search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தோல்வி பயம்"

    அ.தி.மு.க அரசு தோல்வி பயத்தால் உள்ளாட்சி தேர்தலை தள்ளிப்போட்டு வருவதாக முன்னாள் தமிழக காங்கிரஸ் தலைவர் இளங்கோவன் குற்றம்சாட்டியுள்ளார். #EVKSElangovan #ADMK
    சென்னை:

    முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியின் பிறந்த நாள் விழாவை காங்கிரசார் இன்று சிறப்பாக கொண்டாடினார்கள்.

    சைதாப்பேட்டையில் உள்ள ராஜீவ்காந்தி சிலைக்கு முன்னாள் காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் தனது ஆதரவாளர்களுடன் சென்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    நவ இந்தியாவை உருவாக்கியவர் நேரு. அவர் வழியில் வந்த ராஜீவ் நவீன இந்தியாவை உருவாக்கினார். கம்ப்யூட்டர், தொலைத்தொடர்பில் புரட்சியை செய்தவர்.

    கிராமங்கள் முன்னேற பஞ்சாயத்துராஜ் திட்டத்தை கொண்டு வந்தார். உள்ளாட்சி அமைப்புகள் மூலம் கிராமப் பகுதிகளுக்கு மத்திய அரசின் நிதி நேரடியாக வந்தது.


    அ.தி.மு.க. அரசு உள்ளாட்சி தேர்தலை நடத்தாததால் கிராமங்களுக்கு வரவேண்டிய 30 ஆயிரம் கோடி ரூபாய் நின்றுபோனது.

    தற்போதைய அ.தி.மு.க. அரசுக்கு மக்களைப்பற்றி எந்த கவலையும் இல்லை. தோல்வி பயத்தால் உள்ளாட்சி தேர்தலை தள்ளிப்போட்டு வருகிறார்கள். எப்போது தேர்தல் நடத்தினாலும், எந்த தேர்தல் நடந்தாலும் அ.தி.மு.க. தோல்வியை தழுவும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அவருடன் தென் சென்னை மாவட்ட தலைவர்கள் கராத்தே தியாகராஜன், ஏ.ஜி.சிதம்பரம், முன்னாள் மாவட்ட தலைவர்கள் ரங்க பாஷ்யம், வி.ஆர்.சிவராமன், பாலகிருஷ்ணன் மற்றும் நாஞ்சில் பிரசாத் உள்பட பலர் கலந்து கொண்டனர். #Congress #EVKSElangovan #ADMK
    கீரனூர் அருகே தேர்வு தோல்வி பயத்தால் 10-ம் வகுப்பு மாணவி மாயமானார். இது குறித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    கீரனூர்:

    புதுக்கோட்டை மாவட்டம் கீரனூரை அடுத்த கோட்ரப்பட்டியை சேர்ந்தவர் மதியழகன். இவரது மகள் லாவண்யா (வயது 17). இவர் அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 10-ம் வகுப்பு தேர்வு எழுதியிருந்தார்.

    இந்த நிலையில் கடந்த 12-ந் தேதி இரவு குடும்பத்தினருடன் தூங்கி கொண்டிருந்த லாவண்யா திடீரென மாயமானார். அதிகாலையில் எழுந்த அவரது பெற்றோர்கள் மகள் காணாததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். அக்கம் பக்கத்தில் தேடி பார்த்தும் லாவண்யா குறித்த எந்த தகவல்களும் கிடைக்கவில்லை. இது குறித்து கீரனூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் கோவிந்தராஜ் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    இதற்கிடையே 10-ம் வகுப்பு முடித்த மாணவர்களுக்கு கடந்த 23-ந் தேதி தேர்வு முடிவுகள் வெளியாகின. எனவே தேர்வில் தோல்வியுற்றால் பெற்றோர்கள் திட்டிவிடுவார்கள் என்ற அச்சத்தில் மாணவி லாவண்யா வீட்டை விட்டு சென்றிருக்கலாம் என போலீசார் கருதுகின்றனர்.

    மேலும் மாணவியை யாரும் கடத்தி சென்றனரா? என்றும் பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ×