search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நீரா பானம்"

    • தென்னை சாகுபடி கடந்த ஓராண்டுக்கும் மேலாக பல்வேறு பாதிப்புகளை சந்தித்து வருகிறது.
    • திருப்பூர், கோவை, ஈரோடு உள்ளிட்ட பல மாவட்டங்களில் பெருமளவில் தென்னை சாகுபடியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

    உடுமலை:

    தென்னை சாகுபடி கடந்த ஓராண்டுக்கும் மேலாக பல்வேறு பாதிப்புகளை சந்தித்து வருகிறது. குறிப்பாக, தேங்காய், கொப்பரை விலை வீழ்ச்சி பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கவில்லை.அதே வேளையில் ஆண்டுதோறும், கோவை, திருப்பூர் மாவட்டங்களில் தென்னை சாகுபடி பரப்பு அதிகரித்தவாறே உள்ளது.பிரதான சாகுபடியான தென்னையை பாதுகாக்க தொலைநோக்கு திட்டங்களை செயல்படுத்துவது அவசியமாகியுள்ளது.

    தென்னை விவசாயிகளின் நீண்ட கால கோரிக்கையான, நீரா உற்பத்திக்கு தமிழக அரசு 2018ல் அனுமதியளித்து தென்னை உற்பத்தியாளர் நிறுவனங்கள் வாயிலாக இப்பானம் உற்பத்தி துவங்கியது.தென்னை மரங்களில் மலராத தென்னம்பாளையில் இருந்து பெறப்படும் நீரா பானம் பல்வேறு சத்துகளை உள்ளடக்கியது. மரத்தில் இருந்து 5 டிகிரி செல்சியஸ் குளுமையில் இந்த பானம் வடித்து எடுக்கப்படும்.தொடர்ந்து இப்பானத்தை அருந்துவதால் நோய் எதிர்ப்பு சக்தி கிடைப்பதுடன், எலும்புக்கும் வலு கிடைக்கும். சர்க்கரை நோயாளிகளும், பானத்தை அருந்தலாம் என அரசால் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. மேலும் நீரா பானத்திலிருந்து தென்னஞ்சக்கரை, சாக்லேட் உள்ளிட்ட பல்வேறு மதிப்பு கூட்டுப்பொருட்களை தயாரிக்க முடியும்.ஆனால் சில நடைமுறை சிக்கல்களால் நீரா பானத்தை நேரடியாக சந்தைப்படுத்த முடியவில்லை. இந்த பானத்தில் இருந்து மதிப்பு கூட்டு பொருட்கள் தயாரிக்க வழிகாட்டுதல் கிடைக்கவில்லை. இவ்வாறு படிப்படியாக குறைந்த நீரா உற்பத்தி தற்போது முற்றிலுமாக முடங்கி விட்டது.

    இது குறித்து தென்னை விவசாயிகள் கூறியதாவது:-

    பல்வேறு சத்துகளை உள்ளடக்கிய நீரா பானம் அருந்துவது குறித்து அரசு மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தலாம். இதனால் மக்களும் உற்பத்தியாளர்களும் பயன்பெறுவார்கள்.இப்பானம் உற்பத்தி மற்றும் விற்பனையிலுள்ள நடைமுறை சிக்கல்களை தீர்க்க விவசாயிகளிடம் கருத்துக்கேட்பு கூட்டங்கள் நடத்தலாம்.

    இதில் பெறப்படும் விபரங்கள் அடிப்படையில், நிபுணர் குழு வாயிலாக பிரச்னைகளுக்கு தீர்வு ஏற்படுத்துவதுடன் தென்னை வளர்ச்சி வாரிய உதவியுடன் மதிப்பு கூட்டு பொருள் தயாரிப்புக்கும் பயிற்சி வழங்க வேண்டும்.இத்தகைய நடவடிக்கைகளை, தமிழக அரசு ஆக்கப்பூர்வமாக மேற்கொண்டால் மட்டுமே தென்னை விவசாயம் பிரச்சினைகளில் இருந்து தப்பிக்க முடியும்.

