search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மத்திய நிதி மந்திரி"

    • இந்தக் கட்டிடம் தேவையான அனைத்து வசதிகளையும் கொண்டதாக இருக்கும்.
    • பசுமைக் கட்டிடமாக உருவாக்க வேண்டும் என்ற குறிக்கோளில் இது கட்டப்படுகிறது.

    சென்னையில் உள்ள சுங்கத்துறை அலுவலக வளாகத்தில் ரூ. 92 கோடி மதிப்பீட்டில் 9 மாடிகளைக் கொண்ட புதிய அலுவலக கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டு விழா பூமி பூஜையில் கலந்து கொண்ட மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் பணிகளை தொடங்கி வைத்தார்.


    நிகழ்ச்சியில் பேசிய அவர் கூறியுள்ளதாவது: தூய்மை இந்தியா பிரச்சாரத் திட்டத்தை முன்னோக்கி எடுத்து செல்லும் நடவடிக்கையாக, இந்த பழமையான கட்டிடத்தின் கட்டிடக்கலையில் தேவையான மாற்றங்களைச் செய்து, பணி தொடர்பான அனைத்து நடவடிக்கைகளையும் மேம்படுத்தும் வகையிலும், பணியாற்றும் அதிகாரிகளுக்கான வசதிகளை நவீனமயமாக்கும் பணியையும் சுங்கத்துறை மேற்கொண்டுள்ளது.

    இந்தக் கட்டிடம் தேவையான அனைத்து வசதிகளையும் கொண்டதாக இருக்கும். மொத்தக் கட்டுமானப் பணிகளும் பசுமைக் கட்டிடமாக உருவாக்க வேண்டும் என்ற குறிக்கோளில் நடைபெறுகிறது. இதனால் சுற்றுசூழல் மாசுபடுவதை தடுக்க முடியும். அதிநவீன வசதிகளுடன் கூடிய பல்வேறு புத்தம் புதிய அம்சங்களுடன் கட்டப்படும் இந்தப் புதிய அலுவலகம், வரும் காலங்களில் அனைத்து சுங்கத்துறை தொடர்பான கட்டிட திட்டங்களுக்கும் முன்மாதிரியாக திகழும். சுங்கத்துறை மற்றும் வர்த்தகத்துறை சார்ந்தவர்களுக்கான வசதிகளை மேம்படுத்த பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு உறுதி பூண்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • தீப்பெட்டி ஏற்றுமதியில் 30 சதவீதம் சிவகாசியில் இருந்து செல்வது பெருமைக்குரிய விஷயம்.
    • நமது சொந்த மண்ணுக்கு செய்யும் எந்த செயல்களுக்கும் நன்றி சொல்ல தேவையில்லை.

    தீப்பெட்டிக்கான ஜி.எஸ்.டி வரியை 18 சதவிகிதத்தில் இருந்து 12 சதவிகிதமாக குறைத்ததற்காக மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமனுக்கு அகில இந்திய தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் சங்கம் சார்பில் நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சி டெல்லியை அடுத்த சூரஜ்குந் பகுதியில் நடைபெற்றது. இதில் தீப்பெட்டி உற்பத்தியாளர்களும் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் பேசிய மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் கூறியுள்ளதாவது: 


    பொதுவாழ்வில் இருக்கும்போது நமது சொந்த மண்ணுக்கு செய்யும் எந்த செயல்களுக்கும் நன்றி சொல்ல தேவையில்லை. அதுபோன்ற எண்ணத்தில் தற்போது வரையில் நான் செயல்பட்டதும் இல்லை. குறிப்பாக, தென் தமிழ்நாடு மழை இல்லை என்றால் கடும் வறட்சியான பகுதியாக இருக்கும்.

    அங்குள்ள மக்களின் துயரங்களை நான் நன்றாக அறிவேன். அப்பகுதியில் உள்ள முன்னோர்கள் 150 ஆண்டுகளுக்கு முன்பே இதுபோல சிறுதொழிலை தொடங்கினார்கள். தம்மோடு தொழில் வாய்ப்புகள் முடிந்துவிடாமல் எதிர்கால தலைமுறைகளும் பயன்பெற வேண்டும் என்ற எண்ணத்தில் அவர்கள் கொல்கத்தா சென்று தீப்பெட்டி தொழில் பயிற்சி பெற்று தொலைநோக்கு பார்வையுடன் இதுபோன்ற தீப்பெட்டி தொழிற்சாலைகளை நிறுவி அந்த பகுதி மக்களின் வாழ்வில் முன்னேற்றம் அடைய வைத்துள்ளனர்.

