search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பொள்ளாச்சி விபத்து"

    பொள்ளாச்சி அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதிய விபத்தில் பெயிண்டர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
    பொள்ளாச்சி:

    பொள்ளாச்சி அருகே உள்ள சின்னாம் பாளையம் அழகப்பா காலனியை சேர்ந்தவர் ரவிக்குமார் (32). பெயிண்டர். நேற்று மாலை இவர் தனது நண்பர் ராஜனுடன் பொள்ளாச்சி - வால்பாறை ரோட்டில் மோட்டார் சைக்கிளில் சென்றார்.

    ரங்கசமத்தூர் என்ற இடத்தில் சென்றபோது எதிரே தாறுமாறாக வந்த மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் ரவிக்குமாரும், ராஜனும் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தனர். அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து பார்த்தபோது ரவிக்குமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது தெரியவந்தது. ராஜன் படுகாயங்களுடன் உயிருக்கு போராடினார். பொதுமக்கள் ராஜனை மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    விபத்துள்ளான மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்த கர்ணன் (20), முத்துராஜ் (20) ஆகியோரும் காயமடைந்தனர். விபத்து குறித்து கோட்டூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பொள்ளாச்சி அருகே மினி பஸ் கவிழ்ந்து விபத்துகுள்ளானதில் கேரள எல்.ஐ.சி. முகவர் பலியானார். 20 பேர் படுகாயம் அடைந்தனர்.
    பொள்ளாச்சி:

    கேரள மாநிலம் எர்ணாகுளத்தை சேர்ந்த 28 பேர் கடந்த 9-ந் தேதி மினி பஸ்சில் கொடைக்கானலுக்கு சுற்றுலா வந்தனர். அவர்கள் அங்குள்ள பல்வேறு இடங்களை சுற்று பார்த்தனர்.

    நேற்று இரவு பொள்ளாச்சி வழியாக சொந்த ஊருக்கு திரும்பி கொண்டு இருந்தனர். இந்த மினி பஸ் நள்ளிரவு 11.15 மணியளவில் பொள்ளாச்சி அருகே உள்ள அம்பராம் பாளையத்தில் வந்து கொண்டிருந்தது.

    அப்போது திடீரென பஸ்சின் வலது முன் பக்க டயர் வெடித்தது. இதில் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ் ரோடு ஓரம் தலை குப்புற கவிழ்ந்தது.

    இந்த விபத்தில் பஸ்சில் இருந்த எர்ணாகுளத்தை சேர்ந்த ஸ்ரீராஜ் (38) சம்பவ இடத்திலே உடல் நசுங்கி பலியானார். இவர் எல்.ஐ.சி. முகவர் ஆவார்.

    பஸ்டிரைவர் நோபி, நந்துலால் (19) யாது (18), அஜீஸ் (20), அரவிந்த் சியாம்பிரகாஷ் (26), விஷால் (24), அகில் விஸ்வநாத் (26), அம்ருத் (22), சாஜேஸ் (37), விநாயக் (26), ஜித்து26), விஷ்ணு, விமல், கிரிஷ் உள்பட 20 பேர் படுகாயம் அடைந்தனர்.

    அவர்களில் 14 பேர் பொள்ளாச்சி அரசு மருத்துவமனையிலும், மற்றவர்கள் தனியார் மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

    இது குறித்து எர்ணாகுளத்தில் உள்ள உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் பொள்ளாச்சி விரைந்து வந்தனர்.

    விபத்து தொடர்பாக ஆனைமலை போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். #tamilnews
    பொள்ளாச்சி அருகே மின் கம்பத்தில் கார் மோதிய விபத்தில் தொழிலாளி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    பொள்ளாச்சி:

    நீலகிரி மாவட்டம் ஊட்டி அருகே உள்ள பந்தலூரை சேர்ந்தவர்கள் ஆனந்தன்(வயது 26), அர்ஜூனன் (24), அருண்(29), பன்னீர்செல்வம்(22). இவர்கள் கோவை மாவட்டம் வால்பாறையில் உள்ள எஸ்டேட்டில் ஒப்பந்த தொழிலாளர்களாக பணிபுரிந்து வருகின்றனர்.

    4 பேரும் கடந்த 2 நாட்களுக்கு முன்பு ஊட்டிக்கு சென்றனர். மீண்டும் நேற்று இரவு ஒரு காரில் வால்பாறைக்கு புறப்பட்டனர். காரை அர்ஜூனன் ஓட்டி வந்தார். கார் ஆழியாறு அருகே வந்து கொண்டு இருந்த போது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் இருந்த மின்கம்பத்தில் மோதி கவிழ்ந்தது.

    இந்த விபத்தில் ஆனந்தன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். படுகாயம் அடைந்து உயிருக்கு போராடிய டிரைவர் அர்ஜூனன், அருண், பன்னீர்செல்வம் ஆகியோரை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இந்த விபத்து குறித்து ஆழியாறு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் 3 பேர் பலியானார்கள். இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
    பொள்ளாச்சி:

    கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள வஞ்சியாபுரம் மதுரை வீரன் கோவில் தெருவை சேர்ந்தவர் மாரிமுத்து. இவரது மகன் வினித் (28). கூலி தொழிலாளி.

    இவர் தனது நண்பர்கள் சூளேஸ்வரன்பட்டி ஜெய்கணேஷ் (24), ஜமீன் கோட்டாம்பட்டி சரவணன் (17) ஆகியோருடன் மோட்டார் சைக்கிளில் சென்றார்.

