search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தோட்டக்கலை துறை"

    • காற்றினால் ஏற்படும் பாதிப்பு மற்றும் வறட்சியால் ஏற்படும் பாதிப்புக்கு இழப்பீடு பெற முடியும்.
    • இழப்பீடாக ஏக்கருக்கு ரூ.44,550 வரை கிடைக்கும்.

    திருப்பூர்,செப்.24-

    வெங்காயம், வாழைப்பயிா்களுக்கு காப்பீடு செய்ய விவசாயிகளுக்கு தோட்டக்கலைத்துறை அழைப்பு விடுத்துள்ளது.இது குறித்து பொங்கலூர் வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநர் ஷர்மிளா வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு விவரம் வருமாறு:-

    ராபி பருவத்தில் பிரதமரின் பயிா் காப்பீடு திட்டத்தில், சின்ன வெங்காயம் மற்றும் வாழைக்கு பயிா் காப்பீடு அறிவிக்கப்பட்டுள்ளது.

    பொங்கலூர் குறுவட்டத்தில், வாழை சாகுபடி செய்யும் விவசாயிகள், தெற்கு அவிநாசிபாளையம் குறுவட்டத்தில், சின்ன வெங்காயம் சாகுபடியில் ஈடுபடும் விவசாயிகள் இத்திட்டத்தில் பயன்பெறலாம். நடவு முதல் அறுவடைக் காலங்கள் வரை ஏற்படும் வெள்ள பாதிப்பு, காற்றினால் ஏற்படும் பாதிப்பு மற்றும் வறட்சியால் ஏற்படும் பாதிப்புக்கு இழப்பீடு பெற முடியும்.

    பயிர் காப்பீடு செய்ய விரும்பும் விவசாயிகள், தங்கள் நிலத்தின் சிட்டா, அடங்கல், வங்கிக் கணக்கு புத்தக நகல், ஆதாா் அட்டை நகல் உள்ளிட்ட ஆவணங்களுடன் பொது இ-சேவை மையங்கள், வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மற்றும் பொதுத்துறை வங்கிகளில் விண்ணப்பிக்கலாம்.

    விவசாயிகள் தங்களின் பிரீமிய தொகையாக சின்ன வெங்காயம் பயிருக்கு ரூ.2,227ஐ அடுத்த ஆண்டு ஜனவரி 31-ந் தேதிக்குள் செலுத்த வேண்டும். இழப்பீடாக ஏக்கருக்கு ரூ.44,550 வரை கிடைக்கும். வாழைக்கு ஏக்கருக்கு ரூ.4,900ஐ அடுத்த ஆண்டு பிப்ரவரி 29-ந் தேதிக்குள் செலுத்த வேண்டும். இதற்கு ஏக்கருக்கு ரூ. 98 ஆயிரம் வரை இழப்பீடாக கிடைக்கும்.

    மேலும் விவரம் தேவைப்படுவோா் 7708328657, 9095630870 என்ற செல்போன் எண்களில் தொடா்பு கொள்ளலாம் என தெரிவித்துள்ளாா்.

    • நடப்பு ஆண்டில் 152 ஹெக்டேர் பரப்பில் நுண்ணீர் பாசன திட்டம் அமைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
    • சிறு, குறு விவசாயிகள், பெண் விவசாயிகள் மற்றும் ஆதிதிராவிட விவசாயிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது.

    கடையம்:

    கடையம் வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் (பொறுப்பு) கோபி கிருஷ்ணன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    நுண்ணீர் பாசன திட்ட மானியம்

    கடையம் வட்டாரத்தில் நடப்பு ஆண்டில் 152 ஹெக்டேர் பரப்பில் நுண்ணீர் பாசன திட்டம் அமைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில் சிறு, குறு விவசாயிகளுக்கு 100 சதவீத மானியத்திலும், இதர விவசாயிகளுக்கு 75 சதவீத மானியத்திலும் சொட்டுநீர் பாசனம், தெளிப்பு நீர் பாசனம், மழைத்துவான் பாசனம் வழங்கப்பட உள்ளது.

    சிறு, குறு விவசாயிகளுக்கு 2 ஹெக்டேர் வரையிலும் இதர விவசாயிகளுக்கு 5 ஹெக்டேர் வரையிலுமாக வழங்கப்படுகிறது.

