்றார்.

    • இயக்குனர் லோகேஷ் கனகராஜ் விஜய்யின் அடுத்த படமான தளபதி 67 படத்தை இயக்கவுள்ளார்.
    • இதற்கான பணிகளில் லோகேஷ் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.

    விஜய் தற்போது வம்சி இயக்கத்தில் வாரிசு படத்தில் நடித்து வருகிறார். இதில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்து வருகிறார். இந்த படத்துக்கு பிறகு விஜய் நடிக்கும் 67-வது படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ளார். இதற்கான பணிகளில் அவர் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.


    விஜய் - லோகேஷ் கனகராஜ்

    ஏற்கனவே மாஸ்டர் படம் இவர்கள் கூட்டணியில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. தளபதி 67 படத்தில் விஜய்க்கு 50 வயது தாதா கதாபாத்திரம் என்றும் அவருக்கு வில்லன்களாக 6 முன்னணி நடிகர்கள் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும், இப்படம் ரசிகர்கள் மத்தியில் நாளுக்கு நாள் எதிர்பார்ப்பை அதிகப்படுத்திக் கொண்டே வருகிறது.


    லோகேஷ் கனகராஜ் - விஜய்

    இந்நிலையில் இப்படம் குறித்து புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி, தளபதி 67 படத்தின் அறிவிப்பை வரும் தீபாவளி அன்று படக்குழு வெளியிட திட்டமிட்டுள்ளதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இது ரசிகர்கள் மத்தியில் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.  

    • இயக்குனர் லோகேஷ் கனகராஜ் விஜய்யின் அடுத்த படமான தளபதி 67 படத்தை இயக்கவுள்ளார்.
    • இதற்கான பணிகளில் லோகேஷ் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.

    விஜய் தற்போது வம்சி இயக்கத்தில் வாரிசு படத்தில் நடித்து வருகிறார். இதில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்து வருகிறார். இந்த படத்துக்கு பிறகு விஜய் நடிக்கும் 67-வது படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ளார். ஏற்கனவே மாஸ்டர் படம் இவர்கள் கூட்டணியில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.


    விஜய் - லோகேஷ் கனகராஜ்

    இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பு உள்ளது. இப்படத்தில் விஜய்க்கு 50 வயது தாதா கதாபாத்திரம் என்றும் அவருக்கு வில்லன்களாக 6 முன்னணி நடிகர்கள் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ் நடிகர் கலையரசனை சந்தித்துள்ளார்.


    லோகேஷ் கனகராஜ் - கலையரசன்

    இது குறித்து கலையரசன் தனது சமூக வலைதளத்தில், "நீண்ட நாட்களுக்கு பின்னர் மச்சி லோகேஷ் கனகராஜை சந்தித்துள்ளேன். எப்போதும் போல் தளபதி 67 படத்திலும் நான் இல்லை என்று கூறினார். அவரது யூனிவர்சின் சிறந்த விஷயங்கள் விரைவில் வரும்" என்று பதிவிட்டு இயக்குனர் லோகேஷ் கனகராஜுடன் இருக்கும் புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார்.


    • லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கவுள்ள படம் தளபதி 67.
    • இந்த படத்தின் கதாபாத்திரம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

    விஜய் தற்போது வம்சி இயக்கத்தில் வாரிசு படத்தில் நடித்து வருகிறார். இதில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்து வருகிறார். இந்த படத்துக்கு பிறகு விஜய் நடிக்கும் 67-வது படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ளார். ஏற்கனவே மாஸ்டர் படம் இவர்கள் கூட்டணியில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.


    லோகேஷ் கனகராஜ் - விஜய்

    இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பு உள்ளது. இப்படத்தில் விஜய்க்கு 50 வயது தாதா கதாபாத்திரம் என்றும் அவருக்கு வில்லன்களாக 6 முன்னணி நடிகர்கள் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும், இப்படத்தின் அறிவிப்பு இன்னும் ஓரிரு மாதங்களில் வெளியிடப்படும் என லோகேஷ் கனகராஜ் கூறியிருந்தார்.


    நந்தினி - தீனா

    இந்நிலையில், இப்படத்தின் புதிய தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, தளபதி 67 படத்தில் நடிகை மைனா நந்தினி மற்றும் விஜய் டிவி புகழ் தீனா நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    • இந்தி திரையுலகின் பிரபல இயக்குனர் மற்றும் நடிகர் அனுராக் காஷ்யப்.
    • இவர் லோகேஷ் யூனிவர்சில் இணைய விருப்பம் தெரிவித்துள்ளார்.

