search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நடை பயணம்"

    • மாணவ-மாணவிகள், சுகாதார துறையினர் செவிலியர்கள், சுகாதார பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் 1000-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
    • நடை பயணத்தில் பங்கேற்றவர்களுக்கு குடிநீர், பானக்காரம், கடலை மிட்டாய் மற்றும் சத்து உணவு பொருட்கள் வழங்கப்பட்டன.

    கன்னியாகுமரி:

    பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை சார்பில் "நடப்போம் நலம் பெறுவோம்" என்னும் நோக்கத்தின் அடிப்படையில் பொதுமக்களுடன் அமைச்சர்கள் பங்கேற்ற நடைபயண நிகழ்ச்சி கன்னியாகுமரியில் இன்று காலை நடந்தது.

    அதிகாலை 5.30 மணிக்கு கன்னியாகுமரி சன்செட் பாயிண்ட் கடற்கரை பகுதியில் இருந்து நடைபயணம் தொடங்கியது. இந்த நடைபயண நிகழ்ச்சியில் பொதுமக்களுடன் இணைந்து அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், மனோதங்கராஜ், மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர், ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ., நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ், மற்றும் கல்லூரி மாணவ-மாணவிகள், சுகாதார துறையினர் செவிலியர்கள், சுகாதார பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் 1000-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

    கன்னியாகுமரி சன்செட் பாயிண்ட் கடற்கரை பகுதியில் இருந்து புறப்பட்ட இந்த நடைபயணம் சிலுவை நகர், சீரோ பாய்ண்ட், நான்கு வழி சாலை, ரெயில்வே மேம்பாலம், முருகன்குன்றம் வழியாக பரமார்த்தலிங்கபுரம் மின் வாரிய அலுவலகம் முன்பு வரைசென்று திரும்பி மீண்டும் அதே வழியாக தொடங்கிய இடமான சன்செட் பாயிண்ட் கடற்கரை பகுதியில் நிறைவடைந்தது.

    மொத்தம் 8 கிலோ மீட்டர் தூரம் இந்த நடைபயணம் நடந்தது. இன்று காலை தொடங்கிய இந்த நடைபயணம் காலை 7 மணிக்கு நிறைவடைந்தது. அதன்பிறகு சன் செட் பாயிண்ட் கடற்கரையில் மருத்துவ பரிசோதனை முகாம் நடந்தது. இந்த நடை பயணத்தில் பங்கேற்றவர்களுக்கு குடிநீர், பானக்காரம், கடலை மிட்டாய் மற்றும் சத்து உணவு பொருட்கள் வழங்கப்பட்டன.

    • விருதுநகர் மாவட்டத்தில் நாளை மறுநாள் அண்ணாமலை நடை பயணம் செல்கிறார்.
    • தகவலை கிழக்கு மாவட்ட பா.ஜ.க. தலைவர் பாண்டுரங்கன் தெரிவித்தார்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டத்தில் பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை நாளை மறுநாள் (புதன்கிழமை) காலை 10 மணிக்கு காரியாப்பட்டியில் நடை பயணத்தை தொடங்குகிறார்.

    இதனைதொடர்ந்து திருச்சுழியில் ரமண மகரிஷி இல்லத்தை பார்வையிடுகிறார். பின்னர் மாலையில் அருப்புக்கோட்டையில் நடை பயணம் மேற்கொள்கிறார்.

    10-ந் தேதி காலை 10 மணிக்கு விருதுநகரில் பாண்டியன் நகரில் நடைபயணத்தை தொடங்கும் அவர் விருதுநகர்-சாத்தூர் ரோடு சந்திப்பில் மக்களிடையே பேசுகிறார். பின்னர் மாலையில் சிவகாசியில் நடைபயணம் மேற்கொள்கிறார்.

