search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நேர்முகத்தேர்வு"

    • குறிப்பிட்ட சிலரை மட்டும் பணிக்கு நியமித்து உத்தரவிட்டு உள்ளனர்.
    • பணி நியமனங்களை ரத்து செய்துவிட்டு நேர்முக தேர்வு நடத்தி விதிமுறைகளுக்கு உட்பட்டு புதிதாக பணி நியமனங்களை மேற்கொள்ளும்படி உத்தரவிட வேண்டும்.

    மதுரை:

    திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறையை சேர்ந்த நித்யா. இவர் மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:

    கடந்த 9.9.2022 அன்று குஜிலியம்பாறை ஊராட்சி ஒன்றியத்தில் உதவியாளர் பணி நியமனம் செய்ய இருப்பதாக அறிவிப்பு வெளியானது. அந்த அறிவிப்பின்படி நான் அந்த பணிக்கு விண்ணப்பித்து இருந்தேன்.

    அதன்படி கடந்த டிசம்பர் மாதம் 28-ந்தேதி நேர்முகத் தேர்வுக்காக அழைத்திருந்தனர். குஜிலியம்பாறை வட்டார வளர்ச்சி அலுவலகத்திற்கு நான் கல்வி சான்றிதழ்களுடன் சென்றிருந்தேன். என்னுடைய கல்வி சான்றிதழ்களை அங்கு பெற்றுக் கொண்டனர். என்னை போலவே அங்கு வந்த பலரிடமும் நேர்முகத் தேர்வை நடத்தாமல் சான்றிதழ்களை மட்டும் பெற்றுக் கொண்டனர்.

    பின்னர் குறிப்பிட்ட சிலரை மட்டும் அந்த பணிக்கு நியமித்து உத்தரவிட்டு உள்ளனர். நேர்முக் தேர்வே நடத்தாமல் தங்களுக்கு வேண்டியவர்களுக்கு பணி நியமனம் அளித்து இருப்பது ஏற்புடையதல்ல.

    எனவே அந்தப் பணி நியமனங்களை ரத்து செய்துவிட்டு நேர்முக தேர்வு நடத்தி விதிமுறைகளுக்கு உட்பட்டு புதிதாக பணி நியமனங்களை மேற்கொள்ளும்படி உத்தரவிட வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    இந்த வழக்கு நீதிபதி தண்டபாணி முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் வக்கீல் சுந்தர் ஆஜராகி, விண்ணப்பித்தவர்களுக்கு உரிய முறையில் தேர்வு நடத்தாமல் முறை கேடாக பணி நியமனம் அளித்திருப்பது சட்ட விரோதம். அந்த பணி நியமனங்களை ரத்து செய்து உத்தரவிட வேண்டும் என்று வாதாடினார்.

    விசாரணை முடிவில் மனுதாரரின் மனுவை பரிசீலித்து சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கும்படி நீதிபதி உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.

    • கிராம அலுவலக உதவியாளர் பணி எழுத்து தேர்வில் 306 பேர் கலந்து கொண்டு தேர்வு எழுதினர்.
    • தினமும் 60 பேர் வீதம் நேர்முகத்தேர்வு நடைபெறுகிறது.

    பல்லடம் :

    பல்லடத்தில் கடந்த டிசம்பர் 4-ந்தேதி நடைபெற்ற கிராம அலுவலக உதவியாளர் பணி எழுத்து தேர்வில் 306 பேர் கலந்து கொண்டு தேர்வு எழுதினர். இதையடுத்து தாலுகா அலுவலகத்தில் கிராம உதவியாளர் பணி நேர்முகத் தேர்வு நடைபெற்றது.

    இது குறித்து பல்லடம் தாசில்தார் நந்தகோபால் கூறியதாவது:- கிராம உதவியாளர் தேர்விற்கு 306 பேர் தேர்வு எழுதினர்.

