search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    வர்த்தகத்துறையினருக்கு வசதிகளை மேம்படுத்த அரசு உறுதி பூண்டுள்ளது:  மத்திய நிதிமந்திரி தகவல்
    X

    மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன்

    வர்த்தகத்துறையினருக்கு வசதிகளை மேம்படுத்த அரசு உறுதி பூண்டுள்ளது: மத்திய நிதிமந்திரி தகவல்

    • இந்தக் கட்டிடம் தேவையான அனைத்து வசதிகளையும் கொண்டதாக இருக்கும்.
    • பசுமைக் கட்டிடமாக உருவாக்க வேண்டும் என்ற குறிக்கோளில் இது கட்டப்படுகிறது.

    சென்னையில் உள்ள சுங்கத்துறை அலுவலக வளாகத்தில் ரூ. 92 கோடி மதிப்பீட்டில் 9 மாடிகளைக் கொண்ட புதிய அலுவலக கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டு விழா பூமி பூஜையில் கலந்து கொண்ட மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் பணிகளை தொடங்கி வைத்தார்.


    நிகழ்ச்சியில் பேசிய அவர் கூறியுள்ளதாவது: தூய்மை இந்தியா பிரச்சாரத் திட்டத்தை முன்னோக்கி எடுத்து செல்லும் நடவடிக்கையாக, இந்த பழமையான கட்டிடத்தின் கட்டிடக்கலையில் தேவையான மாற்றங்களைச் செய்து, பணி தொடர்பான அனைத்து நடவடிக்கைகளையும் மேம்படுத்தும் வகையிலும், பணியாற்றும் அதிகாரிகளுக்கான வசதிகளை நவீனமயமாக்கும் பணியையும் சுங்கத்துறை மேற்கொண்டுள்ளது.

    இந்தக் கட்டிடம் தேவையான அனைத்து வசதிகளையும் கொண்டதாக இருக்கும். மொத்தக் கட்டுமானப் பணிகளும் பசுமைக் கட்டிடமாக உருவாக்க வேண்டும் என்ற குறிக்கோளில் நடைபெறுகிறது. இதனால் சுற்றுசூழல் மாசுபடுவதை தடுக்க முடியும். அதிநவீன வசதிகளுடன் கூடிய பல்வேறு புத்தம் புதிய அம்சங்களுடன் கட்டப்படும் இந்தப் புதிய அலுவலகம், வரும் காலங்களில் அனைத்து சுங்கத்துறை தொடர்பான கட்டிட திட்டங்களுக்கும் முன்மாதிரியாக திகழும். சுங்கத்துறை மற்றும் வர்த்தகத்துறை சார்ந்தவர்களுக்கான வசதிகளை மேம்படுத்த பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு உறுதி பூண்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    Next Story
    ×