search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மூலிகுளம் புனரமைப்பு பணி எம்.எல்.ஏ., -மேயர் தொடங்கி வைத்தனர்
    X

    மூலிகுளத்தில் புனரமைப்பு பணியை செல்வராஜ்எம்.எல்.ஏ.,, மாநகராட்சி மேயர் தினேஷ்குமார் ஆகியோர் தொடங்கி வைத்த காட்சி.

    மூலிகுளம் புனரமைப்பு பணி எம்.எல்.ஏ., -மேயர் தொடங்கி வைத்தனர்

    • மூலி குளத்தை புனரமைப்பு செய்ய முடிவு செய்யப்பட்டு ரூ. 59. 50 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
    • காங்கிரீட் சாலை அமைப்பதற்கான பூமி பூஜையை திருப்பூர் தெற்கு தொகுதி எம்.எல்.ஏ., செல்வராஜ் தொடங்கி வைத்தார்.

    திருப்பூர்:

    திருப்பூர் ஊத்துக்குளி ரோட்டில் உள்ள மூலிகுளத்தை புனரமைத்து தடுப்பு சுவர் கட்ட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர். அதனை ஏற்று மூலி குளத்தை புனரமைப்பு செய்ய முடிவு செய்யப்பட்டு ரூ. 59. 50 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

    அதன்படி புனரமைப்பு பணிக்கான பூமி பூஜை இன்று காலை நடைபெற்றது. இதில் திருப்பூர் தெற்கு தொகுதி எம்.எல்.ஏ. க. செல்வராஜ், மாநகராட்சி மேயர் தினேஷ்குமார் ஆகியோர் புனரமைப்பு பணியை பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தனர்.மூலிகுளத்தை சுற்றிலும் சுற்றுச்சுவர் அமைத்தல், உட்புற கற்கள் பதித்தல் போன்ற பணிகள் நடைபெற உள்ளது.

    இந்நிகழ்ச்சியில் துணை மேயர் பாலசுப்ரமணியம், கவுன்சிலர்கள் ராதாகிருஷ்ணன், பி.ஆர். செந்தில்குமார், வாலிபாளையம் பகுதி செயலாளர் மு.க.உசேன், 33-வது வார்டு செயலாளர் ஸ்டார் மணி என்ற பொன்னுச்சாமி, பகுதி துணை செயலாளர் கோகுலகிருஷ்ணன், வார்டுபிரதிநிதிகள் தங்கவேல், சுப்பிரமணி, தியாகராஜன், அரிசி மணி, ஒர்க்‌ஷாப் வினோத், 33வது வார்டு தகவல் தொழில் நுட்பம் மணிகண்டன், ஆலய ரவி, பஞ்சாயத்து தலைவர் எம். ரங்கசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    இதேபோல் நொய்யல் வீதி ரைஸ்மில் காம்பவுண்ட் பகுதியில் தெற்கு தொகுதி எம்.எல்.ஏ., மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.39.50 லட்சம் மதிப்பில் தார் சாலை மற்றும் காங்கிரீட் சாலை அமைப்பதற்கான பூமி பூஜையை திருப்பூர் தெற்கு தொகுதி எம்.எல்.ஏ., செல்வராஜ் தொடங்கி வைத்தார்.

    Next Story
    ×