search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "போக்குவரத்து நெரிசலில்"

    • இன்று காலையில் இருந்து கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.
    • எங்கு பார்த்தாலும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு மாநகரமே ஸ்தம்பித்தது.

    ஈரோடு:

    தீபாவளி பண்டிகை நாளை கொண்டாடப்பட உள்ள நிலையில் இன்று ஈரோடு பன்னீர்செல்வம் பார்க் ரோடு, மணிக்கூண்டு, ஆர்.கே.வி.ரோடு, மேட்டூர் ரோடு, பெருந்துறை ரோட்டி ல் உள்ள ஜவுளி கடைகளில் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.

    குறிப்பாக பன்னீர்செ ல்வம் பார்க் பகுதியில் சாலையின் இருபுறம் 100-க்கும் மேற்பட்ட ஜவுளி க்கடைகள் உள்ளன. இன்று காலையில் இருந்து கூட்டம் அதிகமாக இருந்து வருகிறது.

    இதே போல் பேன்சி கடைகள், நகை கடைகளிலும் கூட்டம் அதிகமாக இருந்தது. எங்கு திரும்பினாலும் மக்கள் கூட்டமே காணப்ப ட்டது. இதனால் இந்த பகுதியில் இன்று காலையிலிருந்து கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.

    ஈரோடு பன்னீர்செல்வம் பார்க் வழியாக மணிக்கூ ண்டு மூலம் ஈரோடு பஸ் நிலையத்திற்கு வாகனங்கள் சென்று வருகிறது. இந்த பகுதியில் சாலையின் இருப்புறம் ஜவுளி கடைகள் உள்ளதால் கூட்டம் அதிகமாக இருந்தது.

    இதனால் இந்த பகுதியில் வாகனங்கள் கடந்து செல்ல நீண்ட நேரம் ஆனது. இதேபோல் ஆர்.கே.வி.ரோடு, மேட்டூர் ரோடு, கே.வி.என்.ரோடு, பெருந்துறை சாலையிலும் வாகனங்கள் நீண்ட தூரம் அணிவகுத்து நின்றன.

    ஈரோடு பன்னீர்செல்வம் பார்கில் இருந்து கலெக்டர் அலுவலகத்தை கடக்க ஏறக்குறைய 30 நிமிடங்கள் ஆனது. எங்கு பார்த்தாலும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு மாநகரமே ஸ்தம்பித்தது.

    ஆங்காங்கே போக்குவரத்து போலீசார் வாகனங்களை ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    • போலீசார் பணியில் அமர்த்த கோரிக்கை விடுத்துள்ளனர்.
    • சாலையை கடக்க முடியாமல் வாகன ஓட்டிகள் திணறுகின்றனர்.

    வடவள்ளி

    கோவை மாவட்டம் மருதமலை சாலை எப்பொழுதும் பரபரப்பாக கணப்படும் சாலையாகும். கடந்த 10 வருடங்களில் வடவள்ளி சுற்றுவட்டார பகுதிகள் அதிவேகமாக வளர்ச்சி அடைந்து உள்ளது. அதன் தாக்கமாக வீடுகள், அடுக்கு மாடி குடியிருப்புகள் என எண்ணிக்கை அதிகரித்து உள்ளது.

    இதனால் தனிநபர் பயன்படுத்தும் இருசக்கர வாகனம் மற்றும் நான்கு சக்கர வாகனங்களின் எண்ணிக்கையும் கணிசமாக அதிகரித்தது உள்ளது. மேலும் வாகன ஓட்டிகளின் வசதிக்காக லாலிரோடு முதல் மருதமலை அடிவாரம் வரையில் இருபுறமும் சாலையை விரிவுப்படுத்தும் பணி நடந்து வருகிறது. இதில் நவாவூர் வரையில் சாலையை அளந்து நெடுஞ்சாலைத்துறை சார்பில் பணிகள் அவ்வப்போது நடைப்பெற்று வருகிறது. இதில் ஏற்கனவே விரிவுப்படுத்தப்பட பகுதியான மருதமலை சாலையில் இருந்து தொண்டாமுத்தூர் பிரிவு சிக்னல் பகுதியில் அமைந்துள்ளது.

    இந்தநிலையில் இந்த சிக்னல் அருகே இருசக்கர வாகனங்கள் மற்றும் நான்கு சக்கர வாகனங்களை வாகன ஓட்டிகள் சாலையின் நடுவே நிறுத்தி விட்டு அருகில் உள்ள கடைகளுக்கு சென்று விடுகின்றனர். ஏற்கனவே இந்த சாலையின் இடம் மிக குறுகலாக உள்ளதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இதனால் சாலையை கடக்க முடியாமல் வாகன ஓட்டிகள் திணறுகின்றனர். எனவே இந்த பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் இருக்கவும், சாலையின் நடுவே வாகனங்களை நிறுத்தி செல்லும் வாகன ஓட்டிகளுக்கு போலீசார் அபராதம் விதிக்க வேண்டும்.