    இவ்வாறு விவசாயிகள் தெரிவித்தனர்.

    தேங்காய் விலை வீழ்ச்சியால் விரக்தியடைந்துள்ள தென்னை விவசாயிகளுக்கு உரம் விலை கடும் உயர்வு வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவதாக அமைந்துள்ளது.திருப்பூர், கோவை, ஈரோடு உள்ளிட்ட பல மாவட்டங்களில் பெருமளவில் தென்னை சாகுபடியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

    தேங்காய்க்கு 7 - 9 ரூபாய் வரை மட்டுமே விவசாயிகளுக்கு விலை கிடைக்கிறது. இதனால் பெரும் வருவாய் இழப்பை எதிர்கொண்டு, தென்னந்தோப்புகளை பராமரிக்க ஆர்வம் காட்டாமல் உள்ளனர்.இந்த சூழலில், பொட்டாஷ் உள்ளிட்ட உரங்களின் விலை மிக கடுமையாக உயர்ந்துள்ளது.இரண்டாண்டுக்கு முன் 50 கிலோ கொண்ட ஒரு மூட்டை பொட்டாஷ் 900 - 950 ரூபாய் வரை விற்கப்பட்ட நிலையில் 6 மாதமாக 90 சதவீதம் உயர்ந்து 1,750 ரூபாய் வரை தனியார் உரக்கடைகளில் விற்கப்படுகிறது.வேளாண் துறை சார்பில், வட்டார அளவில் வழங்கப்படும் நுண்ணூட்டங்களின் விலையும், கணிசமாக உயர்ந்து உள்ளது.

    மூன்றாண்டுகளுக்கு முன் வேளாண் துறையினர் சார்பில் கிலோ 55 - 60 ரூபாய்க்கு விவசாயிகளுக்கு வழங்கப்பட்டநுண்ணூட்ட உரங்களின் விலை தற்போது 60 - 90 ரூபாய் என உயர்ந்துள்ளது.

    • சாதாரணமாகத் தென்னையில் இருந்து கிடைப்பதைவிட 3 மடங்கு கூடுதல் வருமானம் கிடைக்கும்
    • தென்னீரா பானம் தமிழகத்தின் தனித்துவமான தயாரிப்பு.

    பல்லடம்:

    திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை தலைமையிடமாக கொண்டு உலக தென்னை உழவர் உற்பத்தி நிறுவனம் செயல்பட்டு வருகிறது.இந்நிறுவனம் 1200க்கும் மேற்பட்ட விவசாயிகளை பங்குதாரராக கொண்டு தென்னை மரங்களில் இருந்து நீரா பானத்தினை உற்பத்தி செய்து அதனை மக்களிடம் கொண்டு சேர்த்து வருகிறது. இந்த நீரா பானம் பல்வேறு வைட்டமின்கள், இரும்பு மற்றும் தாதுக்கள் நிறைந்ததாகும்.இது இ-காமர்ஸ் முறையிலும் விற்பனை செய்யப்படுகிறது.

    மேலும் நீரா பானத்தை அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யும் வாய்ப்பு கிடைத்துள்ளது. இதனால் தென்னை விவசாயிகளின் வாழ்வாதாரம் மேலோங்க வாய்ப்புள்ளது.

    இது குறித்து நிர்வாக இயக்குனர் பாலசுப்ரமணியம் கூறுகையில், அமெரிக்காவில் உள்ள தமிழகத்தை சேர்ந்த கதிர்குருசாமி என்பவர் மூலம் ரீஜெண்ட் நார்த் அமெரிக்க நிறுவனம் நீரா பானத்திற்கான ஆர்டரை கொடுத்துள்ளது என்றார்.