    பொள்ளாச்சி - கோட்டூர் சாலையில் சூளேஸ்வரன் பட்டி என்.ஜி.ஜி.ஓ. காலனி பகுதியில் சென்று கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த கார் மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

    இதில் 3 பேரும் தூக்கி வீசப்பட்டனர். இவர்களில் வினித் சம்பவ இடத்திலேயே இறந்தார். ஜெய் கணேஷ், சரவணன் ஆகியோர் பலத்த காயம் அடைந்தனர்.

    அவர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டு பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

    அங்கு சிகிச்சை பலன் இன்றி 2 பேரும் பலியானார்கள். மோட்டார் சைக்கிளில் மோதிய காரை ஓட்டி வந்தவர் சின்னம் பாளையத்தை சேர்ந்த சண்முகம் என்பது தெரிய வந்தது. அவரிடம் பொள்ளாச்சி கிழக்கு போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    பொள்ளாச்சி அருகே விபத்தில் 3 பேர் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. #Tamilnews
    கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் இன்று காலை பஸ் மீது தண்ணீர் லாரி மோதிய விபத்தில் டிரைவர், கண்டக்டர் உள்பட 5 பேர் படுகாயமடைந்தனர்.
    பொள்ளாச்சி:

    கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் இருந்து இன்று காலை பெதப்பம்பட்டிக்கு அரசு பஸ் புறப்பட்டது. துர்க்கைராஜன் என்பவர் பஸ்சை ஓட்டினார். கண்டக்டராக கண்ணன் இருந்தார்.

    அனுப்பர்பாளையம் பிரிவு மேடு அருகே பஸ் சென்றது. பஸ்சுக்கு முன்பு தண்ணீர் லாரி சென்றது. மேடு உயரமாக இருந்ததால் தொடர்ந்து தண்ணீர் லாரியால் செல்ல முடியாவில்லை. இதனால் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி பின்நோக்கி வந்தது. லாரி பின்னால் வருவதை பார்த்த பஸ் டிரைவர் சுதாரித்துக்கொண்டு பஸ்சை நிறுத்தினார். இருந்தாலும் வேகமாக வந்த லாரி பஸ் மீது மோதியது. மோதிய வேகத்தில் பஸ் ஒரு பள்ளத்தில் ஒரு பக்கமாக கவிழ்ந்தது. அப்போதும் விடாமல் லாரி பஸ் மீது மோதியது.

    இதில் பஸ்சில் இருந்த டிரைவர், கண்டக்டர் மற்றும் பயணிகள் அடிவெள்ளியை சேர்ந்த அமாவாசை (65), எரிப்பட்டியை சேர்ந்த கலைச்செல்வி (45), குணசேகரன் ஆகிய 5 பேர் காயம் அடைந்தனர். காயம் அடைந்த 5 பேரையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இது குறித்து நெகமம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    பொள்ளாச்சி அருகே பிறந்த நாளுக்கு கோவிலுக்கு சென்ற போது விபத்தில் சிக்கி அக்காள்-தம்பி பலியானார்கள்.

    பொள்ளாச்சி:

    பொள்ளாச்சி அருகே உள்ள கோட்டூரை சேர்ந்தவர் ராமு. இவரது மகன் அஜித் குமார் (20). சூலூர் காரணம்பேட்டை அருகே உள்ள தனியார் நிறுவனத்தில் எலக்ட்ரீசியனாக வேலை பார்த்து வந்தார்.

    அஜித் குமாரின் உறவினர் சோமந்துறை சித்தூரை சேர்ந்த செந்தில்வேல். இவரது மகள் மாலதி (21). இவரும் அஜித் குமார் வேலை பார்க்கும் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். இருவரும் அக்காள்-தம்பி உறவுமுறை ஆவார்கள்.

    நேற்று அஜித்குமார், அவரது அண்ணன் விஜயராகவன், மாலதி, அவரது அண்ணன் முத்துக்குமார் மற்றும் நண்பர்கள் ஆகியோர் மோட்டார் சைக்கிளில் பழனி முருகன் கோவிலுக்கு புறப்பட்டனர்.அஜித் குமாரும், மாலதியும் ஒரு மோட்டார் சைக்கிளில் புறப்பட்டனர். பின்னால் 2 மோட்டார் சைக்கிளில் மற்ற 4 பேரும் வந்தனர். அவர்கள் பொள்ளாச்சி- உடுமலை ரோடு கோமங்கலம் அருகே சென்ற போது எதிரே தேனியில் இருந்து ஆனைமலை நோக்கி வந்த லாரி அஜித் குமார் ஓட்டி சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியது.இதில் அஜித் குமார், மாலதி ஆகிய 2 பேரும் லாரியில் சிக்கி தூக்கி வீசப்பட்டனர். இதில் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலே யே இறந்தனர், பின்னால் வந்த உறவினர்கள் இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் இருவரது உடலை பார்த்து கதறி அழுதனர்.

    இது குறித்து கோமங்கலம் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து அஜித் குமார், மாலதி ஆகியோர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.அஜித் குமாருக்கு நேற்று பிறந்த நாள். இதனை தொடர்ந்து அவர் பழனி முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்ய முடிவு செய்தார். இதற்காக தனது அக்காள் மாலதி மற்றும் உறவினர்களுடன் கோவிலுக்கு சென்ற போது லாரி மோதியது.

    இந்த விபத்தில் தான் அஜித்குமாரும், மாலதியும் பலியாகி விட்டனர். விபத்தை ஏற்படுத்திய லாரி டிரைவர் தேனி மாவட்டம் பெரியகுளம் கள்ளிப்பட்டியை சேர்ந்த ராஜா (45) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள். விபத்தில் அக்காள்-தம்பி பலியான சம்பவம் கோட்டூர் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    ×