search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பயிர்கள் நாசம்"

    • விவசாய பயிர்களை நாசமாக்கும் பன்றிகளை ஒழிக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
    • வயலை சுற்றி கம்புகள் நட்டு அதில் வெடிகளை கட்டி வெடிக்க செய்வோம்.

    மானாமதுரை

    சிவகங்கை மாவட்டம் மானாமதுரை ஊராட்சி ஒன்றியம் கீழமேல்குடி கிராமத்தில் பன்றிகளிடம் இருந்து விவசாய பயிர்களை காப்பாற்றுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று நீர்நிலை பயன்படுத்துவோர் சங்கத்தின் தலைவர் வெள்ளமுத்து மாவட்ட நிர்வாகத்தை கேட்டுக் கொண்டுள்ளார்.

    இதுகுறித்து அவர் கூறியதாவது:-

    கடந்த 10 ஆண்டுகளாக பயிர்களை பன்றிகள் அழித்து வருவதால் விவசாயம் பொய்த்து போகும் அபாயம் உள்ளது. இதன் காரணமாக இந்த பகுதியில் விவசாயம் செய்வது நிறுத்தப்பட்டு கருவேல மரங்கள் மண்டி கிடக்கிறது.

    இந்த பகுதியில் 2 ஏக்கரில் விவசாயம் செய்து நெல் விளைந்த நிலையில் பன்றிகள் தினந்தோறும் பயிர்களை அழித்து வருகிறது.இரவு 3 முறை பன்றிகள் நுழைந்து நன்றாக விளைந்து நிற்கும் நெற் பயிர்களை அழித்து வருகிறது. ஒரு ஏக்கர் நிலத்தில் 40 முதல் 50 நெல் மூடைகள் மகசூல் வரும். பன்றிகள் அழிப்பதால் விளைச்சல் பாதியாக குறையும் ஆபத்து உள்ளது.

    இரவு நேரங்களில் பன்றிகள் வராமல் தடுப்ப தற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறோம். இரவு நேரத்தில் விழித்திருந்து வெடி போட்டு பன்றிகளை விரட்டுவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறோம். வயலை சுற்றி கம்புகள் நட்டு அதில் வெடிகளை கட்டி வெடிக்க செய்வோம்.

    பன்றிகளிடம் இருந்து பயிர்களை காப்பாற்ற மாவட்ட நிர்வாகம் நடவ டிக்கை எடுக்க ேவண்டும்.

    இந்த பாதிப்பு தொடர்பாக விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் கலெக்டரிடம் முறையிட்டோம்.நடவடிக்கை எடுப்பதாக கலெக்டர் கொடுத்த உறுதி மொழியை நிறைவேற்ற வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • 3,156 விவசாயிகள் பாதிப்பு
    • அதிகாரி தகவல்

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக பெய்த புயல் மழை காரணமாக 1,912 ஹெக்டேர் பரப்பளவில் பயிரிடப்பட்ட நெற்பயிர்கள் நாசமாகின.

    இதனால் 2,814 விவசாயிகள் பாதிப்படைந்தனர். 76 ஹெக்டேர் பரப்பளவில் பயிரிடப்பட்ட பருப்பு வகை பயிர்கள் நாசமாகின.

    இதனால் 116 விவசாயிகள் பாதிப்படைந்தனர். 170.91 ஹெக்டேர் பரப்பள வில் பயிரிடப்பட்ட நிலக்கடலை பயிரும் நாசமாகின, 225 விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.இதேபோன்று தினை வகை பயிர்களும் பாதிப்பட்டுள்ளன.

    ராணிப்பேட்டை மாவட்டத்தில் மொத்தம் 2,160 ஹெக்டேர் பரப்பளவில் பயிரிடப்பட்ட பயிர்கள் நாசமானது.

    மேலும் 24.1 ஹெக்டேர் பரப்பளவில் மிளகாய் பயிர்கள், 31.31 ஹெக்டேர் பரப்பளவில் வாழை மரங்கள், 28.15 ஹெக்டேர் பரப்பளவில் காய்கறி பயிர்கள் நாசமாகின ஆக மொத்தம் ராணிப்பேட்டை மாவட்டத்தில் 2,243 ஹெக்டேர் பரப்பளவில் பயிர்கள் நாசமானது. 3,259 விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    ×