    இதனால் தற்போது தினசரி 5000 பாக்கெட்டுகள் உற்பத்தி செய்யும் நிலையில், அதனை உயர்த்தி இனி 20,000 ஆயிரம் பாக்கெட்டுகளாக தயாரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி ரூ.30 லட்சம் மதிப்புள்ள நீராபானம் அமெரிக்காவிற்கு கண்டெய்னர் மூலம் ஏற்றுமதி செய்யப்படவுள்ளது. இந்த ஆண்டு விற்பனை ரூ.25 கோடி ரூபாயை எட்டுவதற்கான இலக்கும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வரும் நாட்களில் நீரா பானத்தினை 5 கண்டெய்னர்களில் அனுப்ப திட்டமிடப்பட்டுள்ளது.இதன் விற்பனை அதிகரித்தால் தென்னை விவசாயிகளின் வாழ்வாதாரம் மேலோங்க வாய்ப்புள்ளது.

    வேளாண்மை மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணைய (அபேடா) தலைவர் எம்.அங்கமுத்து கூறுகையில், இந்திய பாரம்பரிய பொருட்களின் உற்பத்தி மற்றும் விற்பனையை மேம்படுத்தி கிராமப்புறங்களில் தற்சார்பு பொருளாதாரத்தை உருவாக்க வேண்டும் என்கிற பிரதமர் மோடியின் தொலைநோக்கு திட்டத்தை நிறைவேற்றுவதற்கான முயற்சியாக இந்த முயற்சி அமைந்துள்ளதாக புகழாரம் சூட்டியுள்ளார்.

    மேலும் நீரா பானம் உற்பத்திக்கு தனி கவனம் செலுத்த வேண்டும் என தென்னை நார் கூட்டமைப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்து அவர்கள் கூறுகையில்,

    தென்னீரா பானம் தமிழகத்தின் தனித்துவமான தயாரிப்பு. இதுபோன்ற முயற்சி அனைத்து மாநிலங்களிலும், எல்லா பொருள்களுக்கும் மேற்கொள்ளப்பட வேண்டும். இந்திய பாரம்பர்ய பொருட்களின் உற்பத்தி மற்றும் விற்பனையை மேம்படுத்தி கிராமங்களில் தற்சார்பு பொருளாதாரத்தை உருவாக்க வேண்டும்.

    தென்னீராவை 50 நாடுகளில் விற்க வேண்டும். லூலூ, வால்மார்ட் போன்ற மிகப்பெரிய பேரங்காடிகளில் பிரதான பானமாக விற்கப்பட வேண்டும். தற்போது இந்தத் தென்னீரா பானம் அபேடா மூலம் அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. இதை அதிக அளவில் ஏற்றுமதி செய்வதன் மூலம் அபேடா குழு மற்றும் விவசாயிகள் அதிக பயன் அடைவர். மேலும், தமிழக அரசுடன் இணைந்து இந்த ஏற்றுமதியை விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளோம் என கூறினர்.

    நீராபானம் தயாரிப்பானது தென்னை மரத்தில் உள்ள பாளையில் அதற்கென்று வடிவமைக்கப்பட்ட ஐஸ் பெட்டியை வைத்து நீராவை சேகரிக்கிறார்கள். அதை குளிர்பதன கிடங்கில் ஒரு குறிப்பிட்ட குளிர் நிலையில் பத்திரப்படுத்தி, கை படாமல் சுத்தமான முறையில் டெட்ரா பேக்கில் அடைக்கிறார்கள். இதற்காக 2 ஆண்டுகளாக ஆராய்ச்சி செய்து இறுதியாக சிபிசிஆர்ஸ் காசர்கோடு ஆராய்ச்சி நிறுவனம் மூலம் தரம் உறுதி செய்யப்பட்டு 6 மாதங்கள் வரை இந்த தென்னீராவை கெடாமல் வைத்திருக்க முடியும் என சான்று பெற்றுள்ளனர். இதனால் பல மாதங்கள் தண்ணீர் பாய்ச்சி, நோய்த் தாக்குதலில் இருந்து காப்பாற்றி, குறைவான விலைக்கு தேங்காயை விற்பனை செய்வதைவிட நீராபானம் உற்பத்தி தென்னை விவசாயிகளுக்கு 3 மடங்கு அதிக வருமானம் கிடைக்கும் என்கிறார்கள்.