    பாலிவுட் சினிமாவில் மிக முக்கியமான இயக்குனர்களில் ஒருவர் அனுராக் காஷ்யப். இவர் தமிழில் அதர்வா, நயன்தாரா நடிப்பில் வெளியான இமைக்கா நொடிகள் படத்தில் வில்லனாக நடித்து தமிழ் ரசிகர்களுக்கு நன்கு அறிமுகமானார்.


    அனுராக் காஷ்யப்

    இவர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியாகி வசூல் குவித்த கைதி மற்றும் விக்ரம் திரைப்படங்களை ஒரே நேரத்தில்  பார்த்துள்ளார். அதிலும் லோகேஷ் கனகராஜ் 'கைதி' திரைப்படத்தை பார்த்து விட்டு 'விக்ரம்' திரைப்படத்தை பாருங்கள் என்று கூறியதை கவனத்தில் எடுத்துக் கொண்டு முதலில் 'கைதி' திரைப்படத்தை பார்த்து விட்டு பின்னர் 'விக்ரம்' திரைப்படத்தை பார்த்துள்ளார்.


    அனுராக் காஷ்யப்

    இந்த இரண்டு படங்களையும் பார்த்த பின்னர் லோகேஷ் கனகராஜை பாராட்டிய அனுராக் காஷ்யப் அவருடைய யூனிவர்ஸில் தானும் இணைய விரும்பம் தெரிவித்துள்ளார்.

    • இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அண்மையில் வெளியான திரைப்படம் ‘விக்ரம்’.
    • இப்படத்தில் திரைப்பிரபலங்கள் பலர் நடித்த்துள்ளனர்.

    மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம் படங்களை இயக்கி தமிழ் சினிமாவில் தனக்கான இடத்தை பிடித்தவர் லோகேஷ் கனகராஜ். இவர் இயக்கத்தில் கமல்ஹாசன் கதாநாயகனாக நடிக்க விஜய் சேதுபதி, பகத் பாசில், நரேன், சூர்யா உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த 'விக்ரம்' திரைப்படம் தமிழ், தெலுங்கு, என பல மொழிகளில் அண்மையில் வெளியாகி ரூ.400 கோடிக்கும் மேல் வசூல் சாதனை படைத்தது.


    விக்ரம்

    'விக்ரம்' திரைப்படம் ஓடிடி-யில் வெளியாகி சாதனை படைத்திருந்தாலும் தற்போது வரை சில திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில், 'விக்ரம்' திரைப்படம் 100-வது நாளை கடந்துள்ளது. இதையடுத்து, இப்படத்தின் 100-வது நாள் கொண்டாட்டம் கோவையில் நடைபெற்றது.

    இந்த நிகழ்ச்சியில் நடிகர் கமல்ஹாசன் கலந்து கொண்டு கூறியதாவது, "சினிமாவில் நான் தொடக்க காலத்தில் 4 படங்கள் நடித்தும் என்னை யாரும் கண்டுகொள்ளவில்லை. அதை மாற்ற நன்றாக உழைத்தேன். அதனால்தான் இந்த அளவுக்கு உயர்ந்து இருக்கிறேன்.


    விக்ரம்

    நல்ல சினிமாவை கைவிட்டு விடாதீர்கள். புதிதாக வரும் நடிகர்களிடம் என்னை விட சிறப்பாக என்ன இருக்கிறது என்பதை கவனிப்பேன். பல சமயங்களில் அது இருக்கிறது என்பதை உணர்ந்து நான் அவை அடக்கம் கொள்வேன். அதனால் தான் என் ஆயுளை நீட்டிக் கொண்டு வருகிறீர்கள். இந்த வாழ்த்தை தொடர்ந்து எனக்கு நீங்கள் கொடுக்க வேண்டும்" என்று கூறினார்.

    • வம்சி இயக்கத்தில் விஜய் தற்போது வாரிசு படத்தில் நடித்து வருகிறார்.
    • இப்படத்தை தொடர்ந்து விஜய்யின் 67 படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ளார்.

    விஜய் தற்போது வம்சி இயக்கத்தில் வாரிசு படத்தில் நடித்து வருகிறார். இதில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்து வருகிறார். இந்த படத்துக்கு பிறகு விஜய் நடிக்கும் 67-வது படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ளார். ஏற்கனவே மாஸ்டர் படம் இவர்கள் கூட்டணியில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.


