என் மலர்
சினிமா செய்திகள்

நடிகை சாய் தன்ஷிகாவை கரம் பிடிக்கும் விஷால்- அதிகாரப்பூர்வ அறிவிப்பு
- தனக்கு பெண் பார்த்துவிட்டதாகவும், பேசி முடித்துவிட்டதாகவும் விஷால் தெரிவித்தார்.
- யோகி டா படத்தின் இயக்குனர் ஆர்.பி.உதயகுமார் மேடையிலேயே அறிவித்தார்.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஷால், தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பொதுச்செயலாளராகவும் இருக்கிறார்.
நடிகர் சங்கத்துக்கு கட்டிடம் கட்டப்பட்ட பின்னரே நான் திருமணம் செய்துகொள்வேன் என்று அறிவித்தார். தற்போது நடிகர் சங்க கட்டிடம் கட்டும் பணிகள் முழுவீச்சில் நடந்து வருகிறது.
இந்தநிலையில் தனக்கு பெண் பார்த்துவிட்டதாகவும், பேசி முடித்துவிட்டதாகவும் விஷால் தெரிவித்தார்.
மேலும் அவர்"எப்படி பார்த்தாலும் இன்னும் 4 மாதத்தில் எனக்கு திருமணம் நடக்கும்.
பெண் பார்த்து விட்டோம். பேசி முடித்துவிட்டோம். காதல் திருமணம் தான். அவர் யார்? அவர் பெயர் என்ன? என்பதை நேரம் வரும்போது சொல்கிறேன். ஒரு மாதமாகத்தான் அந்த பெண்ணை காதலித்து வருகிறேன்'', என்று விஷால் தெரிவித்திருந்தார்.
இதற்கிடையே, நடிகை சாய் தன்ஷிகாவை தான் விஷால் திருமணம் செய்யப்போகிரார் அவரை தான் காதலித்தும் வருகிறார் என்ற தகவல் வெளியானது.
சாய் தன்ஷிகா பேராண்மை, பரதேசி, அரவான், கபாலி போன்ற வெற்றி திரைப்படங்களில் நடித்து இருந்தார். இவர் நடிப்பில் கடைசியாக ஐந்தாம் வேதம் என்ற வெப் தொடர் கடந்த ஆண்டு ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.
இவர் அடுத்ததாக யோகி டா என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். அப்படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி இன்று மாலை நடைப்பெற்று வருகிறது.
இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக விஷால் கலந்துக் கொண்டுள்ளார்.
இந்நிலையில், நடிகர் விஷாலும், நடிகை சாய் தன்ஷிகாவும் காதலித்து வருவதாகவும் அதிகாரப்பூர்வமாக இந்நிகழ்ச்சியில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தகவலை யோகி டா படத்தின் இயக்குனர் ஆர்.பி.உதயகுமார் மேடையிலேயே அறிவித்தார்.






