search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பயங்கரவாத இயக்கம்"

    வங்காளதேசம் நாட்டின் டாக்கா நகரில் உள்ள ஓட்டலில் இந்திய மாணவி உள்பட 20 பேரை கொன்று குவித்த பயங்கரவாத இயக்கத்தின் தலைவரை போலீசார் சுட்டுக் கொன்றனர். #bannedmilitant #KhorshedAlamkilled
    டாக்கா:

    வங்காளதேசம் நாட்டின் தலைநகரான டாக்காவில் கடந்த 2016-ம் ஆண்டு ஜூலை மாதம் ஒரு ஓட்டலில் பணயக் கைதிகளாக பிடிபட்டிருந்த இந்தியாவை சேர்ந்த கல்லூரி மாணவியான தாரிஷி ஜெயின் உள்பட 20 வெளிநாட்டினர் கழுத்தை அறுத்தும், துப்பாக்கிகளால் சுட்டும் கொடூரமான முறையில் கொல்லப்பட்டனர்.

    மீட்பு நடவடிக்கையின்போது ஏற்பட்ட துப்பாக்கிச் சண்டையில் பாதுகாப்பு படையை சேர்ந்த இருவரும் கொல்லப்பட்டனர். கடந்த பல ஆண்டுகளாகவே வங்காளதேசத்தில் இயங்கிவரும் ஜமாயத்துல் முஜாஹிதீன் என்ற உள்நாட்டு பயங்ரவாத அமைப்பு இந்த தாக்குதலை நடத்தியதாக பின்னர் தெரியவந்தது.

    தடை செய்யப்பட்ட இந்த இயக்கத்தை சேர்ந்த பயங்கரவாதிகளை ராணுவத்தினர் மற்றும் போலீசார் தேடி வருகின்றனர்.

    இந்நிலையில், அரசால் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ள ஜமாயத்துல் முஜாஹிதீன் பயங்ரவாத அமைப்பின் தலைவரான ஷமில் (எ) கோர்ஷெட் ஆலம் மற்றும் அவரது கூட்டாளிகள் பதுங்கியிருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    இதைதொடர்ந்து, நேற்றிரவு அப்பகுதியை முற்றுகையிட்ட போலீசார் தீவிரமாக சோதனையில் ஈடுபட்டனர். போலீசார் சூழ்ந்து கொண்டதை கண்ட பயங்கரவாதிகள் துப்பாக்கிகளால் சுட்டு தாக்குதல் நடத்தினர்.



    போலீசார் நடத்திய எதிர்தாக்குதலில் துப்பாக்கியால் சுடப்பட்ட காயங்களுடன் கோர்ஷெட் ஆலம் பிடிபட்டார். அவரது கூட்டாளிகள் அங்கிருந்து தப்பியோடி விட்டனர்.

    பிடிபட்ட பயங்கரவாதிகள் தலைவரையும், காயமடைந்த இரு போலீசாரையும் அருகாமையில் உள்ள ஷாஹித் ரஹ்மான் மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு போலீசார் கொண்டு சென்றனர். போகும் வழியில் கோர்ஷெட் ஆலம்  உயிரிழந்ததாக வங்காளதேசம் ஊடகங்கள் இன்று செய்தி வெளியிட்டு வருகின்றன. #Topmilitantleader #Bangladeshmilitantleader  #bannedmilitant #KhorshedAlamkilled
    காஷ்மீரில் கடந்த 6 மாதத்தில் மட்டும் பயங்கரவாத இயக்கத்தில் 115 இளைஞர்கள் இணைந்து உள்ளதாகவும் அவர்கள் சோபியாலி, புலவாமா, பகுதியை சேர்ந்தவர்கள் எனவும் தெரிய வந்துள்ளது. #Kashmiriyouth
    ஸ்ரீநகர்:

    பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாத இயக்கத்தினர் இந்தியாவில் நாசவேலையில் ஈடுபடுகிறார்கள். இந்த அமைப்புகள் காஷ்மீரில் அப்பாவி இளைஞர்களையும், படித்த வாலிபர்களையும் அந்த அமைப்பில் சேர்த்து வருகிறது.