    இதுகுறித்து உலக தென்னை உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் பாலசுப்ரமணியன் கூறுகையில், 1939-லேயே மகாத்மா காந்தி, நீரா ஒரு மிகச் சத்துள்ள பானம். இதைச் சாப்பிட்டால் ஏழை எளிய குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து குறைபாட்டை நீக்க முடியும்னு சொல்லியிருக்கார். கமலா சோஹோனி என்ற பெண் விஞ்ஞானி நீரா குறித்து ஆராய்ச்சி செய்து குடியரசுத் தலைவரிடம் விருது வாங்கியிருக்கிறார். ஆனால் என்ன காரணமோ தெரியல... இந்த இயற்கையான நீரா பானத்தை யாரும் பெருசா கண்டுக்கல. காசர்கோடில் இருக்குற மத்திய விளைபொருள் ஆராய்ச்சி நிறுவனம் இந்த நீரா பானம் குறித்து தொடர்ச்சியாக ஆய்வு செய்து வருகிறார்கள்.

    இதற்கிடையே நாங்கள் 2020-ம் ஆண்டு 1,200 உழவர்களை ஒன்றிணைத்து உலக தென்னை உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் தொடங்கினோம். நீராவை சந்தைப்படுத்துவது குறித்து பல்வேறு கட்ட முயற்சிகளை எடுத்துட்டு வந்தோம். இப்போது உலகத்திலேயே முதன்முதலாக நீரா பானத்தை 6 மாதங்கள் வரை கெடாத அளவுக்கு தயார் செய்து 'டெட்ரா பேக்'கிங்கில் சந்தைக்குக் கொண்டு வந்திருக்கிறோம். தென்னை மரத்தில் இருந்து நீராவை 5 டிகிரி வெப்பநிலையில் 'ஐஸ்' பெட்டி வெச்சு சேகரிச்சு அதை மைனஸ் 20 டிகிரி அளவுல மத்திய குளிரூட்டும் நிலையத்தில் வைப்போம். பிறகு டெட்ரா பேக்கிங் செய்றோம். இதுக்காக பல்லடத்தில் 3 கோடி ரூபாய் மதிப்புள்ள ஒரு குளிரூட்டும் நிலையத்தை அமைச்சிருக்கோம்.

    ஒரு பாக்டீரியா வளர்வதற்கு காற்றும் வெப்பமும் தேவை. ஆனால் 2 - 3 டிகிரி குளிர்நிலையில் காற்று இல்லாமல் 'டெட்ரா பேக்' மூலம் நாங்க நீராவை 'பேக்கிங்' செய்வதால் அது 6 மாதம் வரைக்கும் கெடாமல் இருக்கும். இதனால நீராவுடைய குணம், மணம், தரம் எதுவுமே மாறாது. சந்தையில கிடைக்குற மற்ற நீராவைப்போல இதை விற்பனை செய்யும் வரை ஐஸ் பெட்டியில வெச்சிருக்கணும்னு அவசியம் இல்ல. சாதாரணமா வெயில் படாத இடத்தில வெளிய இருந்தாலும் ஒண்ணும் ஆகாது. உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தில் இருக்கும் விவசாய பங்குதாரர்களிடம் இருந்துதான் இந்த நீராவை சேகரிக்கிறோம். இதனால அவர்களுக்கு சாதாரணமாகத் தென்னையில் இருந்து கிடைப்பதைவிட 3 மடங்கு கூடுதல் வருமானம் கிடைக்கும் என்றார்.

    குட்டை, நெட்டை தென்னையில் அதிக நீரா உற்பத்தியாகும். ஆண்டுக்கு 12-14 பாளை உற்பத்தி செய்யும். ஒரு பாளையில் 1.5 - 3 லிட்டர் சாறு நாள் ஒன்றுக்கு கிடைக்கும். ஒரு பாளையில் 35 -45 நாள் வரை நீரா சாறு கிடைக்கும். மரம் ஒன்றுக்கு 6 மாதத்திற்கு 400-600 லிட்டர் சாறு கிடைக்கும். மரத்தின் பாரம்பரியம், பருவ கால மாற்றம், சாறு எடுப்பவர் திறமையை பொருத்தது.