    அதன் விளைவாகவே இன்று நமது மண்ணில் பல தொழில்கள் வளர்ச்சி அடைந்துள்ளன. தீப்பெட்டி உற்பத்தியில் உலகளவில் அதிகமாக உற்பத்தி செய்வது சிவகாசிதான். தீப்பெட்டி ஏற்றுமதியில் 30 சதவீதம் சிவகாசியில் இருந்து ஏற்றுமதி செய்யப்படுவது பெருமைக்குரிய விஷயம்.

    விவசாயம் செழிக்காத பூமியில் வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ளவர்களுக்கும் வேலை வாய்ப்பு கொடுப்பது தீப்பெட்டி தொழிற்சாலைகள். விரைவில் தீப்பெட்டி உற்பத்தியாளர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளும் மத்திய அரசு தரப்பில் வழங்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • பொருளாதார வளர்ச்சி அடைந்த முதல் மூன்று நாடுகளில் ஒன்றாக இந்தியா இருக்கும்.
    • இந்திய பொருளாதார வளர்ச்சிக்கான முக்கிய நடவடிக்கைகளை நாங்கள் எடுத்துள்ளோம்.

    டெல்லி:

    அமெரிக்கா-இந்தியா இடையேயான வர்த்தகம் மற்றும் முதலீட்டு வாய்ப்பு குறித்த கருத்தரங்கில் பங்கேற்று பேசிய மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் கூறியதாவது:

    தற்போதைய உலகப் பொருளாதார வளர்ச்சி நிலை சவாலானதாகவே உள்ளது. உலகப் பொருளாதார வளர்ச்சியின் தாக்கத்திலிருந்து இந்தியப் பொருளாதாரம் தனிமைப்படுத்தப்படவில்லை. இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிப் பாதையின் முக்கிய அங்கமாக வெளிநாட்டு மூலதனத்தை நாங்கள் அங்கீகரிக்கிறோம்.

    இதற்காக முக்கிய சீர்திருத்த நடவடிக்கைகளை நாங்கள் எடுத்துள்ளோம். வெளிநாட்டு முதலீட்டாளருக்கான விதிமுறைகளை எளிமைப்படுத்துதல், மொத்த வெளிநாட்டு முதலீட்டு வரம்பு அதிகரிப்பு, பொதுவான விண்ணப்பப் படிவத்தை அறிமுகப்படுத்துதல் உள்ளிட்டவை இதில் அடங்கும். இந்த நடவடிக்கைகளின் வெற்றி, இந்தியாவில் தொடர்ச்சியான வெளிநாட்டு முதலீடுகள் அதிகரிப்பை பிரதிபலிக்கிறது.

    உலகில் வேகமாக வளர்ந்து வரும் பொருளாதார நாடுகளில் ஒன்றாக இந்தியா உருவெடுத்துள்ளது, அண்மையில் இங்கிலாந்தை தாண்டி உலகின் ஐந்தாவது பெரிய பொருளாதார நாடாக இந்தியா மாறியுள்ளது. அடுத்த 10 முதல் 15 ஆண்டுகளில் உலகின் பொருளாதார வளர்ச்சி அடைந்த முதல் மூன்று நாடுகளில் ஒன்றாக இந்தியா இருக்கும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • அரசியல் பழி வாங்கும் நோக்கத்திற்காக அது பயன்படுத்தப்படவில்லை.
    • முறையான தகவல் மற்றும் ஆதாரங்களைப் பெற்ற பின்னரே சோதனை நடவடிக்கை.

