என் மலர்
நீங்கள் தேடியது "யோகி டா"
நேர்மையான போலீஸ் இன்ஸ்பெக்டரான நாயகி சாய் தன்ஷிகா, அடிக்கடி டிரான்ஸ்பர் பெற்று வருகிறார். அந்த வகையில் சென்னை வியாசர்பாடி காவல் நிலையத்திற்கு வந்து சேருகிறார் சாய் தன்ஷிகா. அந்த பகுதியை தனது கட்டுப்பாட்டில் வைத்து கொலை, அடிதடி, போதை மருந்து கடத்தல் போன்ற குற்றங்களில் ஈடுபட்டு வரும் தாதா கபீர் துஹான் சிங்குடன் தன்ஷிகாவுக்கு நேரடி மோதல் உருவாகிறது.
மத்திய அமைச்சராக இருக்கும் அண்ணன் ஷாயாஜி ஷிண்டேவின் அரசியல் ஆதரவுடன் வில்லன் கபீர் சிங் அராஜகம் செய்து வருகிறார்.
இறுதியில் கபீர் சிங் செய்யும் அராஜகங்களுக்கு தன்ஷிகா எப்படி பதிலடி கொடுத்தார்? என்பதே படத்தின் மீதிக்கதை.
படத்தில் நாயகியாக நடித்திருக்கும் சாய் தன்ஷிகா அதிரடி போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்தி இருக்கிறார். கிராப் ஹேர்ஸ்டைல், மிடுக்கான தோற்றம், ஆக்ஷன் காட்சிகளில் காட்டும் உடல் மொழி ஆகியவை கதாபாத்திரத்திற்கு வலு சேர்க்கின்றன. குறிப்பாக, டூப் இல்லாமல் நடித்திருக்கும் சண்டை காட்சிகளில் கவனத்தை ஈர்த்து இருக்கிறார்.
விஜயசாந்தி படங்களை நினைவூட்டும் வகையில், முழுக்க பெண் மைய ஆக்ஷன் படமாக யோகிடாவை உருவாக்க முயற்சித்திருக்கிறார் இயக்குநர் கவுதம் கிருஷ்ணா. ஆனால், கதையும் திரைக்கதையும் புதுமை இல்லாத வழக்கமான போலீஸ்–வில்லன் பாதையிலேயே பயணிக்கிறது. தாதா வில்லன், அரசியல் ஆதரவு, நேர்மையான அதிகாரிக்கு எதிரான சதிகள் என ஏற்கனவே பல படங்களில் பார்த்த அம்சங்களே அதிகம் இடம்பெறுகின்றன. வில்லன் கபீர் சிங், ஷாயாஜி ஷிண்டே மற்றும் பல கதாபாத்திரங்களுக்கு எதிர்பார்த்த அளவு அழுத்தமான காட்சிகள் அமையவில்லை.
பூபதியின் ஒளிப்பதிவு மற்றும் கணேஷ் குமாரின் சண்டை அமைப்பு படத்திற்கு பலம் சேர்க்கின்றன. தீபக் தேவின் இசையில் பாடல்கள் சுமார் ரகம். பின்னணி இசையில் கூடுதல் கவனம் செலுத்தி இருக்கலாம்.
மாலைமலர் ரேட்டிங்: 2 / 5
- சாய் தன்ஷிகா ஐந்தாம் வேதம் வெப் தொடரை தொடர்ந்து யோகி டா திரைப்படத்தில் நடித்துள்ளார்.
- அதிரடி ஆக்ஷன் நிறைந்த காட்சிகள் டிரெய்லரில் இடம் பெற்றுள்ளது
அண்மையில் நடிகர் விஷால் மற்றும் சாய் தன்ஷிகா அவர்களது காதல் மற்றும் திருமணத்தை குறித்து அதிகாரப்பூர்வமாக தெரிவித்தனர். இச்செய்தி மிகவும் வைரலானது. மொரட்டு சிங்கிளாக இருந்த விஷாலுக்கு திருமணம் நடைப்பெறுவதை குறித்து நெட்டிசன்கள் பலரும் வாழ்த்து தெரிவித்தனர்.
