என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

கீழக்கரை அருகே 2 கார்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 5 பேர் பலி
- படுகாயமடைந்த 5-க்கும் மேற்பட்டோர் ராமநாதபுரம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
- விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அருகே 2 கார்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 2 ஐயப்ப பக்தர்கள் உள்பட 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
ஆந்திராவில் இருந்து ராமேஸ்வரம் வந்த காரும், கீழக்கரையில் இருந்து ஏர்வாடி நோக்கி வந்த காரும் கீழக்கரை காவல் நிலையம் அருகே நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.
விபத்தில் படுகாயமடைந்த 5-க்கும் மேற்பட்டோர் ராமநாதபுரம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story






