search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நாட்டுத்துப்பாக்கி"

    • காட்டு விலங்குகளை வேட்டையாடுவதாக வெளியான புகாரின்பேரில் அதிரடி நடவடிக்கை
    • போலீஸ் நிலையம், வனத்துறை அலுவலகம், ஊர்த்தலைவர்களிடமும் ஒப்படைக்க உத்தரவு

    கோவை,

    கோவை வனச்சரகத்துக்கு உட்பட்ட பகுதிகளில் காட்டு விலங்குகள் உள்ளன. அவற்றை ஒரு சிலர் நாட்டு துப்பாக்கியால் சுட்டு வேட்டையாடுவதாக புகார் எழுந்து உள்ளது.

    இந்த நிலையில் கோவை மாவட்ட வனச்சரக அதிகாரி ஜெயராஜ் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு உள்ளார். அதன்படி கோவை வனச்சரக பகுதிகளில் ஒருசிலர் நாட்டு துப்பாக்கிகளை பயன்படுத்தி வேட்டையாடும் செயலில் ஈடுபட்டு வருகின்றனர்.

    மேலும் அவுட்டுக்காய் தயாரித்து விற்பது, வெடிமருந்துகளை தவறாக பயன்படுத்துவது போன்ற குற்றசெயல்களும் தொடர்ந்து அரங்கேறி வருகின்றன. எனவே கோவை மாவட்டத்தில் நாட்டுத்துப்பாக்கி வைத்திருப்போர் உடனடியாக அவற்றை அந்த பகுதிகளில் உள்ள போலீஸ் நிலையம், வனத்துறை அலுவலகம் மற்றும் ஊர்த்தலைவர்கள் ஆகியோரிடம் ஒரு மாதத்துக்குள் உடனடியாக ஒப்படைக்க வேண்டும்.

    அப்படி ஒப்படைக்காவிட்டால் மோப்பநாய்கள் மூலம் கண்டறியப்பட்டு, நாட்டுத்துப்பாக்கிகள் வைத்திருப்போர் மீது இந்திய ஆயுத சட்டத்தின்கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுப்பார்கள். வனத்துறை சார்பிலும் வனஉயிரின பாதுகாப்பு சட்டத்தின்கீழ் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

    மேலும் நாட்டு துப்பாக்கி பயன்படுத்துவோர், அவுட்டுக்காய் தயாரிப்பவர்கள் மற்றும் வெடிமருந்துகளை பதுக்கி வைத்து தவறாக பயன்படுத்துவோர் பற்றி பொதுமக்களுக்கு ஏதேனும் விவரங்கள் தெரிந்தால் அதுகுறித்து உடனடியாக போலீசார் மற்றும் வனத்துறை அதிகாரிகளை தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம். தகவல் கொடுப்பவர் பற்றிய விவரங்கள் ரகசியமாக வைக்கப்படும்.இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

    • சோதனையில் சிக்கினார்
    • போலீசார் விசாரணை

    ஆலங்காயம்:

    திருப்பத்தூர் மாவட்டம் ஆலங்காயம்அடுத்த வெள்ளக்குட்டை அருகே உள்ள நன்னேரி பகுதியில் வனவிலங்குகளை வேட்டை யாட நாட்டுத்துப்பாக்கியை சிலர் பதுக்கி வைத்திருந்தப்பதாக ஆலங்காயம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    அதன் பேரில் நன்னேரி பகுதியை சேர்ந்த பழனி என்பவரது வீட்டில் சோதனை செய்த போது உரிய உரிமம் இல்லாமல் வீட்டில் நாட்டுத்துப்பாக்கியை மறைத்து வைத்திருந்தது தெரிந்து.

    உடனடியாக நாட்டுத்துப்பாக்கியை பறிமுதல் செய்த ஆலங்காயம் போலீசார் பழனியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
    • அரசு அனுமதியின்றி நாட்டு துப்பாக்கி வைத்திருந்ததும் தெரியவந்தது.

    கள்ளக்குறிச்சி:

    உளுந்தூர்பேட்டை அருகே உள்ள எலவானாசூர்கோட்டை போலீஸ் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் அரிகிருஷ்ணன் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது எறையூரில் இருந்து அதையூர் செல்லும் சாலையில் காட்டு கோவில் அருகே போலீசாரை கண்டதும் ஒருவர் தப்பி ஓட முயற்சித்தார். அந்த நபரை போலீசார் மடக்கி பிடித்து விசாரணை செய்தனர்.

    விசாரணையில் எறையூர் கிராமத்தை சேர்ந்த செல்வராஜ் மகன் லியோ பிரகாஷ் (வயது 26) என்பதும் அரசு அனுமதியின்றி நாட்டு துப்பாக்கி வைத்திருந்ததும் தெரியவந்தது. அவரிடமிருந்து நாட்டு துப்பாக்கியை பறிமுதல் செய்த போலீசார் அவர் மீது வழக்குபதிவு செய்து கைது செய்தனர்.

    ×