search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "புனரமைப்பு பணி"

    • அடிப்படை தேவையான குடிநீர்,கழிப்பறை வசதி, கடைகள் புனரமைப்பு, நடைபாதை வசதிகள் போன்ற பணிகள் மேற்கொள்ளப்படும்.
    • உழவர் சந்தைகளை புனரமைத்து சீரமைப்பதற்கு ரூ.8.75 கோடி நிதி ஒதுக்கப்பட்டு உள்ளது.

    சென்னை:

    தமிழ்நாட்டில் ஒவ்வொரு மாவட்டத்திலும் உழவர் சந்தைகள் செயல்பாட்டுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் கடந்த சட்டசபை கூட்டத் தொடரின்போது திண்டுக்கல், கள்ளக்குறிச்சி, நாமக்கல், புதுக்கோட்டை, திருப்பூர், திருவண்ணாமலை, செங்கல்பட்டு, வேலூர், போன்ற மாவட்டங்களில் உள்ள 25 உழவர் சந்தைகளுக்கு அடிப்படை தேவையான குடிநீர்,கழிப்பறை வசதி, கடைகள் புனரமைப்பு, நடைபாதை வசதிகள் போன்ற பணிகள் ரூ.9 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும் என்று அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அறிவிப்பு வெளியிட்டிருந்தார்.

    இதை செயல்படுத்தும் விதமாக இப்போது உழவர் சந்தைகளை புனரமைத்து சீரமைப்பதற்கு ரூ.8.75 கோடி நிதி ஒதுக்கப்பட்டு உள்ளது. இதற்கான அரசாணையும் வெளியிடப்பட்டு உள்ளது.

    இதில் செங்கல்பட்டு உழவர்சந்தைக்கு ரூ.32.10 லட்சம்,வேலூர் காகிதப்பட்டறை உழவர் சந்தைக்கு ரூ.42,72 லட்சம், செங்கம் உழவர் சந்தைக்கு ரூ.32.10 லட்சம், திருச்சி துறையூர் உழவர் சந்தைக்கு ரூ.35 லட்சம், சேலம் எடப்பாடி உழவர் சந்தைக்கு ரூ.43.30 லட்சம், அஸ்தம்பட்டி உழவர் சந்தைக்கு ரூ.4.06 லட்சம் என 25 உழவர் சந்தைகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.

    இந்த தொகையை வைத்து அலுவலக அறை புதுப்பித்தல, கழிப்பறை அமைத்தல், மற்றும் குடிநீர் வசதிகள், சுற்றுச்சுவர் கட்டுதல், மின்னணு சாதனங்கள் பொருத்துதல், வடிகால் மறுசீரமைப்பு நடைபாதை அமைத்தல், சுவர்களில் வர்ணம் பூசுதல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • ஏரிகளை பழுதுபார்த்தல், புனரமைத்தல் மற்றும் மறு சீரமைப்பு பணிகள் நடைபெறவுள்ளது.
    • பணிகளை தமிழக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் காந்தி தொடங்கி வைத்தார்.

    தேன்கனிக்கோட்டை,

    கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனி க்கோட்டை தாலுகா பேளகொண்ட ப்பள்ளியில் நீர்வள ஆதாரத்துறை சார்பில் 13 கோடியே 75 லட்சம் மதிப்பில் தேன்கனிக்கோட்டை வட்டத்தில் உள்ள தடிக்கல் ஏரி, மல்லிகார்ஜீன துர்க்கம் ஏரி, அடவங்கா ஏரி, பெத்தசெருவு ஏரி, ஜவளநாயக்கன் ஏரி, நாகேந்திரன் ஏரி, லட்சுமி கவுண்டன் ஏரி மற்றும் சூளகிரி தாலுகாவில் உள்ள பன்னப்பள்ளி ஏரி ஆகிய ஏரிகளை பழுதுபார்த்தல், புனரமைத்தல் மற்றும் மறு சீரமைப்பு பணிகள் நடைபெறவுள்ளது.

    இதற்கான பணிகள் துவக்க நிகழ்ச்சி நடந்தது. இந்த பணிகளை தமிழக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் காந்தி தொடங்கி வைத்தார்.