    சிறு, குறு விவசாயிகள், பெண் விவசாயிகள் மற்றும் ஆதிதிராவிட விவசாயிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது. திட்டத்தில் பயன்பெற விரும்பும் விவசாயிகள் தங்கள் பயிரிடும் தோட்டக்கலை பயிர்களை அடங்களில் பதிவு செய்து, குடும்ப அட்டை நகல், கணினி சிட்டா, ஆதார் அட்டைநகல், பாஸ்போர்ட் அளவு புகைப்படம், நில வரைபடம், சிறு, குறு விவசாயிகளாக இருப்பின் அதற்கான தாசில்தாரிடம் பெறப்பட்ட இணையதள சான்று உள்ளிட்ட அனைத்தையும் கடையம் வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் அலுவலகத்தில் நேரில் கொடுத்து பயன்பெறலாம்.

    திட்டத்தின் வாயிலாக 7 ஆண்டுகளுக்கு முன் மானியம் பெற்ற விவசாயிகளுக்கு புதிதாக சொட்டுநீர் பாசனம் இந்த நிதி ஆண்டில் அமைத்துக் கொள்ளலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • 10 பேர் கொண்ட குழுவினர் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர்.
    • தங்கள் தேவைகளை அறிந்து கொள்ள உதவுவதாக உள்ளது என மாணவிகள் தெரிவித்தனர்.

    பல்லடம் :

    பல்லடம் அருகே பொங்கலூரில் கோவை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம், தோட்டக்கலைத்துறை சார்ந்த மாணவிகள் தோட்டக்கலை அனுபவ பயிற்சியின் ஒரு பகுதியாக கிராமப்புறத்தில் சமூக வரைபடம் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். மாணவி மௌனிகா தலைமையிலான 10 பேர் கொண்ட குழுவினர் இந்த விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர்.

    இந்த சமூக வரைபடம் என்பது அந்த பகுதி மக்களையே ஈடுபடுத்தி அவர்களே தங்கள் பகுதியை பற்றி தெரிந்து,தங்கள் தேவைகளை அறிந்து கொள்ள உதவுவதாக உள்ளது என மாணவிகள் தெரிவித்தனர்.

    • மேலகுப்பத்தில் மா செடிகள் நடப்பட்டு சொட்டுநீர் பாசனம் அளிக்கப்பட்டு வருகிறது
    • அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்

    ஆற்காடு:

    கலைஞரின் அனைத்து கிராம வேளாண்மை வளர்ச்சி திட்டத்தில், மேலகுப்பம் கிராமத்தில் தரிசுநில மேம்பாட்டு திட் டத்தின்கீழ் தோட்டக்கலை துறையின் மூலம் மா செடிகள் நடப்பட்டு சொட்டுநீர் பாசனம் அமைக்கப்பட்டுள்ளது.

    இந்தபணிகளை தோட்டக்கலை இயக்குனர் பிருந்தாதேவி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது வேளாண்மை இணை இயக்குனர் வடமலை, கலெக்டரின் நேர்முக உதவியாளர் விஸ்வநாதன், தோட்டக்கலை துணை இயக்குனர் லதாமகேஷ், வேளாண்மை துறை துணை இயக் குனர் செல்வராஜ், பொறியியல்துறை செயற்பொறியாளர் ரூபன்குமார், ரவிக்குமார் ஆற்காடு வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் (பொறுப்பு) வேலு, வேளாண்மை உதவி இயக்குனர் விக்னேஷ், துணை அலுவலர் கண்ணன் உள்பட பலர் உடனிருந்தனர்.

    • இடுபொருட்கள் 40 சதவீதம் மானியத்துடன் வழங்கப்பட உள்ளன.
    • தேனீ பெட்டிகள் மற்றும் தேன் பிரித்தெடுக்கும் கருவிகள் ஆகியவை 40 சதவீத மானியத்தில் வழங்கப்பட உள்ளன.

