search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பொது மக்கள் அவதி"

    • அதிகாரிகளிடம் தகவல் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை
    • பொதுமக்கள் புகார்

    நெமிலி:

    நெமிலி சந்தைமேடு பகுதியில் சுமார் 20-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் அடிக்கடி மின்தடை ஏற்படுகிறது. நேற்று முன்தினம் இரவு முழுவதும் மின்தடை ஏற்பட்டது. இதனால் குழந்தைகள், பெரியவர்கள் உள்பட பொதுமக்கள் வீட்டில் தூங்க முடியாமல் இரவு முழுவதும் வீதிகளிலேயே தங்கியிருந்தனர்.

    இந்த பிரச்சினை சுமார் 8 வருடங்களுக்கு மேலாக இருந்து வருகிறது என்று அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் கூறு கின்றனர். இப்பகுதியில்தான் தாலுகா அலுவலகம், சார் பதிவாளர் அலுவலகம், போலீஸ் நிலையம் உள்ளிட்டவை அமைந்துள்ளது. மின்தடை குறித்து அதிகாரிகளை தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்தும் எந்தவித பலனும் இல்லை என்று பொதுமக்கள் தெரிவித்தனர்.

    • கனமழை நீடிக்கும் என சென்னை வானிலை நிலையம் எச்சரிக்கை விடுத்திருந்தது.
    • பெரும்பாலுமான தாழ்வான பகுதிகளில் மழை நீர் குளம் போல் தேங்கி நிற்கிறது.

    புதுச்சேரி: 

    வங்க கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்தமானது ஆழ்ந்த காற்றழுத்த மண்டலமாக மாறி சென்னை மற்றும் புதுச்சேரி நோக்கி நகர்ந்து வருவதால், அடுத்த 2நாட்களுக்கு தொடர்மழை மற்றும் கனமழை நீடிக்கும் என சென்னை வானிலை நிலையம் எச்சரிக்கை விடுத்திருந்தது. அதன்படி நேற்று இரவு முதல் காரைக்காலில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. ஒரு சில நேரங்களில் காற்றுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. கனமழை காரணமாக காரைக்காலில் உள்ள பள்ளி கல்லூரிகளுக்கு புதுச்சேரி அரசு 2 நாள் விடுமுறை அறிவித்துள்ளது. மேலும் சென்னை வானிலை நிலையம் எச்சரிக்கை தொடர்ந்து. காரைக்கால் மாவட்டத்தை சேர்ந்த 11 மீனவர் கிராம மீனவர்கள் சுமார் 12,000- க்கு மேற்பட்டோர் இன்று கடலுக்குச் செல்லவில்லை.

    ஏற்கனவே கடலுக்குச் சென்ற மீனவர்கள் நேற்று மாலை அவசரமாக கரை திரும்பினார். மழையின் காரணமாக காரைக்காலில் உள்ள பெரும்பாலுமான தாழ்வான பகுதிகளில் மழை நீர் குளம் போல் தேங்கி நிற்கிறது .ஒரு சில இடங்களில் சாக்கடைகள் வடிகால் வாய்க்கால்கள் முறையாக தூர்வாரப்படாத காரணத்தால் மழை நீர் சாலைகளில்தேங்கி வருகிறது. இதனால் பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகி உள்ளனர். மேலும் காரைக்கால் திருநள்ளார், நெடுங்காடு, சுரக்குடி , திருப்பட்டும் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள வயல்களில் மழை நீர் தேங்கி நிற்கிறது.

    • கடலூர் ரெயில்வே மேம்பாலம் அருகே எரியும் குப்பையால் பொது மக்கள் கடும் அவதிக்கு உள்ளாகி உள்ளனர்.
    • நோய் பரவும் அபாயமும் நிலவி வருகின்றது.

    கடலூர்:

    கடலூர் மாநகராட்சிக்குட்பட்ட 45 வார்டுகளில் தினந்தோறும் துப்புரவு பணியாளர்கள் குப்பைகளை அகற்றி நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். ஆனால் தற்போது கடலூர் மாநகராட்சி பகுதியில் குப்பை கொட்டுவதற்கு இடம் இல்லாததால் ஆங்காங்கே குப்பைகள் மலை போல் குவிந்து எரித்து வருவதால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். இதன் காரணமாக கடலூர் மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா தலைமையில் ஆணையாளர் நவேந்திரன் மற்றும் அதிகாரிகள் குப்பைகள் கொட்டுவதற்கு இடத்தை மும்முரமாக தேர்ந்தெடுத்து வருகின்றனர். இது மட்டும் இன்றி குப்பைகளை சரியான முறையில் அகற்றி மக்கும் குப்பை மக்காத குப்பை என தரம் பிரித்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா கடும் எச்சரிக்கையும் விடுத்து வருகின்றார். இந்த நிலையில் கடலூர் திருப்பாதிரிப்புலியூர் ரயில்வே மேம்பாலம் அருகே நீண்ட நாட்களாக குப்பைகள் மலை போல் குவிந்து இருந்தன. இன்று காலை குப்பைகள் திடீரென்று எரிய தொடங்கியன. இதனை தொடர்ந்து தற்போது குப்பைகள் பெருமளவில் தீ விபத்து ஏற்பட்டது போல் கரும்புகை சூழ்ந்து துர்நாற்றம் வீசி வருகின்றது.

