search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மந்திரி ரோஜா"

    • பவன் கல்யாணை முதல்வராக வேண்டும் என நினைத்து தான் ஜனசேனா கட்சி நிர்வாகிகள் தேர்தல் பணிகளை தொடங்கினர்.
    • சினிமாவில் பவர் ஸ்டார் என அழைக்கப்படும் பவன் கல்யாண் தற்போது பவர் இல்லாத மனிதர் ஆகிவிட்டார்.

    திருப்பதி:

    ஆந்திர மாநில சுற்றுலாத்துறை மந்திரி ரோஜா அளித்த பேட்டியில் கூறியதாவது,

    தெலுங்கு தேசம் கட்சியில் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.அதில் 24 இடங்களை நடிகர் பவன் கல்யாணின் ஜனசேனா கட்சிக்கு சந்திரபாபு நாயுடு வழங்கியுள்ளார்.

    பவன் கல்யாணை முதல்வராக வேண்டும் என நினைத்து தான் ஜனசேனா கட்சி நிர்வாகிகள் தேர்தல் பணிகளை தொடங்கினர்.

    ஆனால் சந்திரபாபு நாயுடு மீண்டும் முதல்வராக வேண்டும் என பவன் கல்யாண் பேசுவது கட்சியினர் மத்தியிலேயே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    சினிமாவில் பவர் ஸ்டார் என அழைக்கப்படும் பவன் கல்யாண் தற்போது பவர் இல்லாத மனிதர் ஆகிவிட்டார்.

    இதனால் தான் அவர் தன்னை முன்னிலைப்படுத்தாமல் சந்திரபாபு நாயுடுவை முன்னிலைப்படுத்த வந்துள்ளார். சந்திரபாபு நாயுடுவிடம் 25 சதவீத சீட் கூட பெற முடியாதவர் பவன் கல்யாண்.

    40 ஆண்டுகால அனுபவம் உள்ளதாக கூறிக் கொள்ளும் சந்திரபாபு நாயுடு கூட்டணி இல்லாமல் களம் இறங்கினால் படுதோல்வி ஏற்படும் என மேலும் ஒரு கட்சியுடன் கூட்டணிக்காக வழி மேல் விழி வைத்து காத்திருக்கிறார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ஜெகன்மோகன் ரெட்டியின் நலன் மற்றும் வளர்ச்சித் திட்டங்களைக் கண்டு எதிர்க்கட்சிகள் பயப்படுகிறார்கள்.
    • சர்மிளா போன்றவர்கள் தங்களுக்கு வாக்குரிமை உள்ள மாநிலத்துக்கு நிச்சயம் திரும்பிச் செல்வார்கள்.

    திருப்பதி:

    ஆந்திர மாநில சுற்றுலாத்துறை மந்திரி ரோஜா தடா அருகே சுற்றுலா விடுதிகளைத் திறந்து வைத்தார்.

    ஓங்கோலு பாராளுமன்ற தொகுதியில் வேட்பாளராக போட்டியிட போவதாக வதந்தி பரப்பி வருகின்றனர். ஆனால், தொடர்ந்து 2 முறை தனக்கு ஆதரவளித்த நகரி சட்டமன்றத் தொகுதியில் இந்த முறையும் போட்டியிடுவேன்.

    ஆரம்பத்தில் சீட் கிடைக்காது என்றார்கள். இப்போது வேறு எங்காவது சென்று போட்டியிடுவேன் என்று வேறு ஒரு கதையை உருவாக்கிவிட்டார்கள்.

    ஜெகன்மோகன் ரெட்டியின் நலன் மற்றும் வளர்ச்சித் திட்டங்களைக் கண்டு எதிர்க்கட்சிகள் பயப்படுகிறார்கள்.