    அவர்களுக்கான நேர்முகத்தேர்வு, தாலுகா அலுவலகத்தில் நடைபெற்று வருகிறது. தினமும் 60 பேர் வீதம் நேர்முகத்தேர்வு நடைபெறுகிறது. வரும் 10ந் தேதி வரை நேர்முகத் தேர்வு நடைபெறும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • மாற்றுத்திறனாளிகள் உரிய ஆவணங்களுடன் பங்கேற்க வேண்டும்
    • 14-ந்தேதி முதல் நடக்கிறது

    வேலூர்:

    வேலூர் மாவட்டத்தில் கூட்டுறவுத்துறை கட்டுப்பாட்டில் உள்ள ரேஷன் கடைகளில் காலியாக உள்ள 135 விற்பனை யாளர்கள் மற்றும் 33 கட்டுனர் பணியிடங்களை நிரப்புவதற் கான விண்ணப்பங்கள் கடந்த நவம்பர் மாதம் 14-ந் தேதி வரை பெறப்பட்டது.

    தகுதியானவர்களுக்கான நேர்முகத் தேர்வு அடுக்கம்பாறையில் உள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வரா பாலி டெக்னிக் கல்லூரியில் வருகிற 14-ந் தேதி முதல் 27-ந் தேதி வரை நடைபெற உள்ளது.

    நேர்முகத்தேர்வுக்கு வரும் மாற்றுத்திறனாளிகள் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலரால் வழங்கப்பட்ட பதிவு புத்தம், அரசு மருத்துவரால் வழங்கப்பட்ட சான்றிதழ், தனித் துவமான அடையாள அட்டை ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை உரிமை கோரலுக்கான ஆதாரமாக கொண்டு வந்து நேர்முகத் தேர்வில் பங்கேற்க வேண்டும்.

    இந்த தகவலை கூட்டுறவுத்துறை அதிகாரிகள் தெரிவித் துள்ளனர்.

    • ரேஷன் கடை–களில் காலி–யாக உள்ள 191 விற்–ப–னை–யா–ளர் மற்–றும் 19 கட்டுனர் பணியிடங்களுக்கான நேர்முகத்தேர்வு வருகிற 15-ந் தேதி முதல் நடைபெறுகிறது.
    • இந்த நிலையில் மாற்றுத்திறனாளி விண்ணப்பதாரர்களுக்கு வழிகாட்டு நெறி முறைகளில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்டத்தில் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வரும் பல்வேறு வகையான சங்கங்களில் உள்ள ரேஷன் கடைகளில் காலியாக உள்ள 191 விற்பனையாளர் மற்றும் 19 கட்டுனர் பணியிடங்களுக்கான நேர்முகத்தேர்வு வருகிற 15-ந் தேதி முதல் நடைபெறுகிறது.

    இந்த நிலையில் மாற்றுத்திறனாளி விண்ணப்பதாரர்க ளுக்கு வழிகாட்டு நெறி முறைகளில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. அரசு உதவி மருத்துவர் நிலைக்கு குறையாத மருத்துவரிடம் உடற்தகுதிச் சான்றிதழை பெற்று சம்பந்தப்பட்ட கூட்டுறவு நிறுவனத்தில் பணியில் சேரும்போது சமர்ப்பிக்க வேண்டும்.

    தங்களது உரிமை கோரலுக்கு ஆதாரமாக தமிழக அரசின் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலரால் வழங்கப்பட்ட உதவிகள் பதிவு புத்தகம் தகுதி வாய்ந்த அரசு மருத்து வரால் வழங்கப்பட்ட மாற்றுத்தி றனாளி சான்றி தழ், தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை இவற்றில் ஏதேனும் ஒன்றை ஆதாரமாக மாற்றுத்திறனாளி விண்ணப்பதாரர்கள் நேர்முகத்தேர்வு சான்றிதழ் சரிபார்ப்பு குழுவிடம் சமர்ப்பிக்க வேண்டும். இந்த தகவலை நாமக்கல் கூட்டுறவு ஒன்றியம் மாவட்ட ஆள்சேர்ப்பு மையம் தெரிவித்துள்ளது.

    • தகுதியானோருக்கான நேர்முகத்தேர்வு சின்னக்கரை பார்க் கல்லூரியில் வருகிற 15-ந்தேதி முதல் 22-ந்தேதி வரை நடைபெற உள்ளது.
    • ரேஷன் கடைகளில் காலியாக உள்ள 186 விற்பனையாளர்,54 கட்டுனர் என மொத்தம் 240 பணியிடங்கள் நிரப்பப்படுகிறது.

