search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மின்இணைப்பு"

    • மின் இணைப்பு மற்றும் பெயர் மாற்றம் ஆகியவை குறித்து சிறப்பு முகாம் நடைபெறுகிறது.
    • அலுவலக நேரத்தில் காலையில் 9 மணி முதல் 5 மணி வரை அலுவலக நேரங்களில் நடைபெற உள்ளது.

    தாராபுரம்:

    தாராபுரம் பகுதியில் புதிய மின் இணைப்பு மற்றும் பெயர் மாற்றம் செய்ய சிறப்பு முகாம் கடந்த 24-ந்தேதி முதல் வருகிற ஆகஸ்டு 24-ந்தேதி வரை அந்தந்த மின்சார வாரிய அலுவலகங்களில் நடைபெற உள்ளது.இது குறித்து தாராபுரம் மின்சார வாரிய கோட்ட செயற் பொறியாளர் வ.பாலன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    தாராபுரம் பகுதியில் மின் இணைப்பு மற்றும் பெயர் மாற்றம் ஆகியவை குறித்து மின் நுகர்வோருக்கான சிறப்பு முகாம் கடந்த 24-ந்தேதி முதல் வருகிற ஆகஸ்டு மாதம் 24-ந்தேதி வரை ஒரு மாத காலத்திற்கு அலுவலக நேரத்தில் காலையில் 9 மணி முதல் 5 மணி வரை அலுவலக நேரங்களில் நடைபெற உள்ளது.

    மின் நுகர்வோர் இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்தி புதிய மின் இணைப்பு மற்றும் பெயர் மாற்றம் செய்யலாம். இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்தி உரிய கீழ்கண்ட ஆவணங்களை அந்தந்த மின்சார வாரிய அலுவலகத்தில் கொடுத்து தங்கள் குறைகளை நிவர்த்தி செய்து கொள்ளலாம்.

    மின் நுகர்வோர் பெயர் மாற்றம் செய்ய ஆதார் அட்டை நகல், நகராட்சி மற்றும் மாநகராட்சியில் சமீபத்தில் செலுத்திய சொத்துவரி ரசீது நகல், விற்பனை பத்திரத்தின் நகல் அல்லது நீதிமன்ற ஆணை, மின் உரிமையாளர் இறந்திருப்பின் அவற்றின் பெயர் மாற்றம் செய்ய கொடுக்க வேண்டிய ஆவணங்கள், ஆதார் அட்டை, நகராட்சி, மாநகராட்சி ஆகியவற்றின் புதிதாக சொத்து வரி செலுத்திய ரசீது நகல், நகராட்சி அல்லது மாநகராட்சி பகுதிகளுக்கு ஏதேனும் ஒரு நகலை சமர்ப்பிக்கலாம்.

    குழு இணைப்புகளில் பொது சேவைக்கான மின் இணைப்புகளில் பெயர் மாற்றம் செய்யும் விண்ணப்பதாரர்கள் இணைக்க வேண்டிய ஆவணங்கள், பில்டர்கள், டெவலப்பர்கள் பெயரில் இருக்கும் பல குடியிருப்புகள், குடியிருப்பு வளாகங்கள், குரூப் ஹவுசிங்கில் உள்ள பொது சேவைக்கான மின் இணைப்புகளுக்கு பெயர் மாற்றம் செய்ய நலவாழ்வு சங்கத்தின் பதிவு சான்று, அப்பார்ட்மெண்ட் பெயருக்கு மாற்ற விண்ணப்பத்தில் கையொப்பமிட்ட குடியிருப்போரிடம் அனுமதி கடிதம் இவற்றுடன் ரூ.726-ஐ செலுத்தி பெயர் மாற்றம் செய்து பயனடையலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • மாநகராட்சி மேயர் மகேஷ் தொடங்கி வைத்தார்
    • சொத்து வரி, மின்இணைப்பு , தண்ணீர் வரி உள்பட அனைத்து தகவல்களும் இடம் பெற்று இருக்கும்.

    நாகர்கோவில் :

    நாகர்கோவில் மாநக ராட்சியின் சேவைகளை பொதுமக்கள் வீட்டில் இருந்தபடியே பயன்படுத்திக் கொள்ள வசதியாக கியூ.ஆர்.கோடு செயலி அறிமுகப் படுத்தப்பட்டுள்ளது.

    நாகர்கோவில் மாநகராட்சி 4-வது வார்டுக் குட்பட்ட கோட்டவிளை காமராஜர் படிப்பகத்தில் நடந்த நிகழ்ச்சியில் மாநகராட்சி மேயர் மகேஷ் கலந்துகொண்டு கியூ.ஆர்.கோடு செயலியை தொடங்கி வைத்தார். இதையடுத்து அந்த பகுதியில் உள்ள மக்களுக்கு மாநகராட்சி சார்பில் கியூ.ஆர்.கோடு அட்டை வழங்கப்பட்டது.

    இதைத்தொடர்ந்து மேயர் மகேஷ் நிருபர்களிடம் கூறியதாவது:-

    நாகர்கோவில் மாநகராட்சியில் பொதுமக்கள் தங்களது பிரச்சினைகளை வீட்டிலிருந்து தெரிவிக்கும் வகையில் கியூ.ஆர்.கோடு செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதில் வீட்டின் உரிமையாளர் பெயர் ரேஷன் கார்டில் உள்ள தகவல்கள், சொத்து வரி, மின்இணைப்பு தகவல்கள், தண்ணீர் வரி தகவல்கள் உள்பட அனைத்து தகவல்களும் இடம் பெற்று இருக்கும். பொதுமக்கள் தங்களது புகார்களையும் இந்த கியூ.ஆர்.கோடு செயலி மூலமாக மாநகராட்சிக்கு தெரிவிக்கலாம். மின் இணைப்பு, தண்ணீர் கட்டணத்தையும் இதன் மூலமாக செலுத்தி கொள்ளலாம். எனவே பொதுமக்கள் வீட்டில் இருந்தபடியே அனைத்து தகவல்களையும் தெரிந்து கொள்ளலாம்.

    முதல் கட்டமாக 4-வது வார்டுக்குட்பட்ட கோவில்விளை பகுதியில் தொடங்கப்பட்டுள்ள கியூ.ஆர்.கோடு செயலி நாகர்கோவில் மாநகராட்சி முழுவதும் படிப்படியாக விரிவுபடுத்தப்படும். மாநகராட்சி ஊழியர்கள் அதற்கான பணியை மேற்கொண்டு வருகிறார் கள்.

    52 வார்டுகளுக்கும் மாநகராட்சி ஊழியர்கள் சென்று இந்த பணியை மேற்கொண்டு உள்ளனர். ஒரு வீட்டில் கியூ.ஆர்.கோடு செயலியை அறிமுகப்படுத்த 20 நிமிடங்கள் ஆகிறது.

    மாநகராட்சிக்குட்பட்ட பகுதியில் உள்ள அனைத்து வீடுகளிலும் கியூ.ஆர்.கோடு செயலி ஒரு மாதத்தில் செயல்படுத்தப்படும். சுமார் 1 லட்சம் வீடுகளுக்கு கியூ.ஆர்.கோடு செயலி அறிமுகப் படுத்தப்பட உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    நிகழ்ச்சியில் காங்கிரஸ் தென்மண்டல ஓ.பி.சி. பிரிவு தலைவர் ஜெயச்சந்தி ரன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    • பொதுமக்கள் 10 ஆயிரம் மின்இணைப்புகளை பயன்படுத்தி வருகின்றனர்.
    • அனைத்து அரசு அலுவலகம், போலீஸ் அலுவலகங்களில் பணிகள் பாதிக்கப்பட்டு வருகின்றன.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் திருமருகல் அடுத்த கீழக்கரையிருப்பில் சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்னர் தமிழ்நாடு மின்சார வாரியம் துணை மின்நிலையம் அமைக்கப்பட்டது. இந்த துணை மின் நிலையம் மூலம் திருமருகல் ஒன்றிய பகுதிகளில் உள்ள சுமார் 50 கிராமங்களில் வசித்து வரும் பொதுமக்கள் 10 ஆயிரம் மின் இணைப்புகளை பயன்படுத்தி வருகின்றனர்.