    5 வருடங்களுக்கு முன்பு போக்குவரத்து போலீசார் வடவள்ளி போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் பணியில் இருந்தனர். அதற்கு பின் தற்போது வரை போலீசார் இல்லை. மேலும் நெடுஞ்சாலை துறை சார்பில் தொண்டாமுத்தூர் பிரிவு பகுதியில் விரிவுப்படு த்தப்பட்ட சாலையை மீண்டும் ஆய்வு செய்ய வேண்டும். அதே போல் வடவள்ளி போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் போக்குவரத்து போலீசார் இல்லை.

    எனவே போக்குவரத்து போலீசாரை பணியில் அமர்த்த மாவட்ட எஸ்.பி. பத்ரி நாராயணன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • கூடுதல் போலீசார் நியமிக்க வலியுறுத்தல்
    • கவுண்டன்ய மகாநதி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் அவதி

    குடியாத்தம்:

    குடியாத்தம் கவுண்டன்ய மகாநதி ஆற்றில் 800 கன அடி தண்ணீர் தற்போது கவுண்டன்யமகாநதி ஆற்றில் 800 கன அடிக்கும் அதிகமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு தண்ணீர் செல்வ தால் கெங்கையம்மன் தரைப்பாலத்தில் நேற்று முன்தினம் இரவு முதல் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.

    இதனால் காமராஜர் பாலம் வழியாக மட்டுமே போக்குவரத்து நடைபெற்று வருகிறது இதனால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் மிகவும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். பல மணி நேரம் போக்குவரத்து நெரிசல் நகரமே ஸ்தம்பித்தது.

    நேற்று காலை சுமார் 8.15 மணி அளவில் திடீரென குடியாத்தம் நகரின் மையப் பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது புதிய பஸ் நிலையம் தொடங்கி பழைய பஸ் நிலையம், அர்ஜுனன்முதலி தெரு, பெரியார் சிலை, காமராஜர் பாலம், தாழையாத்தம் பஜார் சந்தப்பேட்டை பஜார், பேர்ணாம்பட்டு ரோடு, காந்திசவுக், சேம்பள்ளி கூட்ரோடுவரை பெருமளவு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

    குடியாத்தம் நகரமே ஸ்தம்பித்தது பல சாலைகளிலும் போக்குவரத்து நெரிசலாகவே இருந்தது. இதனால் காலையில் பள்ளி, கல்லூரிக்கு செல்லும் மாணவர்கள் வேலைக்கு, செல்லும் தொழிலாளர்கள், அரசு மற்றும் தனியார் நிறுவன ஊழியர்கள், மருத்துவமனைக்குச் செல்லும் நோயாளிகள் என பலதரப்பு மக்களும் அவதியுற்றனர், நேற்று திருமண நாள் என்பதால் திருமணத்திற்கு சென்றவர்கள் நெரிசலில் சிக்கி வீடு திரும்ப முடியாமல் தவித்தனர்.

    போக்குவரத்து நெரிசலில் சிக்கிய ஆம்புலன்ஸ் ஒரு மணி நேரத்திற்கு பிறகு சீர் செய்யப்பட்டு அப்பகுதியை கடந்து சென்றது.

    நேற்று குடியாத்தம் பகுதியில் வரலாறு காணாத அளவு நெரிசலில் சிக்கித் தவித்தது வாகனங்களில் வந்த பெண்கள் குழந்தைகளை உடன் அழைத்து வந்து இருந்தார்கள் அந்த குழந்தைகள் 2 மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து நெரிசலில் சிக்கியதால் அழுதபடி இருந்தனர்.

    போக்குவரத்து நெரிசல் கண்டதும் உடனடியாக குடியாத்தம் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் லட்சுமி, டிராபிக் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுந்தரமூர்த்தி உள்ளிட்ட போலீசார் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபட்டனர்.

    2 மணி நேரம் சாலையில் நின்று போக்குவரத்தை ஒழுங்கு படுத்திய துணை போலீஸ் சூப்பிரண்டு ராமமூர்த்தி இருப்பினும் போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருந்தது.

    இது குறித்த தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த குடியாத்தம் துணை போலீஸ் சூப்பிரண்டு ராமமூர்த்தி காமராஜர் பாலம் அருகே சாலையில் நின்று போக்குவரத்தை ஒழுங்கு படுத்தினார்.

    சுமார் 3 மணி நேரத்திற்குப் பின்னரே போக்குவரத்து சீரடைந்தது இதனால் வாகன ஓட்டிகளும் கனரக வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர்.

    காவல்துறை அதிகாரிகள் குடியாத்தத்தில் மழைக்காலங்களில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த அதிக அளவு போலீசாரை நியமிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    தமிழக அரசு உடன டியாக கெங்கையம்மன் கோவில் தரைப்பாலம் பகுதியை மேம்பாலம் ஆக உயர்த்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×