    வாஷிங்டன்:

    அமெரிக்கா சென்றுள்ள மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன், சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கியின் வருடாந்திர கூட்டங்களில் கலந்து கொண்ட பின்னர் வாஷிங்டனில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது இந்தியாவில் செயல்படும் மத்திய அமலாக்க இயக்குனரகத்தை அரசியல் பழிவாங்கும் நோக்கங்களுக்காக மத்திய அரசு பயன்படுத்துகிறது என்ற குற்றச்சாட்டை அவர் மறுத்தார். இது குறித்து அவர் தெரிவித்துள்ளதாவது:

    மத்திய அமலாக்க இயக்குனரகம் முற்றிலும் சுதந்திரமாக உள்ளது. கார்ப்பரேட் துறையினர் மற்றும் பொது சமூக பிரிவினருக்கு அது எவ்வித அச்சுறுத்தையும் ஏற்படுத்தவில்லை. குற்றங்கள் தொடர்பாக முன்னறிவிப்பு செய்து விசாரணையை நடத்தும் நடைமுறையை பின்பற்றும் ஒரு நிறுவனம்.

    மத்திய அமலாக்க இயக்குனரகம் அளிக்கும் தண்டனை விகிதம் மிகவும் குறைவானது. குற்றத்தில் ஈடுபடுபவர்கள் குறித்த தகவல்கள் மற்றும் ஆதாரங்களை பெற்ற பின்னரே மத்திய அமலாக்க இயக்குனரகம் செயல்படுகிறது. தனிப்பட்ட வழக்குகள் அல்லது அணுகுமுறை குறித்து நான் கருத்து தெரிவிக்க விரும்பவில்லை, ஆனால் நிச்சயமாக, அது எங்கு சென்று சோதனை நடத்தினாலும் முதன்மையான ஆதாரங்கள் அதனிடம் நிச்சயம் இருக்கும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • கொரோனா பின்னடைவில் இருந்து இந்திய பொருளாதாரம் மீண்டுள்ளது.
    • வளர்ச்சிக்கான நடவடிக்கைகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

    வாஷிங்டன்:

    சர்வதேச நிதியம் மற்றும் உலக வங்கியின் வருடாந்திர கூட்டம் அமெரிக்காவில் நடைபெற்று வருகிறது. இதையொட்டி, உலக பொருளாதார நிலவரம் குறித்த வருடாந்திர அறிக்கையை சர்வதேச நிதியம் நேற்று வெளியிட்டது.

    அதில் நடப்பு நிதிஆண்டில் (2022-2023), இந்திய பொருளாதார வளர்ச்சி 6.8 சதவீதமாக குறையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக கடந்த ஜூலை மாதம் வெளியிடப்பட்ட கணிப்பில், இந்திய பொருளாதார வளர்ச்சி 7.4 சதவீதமாக இருக்கும் என்று கூறப்பட்டிருந்தது.

    இந்நிலையில் சர்வதேச நிதியம் மற்றும் உலக வங்கியின் வருடாந்திர கூட்டத்தில் பங்கேற்பதற்காக அமெரிக்கா சென்றுள்ள மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன், வாஷிங்டனில் புரூக்கிங்ஸ் நிறுவனத்துடனான கலந்துரையாடலில் பங்கேற்றார். அப்போது பேசிய அவர், அடுத்த ஆண்டு பிப்ரவரியில் தாக்கல் செய்யப்படும் மத்திய பட்ஜெட்டில் பொருளாதார வளர்ச்சிக்கான நடவடிக்கைகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்றார்.

    பொருளாதார வளர்ச்சியை நிலை நிறுத்துவதில் கூடுதல் கவனம் செலுத்தப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார். கொரோனா தொற்று கால பின்னடைவில் இருந்து இந்திய பொருளாதாரம் வேகமாக மீண்டு வந்துள்ளது என்றும், இந்த கால கட்டத்தில் எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் கடினமாக இருக்கலாம் என்றும் கூறினார்.

    பிரதமர் மோடி தலைமையிலான இந்திய அரசின் நோக்கம், நாட்டின் பொருளாதாரத்தை மிகவும் வலுவானதாக மாற்றுவதாகும், அதற்கான டிஜிட்டல் உள்கட்டமைப்பு, நிதி உள்ளடக்கம் உள்ளிட்டவை தயாராக உள்ளன என்றும் அவர் தெரிவித்தார்.