    வாரிசு

    லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்து சமீபத்தில் வெளியான விக்ரம் படம் வசூல் சாதனை நிகழ்த்தியதால் விஜய்யின் 67-வது படத்துக்கும் ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பு உள்ளது. இப்படத்தில் விஜய்க்கு 50 வயது தாதா கதாபாத்திரம் என்றும் அவருக்கு வில்லன்களாக 6 முன்னணி நடிகர்கள் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

    இந்த படத்தை தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னட, மலையாள மொழிகளில் எடுக்க இருப்பதால் ஒவ்வொரு மொழியில் இருந்து ஒரு வில்லன் நடிகர்களை தேர்வு செய்ய படக்குழு திட்டமிட்டிருப்பதாக தெரிகிறது. இந்நிலையில், தளபதி 67 படத்தின் அப்டேட் ஓரிரு மாதங்களில் வெளியாகும் என இயக்குனர் லோகேஷ் கனகராஜ் கூறியுள்ளார்.


    விஜய் - லோகேஷ் கனகராஜ்

    மேலும், வாரிசு படத்தின் அப்டேட் வெளிவராமல் தளபதி 67 படத்தின் அப்டேட் வெளியிட முடியாது எனவும் இவ்வளவு நாட்கள் காத்திருந்த ரசிகர்கள் இன்னும் ஓரிரு மாதங்கள் காத்திருங்கள் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

    • விஜய் தற்போது வம்சி இயக்கத்தில் வாரிசு படத்தில் நடித்து வருகிறார்.
    • இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

    வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து வரும் திரைப்படம் 'வாரிசு'. இந்த படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் நேரடியாக வெளியாக உள்ளது. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா நடித்து வருகிறார். மேலும், பிரகாஷ்ராஜ், சரத்குமார், குஷ்பூ, ஷாம், யோகி பாபு உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.


    வாரிசு

    இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அடுத்த மாத இறுதிக்குள் இதன் முழு படப்பிடிப்பும் முடிவடைந்துவிடும் எனக் கூறப்படுகிறது. மேலும், இப்படத்தின் முதல் சிங்கிள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்நிலையில் 'வாரிசு' படப்பிடிப்பில் விஜய்யுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை நடிகை ராஷ்மிகா தனது சமூக வலைதளப்பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படம் இணையத்தில் லைக்குகளை குவித்து வருகிறது. 'வாரிசு' படத்தின் படப்பிடிப்பு முடிந்த பின்னர் நடிகர் விஜய், லோகேஷ் கனகராஜ் இயக்கும் 'தளபதி 67' படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்ளவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.




    • தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜய்.
    • இவர் தற்போது வாரிசு திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

    வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து வரும் திரைப்படம் 'வாரிசு'. இந்த படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் நேரடியாக வெளியாக உள்ளது. இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா நடித்து வருகிறார். மேலும், பிரகாஷ்ராஜ், சரத்குமார், குஷ்பூ, ஷாம், யோகி பாபு உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.


    வாரிசு

    இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. இதைத்தொடர்ந்து, இயக்குனர் லோகேஷ் கனகராஜ், விஜய்யின் அடுத்த படமான 'தளபதி 67' படத்தை இயக்கவுள்ளார். இப்படம் தொடங்குவதற்கு முன்பே ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

    இந்நிலையில், இந்த படத்தின் புதிய தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, தளபதி 67 படத்தில் காமெடி நடிகர் யோகி பாபு இணையவுள்ளதாக கூறப்படுகிறது. இது உறுதியானால், விஜய்யுடன் யோகிபாபு இணையும் 6-வது படமாக 'தளபதி 67' இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. 

    • இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அண்மையில் வெளியான திரைப்படம் ‘விக்ரம்’.
    • இப்படத்தில் திரைப்பிரபலங்கள் பலர் நடித்த்துள்ளனர்.

    மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம் படங்களை இயக்கி தமிழ் சினிமாவில் தனக்கான இடத்தை பிடித்தவர் லோகேஷ் கனகராஜ். இவர் இயக்கத்தில் கமல்ஹாசன் கதாநாயகனாக நடிக்க விஜய் சேதுபதி, பகத் பாசில், நரேன், சூர்யா உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த 'விக்ரம்' திரைப்படம் தமிழ், தெலுங்கு, என பல மொழிகளில் அண்மையில் வெளியாகி ரூ.400 கோடிக்கும் மேல் வசூல் சாதனை படைத்தது.