    சந்திரபாபு நாயுடு, நாரா லோகேஷ், பவன் கல்யாண், சர்மிளா போன்றவர்கள் தங்களுக்கு வாக்குரிமை உள்ள மாநிலத்துக்கு நிச்சயம் திரும்பிச் செல்வார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • மகளிர் அணி சார்பில் விசாகப்பட்டினம் காந்தி சிலை முன்பு கண்டன போராட்டம் செய்தனர்.
    • பவன் கல்யாண் பஞ்சர் செய்யப்பட்ட சைக்கிள். அந்த சைக்கிளை தான் அவர் வைத்திருக்கிறார் என்பது உண்மை.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் வியூகம் என்ற தெலுங்கு சினிமா பட விழா நடந்தது.

    இதில் கலந்துகொண்ட ஆந்திர மந்திரி ரோஜா பேசுகையில் :-

    பவன் கல்யாண் ரசிகர்களும் கபு ஜாதியினரும் பவன் கல்யாண் முதல் மந்திரியாக வரவேண்டும் என்று விரும்புகிறார்கள். ஆனால் பவன் கல்யாண் பஞ்சர் செய்யப்பட்ட சைக்கிள். அந்த சைக்கிளை தான் அவர் வைத்திருக்கிறார் என்பது உண்மை எனக் கிண்டலாக பேசினார்.

    மேலும் மந்திரி ராம்பாபு பேசுகையில்:-

    ராஜமுந்திரி ஜெயிலில் சந்திரபாபு நாயுடுவிடம் ஜனசேனா கட்சி தலைவர் பவன் கல்யாண் சரண் அடைந்தார் என்றார்.

    பட விழாவில் ரோஜா மற்றும் ராம் பாபு பேசியது பவன் கல்யாண் ரசிகர்கள் மற்றும் அவரது கட்சியினருக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது.

    இதனை கண்டித்து பவன் கல்யாண் கட்சியைச் சேர்ந்த மகளிர் அணி சார்பில் விசாகப்பட்டினம் காந்தி சிலை முன்பு கண்டன போராட்டம் செய்தனர்.

    அப்போது மந்திரி ரோஜா மற்றும் ராம் பாபு ஆகியோரின் படங்களை செருப்பால் அடித்து கோஷம் எழுப்பினர்.

    இது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • முன்னாள் முதல் மந்திரி சந்திரபாபு நாயுடுவுக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
    • இதை ஆந்திர சுற்றுலாத்துறை மந்திரி ரோஜா வெடி வெடித்து கொண்டாடினார்.

    அமராவதி:

    ஆந்திராவில் கடந்த 2014-ம் ஆண்டு முதல் 2019-ம் ஆண்டு வரை தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு முதல் மந்திரியாக இருந்தார். இவரது பதவிக்காலத்தில் திறன் மேம்பாட்டு கழகத்தின் நிதியில் ரூ.550 கோடி வரை ஊழல் நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.

    இதுதொடர்பாக மாநில குற்றப் புலனாய்வு துறை (சி.ஐ.டி) கடந்த சில ஆண்டுகளாக விசாரணை நடத்தி வந்த நிலையில், நேற்று முன்தினம் சந்திரபாபு நாயுடு அதிரடியாக கைது செய்யப்பட்டார். அதன்பின் நேற்று காலை விஜயவாடாவில் உள்ள ஊழல் தடுப்பு கோர்ட்டில் சந்திரபாபு நாயுடு ஆஜர்படுத்தப்பட்டார்.

    இதையடுத்து சந்திரபாபு நாயுடுவை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க விஜயவாடா ஊழல் தடுப்பு கோர்ட்டு உத்தரவிட்டது. வரும் 22-ம் தேதி வரை ராஜமுந்திரி சிறையில் சந்திரபாபு நாயுடு அடைக்கப்பட உள்ளார்.

    ஜாமீன் கோரி சந்திரபாபு நாயுடு தாக்கல் செய்த மனு கோர்ட்டில் தள்ளுபடி ஆனதால் அவர் சிறை செல்வது உறுதியானது.

    இந்நிலையில், சந்திரபாபு நாயுடுவுக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டதை ஆந்திர மாநிலத்தின் சுற்றுலாத்துறை மந்திரி ரோஜா கொண்டாடியுள்ளார்.

    ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி தொண்டர்களுடன் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் ரோஜா மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.

    ×