    பதிவு செய்த தென்னை உழவர் உற்பத்தியாளர், தென்னை வளர்ச்சி வாரியம் பதிவு பெற்ற கூட்டுறவு சங்க நிறுவனங்களுக்கு உரிமம் வழங்கப்படும். நீரா உரிமம் பெற உணவு தரக்கட்டுப்பாடு சான்று அவசியம். உரிமம் பெற மொத்த தென்னை மரங்களில் தென்னை உற்பத்தியாளர் கம்பெனிகளில், கூட்டுறவு சங்க உறுப்பினர்களுக்கு சொந்தமாக 5 சதவீதம் அல்லது 40,000 மரங்கள். இதில் எது குறைவோ அது இருக்க வேண்டும். நீரா உரிமம் பெற உதவி கலால் கமிஷனர் மாவட்ட ஆய்வு அதிகாரியாக உள்ளார். நீரா உற்பத்திக்கு தென்னை விவசாயிகள் சங்கம் விண்ணப்பித்து அனுமதி பெற்ற பின் தான் உற்பத்தி செய்ய வேண்டும். அனுமதி பெறாமல் நீரா உற்பத்தி செய்ய கூடாது.

    ஐஸ் பாக்ஸ், எதிர் நொதித்தல் முறை என இரண்டு விதமாக நீரா தயாரிக்கலாம். தமிழகத்தை பொறுத்தவரை 552 தென்னை உற்பத்தி சங்கங்கள், 66 தென்னை உற்பத்தி கூட்டமைப்பு உள்ளன. தனி நபர்கள் நீரா பானம் இறக்க அனுமதி கிடையாது. எனவே இதை தென்னை விவசாயிகள் கூட்டமைப்பு மூலம் தான் இறக்கி விற்பனை செய்ய முடியும். தென்னை விவசாயிகளுக்கு நல்ல பலன் தரும் பானம் தான் நீரா பானம்.

    • உலக தென்னை உழவர் உற்பத்தி நிறுவனம் நடத்தப்பட்டு வருகிறது.
    • நீரா பானம் பல்வேறு வைட்டமின்கள், இரும்பு மற்றும் தாதுக்கள் நிறைந்ததாகும்.

    திருப்பூர் :

    தமிழகத்தில் திருப்பூர் மாவட்டத்தினை தலைமை யிடமாக கொண்டு உலக தென்னை உழவர் உற்பத்தி நிறுவனம் நடத்தப்பட்டு வருகிறது.

    இந்த நிறுவனத்தில் 1200க்கும் மேற்பட்ட விவசாயிகளை பங்குதாரராக கொண்டு தென்னை மரங்களில் இருந்து நீரா பானத்தினை உற்பத்தி செய்து அதனை மக்களிடம் கொண்டு சேர்த்து வருகிறீர்கள். சென்னை, கோவை, திருப்பூர் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் மட்டுமே விற்பனை செய்யப்படும் இந்த நீரா பானம், பல்வேறு வைட்டமின்கள், இரும்பு மற்றும் தாதுக்கள் நிறைந்ததாகும். இது இ-காமர்ஸ் முறையிலும் விற்பனை செய்யப்டுகிறது.

    இந்தநிலையில் நீரா பானத்தை அமெரிக்கா விற்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. இதுகுறித்து நிர்வாக இயக்குனர் பாலசு ப்ரமணி யம் கூறியிருப்பதாவது :- அமெரிக்காவில் உள்ள தமிழகத்தை சேர்ந்த கதிர்குருசாமி என்பவர் மூலம் ரீஜெண்ட் நார்த் அமெரிக்க நிறுவனம் நீரா பானத்திற்கான ஆர்டரினை கொடுத்துள்ளது இதனால் தற்போது தினசரி 5000 பாக்கெட்டுகள் உற்பத்தி செய்யும் நிலையில், அதனை உயர்த்தி இனி 20 ஆயிரம் பாக்கெட்டுகளாக தயாரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி ரூ.30 லட்சம் மதிப்புள்ள நீரா பானம் அமெரிக்காவிற்கு கண்டைனர் மூலம் ஏற்றுமதி செய்யப்படவுள்ளது.