    11-ந் தேதி காலை சாத்தூரில் நடை பயணத்தை தொடரும் அவர் தூத்துக்குடி மாவட்டம் செல்கிறார். இதனை தொடர்ந்து தென்காசி மாவட்டத்தில் நடைபயணத்தை நிறைவு செய்த பின்னர் ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதிகளில் நடைபயணம் மேற்கொள்வார்.

    இந்த தகவலை கிழக்கு மாவட்ட பா.ஜ.க. தலைவர் பாண்டுரங்கன் தெரிவித்தார்.

    • தி.மு.க.வை எந்த அளவுக்கு விமர்சனம் செய்து பேசுகிறாரோ அதே அளவுக்கு சில சமயங்களில் அ.தி.மு.க.வையும் அண்ணாமலை விமர்சிக்க தவறுவது இல்லை.
    • இன்றைய நடைபயணத்தில் அண்ணாமலையுடன் மத்திய மந்திரி பங்கேற்பதாக இருந்தது.

    சென்னை:

    அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கும், தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலைக்கும் ஏற்பட்டுள்ள உரசல் இன்னமும் ஓய்ந்த பாடில்லை. நாளுக்கு நாள் அதிகரித்தபடியே இருக்கிறது.

    ஐ.பி.எஸ். அதிகாரியான அண்ணாமலை தமிழக பா.ஜ.க. தலைவர் பொறுப்பை ஏற்றதும், ஒரே ஒரு விஷயத்தில் தெளிவான கொள்கையுடன் இருக்கிறார். அதாவது தமிழகத்தில் பா.ஜனதாவை வலுப்படுத்தி ஆட்சியை பிடிக்கும் வகையில் தனித்துவமான கட்சியாக மாற்ற வேண்டும் என்பதே அவரது ஒருவரி கொள்கையாகும்.

    இதை கருத்தில் கொண்டு தான் அ.தி.மு.க. தலைமையிலான அணியில் இருந்தாலும், அந்த கட்சிக்கு அடிமை போல் இருந்து செயல்பட இயலாது என்பதை கடந்த மாதங்களில் பல தடவை அண்ணாமலை சுட்டிக்காட்டி உள்ளார். இது அ.தி.மு.க. மூத்த தலைவர்களுக்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

    தி.மு.க.வை எந்த அளவுக்கு விமர்சனம் செய்து பேசுகிறாரோ அதே அளவுக்கு சில சமயங்களில் அ.தி.மு.க.வையும் அண்ணாமலை விமர்சிக்க தவறுவது இல்லை. இதனால் ஒரு கட்டத்தில் அ.தி.மு.க.-பாஜ.க. கூட்டணி முறிந்து விடுமோ என்றுகூட கருதப்பட்டது.

    அதை சீரமைக்கும் வகையில் எடப்பாடி பழனிசாமியையும், அண்ணாமலையையும் டெல்லிக்கு அழைத்து அமித்ஷா சமரசம் செய்தார்.

    அதன்பிறகு சில நாட்கள் மட்டுமே அண்ணாமலை அமைதியாக இருந்தார். இந்த நிலையில் நடைபயணம் தொடங்கியுள்ள அவர் மீண்டும் அ.தி.மு.க. வில் சர்ச்சையை ஏற்படுத்தும் வகையில் பட்டாசுகளை கொளுத்தி போட்டுள்ளார்.

    நடை பயணத்தின் முதல் நாளே அவர் நிருபர்களிடம் பேசுகையில், 'தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக ஓ.பன்னீர்செல்வம் கடுமையாக உழைத்துள்ளார். அவரை பா.ஜ.க. புறக்கணிக்க இயலாது' என்று கூறினார். இதற்கு அ.தி.மு.க. தரப்பில் இருந்து எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

    இந்த நிலையில் கொடநாடு கொலை, கொள்ளை விவகாரம் தொடர்பாக ஓ.பன்னீர்செல்வமும், டி.டி.வி.தினகரனும் இணைந்து நடத்தும் போராட்டத்தை ஆதரிப்பதாக அண்ணாமலை கூறினார். இது அ.தி.மு.க. தலைவர்களிடம் கடும் கோபத்தை ஏற்படுத்தியது.