    • மத்திய நிதி மந்திரியை அடையாளம் கண்டு கொண்ட அந்த பகுதிவாசிகள் நலம் விசாரித்தனர்.
    • காய்கறி சந்தையில் நின்று செல்பி எடுத்துக் கொண்டார்.

    மயிலாப்பூர்:

    மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் ஒரு நாள் பயணமாக சென்னை வந்தார். ஆட்டிசம், டிஸ்லெக்ஸியா மற்றும் மெதுவாகக் கற்றல் குறைபாடு உள்ள குழந்தைகளுக்காக அம்பத்தூர் அருகே கள்ளிகுப்பத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள இல்லத்தை, அவர் திறந்து வைத்தார்.


    பின்னர் சென்னை மயிலாப்பூரில் உள்ள காய்கறி சந்தைக்கு சென்ற அவர், பொதுமக்களுடன் இணைந்து அங்குள்ள தெரு ஓர கடை ஒன்றில் காய்கறி வாங்கினார். காய்கறி விற்பனையாளர் அவருக்கு அங்கிருந்த காய்கறிகள் குறித்து விளக்கினார். 

    மத்திய நிதி மந்திரியை அடையாளம் கண்டு கொண்ட அந்த பகுதிவாசிகள் நலம் விசாரித்தனர். அவர்களுடன் நிர்மலா சீதாராமன் கலந்துரையாடினார். பின்னர் காய்கறி சந்தையில் அவர் செல்பி எடுத்துக் கொண்டார். இது தொடர்பான வீடியோ சமூக வளைதளங்களில் வெளியாக வைரலானது.

    • அத்தியாவசியப் பொருட்கள் நியாயமான விலையில் கிடைக்க நடவடிக்கை.
    • இறக்குமதி செய்யப்படும் சமையல் எண்ணெய் மீதான வரி நீக்கப்பட்டுள்ளது.

    புனே:

    மகாராஷ்டிரா மாநிலம் புனே நகரில் நிகழ்ச்சியில் பங்கேற்ற பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளதாவது:

    மக்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள் நியாயமான விலையிலும் சரியான நேரத்திலும் கிடைப்பதை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இறக்குமதி செய்யப்படும் சமையல் எண்ணெய் மீதான வரி நீக்கப்பட்டுள்ளது. பணவீக்கத்தைப் பொறுத்த வரையில், பாராளுமன்றத்தில் ஒவ்வொரு முறையும் எழுப்பப்படும் கேள்விகளுக்கு பதில் அளித்து வருகிறேன்.

    பணவீக்கத்தை 4 சதவீதத்துக்கு கீழ் வைத்திருக்க அரசு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. பணவீக்க பிரச்சினையில் உலக சூழல் குறித்து புரிந்து கொள்ள வேண்டும். கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத பணவீக்கத்தை அமெரிக்கா அனுபவித்து வருகிறது. ஜெர்மனி கடந்த 38 ஆண்டுகளில் இல்லாத உயர் பணவீக்கத்தை எதிர் கொள்கிறது. அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி, பணவீக்கம் உள்பட பொருளாதாரத்தின் ஒவ்வொரு அம்சத்தையும் மத்திய அரசு கவனித்து வருகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • பிரதமரின் படங்களை வைக்க பாஜகவினரும் அனுமதிக்கப்படவில்லை.
    • பிரதமரின் பேனர் அகற்றப்படாமல் இருப்பதை மாவட்ட நிர்வாகம் உறுதி செய்ய வேண்டும்.

    தெலுங்கான மாநிலத்தின் ஜஹீராபாத் பாராளுமன்ற தொகுதியில் நேற்று நடைபெற்ற மத்திய அரசின் நலத்திட்ட நிகழ்ச்சியில் மத்திய நிதிமந்திரி நிர்மலா சீதாராமன் பங்கேற்றார். பின்னர் அவர் அங்குள்ள ரேஷன் கடையை ஆய்வு செய்தார். 

    அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட காமரெட்டி மாவட்ட ஆட்சியர் ஜிதேஷ் பாட்டீலிடம், ரேஷன் கடைகள் மூலம் வழங்கப்படும் இலவச அரிசியில், மத்திய அரசுக்கும், மாநில அரசுக்கும் எவ்வளவு பங்கு உள்ளது என அவர் கேள்வி எழுப்பினார். அது குறித்து மாவட்ட ஆட்சியர் தடுமாற, பதில் அளிக்க அவருக்கு அரைமணி நேரம் அவகாசம் அளிப்பதாக மத்திய நிதி மந்திரி தெரிவித்தார்.