    இதன் ஆண்டு விற்பனை ரூ .25 கோடி ரூபாயை எட்டுவதற்கான இலக்கும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.வரும் நாட்களில் நீரா பானத்தினை 5 கண்டைன ர்களில் அனுப்ப திட்டமிட ப்பட்டுள்ளது. இதன் விற்பனை அதிகரி த்தால் தென்னை விவசாயிக ளின் வாழ்வாதா ரமும் மேலோங்கும் என்றார்.

    • நீரா உற்பத்தி செய்ய விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.
    • பெரியளவில் உற்பத்தியை மேற்கொள்வதில் சிக்கல் நிலவுகிறது.

    குடிமங்கலம்:

    உடுமலை, குடிமங்கலம் வட்டாரங்களில் பிரதான சாகுபடியாக தென்னை உள்ளது. இப்பகுதியில் நீண்ட கால பயிராக பல லட்சம் தென்னை மரங்கள் பராமரிக்கப்பட்டு வருகிறது.கடந்த சில மாதங்களாக தேங்காய், கொப்பரை விலை வீழ்ச்சியால் தென்னை சாகுபடி விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். தென்னை சாகுபடி பரப்பு ஆண்டுதோறும் அதிகரித்து வரும் நிலையில் நிரந்தர தீர்வு காண விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.

    கடந்த சில ஆண்டுகளுக்கு முன் தென்னை மரங்களிலிருந்து இயற்கை பானமான நீரா உற்பத்தி செய்ய விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.இதையடுத்து நீரா பானம் இறக்கி விற்பனை செய்ய தமிழக அரசு அனுமதி வழங்கி அரசாணை பிறப்பித்தது.தென்னை வளர்ச்சி வாரியத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் வாயிலாக இறக்குவதற்கான அனுமதியை வழங்கியது.

    ஆனால் இயற்கை பானமான நீரா உற்பத்தியிலும், சந்தைப்படுத்துவதிலும் பல்வேறு சிக்கல்களை விவசாயிகள் எதிர்கொண்டனர். இதனால் திட்டத்தில் பின்னடைவு ஏற்பட்டது.தற்போது பல மாதங்களாக, தேங்காய், கொப்பரை வர்த்தகம் பாதிப்பில் உள்ளதால், மீண்டும் நீரா உற்பத்தியும் அதிலிருந்து மதிப்பு கூட்டு பொருட்கள் தயாரிப்பு குறித்த கோரிக்கைகள் விவசாயிகளிடையே எழுந்துள்ளது.

    இது குறித்து தென்னை விவசாயிகள் கூறியதாவது:-

    தென்னை மரங்களில் இருந்து, நீரா பானம் 'ஐஸ்பாக்ஸ்' முறையில் மரங்களிலிருந்து இறக்கப்பட்டு பாட்டில்களில் அடைத்து விற்கப்படுகிறது.ரசாயன கலப்பில்லாத இயற்கை முறையில் இறக்கப்படும் நீரா பானம் ஒரு வாரத்துக்குமேல் பயன்படுத்த முடியாது. இதனால் பெரியளவில் உற்பத்தியை மேற்கொள்வதில் சிக்கல் நிலவுகிறது.இந்த பானத்தில் இருந்து தென்னை ,சர்க்கரை, வெல்லப்பாகு, தேன், மிட்டாய் உள்ளிட்ட பலவகையான மதிப்புக்கூட்டு பொருட்கள் தயாரிக்க முடியும். இதற்கான தொழில்நுட்ப வசதிகளை ஏற்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.இல்லையெனில் நீரா பானம் இறக்குவதற்கு அனுமதியளித்தும் விவசாயிகளுக்கு பயனில்லாத நிலையே தொடரும் என்றனர்.

    ×