    இந்த நிலையில் காஷ்மீரில் எம்.பி.ஏ. பட்டம் படிக்கும் மாணவர் ஒருவர் பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாத அமைப்பான லஷ்கர்- இ-தொய்பாவில் இணைந்துள்ளார்.

    அந்த வாலிபரின் பெயர் இஷ்பக்வாணி. 26 வயதான அவர் தெற்கு காஷ்மீர் பகுதி புல்வாமா மாவட்டத்தை சேர்ந்தவர். அந்த வாலிபருக்கு லஷ்கர்-இ- தொய்பா அமைப்பில் ‘அபுதுராப்’ என்ற குறியீடு பெயர் வழங்கப்பட்டுள்ளது.

    பயங்கரவாத இயக்கத்தில் இணைந்த இஷ்பக் வாணி ஏ.கே. 47 ரக துப்பாக்கியுடன் இருக்கும் படம் சமூக வலை தளத்தில் வேகமாக பரவி வருகிறது.

    இஷ்பக் மாயமானதாக அவரது குடும்பத்தினர் கடந்த 22-ந்தேதி போலீசில் புகார் கொடுத்து இருந்தனர். அவர் பயங்கரவாத இயக்கத்தில் சேர்ந்த தகவல் தற்போது தெரிய வந்துள்ளது.

    கடந்த ஜனவரி மாதம் காஷ்மீரில் பி.எச்.டி. மாணவர் பஷீர்வாணி பயங்கரவாத இயக்கத்தில் சேர்ந்து இருந்தார்.



    கடந்த 6 மாதத்தில் மட்டும் பயங்கரவாத இயக்கத்தில் 115 காஷ்மீர் இளைஞர்கள் இணைந்து உள்ளனர். சோபியாலி, புலவாமா, அஹந்திபோரா பகுதியை சேர்ந்தவர்கள் ஆவார்கள்.

    இதில் 91 பேர் ஹிஸ்புல்-மு ஜாகிதீன் மற்றும் லஷ்கர்-இ- தொய்பாவில் இணைந்துள்ளனர். மீதியுள்ளவர்கள் அல்கொய்தா ஆதரவு அமைப்பான அன்சார் சஸ்வத்-ஹிந்த் மற்றும் காஷ்மீர் ஐ.எஸ். இயக்கத்தில் சேர்ந்தனர்.

    கடந்த ஆண்டில் 126 பேர் பயங்கரவாத அமைப்பில் இணைய இருந்தனர். தற்போது 6 மாதத்தில் 115 பேர் சேர்ந்துள்ளது பாதுகாப்பு படையினை கவலை அடைய செய்துள்ளது. #Kashmiriyouth
    ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் காணாமல் போன ஐ.பி.எஸ் அதிகாரியின் சகோதரர் பயங்கரவாதியாக மாறி, ஆயுதங்களுடன் நிற்கும் புகைப்படம் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #JammuKashmir
    ஸ்ரீநகர்:

    ஜம்மு காஷ்மீர் மாநிலம் சோபியான் மாவட்டத்தில் ஐபிஎஸ் அதிகாரியின் சகோதரர் ஷம்சுல் ஹக் என்பவர் கடந்த மே மாதம் காணாமல் போனாதாக போலீசில் புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து உள்ளூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து காணாமல் போன ஷம்சுல் ஹக்கை தேடி வந்தனர்.

    இந்நிலையில், ஹிஸ்புல் முஜாகிதீன் பயங்கரவாத இயக்கத்தில் இணைந்தபடி, ஏ.கே.47 ரக துப்பாக்கியுடன் ஷம்சுல் ஹக் இருக்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

    ஷம்சுல் ஹக், ஹிஸ்புல் முஜாகிதீன் இயக்கத்தில் மே மாதம் 22-ம் தேதி இணைந்ததாக அந்த புகைப்படத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும், புகைப்படத்தின் நம்பகத்தன்மை குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட உள்ளதாகவும் காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    ஜம்மு காஷ்மீரில் இளைஞர்கள் பயங்கரவாத இயக்கத்துடன் இணைவது இயல்பான ஒன்றாக கருதப்பட்டாலும், ஐ.பி.எஸ் அதிகாரியின் சகோதரர் பயங்கரவாத இயக்கத்தில் இணைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #JammuKashmir
    ×