    பின்னர் பேசிய அவர், வெளிச்சந்தையில் தோராயமாக ரூ.35க்கு விற்கப்படும் அரிசி, ரேஷன் கடைகளில் ஒரு ரூபாய்க்கு மக்களுக்கு விநியோகிக்கப்படுகிறது என்றார். இதில் மத்திய அரசு 30 ரூபாயும், மாநில அரசு 4 ரூபாயும் வழங்குவதாகவும், ரேஷன் கடை பயனாளிகளிடம் ஒரு ரூபாய் மட்டும் வசூலிக்கப்படுகிறது என்றும் அவர் கூறினார்.

    கடந்த 2020ம் ஆண்டு ஏப்ரல் முதல் மாநில அரசு மற்றும் பயனாளியின் பங்களிப்பு இல்லாமல் அந்த அரிசியை மத்திய அரசு இலவசமாக வழங்கி வருகிறது என்றும் அவர் குறிப்பிட்டார். மேலும் ரேஷன் கடையில் பிரதமர் மோடியின் படத்தை ஏன் காணவில்லை என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

    தெலுங்கானா மாநிலத்தில் உள்ள ரேஷன் கடைகளில் பிரதமர் மோடியின் படத்தை வைக்க வேண்டும் என்று பாஜக கோரிக்கை வைத்ததாகவும், ஆனால் ​​அதற்கு அனுமதி அளிக்கப்படவில்லை என்றும் அவர் குற்றம் சாட்டினார். 

    பாஜகவினர் பிரதமர் மோடியின் பேனரை ரேஷன் கடைகளில் வைத்தால், அது அகற்றப்படாமலோ அல்லது கிழிக்கப்படாமலோ இருப்பதை மாவட்ட நிர்வாகம் உறுதி செய்ய வேண்டும் என்றும் மாவட்ட ஆட்சியருக்கு நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் உத்தரவிட்டார். 

    இதைத் தொடர்ந்து, ஏழை மக்களுக்கு பிரதமரின் இலவச தானியங்கள் வழங்கும் திட்டத்தின் கீழ் 5 கிலோ உணவு தானியங்களுக்கான முழுச் செலவையும் மோடி அரசே ஏற்கிறது என்றும், இதனால் ரேஷன் கடைகளில் பிரதமர் மோடியின் பேனர் அல்லது போஸ்டர்கள் வைக்கப்படுவதில் உங்களுக்கு ஏதாவது ஆட்சேபனை உள்ளதா என்றும் நிதி மந்திரி அலுவலகம் சார்பில் டுவிட் செய்யப்பட்டது.

    முன்னதாக பான்ஸ்வாடா பகுதிக்கு சென்ற மத்திய நிதி மந்திரியின் காரை மறித்த காங்கிரஸ் தொண்டர்கள் சிலர், விலைவாசி உயர்வு குறித்து எதிர்ப்பு தெரிவிக்க முயன்றனர். போலீசார் தலையிட்டு அந்த கும்பலை கலைத்தனர்.

    • லேபிள் இன்றி சில்லறையில் விற்கப்படும் உணவுப் பொருட்களுக்கு ஜிஎஸ்டி வரி இல்லை.
    • பாக்கெட்டுகளில் அடைத்து விற்கப்படும் உணவுப் பொருட்களுக்கு மட்டுமே 5% ஜிஎஸ்டி வரி.

    சண்டிகரில் கடந்த மாதம் 28-ந்தேதி நடைபெற்ற ஜி.எஸ்.டி. (சரக்கு-சேவை வரி) கவுன்சிலின் 47-வது கூட்டத்தில் பிராண்ட் அல்லாத பேக்கிங் செய்யப்பட்ட கோதுமை மாவு, அரிசி, தயிர், லஸ்சி, மோர், பன்னீர் போன்ற உணவு பொருட்களுக்கு 5 சதவீத ஜி.எஸ்.டி. வரி அறிமுகம் செய்யப்பட்டது.