    இந்த நிலையில் உயர் அழுத்த மின்கம்பிகள் பழுதடைந்து அறுந்து விழுந்து விடுவதால் மின்வினியோகம் பெறும் கிராமங்களில் அடிக்கடி மின்தடை ஏற்பட்டு வருவதாக பொது மக்கள் புகார் கூறுகின்றனர். மேலும் அடிக்கடி மின் தடை ஏற்பட்டு குறைந்த அளவு மின்சாரம் வருவதால் இந்த பகுதிகளில் வசிக்கும் மக்கள் பயன்படுத்தும் மின்சாதனங்கள், உபயோக பொருட்கள் பழுதடைந்து வருகிறது.இதனால் திருமருகல் பகுதியில் உள்ள டிரான்ஸ்பார்மர்கள் அடிக்கடி பழுதடைந்து விடுகிறது.அடிக்கடி ஏற்படும் மின்தடையால் திருமருகல் அரசு ஆஸ்பத்திரி, வேளாண்மை அலுவலகம்,ஊராட்சி ஒன்றிய அலுவலகம், தீயணைப்பு நிலையம் மற்றும் அனைத்து அரசு அலுவலகம்,போலீஸ் அலுவலகங்களில் பணிகள் பாதிக்கப்பட்டு வருகின்றன.

    எனவே திருமருகல் பகுதிகளில் செல்லும் உயர் அழுத்த மின்கம்பிகளை புதிதாக மாற்றியமைத்து தடையின்றி மின்சாரம் வழங்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • தி.மு.க. ஆட்சியில் 1½ லட்சம் விவசாயிகளுக்கு புதிய மின் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்தார்.
    • நடப்பாண்டில் 50,000 புதிய மின் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளது.

    திருப்பத்தூர்,

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் வட்டம், அதிகரம், பில்லத்தியேந்தல் ஆகிய பகுதிகளில் ரூ. 18.47 லட்சம் மதிப்பில் 63 கிலோ வாட் கொண்ட புதிய மின்மாற்றிகளை அமைச்சர் பெரியகருப்பன் பொது மக்களின் பயன்பாட்டுக்கு தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசிய தாவது:-

    மின் இணைப்புகள்

    முதல்-அமைச்சர் பொது மக்களுக்கு பயனுள்ள வகையில், எண்ணற்ற திட்டங்களை தொலை நோக்கு பார்வையுடன் சிந்தித்து சிறப்பாக செயல்படுத்தி வருகிறார். குறிப்பாக, அடிப்படைத் தேவைகள் அனைத்தும் நிறைவேற்றி டும் பொருட்டு, பொது மக்களின் தேவை களை அறிந்து திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வரு கிறது.

    நாட்டின் முதுகெழும் பாக திகழ்ந்து வரும் விவசாயி களின் நலனை காக்கின்ற வகையிலும், விவசாயப் பயன்பாட்டிற்கான புதிய மின் இணைப்புக்களை வழங்கிடும் பொருட்டு, நடவடிக்கைகள் மேற் கொள்வதற்கென 2021- 2022-ம் நிதி யாண்டில் விவசாயி களுக்கென 1 லட்சம் புதிய மின் இணைப்புகளும், நடப்பாண்டில் 50,000 புதிய மின் இணைப்புகளும் வழங்கப்பட்டுள்ளது.

    முதல்-அமைச்சர் ஆட்சிப் பொறுப்பேற்ற 1 ½ ஆண்டு கால ஆட்சியில் மொத்தம் 1,50,000 மின் இணைப்புக்களை விவ சாயிகளுக்கு வழங்கிட நடவடிக்கைகள் மேற் கொண்டு உள்ளார்.

    இவ்வாறு அவர் பேசி னார்.

    இந்நிகழ்ச்சியில் கலெக்டர் மதுசூதுன்ரெட்டி, மின் உதவி செயற்பொறியாளர் கென்னடி, செல்லத்துரை, வட்டாட்சியர் வெங்கடேசன், மண்டல துணை வட்டாட்சியர் செல்லமுத்து, உதவி பொறியாளர் அப்துல் காதர்,சிராவயல் ஊராட்சி மன்ற தலைவர் சரோஜாதேவி குமார், வாணியங்காடு ஊராட்சி மன்ற தலைவர் மீனா மாதவன், மற்றும் திருப்பத்தூர், கல்லல் ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், கிராம பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    ×