    திருப்பூர் : 

    திருப்பூர் மாவட்டத்தில் கூட்டுறவுத்துறை கட்டுப்பாட்டில் உள்ள ரேஷன் கடைகளில் காலியாக உள்ள 186 விற்பனையாளர்,54 கட்டுனர் என மொத்தம் 240 பணியிடங்கள் நிரப்பப்படுகிறது.

    இதற்கான விண்ணப்பங்கள் கடந்த நவம்பர் 14ந்தேதி வரை பெறப்பட்டது. தகுதியானோருக்கான நேர்முகத்தேர்வு சின்னக்கரை பார்க் கல்லூரியில் வருகிற 15-ந்தேதி முதல் 22-ந்தேதி வரை நடைபெற உள்ளது.

    மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலரால் வழங்கப்பட்ட பதிவு புத்தகம், அரசு மருத்துவரால் வழங்கப்பட்ட சான்றிதழ், தனித்துவமான அடையாள அட்டை ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை உரிமை கோரலுக்கான ஆதாரமாக கொண்டுவந்து மாற்றுத்திறனாளிகள் நேர்முகத்தேர்வில் பங்கேற்க வேண்டும் என கூட்டுறவுத்துறை அறிவுறுத்தியுள்ளது.

    • கூட்டுறவு சங்க விற்பனையாளர்-கட்டுநர் பணியிடங்களுக்கான நேர்முகத்தேர்வு 14-ந் தேதி தொடங்குகிறது.
    • மேற்கண்ட தகவலை சிவகங்கை மாவட்ட இணைப்பதிவாளர் மற்றும் ஆள்சேர்ப்பு நிலைய தலைவர் ஜினு தெரிவித்துள்ளார்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்டத்தில் கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வரும் பல்வேறு வகையான கூட்டுறவுச் சங்கங்களின் விற்பனையாளர் மற்றும் கட்டுநர் பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்புவதற்கு தகுதி பெற்ற விண்ணப்பதார ர்களிடமிருந்து விண்ணப்பங்கள் இணையதளம் மூலம் பெறப்பட்டுள்ளது.

    விற்பனையாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பத்துள்ள தகுதியான விண்ணப்பதா ரர்களுக்கான நேர்முகத்தேர்வு வருகிற 14-ந் தேதி முதல் 22-ந் தேதி வரையிலும் மற்றும் கட்டுநர் பணியிடங்களுக்கான நேர்முகத் தேர்வு 23-ந் தேதி அன்றும் சிவகங்கை, திருப்பத்தூர் ரோடு, மாவட்ட கலெக்டர் அலுவலக நுழைவு வாயில் எதிரில் அமைந்துள்ள ஏ.எம்.கே.மஹாலில் நடைபெறவுள்ளது.

    நேர்முகத்தேர்விற்கான அனுமதிச்சீட்டினை சிவகங்கை மாவட்ட ஆள்சேர்ப்பு இணைய தளத்திலிருந்து (http/www.drbsvg.net) பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும் நேர்முகத் தேர்வுக்கு வரும் விண்ணப்பதாரர்கள் தங்களது கல்வித்தகுதி, முன்னுரிமை தகுதி மற்றும் இதர தகுதிகளுக்கான சான்றிதழ்களின் அசல் மற்றும் சுயஒப்பம் இட்ட இரு நகல்களுடன் இரு கடவுச்சீட்டு அளவிலான புகைப்படம் மற்றும் விண்ணப்பக் கட்டணம் செலுத்தியதற்கான வணங்களுடன் நேர்முகத் தேர்விற்கு வரும் போது சமர்ப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

    நேர்முகத் தேர்விற்கான அனுமதி சீட்டில் தெரிவிக்க ப்பட்ட விண்ணப்பதா ரர்களுக்கான அறிவுரைகளை தவறாது பின்பற்ற கேட்டுக்கொள்ள ப்படுகிறது. இது குறித்தான சந்தேகங்கள் ஏற்பட்டால் சிவகங்கை மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையத்தின் அலைபேசி எண் 70942 55260 மற்றும் என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்படுகிறது.

    மேற்கண்ட தகவலை சிவகங்கை மாவட்ட இணைப்பதிவாளர் மற்றும் ஆள்சேர்ப்பு நிலைய தலைவர் ஜினு தெரிவித்துள்ளார்.

    ×