search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பறக்கும்படை சோதனை"

    திருப்பத்தூரில் பறக்கும்படை சோதனையில் ரூ.3 லட்சத்து 50 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.
    திருப்பத்தூர்:

    தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தலையொட்டி பணம் கொடுப்பதை தடுக்க பறக்கும் படை அமைக்கபட்டு சோதனை செய்யபட்டது. தேர்தல் கடந்த 18-ந் தேதி நடந்தது.

    வாக்கு எண்ணிக்கை நடக்காததால் தேர்தல் விதி அமலில் உள்ளது. இதனால் மீண்டும் சோதனை நடத்த தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. வேலூர் மாவட்டத்தில் 39 பறக்கும் படைகள் சோதனை நடத்தி வருகின்றன.

    திருப்பத்தூர் பெங்களூர் ரோட்டில் நள்ளிரவு பறக்கும் படையினர் சோதனை நடத்தினர்.

    அப்போது பசலிகுட்டையை சேர்ந்த கிருஷ்ணன் (34) என்பவர் காரில் வந்தார். காரை சோதனையிட்ட போது உரிய ஆவணங்களின்றி ரூ.3 லட்சத்து 50 ஆயிரம் பணம் இருந்தது.

    அதனை பறிமுதல் செய்து திருப்பத்தூர் தாசில்தார் அனந்தகிருஷ்ணனிடம் ஒப்படைத்தனர்.

    திருப்பத்தூரில் பறக்கும்படைசோதனையில் சிக்கிய ரூ.3½ லட்சத்துடன் அதிகாரிகள்.

    சென்னையில் உள்ள எம்.எல்.ஏ விடுதியில் தேர்தல் பறக்கும் படை நேற்று சோதனை நடத்தியது தொடர்பாக அமைச்சர் ஆர்.பி.உதயகுமாருக்கு வருமான வரித்துறை இன்று சம்மன் அனுப்பியுள்ளது. #RPUdayakumar #IT
    சென்னை:

    சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.எல்.ஏக்கள்  தங்கும்  விடுதியில் தேர்தல் பறக்கும் படையினர் நேற்று இரவு சோதனை நடத்தினர். சி.பிளாக் பகுதியில் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக அவர்கள் சோதனை செய்தனர். 

    பணம் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக கிடைத்த தகவல்களின் அடிப்படையில் சோதனை நடைபெற்றதாக தகவல்கள் வெளியாகின. தேர்தல் பறக்கும் படையினருடன் இணைந்து போலீசாரும் சோதனை நடத்தினர்.  

    இந்நிலையில், எம்.எல்.ஏ விடுதியில் தேர்தல் பறக்கும் படை நேற்று சோதனை நடத்தியது தொடர்பாக அமைச்சர் ஆர்.பி.உதயகுமாருக்கு வருமான வரித்துறை இன்று சம்மன் அனுப்பியுள்ளது.  #RPUdayakumar #IT 
    பள்ளி மாணவியை திருமணத்துக்காக கடத்திச் சென்ற போது பறக்கும்படை அதிகாரிகள் அவர்களை பிடித்தனர்.

    வடமதுரை:

    திண்டுக்கல் - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கெச்சானிப்பட்டி பிரிவு அருகே இன்று பறக்கும்படை அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டு இருந்தனர். அப்போது ஒரு காரை நிறுத்தி சோதனையிட்டனர். அந்த காரில் பள்ளி சீருடையில் ஒரு மாணவியும், 3 வாலிபர்களும் இருந்தனர்.

    இதனால் சந்தேகமடைந்த அதிகாரிகள் அவர்கள் கொண்டு வந்த பையை பிரித்து சோதனையிட்டனர். அதில் மணப்பெண்ணுக்கு தேவைப்படும் பட்டுச் சேலை, திருமாங்கல்யம், நகை, மாப்பிள்ளைக்கு தேவையான பட்டு வேஷ்டி, சட்டை ஆகியவை இருந்தது.

    இது குறித்து அவர்களிடம் விசாரித்த போது கரூர் மாவட்டம் கடவூரைச் சேர்ந்த ராஜ்குமார் என்றும், தனது அத்தை மகளான 10-ம் வகுப்பு மாணவியை திருமணம் செய்வதற்காக காரில் கடத்தி வந்ததும் தெரிய வந்தது. அவர்களுக்கு உடந்தையாக வந்த தாமரைச் செல்வன், செந்தில்குமார் ஆகியோரையும் பறக்கும்படையினர் பிடித்து வடமதுரை போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

    காரில் கடத்தி வரப்பட்ட மாணவி 10-ம் வகுப்பு படித்து வருகிறார். இன்று அவருக்கு கடைசி தேர்வான சமூக அறிவியல் தேர்வு நடக்கிறது. தேர்வு எழுத வந்த நேரத்தில் அவரை ராஜ்குமார் மற்றும் அவரது நண்பர்கள் காரில் கடத்தி வந்தது தெரிய வந்தது. மாணவியின் பெற்றோருக்கு தெரியாமல் கடத்தி வரப்பட்டார்களா? என்ற கோணத்திலும் மைனர் பெண்ணை கடத்தி வந்த குற்றத்துக்காக அவர்கள் மீது வழக்குபதிவு செய்யப்படும் எனவும் போலீசார் தெரிவித்தனர். சம்பவம் நடந்த பகுதி கடவூர் என்பதால் இது குறித்து அப்பகுதி போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    10-ம் வகுப்பு அரசு கடைசி தேர்வை எழுத முடியாமல் தவற விட்டு வாலிபர்களுடன் வந்த மாணவி போலீஸ் நிலையத்தில் கதறி அழுதார்.

    ×