    இந்நிகழ்ச்சியில் கலெக்டர் தீபக் ஜேக்கப், எம்எல்ஏக்கள் ஓசூர் பிரகாஷ், ஓசூர் மாநகராட்சி மேயர் சத்யா, ஓசூர் சப்-கலெக்டர் சரண்யா, பொதுப்பணித் துறை செயற்பொறியாளர் (நீர்வளத்துறை) குமார், மாநகராட்சி துணை மேயர் ஆனந்தய்யா, உதவி செயற்பொறியாளர் (நீர்வள ஆதாரம்) உதயகுமார், உதவி பொறியாளர்கள் சிவசங்கர், பார்த்தீபன், பொன்னிவள வன், ராதிகா, தளி ஒன்றியக்குழு தலைவர் சீனிவாசலுரெட்டி, மாவட்ட கவுன்சிலர் மம்தா, ஊராட்சி மன்றத்தலைவர் லட்சுமி எல்லப்பா, முன்னாள் எம்.எல்.ஏ. முருகன், தாசில்தார் சரவணன மூர்த்தி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சென்னகிருஷ்ணன், நாக ரத்தினம் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதநிதிகள், துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • ஆனைக்குட்டம் அணையை புனரமைப்பது குறித்து கலெக்டர் ஆய்வு செய்தார்.
    • இந்த திட்டம் தொடர்பான தொடர் நடவடிக்கைகள் மேற்கொள்ள கலெக்டர் அறிவுறுத்தினார்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம் சிவகாசி வட்டம் ஆனைக்குட்டம் அணையில் ரூ.49கோடியில் புனரமைக்கப்படும் பணி தொடர்பான திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. ஆனைக்குட்டம் அணையில் புனரமைப்பு பணிகள் மேற்கொள்வது குறித்து விருதுநகர் எம்.எல்.ஏ. சீனிவாசன், சிவகாசி எம்.எல்.ஏ. அசோகன் ஆகியோர் முன்னிலையில் கலெக்டர் ஜெயசீலன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    அப்போது அணையின் தன்மை, மதகில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்வது குறித்து செயற்பொறியாளர் மூலம் அணை பாதுகாப்பு மற்றும் வடிவமைப்பு கண்காணிப்பு பொறியாளரை தொடர்பு கொண்டு இந்த திட்டம் தொடர்பான தொடர் நடவடிக்கைகள் மேற்கொள்ள கலெக்டர் அறிவுறுத்தினார்.

    இந்த ஆய்வில் விருதுநகர் நகர்மன்ற தலைவர் மாதவன், செயற்பொறியாளர் கணபதி ரமேஷ், உதவி செயற்பொறியாளர் அமுதா, உதவி பொறியாளர் சுந்தரலட்சுமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • மேயர் மகேஷ் தொடங்கி வைத்தார்
    • குமரி மாவட்டத்தில் அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள சிதலமடைந்த 100 கோயில்களை புனரமைக்க ரூ 5.83 கோடியை தமிழக அரசு ஒதுக்கீடு

    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தில் அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள சிதலமடைந்த 100 கோயில்களை புனரமைக்க ரூ 5.83 கோடியை தமிழக அரசு ஒதுக்கீடு செய்தது.

    தற்போது 100 கோவில்க ளிலும் புனரமைப்பு பணிகள் தொடங்கி நடந்து வருகிறது.இதில் பறக்கை காடேற்றி கூறுடைய கண்டன் சாஸ்தா கோயிலும் ஒன்று. இந்தக் கோயிலில் வருடத்திற்கு 2 முறை அப்பகுதி விவசாயிகள், நெல் நடவு செய்யும்போதும் அறுவடை செய்யும் போதும் கோயிலுக்கு வந்து பூஜைகள் செய்து வந்தனர். இதனை தமிழக அரசு புனரமைக்க உத்தரவிட்டு உள்ளது. அதன் பேரில் இன்று புனரமைப்புக்கான பணியை மேயர் மகேஷ் தொடங்கி வைத்தார்.

    இந்த நிகழ்ச்சியில் அற நிலையத்துறை பொறி யாளர் ராஜகுமார், கண்காணிப்பாளர் ஆனந்த், கோயில் மேலாளர் ஹரி பத்மநாபன் உள்பட பல கலந்து கொண்டனர்.

    • ஆய்வின் போது, காங்கயம் நகராட்சி ஆணையாளர் வெங்கடேஸ்வரன் உள்பட பலர் உடன் இருந்தனர்.
    • கலைஞரின் நகர்புற மேம்பாட்டு திட்டத்தின் மூலம் ரூ.4 கோடியில் புனரமைப்பு பணி நடக்கிறது.

    காங்கயம்

    காங்கயம் நகராட்சியில் பதுமன் குளம் உள்ளது. இந்த குளம் கலைஞரின் நகர்புற மேம்பாட்டு திட்டத்தின் மூலம் ரூ.4 கோடியில் புனரமைப்பு பணி நடக்கிறது. இந்த பணியை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் ஆய்வு செய்தார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    காங்கயம் நகராட்சி 18-வது வார்டு அகிலாண்டபுரத்தில் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.4கோடியில் பதுமன் குளம் புனரமைக்கும் பணிகளை ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

    இந்த குளத்தினை தூர்வாரி குளத்தினை சுற்றியுள்ள கரைகளை கான்கிரீட் சுவர் கொண்டு பலப்படுத்தும் பணிகள், குளத்தினை சுற்றிலும் மின் விளக்குகள் அமைத்தும், கம்பிவேலிகள், சுற்றிலும் பேவர் பிளாக் சாலைகள் அமைத்தும், குளத்தின் முகப்பு பகுதியில் பொழுது போக்கு அம்சங்களுடன் கூடிய சிறுவர் பூங்கா, சிறுவர் விளையாட்டு திடல்கள் அமைக்கப்படவுள்ளது. மேலும் கழிப்பிடங்கள், வாகனங்கள் நிறுத்தம், காவலர் அறைகள் அமைக்கப்படவுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த ஆய்வின் போது, காங்கயம் நகராட்சி ஆணையாளர் வெங்கடேஸ்வரன் உள்பட பலர் உடன் இருந்தனர்.

