search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ராமநாதபுரம் விபத்து"

    • விபத்தில் படுகாயமடைந்த 14 ஐயப்ப பக்தர்களை அந்தப்பகுதியினர் மீட்டு கீழக்கரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
    • சம்பவம் தொடர்பாக ஏர்வாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    முதுகுளத்தூர்:

    கர்நாடகா மாநிலம் பெல்லாரி பகுதியை சேர்ந்த ஐயப்ப பக்தர்கள் 47 பேர் உள்பட 49 பேர் சபரிமலைக்கு பஸ்சில் புறப்பட்டனர். இவர்கள் அங்கு சாமி தரிசனம் செய்துவிட்டு தமிழகத்தில் உள்ள முக்கிய கோவில்களுக்கு செல்ல திட்டமிட்டனர்.

    அதன்படி கர்நாடக பக்தர்கள் குழுவினர் திருச்செந்தூர் சென்று விட்டு நேற்று இரவு ராமேசுவரத்திற்கு பஸ்சில் புறப்பட்டனர்.

    இன்று அதிகாலை ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி அருகே உள்ள புல்லந்தை நெடுஞ்சாலையில் பஸ் வந்து கொண்டிருந்தது. அங்குள்ள சி.எஸ்.ஐ. சர்ச் அருகே ரோட்டோரத்தில் நின்றிருந்த லாரி மீது கர்நாடக பஸ் எதிர்பாராத விதமாக மோதியது. இதில் பஸ்சின் முன் பகுதி பலத்த சேதமடைந்தது. பஸ்சில் பயணித்த பெல்லாரியை சேர்ந்த கண்ணப்பா என்பவரின் மகன் சந்தீப்(வயது25) என்பவர் ரத்த வெள்ளத்தில் படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே பலியானார்.

    இந்த விபத்தில் படுகாயமடைந்த 14 ஐயப்ப பக்தர்களை அந்தப்பகுதியினர் மீட்டு கீழக்கரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக ஏர்வாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கார் மீது அரசு பஸ் மோதிய விபத்தில் 2 பெண்கள் உள்பட 3 பேர் பலியான சம்பவம் பரமக்குடி பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
    • விபத்து குறித்து பரமக்குடி தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    பரமக்குடி:

    ராமநாதபுரத்தைச் சேர்ந்தவர் சோமசுந்தரம் (வயது80). இவர் தனது குடும்பத்தினருடன் கிருஷ்ணகிரியில் நடந்த உறவினர் வளைகாப்பு நிழ்ச்சியில் கலந்து கொண்டார். பின்னர் காரில் ஊருக்கு திரும்பி வந்து கொண்டிருந்தனர்.

    ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே அரியனேந்தல் என்ற இடத்தில் கார் வந்த போது ராமநாதபுரத்தில் இருந்து மதுரை நோக்கி வந்த அரசு பஸ் கார் மீது மோதியது. இதில் கார் நொறுங்கி சேதமானது. இந்த விபத்தில் காரில் பயணம் செய்த மணிமேகலை, நிர்மலா, கார் டிரைவர் செல்வகுமார் ஆகிய 3 பேரும் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர்.

    ராமநாதபுரத்தில் இருந்து மதுரை சென்ற அரசு பஸ் நான்கு வழிச்சாலையில் பரமக்குடி ஊருக்குள் செல்வதற்காக எதிர் திசையில் சென்றபோது இந்த விபத்து நடந்துள்ளது. இதில் காயம் அடைந்த 5 பேர் சிகிச்சைக்காக பரமக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். பின்னர் அவர்கள் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இந்த விபத்து குறித்து பரமக்குடி தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    இதில் பகைவென்றி கிராமத்தை சேர்ந்த அரசு பஸ் டிரைவர் கேசவன் (53) என்பவர் குறுக்கு வழியில் சென்றபோது இந்த விபத்து நடந்திருப்பது தெரிய வந்தது. கேசவன் மீது ஏற்கனவே இரு விபத்து வழக்கு உள்ளது. போக்குவரத்து விதியை மீறி சென்றதால் இந்த ஏற்பட்டுள்ளதால் கேசவனை போலீசார் கைது செய்தனர்.

    கார் மீது அரசு பஸ் மோதிய விபத்தில் 2 பெண்கள் உள்பட 3 பேர் பலியான சம்பவம் பரமக்குடி பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • ராமநாதபுரம் மாவட்டம் தேவிப்பட்டினம் பெரியகடை தெரு அருகே வந்த ஒரு டிராக்டர் பாபுஜி என்பவரது பெட்டிக்கடையில் மோதியது.
    • டிராக்டரை ஓட்டி வந்த டிரைவர் நாகபட்டினம் கீழையூர் பகுதியைச் சேர்ந்த தமிழ்மணி என்பவர் படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே இறந்தார்.

    ராமநாதபுரம்:

    ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அலவாய்க்கரைவாடி பகுதியை சேர்ந்த ராமநாதன் மகன் ஜீவா (வயது 20), மாடசாமி மகன் மணி வேலன் (18), ரவி மகன் ரோசான் (18) ஆகிய 3 பேரும் நேற்று கீழக்கரையில் இருந்து ராமநாதபுரத்திற்கு ஒரே மோட்டார் சைக்கிளில் சென்றனர்.

    அவர்கள் கிழக்கு கடற்கரை சாலையில் சென்றபோது அந்த வழியாக ஒரு வேன், மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் மோட்டார் சைக்கிளில் வந்த ஜீவா, மணி வேலன் ஆகியோர் படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர்.

    இந்த விபத்தில் படுகாயமடைந்த ரோசான் மீட்கப்பட்டு அவருக்கு ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் அவர் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

    இந்த விபத்து குறித்து திருப்புல்லாணி இன்ஸ்பெக்டர் பாலமுரளி சுந்தரம் வழக்குப்பதிவு செய்து திருச்சி எம்.கே.கோட்டையை சேர்ந்த வேன் டிரைவர் முகமது நிஷாருதீன் (29) என்பவரை கைது செய்தனர்.

    ராமநாதபுரம் மாவட்டம் வாலிநோக்கம் அருகே தத்தங்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் இளையராஜா (20). இவரது உறவினர் வெற்றிவீரன் (27). அவரது நண்பர் முகமது ராஜா (18) ஆகியோர் நேற்று மோட்டார் சைக்கிளில் சென்று வாலிநோக்கம் விலக்கு ரோட்டில் உள்ள கடையில் பலகாரம் வாங்கினர்.

    பின்னர் அவர்கள் சொந்த ஊருக்கு புறப்பட்டுச் சென்றனர். அவர்கள் கொத்தங்குளம் பெருமாள் கோவில் அருகே சென்றபோது எதிரே வந்த கார், மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த 3 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர்.

    இந்த விபத்து குறித்து தகவல் கிடைத்ததும் வாலிநோக்கம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காரை ஓட்டி வந்த மேல கிடாரத்தைச் சேர்ந்த முகேஷ் (26) என்பவரை கைது செய்தனர். மேலும் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ராமநாதபுரம் மாவட்டம் தேவிப்பட்டினம் பெரியகடை தெரு அருகே வந்த ஒரு டிராக்டர் பாபுஜி என்பவரது பெட்டிக்கடையில் மோதியது. இதில் டிராக்டரை ஓட்டி வந்த டிரைவர் நாகபட்டினம் கீழையூர் பகுதியைச் சேர்ந்த தமிழ்மணி (27) என்பவர் படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே இறந்தார். இந்த விபத்து குறித்து தேவிபட்டினம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×