    தென்காசி:

    தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை மூலம் 2022- 23 -ம் ஆண்டு தேசிய தோட்டக்கலை இயக்கம் திட்டமானது. மத்திய- மாநில நிதி உதவியுடன் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    இத்திட்டத்தில் பரப்பு விரிவாக்க இனத்தின் கீழ் வீரிய ஒட்டு காய்கறிகளான கத்தரி, மிளகாய் மற்றும் தக்காளி குழித்தட்டு நாற்றுகள் அரசு தோட்டக்கலை பண்ணையில் தரமான முறையில் உற்பத்தி செய்யப்பட்டு ஹெக்டேர் ஒன்றுக்கு 10,000 நாற்றுகள் மற்றும் இடுபொருட்கள் சேர்த்து ஒரு ஹெக்டேருக்கு ரூ.20 ஆயிரம் மதிப்பிலும் பழபயிர்களில் கொய்யா அடர்நடவு காண கொய்யா பதியன்கள், திசு வாழைக் கன்றுகள், பப்பாளி செடிகள், எலுமிச்சை பதியன்கள், நெல்லி செடிகள் ஆகியவையும் இதற்கான இடுபொருட்கள் 40 சதவீதம் மானியத்துடன் வழங்கப்பட உள்ளன.மேலும் உதிரி மலர்கள் மல்லிகை, செண்டுமல்லி, நறுமண பயிர்கள் கிழங்கு வகை நறுமணப் பயிர்கள் (இஞ்சி) 40சதவீத மானியத்தில் விதைக்க இடுபொருட்கள் வழங்கப்பட உள்ளன.

    பயிர்களில் நீர் மற்றும் கல மேலாண்மைக்கான நிலப்போர்வை கள் 50 சதவீத மானியத்திலும்,மண்புழு உரம் தயாரிக்க தேவைப்படும் நிரந்தர மண்புழு உர படுக்கை கட்டமைக்க பின்னேற்பு மானியமாக 50சதவீதம் வழங்கப்படும். மகரந்த சேர்க்கையை ஊக்குவித்து மகசூலை அதிகரிக்க தேனீ வளர்ப்புக்கு தேவையான தேனீக்கள்,தேனீ பெட்டிகள் மற்றும் தேன் பிரித்தெடுக்கும் கருவிகள் ஆகியவை 40 சதவீத மானியத்தில் வழங்கப்பட உள்ளன.

    பண்ணை இயந்திரங்கள் என மினி டிராக்டர் 20 குதிரைத்திறன் குறைவாக மற்றும் பவர்டிரில்லர் 8 குதிரை திறனுக்கு குறைவாக 40 சதவிகித பின்னேற்பு மானியத்தில் வழங்கப்பட உள்ளன.

    மேலும் வெங்காயம் சாகுபடி செய்யும் விவசாயிகளை ஊக்குவிக்கும் வகையில் குறைந்த விலையிலான வெங்காய சேமிப்பு கிடங்கு 50 சதவீத பின்னேற்பு மானியத்திலும் 87,500 மற்றும் விவசாயிகள் காய்கறிகள் விற்பனைக்கு பயன்படுத்தும் வகையில் நகரும் காய் மற்றும் கனிகள், வண்டிகள் 50சதவீதம் பின்னேற்பு மானியத்திலும் வழங்கப்பட உள்ளன. மேற்கண்ட திட்டங்களில் பயன்பெற விரும்பும் விவசாயிகளுக்கு உரிய ஆவணங்களான பட்டா நகல், ஆதார் அட்டை நகல் குடும்ப அட்டை பாஸ்போர்ட் அளவு புகைப்படங்கள் 2 மற்றும் அடங்கல் உள்ளிட்டவற்றை சம்பந்தப்பட்ட வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் அலுவலகத்தில் சமர்ப்பித்து பயன்பெறலாம். மேலும் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் இந்த ஆண்டு 58 பஞ்சாயத்து கிராமங்கள் அரசாங்கத்தால் தேர்வு செய்யப்பட்டு உள்ளது.

    தேர்வு செய்யப்பட்ட இந்த பஞ்சாயத்து கிராமங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு 80 சதவிகித இலக்கீடு கிராமங்களில் செயல்படுத்தப்படும் என்றும் மேற்கூறிய அனைத்து திட்டங்களும் 80சதவீதம் பொதுப்பிரிவு விவசாயிகளுக்கும், 20சதவீதம் ஆதிதிராவிட விவசாயிகளுக்கு வழங்க ப்படும்.விவசாயிகளை ஊக்குவிக்கும் வகையில் 30சதவீதம் திட்ட இனங்கள் பெண்களுக்கு வழங்கப்படும். மேலும் விபரங்களுக்கு tnhorticulture.tn. gov. in. என்ற தோட்டக்கலைத்துறை இணையதளத்தின் வாயிலாக பதிவு செய்திட வேண்டும். கூடுதல் விவரங்களுக்கு வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் அலுவலகத்தை அணுகலாம் என மாவட்ட கலெக்டர் ஆகாஷ் தெரிவித்துள்ளார்.

    ×