    ஜி.எஸ்.டி. புதிய வரிவிதிப்பு நேற்று அமலுக்கு வந்தது. இந்த வரியால் அரிசி விலை ஒரு மூட்டைக்கு ரூ.50 முதல் ரூ.150 வரை (தரத்துக்கு ஏற்ப) விலை உயர்ந்தது. கடந்த மாதம் ரூ.1,000-க்கு விற்பனை செய்யப்பட்ட அரிசி மூட்டை (25 கிலோ) ரூ.1,050-க்கு விற்பனை ஆனது.

    அரிசிக்கு விதிக்கப்பட்டுள்ள ஜி.எஸ்.டி.வரி விதிப்பை திரும்ப பெற வேண்டும் என்று அரிசி ஆலை உரிமையாளர்களும், அரிசி வியாபாரிகளும் ஒரு நாள் கடை அடைப்பு போராட்டத்திலும் ஈடுபட்டனர்.

    இந்நிலையில் அரிசி, கோதுமை மீதான ஜிஎஸ்டி வரி குறித்து தவறான தகவல் பரப்ப வேண்டாம் எனவும் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் வலியுறுத்தி உள்ளார்.

    இது தொடர்பாக தமது டுவிட்டரில் பதிவிட்டுள்ள அவர், எந்தெந்த உணவுப் பொருள்களுக்கு ஜி.எஸ்.டி. பொருந்தும் என பட்டியலிட்டுள்ளார். அதன்படி, அரிசி, பருப்பு, கோதுமை, ரவை, கோதுமை மாவு, ஓட்ஸ், தயிர் போன்றவற்றிற்கு ஜிஎஸ்டி இல்லை எனக் குறிப்பிட்டுள்ளார்.

    அரிசி, கோதுமை மீதான ஜிஎஸ்டி வரி குறித்து தவறான தகவல் பரப்ப வேண்டாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார். சில்லறை விற்பனையில் உணவுப் பொருள்களுக்கு ஜிஎஸ்டி வரி விதிக்கப்படாது என்றும், பாக்கெட்டுகளில் அடைத்து லேபிள் ஒட்டி விற்கப்படும் உணவுப் பொருட்களின் மீது மட்டுமே 5% ஜிஎஸ்டி வரி நேற்று முதல் நடைமுறைக்கு வந்துள்ளதாக மத்திய நிதி மந்திரி குறிப்பிட்டுள்ளார்.

    லேபிள் இன்றி சில்லறையில் விற்கப்படும் உணவுப் பொருட்களுக்கு எந்தவித ஜிஎஸ்டி வரியும் இல்லை எனவும் நிர்மலா சீதாராமன் விளக்கம் அளித்துள்ளார்.

    • 48 வது ஜி.எஸ்.டி.கவுன்சில் கூட்டம் மதுரையில் நடைபெறுகிறது.
    • தமிழகத்தின் கோரிக்கை ஏற்று மத்திய நிதி மந்திரி ஒப்புதல்.

    47வது ஜி.எஸ்.டி கவுன்சிலின் 2 நாள் ஆலோசனை கூட்டம் சண்டிகரில் நடைபெற்றது. இந்த கூட்டத்தின் நிறைவில் அடுத்த கூட்டம் ஆகஸ்ட் முதல் வாரம் நடைபெறும் என்று மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் அறிவித்தார்.

    அப்போது தமிழகம் விடுத்த கோரிக்கையை ஏற்றுக் கொண்ட மத்திய மந்திரி, அடுத்த கூட்டத்தை மதுரையில் நடத்த ஒப்புதல் வழங்கியதாக தகவல்கள் வெளியாகின. இதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், எங்கள் அழைப்பை ஏற்று, அடுத்த ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தை மதுரையில் நடத்த ஒப்புக் கொண்டதற்காக மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமனுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். கோவில் நகரம் மற்றும் அதன் மக்கள் சார்பாக, மத்திய மந்திரிகள், மாநில அமைச்சர்கள் மற்றும் மூத்த அதிகாரிகளை நாங்கள் அன்புடன் வரவேற்கிறோம் என்று தெரிவித்துள்ளார்.

    ×