search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "முட்புதர்கள்"

    குவிந்து நிற்கும் முட்புதர்களை அகற்ற வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

    ஊட்டி,

    ஊட்டி நகராட்சி 10-வது வார்டுக்கு உட்பட்ட ரெட்கிராஸ் சாலை மற்றும் குடியிருப்பு பகுதியில் முட்புதர்கள் வளர்ந்து புதர்கள் போல காட்சி அளித்தன. எனவே அங்கு குவிந்து நிற்கும் முட்புதர்களை அகற்ற வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

    இந்த நிலையில் ரெட்கிராஸ் சாலை மற்றும் குடியிருப்பு பகுதியில் உள்ள முட்புதர்களை அகற்றுவதற்காக, நகர மன்ற உறுப்பினர் அபுதாஹிர் முயற்சிகளை மேற்கொண்டார். இதன் அடிப்படையில் நகராட்சி ஊழியர்கள் அங்கு உள்ள முட்புதகர்களை வெட்டி அகற்றி சீர்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது நகர மன்ற தலைவர் வாணிஸ்வரி மேகநாதன், 25-வது வார்டு நகர மன்ற உறுப்பினர் கீதா மற்றும் வருவாய்த்துறை, மின்வாரிய அதிகாரிகள் ஆகியோர் உடன் இருந்தனர்.

    • ஆற்றின் மேடான பகுதிகளில், செடி, கொடிகள் மற்றும் முட்புதர்கள் வளர்ந்து காணப்படுகிறது.
    • கடைமடை பகுதிகளுக்கு வந்து சேர வேண்டிய நீர் சரிவர சேர்வதில்லை.

    காங்கேயம் :

    உடுமலை மேற்கு தொடர்ச்சி மலையில் உற்பத்தியாகும் அமராவதி ஆறு தாராபுரம் வழியாக வெள்ளக்கோவில், மூலனூர், காங்கேயத்தின் சில பகுதிகள் வரை பாய்ந்து கரூர் அருகே காவிரி ஆற்றில் கலக்கியது.

    இதன் மூலம் பல ஆயிரம் ஏக்கர் நிலங்கள் சாகுபடி செய்யப்படுகின்றன. குடிநீர் தேவையும் பூர்த்தி ஆகிறது. ஆற்றின் இருகரைகள் மற்றும் ஆற்றின் மேடான பகுதிகளில், செடி, கொடிகள் மற்றும் முட்புதர்கள் வளர்ந்து காணப்படுகிறது. அதனால் நீரோட்டம் தடைப்படுகிறது. கடைமடை பகுதிகளுக்கு வந்து சேர வேண்டிய நீர் சரிவர சேர்வதில்லை. ஆகவே கடைமடை பகுதியில் இருந்து தூர் வாரும் பணியினை தொடங்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • முட்புதர்கள் அதிகளவு தேக்கம் அடைந்து புதர் மண்டி காணப்படுகின்றது.
    • நகராட்சி சுகாதாரத்துறை ஊழியர்கள் தூய்மைப்படுத்த வேண்டுமென அப்பகுதி குடியிருப்பு வாசிகள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    உடுமலை:

    திருப்பூர் மாவட்டம் உடுமலை நகராட்சிக்குட்பட்ட ரங்கநாதன் லே-அவுட்டு பகுதியில் அரசு கல்லூரிக்கு செல்லும் வழியில் ரங்கநாதன் லே-அவுட் பகுதியில் உள்ள டிரான்ஸ்பார்ம் அருகில் தற்பொழுது முட்புதர்கள் அதிகளவு தேக்கம் அடைந்து புதர் மண்டி காணப்படுகின்றது. இதனால் இப்பகுதியில் இரவு நேரங்களில் மற்றும் பகல் நேரங்களில் விஷசந்துகள் நடமாட்டம் அதிகம் உள்ள காரணத்தால் சம்பந்தப்பட்ட நகராட்சி சுகாதாரத்துறை ஊழியர்கள் தூய்மைப்படுத்த வேண்டுமென அப்பகுதி குடியிருப்பு வாசிகள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

    தியாகதுருகம் அருகே சாலை ஓர முட்புதர்களால் வாகன ஓட்டிகள் அவதி

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் அருகே சிறுநாகலூர் கிராமம் உள்ளது. தியாகதுருகத்தில் இருந்து சுமார் 12 கி.மீ தூரத்தில் சிறுநாகலூர் கிராமம் உள்ளது. இந்த கிராமத்திற்கு செல்லும் தார் சாலையில் சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு வனப்பகுதி உள்ளது.  இந்த பகுதியில் சாலையின் இருபுறமும் முள்புதர்கள் மண்டியும், சாலையோரம் பள்ளமாகவும் காணப்படுகின்றன. இதனால் இந்த வழியாக செல்லும் பொறையூர், சிறுநாகலூர், கொட்டையூர், நின்னையூர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த வாகன ஓட்டிகள் இந்த சாலையில் செல்லும் போது ஒதுங்க முடியாமல் அவதிப்படுகின்றனர். மேலும் அவ்வப்போது விபத்து ஏற்படுவதாகவும் அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு செய்து சாலையோர முட்புதர்களை உடனடியாக அகற்றவும், சாலையோர பள்ளங்களை சரி செய்யவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

    ×