search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Kashmiri Youth"

    காஷ்மீரில் ராணுவத்தில் சேர கடும் குளிரையும், மழையையும் பொருட்படுத்தாமல் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இளைஞர்கள் ராணுவத்தில் சேர ஆர்வமாக வந்திருந்தனர். #PulwamaAttack #KashmiriYouth #Army
    ஸ்ரீநகர்:

    காஷ்மீர் மாநிலம் பாராமுல்லா மாவட்டத்தில் உள்ள கண்டமுல்லா ராணுவ முகாமில் ராணுவத்துக்கு ஆட்கள் தேர்வு செய்யும் முகாம் நடந்தது. கடும் குளிரையும், மழையையும் பொருட்படுத்தாமல் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இளைஞர்கள் ராணுவத்தில் சேர ஆர்வமாக வந்திருந்தனர். அங்கு அவர்களுக்கு உடற்தகுதி தேர்வு நடத்தப்பட்டது.

    இது தொடர்பான வீடியோ ராணுவத்தின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்டது. அதில், “நாட்டை காக்க ஏராளமான இளைஞர்கள் ராணுவத்துக்கான ஆட்கள் தேர்வில் கலந்துகொண்டு இருக்கின்றனர். இதன் மூலம் அவர்களுக்கு சிறப்பான எதிர்காலம் காத்திருக்கிறது” என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.

    இது குறித்து ராணுவ அதிகாரிகள் கூறுகையில், ஸ்ரீநகரில் இந்த வார இறுதியிலும் அடுத்த வாரமும் ராணுவத்துக்கு ஆட்கள் தேர்வு முகாம் நடைபெற உள்ளது என்றனர்.

    புலவாமா பகுதியில் துணை ராணுவ படை மீது பயங்கரவாத தாக்குதல் நடந்த சில நாட்களிலேயே ராணுவத்தில் சேர காஷ்மீர் இளைஞர்கள் ஆர்வம் காட்டியது அதிகாரிகளிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. 
    காஷ்மீரில் கடந்த 6 மாதத்தில் மட்டும் பயங்கரவாத இயக்கத்தில் 115 இளைஞர்கள் இணைந்து உள்ளதாகவும் அவர்கள் சோபியாலி, புலவாமா, பகுதியை சேர்ந்தவர்கள் எனவும் தெரிய வந்துள்ளது. #Kashmiriyouth
    ஸ்ரீநகர்:

    பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாத இயக்கத்தினர் இந்தியாவில் நாசவேலையில் ஈடுபடுகிறார்கள். இந்த அமைப்புகள் காஷ்மீரில் அப்பாவி இளைஞர்களையும், படித்த வாலிபர்களையும் அந்த அமைப்பில் சேர்த்து வருகிறது.

    இந்த நிலையில் காஷ்மீரில் எம்.பி.ஏ. பட்டம் படிக்கும் மாணவர் ஒருவர் பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாத அமைப்பான லஷ்கர்- இ-தொய்பாவில் இணைந்துள்ளார்.

    அந்த வாலிபரின் பெயர் இஷ்பக்வாணி. 26 வயதான அவர் தெற்கு காஷ்மீர் பகுதி புல்வாமா மாவட்டத்தை சேர்ந்தவர். அந்த வாலிபருக்கு லஷ்கர்-இ- தொய்பா அமைப்பில் ‘அபுதுராப்’ என்ற குறியீடு பெயர் வழங்கப்பட்டுள்ளது.

    பயங்கரவாத இயக்கத்தில் இணைந்த இஷ்பக் வாணி ஏ.கே. 47 ரக துப்பாக்கியுடன் இருக்கும் படம் சமூக வலை தளத்தில் வேகமாக பரவி வருகிறது.

    இஷ்பக் மாயமானதாக அவரது குடும்பத்தினர் கடந்த 22-ந்தேதி போலீசில் புகார் கொடுத்து இருந்தனர். அவர் பயங்கரவாத இயக்கத்தில் சேர்ந்த தகவல் தற்போது தெரிய வந்துள்ளது.

    கடந்த ஜனவரி மாதம் காஷ்மீரில் பி.எச்.டி. மாணவர் பஷீர்வாணி பயங்கரவாத இயக்கத்தில் சேர்ந்து இருந்தார்.



    கடந்த 6 மாதத்தில் மட்டும் பயங்கரவாத இயக்கத்தில் 115 காஷ்மீர் இளைஞர்கள் இணைந்து உள்ளனர். சோபியாலி, புலவாமா, அஹந்திபோரா பகுதியை சேர்ந்தவர்கள் ஆவார்கள்.

    இதில் 91 பேர் ஹிஸ்புல்-மு ஜாகிதீன் மற்றும் லஷ்கர்-இ- தொய்பாவில் இணைந்துள்ளனர். மீதியுள்ளவர்கள் அல்கொய்தா ஆதரவு அமைப்பான அன்சார் சஸ்வத்-ஹிந்த் மற்றும் காஷ்மீர் ஐ.எஸ். இயக்கத்தில் சேர்ந்தனர்.

    கடந்த ஆண்டில் 126 பேர் பயங்கரவாத அமைப்பில் இணைய இருந்தனர். தற்போது 6 மாதத்தில் 115 பேர் சேர்ந்துள்ளது பாதுகாப்பு படையினை கவலை அடைய செய்துள்ளது. #Kashmiriyouth
    ×