

மயிலாப்பூர்:
மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் ஒரு நாள் பயணமாக சென்னை வந்தார். ஆட்டிசம், டிஸ்லெக்ஸியா மற்றும் மெதுவாகக் கற்றல் குறைபாடு உள்ள குழந்தைகளுக்காக அம்பத்தூர் அருகே கள்ளிகுப்பத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள இல்லத்தை, அவர் திறந்து வைத்தார்.
பின்னர் சென்னை மயிலாப்பூரில் உள்ள காய்கறி சந்தைக்கு சென்ற அவர், பொதுமக்களுடன் இணைந்து அங்குள்ள தெரு ஓர கடை ஒன்றில் காய்கறி வாங்கினார். காய்கறி விற்பனையாளர் அவருக்கு அங்கிருந்த காய்கறிகள் குறித்து விளக்கினார்.
மத்திய நிதி மந்திரியை அடையாளம் கண்டு கொண்ட அந்த பகுதிவாசிகள் நலம் விசாரித்தனர். அவர்களுடன் நிர்மலா சீதாராமன் கலந்துரையாடினார். பின்னர் காய்கறி சந்தையில் அவர் செல்பி எடுத்துக் கொண்டார். இது தொடர்பான வீடியோ சமூக வளைதளங்களில் வெளியாக வைரலானது.