search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ரேஷன் பணியாளர் நேர்முகத்தேர்வு -  உரிய ஆவணங்களுடன்   மாற்றுத்திறனாளிகள் பங்கேற்க அறிவுறுத்தல்
    X

    ரேஷன் பணியாளர் நேர்முகத்தேர்வு - உரிய ஆவணங்களுடன் மாற்றுத்திறனாளிகள் பங்கேற்க அறிவுறுத்தல்

    • தகுதியானோருக்கான நேர்முகத்தேர்வு சின்னக்கரை பார்க் கல்லூரியில் வருகிற 15-ந்தேதி முதல் 22-ந்தேதி வரை நடைபெற உள்ளது.
    • ரேஷன் கடைகளில் காலியாக உள்ள 186 விற்பனையாளர்,54 கட்டுனர் என மொத்தம் 240 பணியிடங்கள் நிரப்பப்படுகிறது.

    திருப்பூர் :

    திருப்பூர் மாவட்டத்தில் கூட்டுறவுத்துறை கட்டுப்பாட்டில் உள்ள ரேஷன் கடைகளில் காலியாக உள்ள 186 விற்பனையாளர்,54 கட்டுனர் என மொத்தம் 240 பணியிடங்கள் நிரப்பப்படுகிறது.

    இதற்கான விண்ணப்பங்கள் கடந்த நவம்பர் 14ந்தேதி வரை பெறப்பட்டது. தகுதியானோருக்கான நேர்முகத்தேர்வு சின்னக்கரை பார்க் கல்லூரியில் வருகிற 15-ந்தேதி முதல் 22-ந்தேதி வரை நடைபெற உள்ளது.

    மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலரால் வழங்கப்பட்ட பதிவு புத்தகம், அரசு மருத்துவரால் வழங்கப்பட்ட சான்றிதழ், தனித்துவமான அடையாள அட்டை ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை உரிமை கோரலுக்கான ஆதாரமாக கொண்டுவந்து மாற்றுத்திறனாளிகள் நேர்முகத்தேர்வில் பங்கேற்க வேண்டும் என கூட்டுறவுத்துறை அறிவுறுத்தியுள்ளது.

    Next Story
    ×