search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "முல்லைப்பெரியாறு"

    • மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் தேனி மாவட்டத்தில் கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் அணைகள், பெரும்பாலான நீர்நிலைகள் நிரம்பி விட்டன.
    • நீர் வரத்து அதிகரித்துள்ளதால் அணையின் நீர்மட்டம் சீராக உயர்ந்து வருகிறது. எனவே 2-ம் போக சாகுபடிக்கு முன் 142 அடியை எட்டுமா? என விவசாயிகள் எதிர்பாார்த்துள்ளனர்.

    கூடலூர்:

    மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் தேனி மாவட்டத்தில் கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் அணைகள், பெரும்பாலான நீர்நிலைகள் நிரம்பி விட்டன.

    கொடைக்கானலில் பெய்த கன மழையால் கும்பக்கரை அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. எனவே சுற்றுலா பயணிகள் பாதுகாப்பு கருதி தடை விதிக்கப்படுவதாக வனத்துறையினர் தெரிவித்தனர்.

    இதேபோல் சோத்துப்பாறை அணை நிரம்பி கூடுதல் தண்ணீர் வெளியேற்றப்படுவதால் வராக நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மேலும் முல்லைப்பெரியாறு, மூல வைகையாறு, கொட்டக்குடி ஆறு உள்ளிட்ட ஆறுகளில் தண்ணீர் கரைபுரண்டு ஓடுகிறது.

    மேகமலை பகுதியில் பெய்து வரும் தொடர் மழையால் சுருளி அருவியிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.

    71 அடி உயரம் கொண்ட வைகை அணையில் 70 அடியில் நீர்மட்டம் நிலை நிறுத்தப்பட்டது. இந்த நிலையில் இன்று காலை 70.93 அடி வரை தண்ணீர் தேக்கப்பட்டது. அணைக்கு 2131 கன அடி நீர் வருகிறது. அணையில் இருந்து 1319 கனஅடி நீர் திறக்கப்படுகிறது. மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 55 அடியாக உள்ளது.408 கன அடி நீர் வருகிறது. 40 கன அடி பாசனத்திற்கும், 368 கன அடி நீர் உபரியாகவும் திறக்கப்படுகிறது.

    சோத்துப்பாறை அணை முழு கொள்ளளவான 126.60 அடியில் நீடிக்கிறது. 251 கனஅடி நீர் வருகிறது. 30 கன அடி நீர் பாசனத்திற்கும் 221 கன அடி நீர் உபரியாகவும் திறக்கப்படுகிறது.

    முல்லைப்பெரியாறு அணை நீர்மட்டம் 134.50 அடியாக உயர்ந்துள்ளது. 1731 கன அடி நீர் வருகிறது. அணையில் இருந்து தமிழக பகுதிக்கு 511 கன அடி நீர் திறக்கப்படுகிறது. நீர் வரத்து அதிகரித்துள்ளதால் அணையின் நீர்மட்டம் சீராக உயர்ந்து வருகிறது. எனவே 2-ம் போக சாகுபடிக்கு முன் 142 அடியை எட்டுமா? என விவசாயிகள் எதிர்பாார்த்துள்ளனர். மேலும் தொடர் மழையால் விவசாய பணிகள் மும்முரம் அடைந்துள்ளன.

    பெரியாறு 8.8, தேக்கடி 1.8, கூடலூர் 2, உத்தமபாளையம் 7.2, வீரபாண்டி 4.6, வைகை அணை 2.6, மஞ்சளாறு 5, சோத்துப்பாறை 16, அரண்மனைபுதூர் 0.2, போடி 7.2, பெரியகுளம் 24 மி.மீ. மழை அளவு பதிவாகி உள்ளது.

    • முல்லைப்பெரியாறு குடிநீர் திட்டம் லோயர்கேம்ப் பகுதியில் மாநகராட்சி கமிஷனர் ஆய்வு செய்தார்.
    • பணிகளை விரைவுப்படுத்த உத்தரவு பிறப்பித்தார்.

    மதுரை

    மதுரை மாநகராட்சி பகுதிகளுக்கு முல்லை பெரியாறு, லோயர் கேம்ப் பகுதியில் இருந்து குழாய் மூலம் குடிநீர் கொண்டு வரும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. 1296 கோடி ரூபாய் மதிப்பிலான இந்த திட்டப் பணிகள் கடந்த சில மாதங்களாக தீவிர படுத்தப்பட்டு குழாய்கள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.

    மதுரை நகர் பகுதி களிலும் அனைத்து வார்டு களிலும் புதிய குடிநீர் குழாய் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் முல்லை பெரியாறு லோயர் கேம்ப் பகுதியில் அமைக்கப்பட்டு வரும் குடிநீர் தேக்கம் பணிகள் முடிவடை ந்துள்ளன.

    இந்த பணிகளை மாநக ராட்சி கமிஷனர் சிம்ரன் ஜித் சிங் காலோன் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது பணிகளை விரைவு படுத்தவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இன்னும் ஒரு சில மாதங்களில் பணிகள் நிறைவு பெற்று மதுரை நகரின் அனைத்து பகுதிகளுக்கும் குழாய் மூலம் சப்ளை செய்ய தேவையான ஏற்பாடுகளை எடுத்து வருவதாக மாநக ராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    • முல்லைப்பெரியாறு அணையில் இருந்து மேலும் கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
    • இதனால் 4 ஜெனரேட்டர்கள் இயக்கி மின் உற்பத்தி செய்யப்படுகிறது.

    கூடலூர்:

    மேற்கு தொடர்ச்சி மலையையொட்டியுள்ள தேனி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பருவ மழை தீவிரம் அடைந்துள்ளது. இதனால் முல்லை–ப்பெரியாறு அணைக்கு தொடர்ந்து நீர் வரத்து அதிகரித்து வருகிறது. அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 127.70 அடியாக உள்ளது. நேற்று 799 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று 1457 கன அடியாக அதிகரித்துள்ளது.

    நேற்று வரை 1000 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வந்த நிைலயில் இன்று காலை முதல் 1678 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால் லோயர்கேம்ப் மின் உற்பத்தி நிலையத்தில் 4 ஜெனரேட்டர்களும் முழுமையாக இயக்கப்பட்டு மின் உற்பத்தி நடைபெற்று வருகிறது. நீர் இருப்பு 4201 மி.கன அடியாக உள்ளது.

    வைகை அணையின் நீர்மட்டம் 52.99 அடியாக உள்ளது. வரத்து 939 கன அடி. திறப்பு 869 கன அடி. இருப்பு 2409 மி.கன அடி. மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 49.20 அடி. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 81.18 அடி. திறப்பு 3 கன அடி.

    பெரியாறு 22, தேக்கடி 17.4, கூடலூர் 10.8, உத்தமபாளையம் 11.6 மி.மீ. மழை அளவு பதிவாகி உள்ளது.

    ×