    அ.தி.மு.க. மூத்த தலைவர்கள் ஜெயக்குமார், உதயகுமார், செல்லூர் ராஜூ உள்பட பலர் அண்ணாமலையை நேரிடையாகவே விமர்சித்து கண்டனம் தெரிவித்தனர். இதனால் அ.தி.மு.க.-பா.ஜ.க. உறவில் மீண்டும் உரசல் ஏற்பட்டது.

    அண்ணாமலையின் சர்ச்சைக்குரிய பேச்சுக்கள் பற்றி டெல்லி பா.ஜ.க. மேலிடத்தில் அ.தி.மு.க. தரப்பில் புகார்கள் செய்யப்பட்டு இருப்பதாகவும் தகவல்கள் வெளியானது. அதன் அடிப்படையில் அண்ணாமலையிடம் பா.ஜ.க. மேலிடம் விசாரணை நடத்தியதாகவும் தகவல்கள் வெளியானது.

    இந்த நிலையில் அண்ணாமலை இன்று (திங்கட்கிழமை) தனது நடைபயணத்தில் சிறு மாற்றம் செய்துள்ளார். இன்றைய பொதுக்கூட்டம் மற்றும் நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

    இன்றைய நடைபயணத்தில் அண்ணாமலையுடன் மத்திய மந்திரி பங்கேற்பதாக இருந்தது. ஆனால் பாராளுமன்ற கூட்டத்தில் மத்திய மந்திரி அவசியம் இருக்க வேண்டும் என்ற நிர்பந்தம் ஏற்பட்டு விட்டதால் அவர்கள் வருகை ரத்தானது. இதனால் அண்ணாமலை நடைபயணமும் இன்று மட்டும் ரத்து செய்யப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

    இதற்கிடையே மதுரையில் இருந்து புறப்பட்டு அண்ணாமலை சென்னை வந்துள்ளார். இதையடுத்து அவர் டெல்லி செல்வார் என்று பரபரப்பாக பேசப்பட்டது. ஆனால் தமிழக பா.ஜ.க. தலைவர்கள் இதை மறுத்தனர்.

    டெல்லி மேலிடம் அண்ணாமலைக்கு சம்மன் எதுவும் அனுப்பவில்லை. வேண்டுமென்றே அண்ணாமலை பாத யாத்திரையில் குழப்பத்தை ஏற்படுத்துவதற்காக இப்படி வதந்தி கிளப்பி விடுகிறார்கள் என்று தமிழக பா.ஜ.க. தலைவர்கள் கூறினார்கள்.

    என்றாலும், அண்ணாமலை மதுரையில் இருந்து நடை பயணத்தை நிறுத்தி விட்டு சென்னை திரும்பியது அரசியல் வட்டாரத்தில் சற்று பரபரப்பை ஏற்படுத்தியது.

    • கடந்த ஆண்டு ஜூன் 2-ந்தேதி கேரளாவில் இருந்து தனது நடை பயணத்தை தொடங்கினார்.
    • 8,640 கி.மீ. தூரத்தை 370 நாட்களில் கடந்து மெக்காவை அடைந்தார்.

    திருவனந்தபுரம் :

    கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தில் உள்ள வளஞ்சேரியை சேர்ந்தவர் ஷிஹாப் சோட்டூர் (வயது 29). இவர் நடந்தே மெக்காவுக்கு ஹஜ் புனித பயணம் செல்ல முடிவு செய்தார். அதைத்தொடர்ந்து கடந்த ஆண்டு ஜூன் 2-ந்தேதி கேரளாவில் இருந்து தனது நடை பயணத்தை தொடங்கினார்.