    இதன் காரணமாக சாலையில் செல்லும் பொதுமக்களும், அப்பகுதியில் வசிக்கக்கூடிய பொதுமக்களும், அவதிக்குள்ளாகி நோய் பரவும் அபாயமும் நிலவி வருகின்றது. இது மட்டுமின்றி சிலருக்கு குமட்டல், கண் எரிச்சல் போன்றவற்றை ஏற்படுவதால் தற்காலிகமாக அந்த இடத்தில் இருந்து விலகி சென்று உள்ளனர். மேலும் கடலூர் மாநகராட்சி அதிகாரிகளுக்கு இது சம்பந்தமாக புகார் அளித்துள்ளனர். ஆனால் இந்த குப்பைகள் தற்போது கொழுந்து விட்டு எரிவதால் என்ன செய்ய வேண்டும் என புரியாமல் பொதுமக்கள் தவித்து வருவதையும் காண முடிகிறது. ஆகையால் கடலூர் மாநகராட்சி நிர்வாகம் அகற்றப்படும் குப்பைகளை சரியான முறையில் தரம் பிரித்து பாதுகாப்பாக அகற்றும் நடவடிக்கையில் ஈடுபட வேண்டும். மேலும் இது போன்ற நடவடிக்கையில் ஈடுபட்டால் அனைத்து தரப்பு மக்களும் பாதிப்படைவதால் மாநகராட்சி அதிகாரிகள் கவனம் செலுத்தி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

    • கடலூர் அருகே பயணிகள் ரயில் மீண்டும் பழுதனதால் பொது மக்கள் கடும் அவதிக்குள்ளாகினார்கள்.
    • கொரோனா ஊரடங்கு நேரத்தில் நிறுத்தப்பட்ட பயணிகள் ெரயில் கடந்த சில தினங்களுக்கு முன்பு மீண்டும் இயக்கப்பட்டன.

    கடலூர்:

    விழுப்புரத்திலிருந்து மயிலாடுதுறைக்கு பயணிகள் ெரயில் தினந்தோறும் காலை மற்றும் மாலை நேரங்களில் பயணிகள் ஏற்றுக்கொண்டு சென்று வருகின்றன. இந்த நிலையில் கொரோனா ஊரடங்கு நேரத்தில் நிறுத்தப்பட்ட பயணிகள் ெரயில் கடந்த சில தினங்களுக்கு முன்பு மீண்டும் இயக்கப்பட்டன. இந்த நிலையில் இன்று காலை வழக்கம் போல் விழுப்புரத்திலிருந்து ெரயில் பயணிகளை ஏற்றுக்கொண்டு மயிலாடுதுறை நோக்கி சென்று கொண்டிருந்தது. அப்போது கடலூர் அருகே ஆலப்பாக்கம் ெரயில் நிலையம் சென்றடைந்தன. பின்னர் பயணிகளை ஏற்றுக்கொண்டு ெரயில் புறப்படும் போது ெரயில் என்ஜின் பழுதடைந்தது. பின்னர் ரயில்வே ஊழியர்கள் என்ஜினை பழுது சரி செய்து மீண்டும் 20 நிமிடத்தில் புறப்பட்டது. ஆனால் பயணிகள் ெரயில் சிறிது தூரம் சென்ற பிறகு பரங்கிப்பேட்டை பகுதியில் மீண்டும் ெரயில் என்ஜின் பழுதாகி நின்று விட்டது.

    இதன் காரணமாக ரயில்வே ஊழியர்கள் மீண்டும் என்ஜினில் ஏற்பட்ட பழுதை உடனடியாக சரி செய்ய முயன்றனர். ஆனால் சுமார் ஒரு மணி நேரத்திற்கு பிறகு என்ஜின் பழுது சரி செய்யப்பட்டு மீண்டும் ெரயில் புறப்பட்டது. இதன் காரணமாக காலை நேரங்களில் அண்ணாமலை பல்கலைக்கழகத்திற்கு செல்லும் மாணவர்கள் மற்றும் வேலைக்கு செல்லும் ஆயிரக்கணக்கானர் ரயில் எஞ்சின் பழுதான காரணமாக கடும் அவதி அடைந்தனர். மேலும் பெரும்பாலான பயணிகள் நீண்ட நேரமாக ெரயில்வே தண்டவாளப் பகுதிகளிலும், பிளாட்பார்மிலும் காத்திருந்தனர். இதனை தொடர்ந்து 9 மணி அளவில் ெரயில் என்ஜின் சரிய செய்யப்பட்டு மீண்டும் ெரயில் புறப்பட்டன. இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பாகவே காணப்பட்டன.

    ×