    • மூலி குளத்தை புனரமைப்பு செய்ய முடிவு செய்யப்பட்டு ரூ. 59. 50 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
    • காங்கிரீட் சாலை அமைப்பதற்கான பூமி பூஜையை திருப்பூர் தெற்கு தொகுதி எம்.எல்.ஏ., செல்வராஜ் தொடங்கி வைத்தார்.

    திருப்பூர்:

    திருப்பூர் ஊத்துக்குளி ரோட்டில் உள்ள மூலிகுளத்தை புனரமைத்து தடுப்பு சுவர் கட்ட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர். அதனை ஏற்று மூலி குளத்தை புனரமைப்பு செய்ய முடிவு செய்யப்பட்டு ரூ. 59. 50 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

    அதன்படி புனரமைப்பு பணிக்கான பூமி பூஜை இன்று காலை நடைபெற்றது. இதில் திருப்பூர் தெற்கு தொகுதி எம்.எல்.ஏ. க. செல்வராஜ், மாநகராட்சி மேயர் தினேஷ்குமார் ஆகியோர் புனரமைப்பு பணியை பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தனர்.மூலிகுளத்தை சுற்றிலும் சுற்றுச்சுவர் அமைத்தல், உட்புற கற்கள் பதித்தல் போன்ற பணிகள் நடைபெற உள்ளது.

    இந்நிகழ்ச்சியில் துணை மேயர் பாலசுப்ரமணியம், கவுன்சிலர்கள் ராதாகிருஷ்ணன், பி.ஆர். செந்தில்குமார்,  வாலிபாளையம் பகுதி செயலாளர் மு.க.உசேன், 33-வது வார்டு செயலாளர் ஸ்டார் மணி என்ற பொன்னுச்சாமி, பகுதி துணை செயலாளர் கோகுலகிருஷ்ணன், வார்டுபிரதிநிதிகள் தங்கவேல், சுப்பிரமணி, தியாகராஜன், அரிசி மணி, ஒர்க்‌ஷாப் வினோத், 33வது வார்டு தகவல் தொழில் நுட்பம் மணிகண்டன், ஆலய ரவி, பஞ்சாயத்து தலைவர் எம். ரங்கசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    இதேபோல் நொய்யல் வீதி ரைஸ்மில் காம்பவுண்ட் பகுதியில் தெற்கு தொகுதி எம்.எல்.ஏ., மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.39.50 லட்சம் மதிப்பில் தார் சாலை மற்றும் காங்கிரீட் சாலை அமைப்பதற்கான பூமி பூஜையை திருப்பூர் தெற்கு தொகுதி எம்.எல்.ஏ., செல்வராஜ் தொடங்கி வைத்தார்.

    • திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவிலுக்கு கும்பாபிசேகம் நடத்தியது தி.மு.க.வின் ஆட்சியில் தான்
    • மேயர் மகேஷ் தகவல்

    நாகர்கோவில்:

    கன்னியாகுமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரம் வடக்கு ஒன்றியம் இரவி புதூர் ஊராட்சி பகுதியில் பா.ஜ.க.வை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட இளை ஞர்கள் தி.மு.க.வில் இணை யும் நிகழ்ச்சி நடந்தது.

    ஒன்றிய செயலாளர் மதியழகன் ஏற்பாட்டில், மேயரும், தி.மு.க. கிழக்கு மாவட்ட செயலாளருமான மகேஷ் முன்னிலையில் அரிகரன், பாரத், ஆறுமுகம் உள்ளிட்ட 50 இளைஞர்கள் தி.மு.க.வில் இணைந்தனர்.

    நிகழ்ச்சியில் முன்னாள் எம்.எல்.ஏ. ஆஸ்டின், மாவட்ட துணை செய லாளர் சோமு, பொதுக் குழு உறுப்பினர் ஜீவா னந்தம், பகுதி செயலாளர் ஷேக்மீரான் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

    தி.மு.க.வில் இணைந்த பா.ஜ.க. இளைஞர்களுக்கு மேயர் மகேஷ் சால்வை அணிவித்தார். அப்போது அவர் பேசுகையில், தி.மு.க. ஆட்சியில் தான் கோவில்கள் வளர்ச்சிக்கு அதிக அளவில் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். 450 ஆண்டுகளாக கும்பாபி சேகம் நடைபெறாமல் இருந்த திருவட்டார் ஆதி கேசவ பெருமாள் கோவி லுக்கு கும்பாபிசேகம் நடத்தியது தி.மு.க.வின் ஆட்சியில் தான் எனவும், கன்னியாகுமரி மாவட்டத்தில் பராமரிப்பில்லாத 100 கோவில்களை புனரமைக்க ரூ.48 கோடி ஒதுக்கி பணிகள் நடந்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

    ×