    இந்தியாவில் இருந்து புறப்பட்ட ஷிஹாப் சோட்டூர் பாகிஸ்தான், ஈரான், ஈராக் மற்றும் குவைத் ஆகிய நாடுகளைக் கடந்து இறுதியில் சவூதி அரேபியாவை அடைந்துள்ளார். கடந்த மே மாதம் இரண்டாவது வாரத்தில் குவைத்தில் இருந்து சவூதி அரேபிய எல்லைக்குள் நுழைந்த அவர், அதன் பிறகு முஸ்லிம்களின் புனிதத் தலமான மதீனாவுக்கு சென்றார். அங்கு 21 நாட்கள் தங்கி இருந்தார்.

    அதன்பிறகு மெக்காவுக்கு புறப்பட்டார். மதீனாவிற்கும் மெக்காவிற்கும் இடையிலான 440 கி.மீ. தூரத்தை ஷிஹாப் 9 நாட்களில் கடந்துள்ளார். மெக்காவுக்கு நடந்தே செல்ல வேண்டும் என்பது ஷிஹாப்பின் சிறு வயது கனவு என்றும், இதற்காக நாள் ஒன்றுக்கு 25 கி.மீ. அவர் நடந்து சென்றதாகவும் கூறப்படுகிறது.

    அவர் 8,640 கி.மீ. தூரத்தை 370 நாட்களில் கடந்து தற்போது முஸ்லிம்களின் புனித தலமான மெக்காவை அடைந்தார். இவர் தன்னுடைய மெக்கா புனித பயணம் குறித்த வீடியோ பதிவுகளை தனது யூடியூப் சேனலில் வெளியிட்டு வந்தார்.

    இதன்மூலம் மெக்காவுக்கு நடந்தே சென்ற சாதனைப் பட்டியலில் ஷிஹாப் இடம்பிடித்துள்ளார்.

    • அரசு ஊழியர்கள் சங்கம் சார்பில் 3 நாட்கள் நடை பயணம் வருகிற 15-ந் தேதி நடக்கிறது.
    • திருமங்கலம் நெடுஞ்சாலை துறை வளாகம், ஊராட்சி அலு வலகம் வழியாக ராஜாஜி சிலையில் முடிகிறது.

    மதுரை

    தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம் சார்பில் புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி மாநிலம் முழுவதும் 3 நாள் நடை பயண பேரணி நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.

    மதுரை கள்ளிக்குடி உதவி கல்வி அலுவலர் அலுவ கத்தில் சங்க நிர்வாகிகள் ஜெயராஜராஜேஸ்வரன், சரவணன் ஆகியோர் தலைமையில் வருகிற 15-ந்தேதி நடைபயண பேரணி தொடங்குகிறது. அங்கிருந்து திருமங்கலம் நெடுஞ்சாலை துறை வளாகம், ஊராட்சி அலு வலகம் வழியாக ராஜாஜி சிலையில் முடிகிறது.

    திருப்பரங்குன்றம் உதவி கல்வி அலுவலர் அலுவலகத்தில் 16-ந் தேதி தொடங்கும் பேரணி பசுமலை பஸ் நிறுத்தம், பழங்காநத்தம் கூட்டுறவுத்துறை அலுவலகம், காளவாசல் பி.ஆர்.சி. டெப்போ வழியாக எல்லீஸ் நகர் இந்து சமய அறநிலையத்துறை அலுவலக வளாகத்தில் முடிகிறது.

    மதுரை அரசு பாலி டெக்னிக் வளாகத்தில் 17-ந் தேதி தொடங்கும் நடை பயண பேரணி சம்பள கணக்கு அலுவலகம், திருமலை நாயக்கர் மகால், செல்லூர் கல்லூரி கல்வி அலுவலகம், தல்லாகுளம் மாவட்ட கல்வி அலுவலகம், தாமரைத் தொட்டி நெடுஞ்சாலை துறை அலுவலகம், ராஜா முத்தையா மன்றம் வழியாக மாலை 5.45 மணிக்கு கலெக்டர் அலுவலகத்தை வந்தடைகிறது.

