search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவிக்கும் மருதமலை சாலை
    X

    போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவிக்கும் மருதமலை சாலை

    • போலீசார் பணியில் அமர்த்த கோரிக்கை விடுத்துள்ளனர்.
    • சாலையை கடக்க முடியாமல் வாகன ஓட்டிகள் திணறுகின்றனர்.

    வடவள்ளி

    கோவை மாவட்டம் மருதமலை சாலை எப்பொழுதும் பரபரப்பாக கணப்படும் சாலையாகும். கடந்த 10 வருடங்களில் வடவள்ளி சுற்றுவட்டார பகுதிகள் அதிவேகமாக வளர்ச்சி அடைந்து உள்ளது. அதன் தாக்கமாக வீடுகள், அடுக்கு மாடி குடியிருப்புகள் என எண்ணிக்கை அதிகரித்து உள்ளது.

    இதனால் தனிநபர் பயன்படுத்தும் இருசக்கர வாகனம் மற்றும் நான்கு சக்கர வாகனங்களின் எண்ணிக்கையும் கணிசமாக அதிகரித்தது உள்ளது. மேலும் வாகன ஓட்டிகளின் வசதிக்காக லாலிரோடு முதல் மருதமலை அடிவாரம் வரையில் இருபுறமும் சாலையை விரிவுப்படுத்தும் பணி நடந்து வருகிறது. இதில் நவாவூர் வரையில் சாலையை அளந்து நெடுஞ்சாலைத்துறை சார்பில் பணிகள் அவ்வப்போது நடைப்பெற்று வருகிறது. இதில் ஏற்கனவே விரிவுப்படுத்தப்பட பகுதியான மருதமலை சாலையில் இருந்து தொண்டாமுத்தூர் பிரிவு சிக்னல் பகுதியில் அமைந்துள்ளது.

    இந்தநிலையில் இந்த சிக்னல் அருகே இருசக்கர வாகனங்கள் மற்றும் நான்கு சக்கர வாகனங்களை வாகன ஓட்டிகள் சாலையின் நடுவே நிறுத்தி விட்டு அருகில் உள்ள கடைகளுக்கு சென்று விடுகின்றனர். ஏற்கனவே இந்த சாலையின் இடம் மிக குறுகலாக உள்ளதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இதனால் சாலையை கடக்க முடியாமல் வாகன ஓட்டிகள் திணறுகின்றனர். எனவே இந்த பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் இருக்கவும், சாலையின் நடுவே வாகனங்களை நிறுத்தி செல்லும் வாகன ஓட்டிகளுக்கு போலீசார் அபராதம் விதிக்க வேண்டும்.

    5 வருடங்களுக்கு முன்பு போக்குவரத்து போலீசார் வடவள்ளி போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் பணியில் இருந்தனர். அதற்கு பின் தற்போது வரை போலீசார் இல்லை. மேலும் நெடுஞ்சாலை துறை சார்பில் தொண்டாமுத்தூர் பிரிவு பகுதியில் விரிவுப்படு த்தப்பட்ட சாலையை மீண்டும் ஆய்வு செய்ய வேண்டும். அதே போல் வடவள்ளி போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் போக்குவரத்து போலீசார் இல்லை.

    எனவே போக்குவரத்து போலீசாரை பணியில் அமர்த்த மாவட்ட எஸ்.பி. பத்ரி நாராயணன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Next Story
    ×