சாய் தன்ஷிகா ஐந்தாம் வேதம் வெப் தொடரை தொடர்ந்து யோகி டா திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் சாய் தன்ஷிகா காவல் அதிகாரியாக நடித்துள்ளார். இப்படத்தி டிரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது. டிரெய்லரை நடிகர் விஷால் அவரது எக்ஸ் தளத்தில் வெளியிட்டார் அதிரடி ஆக்ஷன் நிறைந்த காட்சிகள் டிரெய்லரில் அமைந்துள்ளது.
யோகி டா படத்தை கவுதம் கிருஷ்ணா எழுதி இயக்கியுள்ளார். படத்தை ஸ்ரீ மோனிகா சினி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்தில் சாய் தன்ஷிகாவுடன் சயாஜி ஷிண்டே, கபிர் துஹன் சிங் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். திரைப்படம் விரைவில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
- தனக்கு பெண் பார்த்துவிட்டதாகவும், பேசி முடித்துவிட்டதாகவும் விஷால் தெரிவித்தார்.
- யோகி டா படத்தின் இயக்குனர் ஆர்.பி.உதயகுமார் மேடையிலேயே அறிவித்தார்.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஷால், தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பொதுச்செயலாளராகவும் இருக்கிறார்.
நடிகர் சங்கத்துக்கு கட்டிடம் கட்டப்பட்ட பின்னரே நான் திருமணம் செய்துகொள்வேன் என்று அறிவித்தார். தற்போது நடிகர் சங்க கட்டிடம் கட்டும் பணிகள் முழுவீச்சில் நடந்து வருகிறது.
இந்தநிலையில் தனக்கு பெண் பார்த்துவிட்டதாகவும், பேசி முடித்துவிட்டதாகவும் விஷால் தெரிவித்தார்.
மேலும் அவர்"எப்படி பார்த்தாலும் இன்னும் 4 மாதத்தில் எனக்கு திருமணம் நடக்கும்.
பெண் பார்த்து விட்டோம். பேசி முடித்துவிட்டோம். காதல் திருமணம் தான். அவர் யார்? அவர் பெயர் என்ன? என்பதை நேரம் வரும்போது சொல்கிறேன். ஒரு மாதமாகத்தான் அந்த பெண்ணை காதலித்து வருகிறேன்'', என்று விஷால் தெரிவித்திருந்தார்.
இதற்கிடையே, நடிகை சாய் தன்ஷிகாவை தான் விஷால் திருமணம் செய்யப்போகிரார் அவரை தான் காதலித்தும் வருகிறார் என்ற தகவல் வெளியானது.
சாய் தன்ஷிகா பேராண்மை, பரதேசி, அரவான், கபாலி போன்ற வெற்றி திரைப்படங்களில் நடித்து இருந்தார். இவர் நடிப்பில் கடைசியாக ஐந்தாம் வேதம் என்ற வெப் தொடர் கடந்த ஆண்டு ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.
இவர் அடுத்ததாக யோகி டா என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். அப்படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி இன்று மாலை நடைப்பெற்று வருகிறது.
இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக விஷால் கலந்துக் கொண்டுள்ளார்.
இந்நிலையில், நடிகர் விஷாலும், நடிகை சாய் தன்ஷிகாவும் காதலித்து வருவதாகவும் அதிகாரப்பூர்வமாக இந்நிகழ்ச்சியில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தகவலை யோகி டா படத்தின் இயக்குனர் ஆர்.பி.உதயகுமார் மேடையிலேயே அறிவித்தார்.
So happy to have you in our team sir & Loved your work in Lucifer 😃😃😃 https://t.co/xCFJe2d6DB
— SaiDhanshika (@SaiDhanshika) April 21, 2019