    இதனைத்தொடர்ந்து தமிழ்நாடு அரசு ஊழி யர்கள் சங்க நிர்வாகிகள், புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வலியு றுத்தி கலெக்டரிடம் கோரிக்கை மனு கொடுக்கின்றனர்.

    • பிரச்சார நடை பயணம் தஞ்சையிலிருந்து புறப்பட்டு ஒரத்தநாடு, மதுக்கூர், பட்டுக்கோட்டை, பேராவூரணி, சேதுபாசத்திரம் வழியாக மல்லிப்பட்டிணத்தை சென்றடைகிறது.
    • 100-க்கும் மேற்பட்ட காங்கிரஸ் தொண்டர்கள் பிரச்சாரத்தில் கலந்து கொண்டனர்.

    தஞ்சாவூர்:

    சுதந்திர தின பொன் விழாவை முன்னிட்டு தஞ்சாவூர் தெற்கு மாவட்ட காங்கிரஸ் சார்பாக பிரச்சார நடை பயணம் நடைபெற்றது.

    100 பேருக்கு மேலான காங்கிரஸ் தொண்டர்கள் பிரச்சாரத்தில் கலந்து கொண்டனர். தஞ்சாவூர் மாநகராட்சியில் உள்ள காந்தி சிலைக்கு தஞ்சை மாவட்ட காங்கிரஸ் தலைவர் து.கிருஷ்ணசாமி வாண்டையார் தலைமையில் மாலை அணிவிக்கப்பட்டு பிரச்சார நடைபயணம் தொடங்கியது. பிரச்சார நடை பயணம் தஞ்சையிலிருந்து புறப்பட்டு ஒரத்தநாடு, மதுக்கூர், பட்டுக்கோட்டை, பேராவூரணி, சேதுபாசத்திரம் வழியாக மல்லிப்பட்டிணத்தை வருகிற 14-ந் தேதி அன்று சென்றடைகிறது. பிரச்சார நடை பயணத்தின் ஆரம்பத்தில் மாவட்ட காங்கிரஸ் பொதுச் செயலாளர் மோகன்ராஜ் அனைவரையும் வரவேற்றார். மாவட்ட துணைத்தலைவர்கள் வக்கீல் கோ.அன்பரசன், பட்டுக்கோட்டை ராமசாமி, மாநில துணைத்தலைவர் பண்ண வயல் ராஜாதம்பி, அகில இந்திய காங்கிரஸ் உறுப்பினர்கள் பட்டுக்கோட்டை ராஜேந்திரன், குணா பரமேஸ்வரி, முன்னாள் மாநில துணைத்தலைவர் கலைச்செல்வன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் மாநகர, மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் சத்தியமூர்த்தி, பட்டுக்கோட்டை நகரத்தலைவர் ரவிக்குமார், சிறுபான்மை–ப்பிரிவுத்தவைவர் நாகூர்கனி, வட்டாரத்தலைவர்கள் ரவிச்சந்திரன், நாராயணசாமி, இப்ராஹும், அன்பழகன், கோவி.செந்தில், அத்திவெட்டி நாராயணன், அய்யப்பன், முன்னாள் இளைஞர் காங்கிரஸ் மாவட்ட தலைவர் ஜே.ஆர்.சுரேஷ், வடக்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் பொதுச்செயலாளர் ரமேஷ் சிங்கம், ஏ.ஆர்.எம்.ரகுநாத், மாவட்ட மகளிர் காங்கிரஸ் செயலாளர் சசிகலா, மாநகர, மாவட்ட இளைஞர் காங்கிரஸ் துணைத்தலைவர் இளையபாரத், சிவகுரு, சம்பத் வாண்டையார், ஒரத்தநாடு சுப்பு தங்கராஜ், ஒரத்தநாடு ராஜமாணிக்கம், சூரக்கோட்டை ராஜசேகர், சித்திரக்குடி ஆண்டவர், வரகூர் மீசை முருகன், மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    ×