    விக்ரம்

    'விக்ரம்' திரைப்படம் ஓடிடி-யில் வெளியாகி சாதனை படைத்திருந்தாலும் தற்போது வரை சில திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில், 'விக்ரம்' திரைப்படம் 100-வது நாளை எட்டியுள்ளது. இதனை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இது தொடர்பாக கமல்ஹாசன் தனது சமூக வலைதளப் பக்கத்தில் ஆடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

    அதில், "ரசிகர்களின் ஆதரவோடு விக்ரம் திரைப்படம் 100-வது நாளை எட்டியிருக்கிறது. மிகுந்த மகிழ்ச்சியோடு இருக்கிறேன். தலைமுறைகளை தாண்டி என்னை ரசிக்கும் உங்கள் ஒவ்வொருவரையும் மானசீகமாக தழுவிக்கொள்கிறேன். விக்ரம் வெற்றிக்கு காரணமாக இருந்த ஒவ்வொருவருக்கும் எனது இதயம் கனிந்த நன்றிகள். தம்பி லோகேஷுக்கு எனது அன்பும் வாழ்த்தும்." என நெகிழ்ச்சியுடன் பேசியுள்ளார்.


    • சமீபத்தில் கமல் நடிப்பில் வெளியான விக்ரம் படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கியிருந்தார்.
    • தனது படங்களில் போதைப்பொருட்கள் பயன்பாடு குறித்தும், அதன் தீய விளைவுகள் குறித்தும் எடுத்துரைத்து வருவதாக தெரிவித்துள்ளார்.

    'மாநகரம்', 'கைதி', 'மாஸ்டர்', 'விக்ரம்' போன்ற படங்களை இயக்கியதன் மூலம் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் லோகேஷ் கனகராஜ். இவர் இயக்கவிருக்கு அடுத்த படத்தில் விஜய் நடிக்கவுள்ளார். இப்படம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது.

     

    லோகேஷ் கனகராஜ்

    லோகேஷ் கனகராஜ்

    பொதுவாகவே தனது படங்களில் போதைப்பொருட்கள் பற்றி குறிப்பிடுவதை லோகேஷ் கனகராஜ் வழக்கமாக வைத்திருக்கிறார். அது ஏன்? என்பது குறித்து அவர் கூறியதாவது, "தற்போது போதைப்பொருட்களின் பயன்பாட்டை அதிகமாகவே பார்க்க முடிகிறது. இதை முற்றிலுமாக தடுக்கத்தான் எல்லோரும் முயற்சி செய்கிறோம்.

     

    லோகேஷ் கனகராஜ்

    லோகேஷ் கனகராஜ்

    என்னுடைய படத்தில் போதைப்பொருட்கள் குறித்து கூறுவதின் காரணமும் இதுதான். போதைப்பொருட்களுக்கு எதிரான செயல்பாட்டில் பெரிய நட்சத்திரங்கள் நடிப்பதன் மூலம் அவர்களது ரசிகர்களுக்கு ஒரு விழிப்புணர்வு ஏற்படும். நிச்சயம் ஒரு மாற்றம் உருவாகும் என்பது தான் என் நம்பிக்கை. அதற்காகத்தான் என் படங்களில் போதைப்பொருட்கள் பயன்பாடு குறித்தும், அதன் தீய விளைவுகள் குறித்தும் எடுத்துரைத்து வருகிறேன்" என்றார்.

    • இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடித்திருந்த படம் கைதி.
    • இந்த படத்தின் அப்டேட் வெளியாகியுள்ளது.

    இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் கார்த்தி நடிப்பில் கடந்த 2019-ஆம் ஆண்டு வெளியான "கைதி" திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதோடு மட்டுமல்லாமல் "கைதி -2" படத்தின் எதிர்பார்ப்பையும் அதிகப்படுத்தியது. இதன் பின்னர், கமல்ஹாசன், பகத் ஃபாசில், விஜய் சேதுபதி ஆகியோரின் நடிப்பில் வெளியான "விக்ரம்" திரைப்படத்தில் "கைதி" காட்சிகள் இடம்பெற்றது ரசிகர்கள் மத்தியில் "கைதி -2" படப்பிடிப்பு எப்போது தொடங்கும் என்ற கேள்வியை எழுப்பியது.


    கைதி

    இந்நிலையில், "விருமன்" படத்தின் ப்ரொமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கார்த்தியிடம் கைதி -2 படம் எப்போது தொடங்கப்படும் என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த கார்த்தி, அடுத்த ஆண்டு "கைதி -2" திரைப்படம் தொடங்கும். லோகேஷ் கனகராஜ் தற்போது விஜய்யின் தளபதி 67 படத்தில் கவனம் செலுத்தி வருவதால், அந்த படத்தை முடித்த பின்னர் "கைதி -2" படத்தின் பணிகள் தொடங்கும்" எனக் கூறியுள்ளார்.

    நடிகர் கார்த்தியின் "விருமன்" திரைப்படம் ஆகஸ்ட் -12 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

    ×